என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 240408"

    • சில உடல் உபாதைகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களின் மூலமே தீர்வு காணலாம்.
    • கீழ்கண்ட தகவல்கள் சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.

    உடல் பருமன் குறைய வெள்ளை பூசணிக்காயை எடுத்து ஜூஸ் பிழிந்து காலையில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். நெஞ்சு எரிச்சல் வராமல் இருக்கும்.

    சிறுநீரகத்தில் உப்பு தங்காமல் இருக்க வாழைத்தண்டு, புடலங்காய், கீரைத்தண்டு, முள்ளங்கி, திராட்சை, வெங்காயம், வெள்ளரிப்பிஞ்சு, வெங்காயத்தாள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

    செம்பருத்தி பூக்கள் மூன்றை எடுத்து அவற்றின் இதழ்களை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு எடுத்து பிழிந்து வடிகட்டி, கொஞ்சம் பால் சேர்த்து சாப்பிட்டால் ரத்தஅழுத்தம் குறையும்.

    பித்தம் தலைசுற்றல் சரியாக ஒருபிடி கொத்தமல்லி தழையை அரைத்து சாறு எடுக்கவும். அதில் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட, தலைசுற்றல் போகும்.

    ஒரு கோப்பை நல்லெண்ணெயில் 7, 8 பூண்டை நசுக்கிப் போடவும். அதை நன்றாக காய்ச்சவும். இறக்கி வைத்து ஒரு மூடி அளவு எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து எடுத்துச் சேர்த்து வைக்கவும். இதை தலையில் பூச்சிவெட்டு இருக்கும் இடத்தில் இரண்டு சொட்டு தேய்த்து வர, முடி வளர ஆரம்பிக்கும்.

    சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க நாவல் கொட்டை பொடி, வெந்தயப்பொடி, கடுக்காய் தோல் ஆகியவற்றில் சமபாகம் எடுத்துக் கலந்து வைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் இதை ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து காலையில் கால் தம்ளர் குடிக்கவும்.

    வறட்டு இருமல், சூடு குறைய அதிமதுரம் பொடியை வாங்கி, ஒரு தம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் பொடி போட்டு கொதிக்க வைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடவும்.

    வாயு, வயிற்றுவலி நீங்க ஒரு ஸ்பூன் சீரகத்தை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து ஒரு தம்ளர் தண்ணீர் விடவும். நன்றாக கொதித்ததும் பனைவெல்லம் சேர்த்து குடிக்கவும். கர்ப்பப்பையில் நோய் வராமல் தடுக்க துளசி, வில்வம், அருகம்புல், மிளகு உள்ளிட்டவை நாட்டு மருந்துக்கடைகளில் பொடியாகவே கிடைக்கும். இவற்றை வாங்கிக் கலந்து வைத்துக்கொண்டு வாரத்துக்கு ஒரு நாள் ஒரு ஸ்பூன் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.

    தினம் குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சம்பழத்தை பாதியாக வெட்டி போடவும். மறுநாள் காலை வரை இந்த தண்ணீரைக் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேற்கண்ட தகவல்கள் சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.

    • தேனீ கொட்டினால் உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டும்.
    • முதலுதவி சிகிச்சை செய்யாவிட்டால் பாதிப்பு கடுமையாகிவிடும்.

    தேனீக்கள் கொட்டினால் கடும் பாதிப்பு ஏற்படக்கூடும். கொட்டிய இடத்தில் கடுமையான அரிப்பு, வீக்கம், வலி, சருமம் நிறம் மாறுதல், நாக்கு-தொண்டையில் அழற்சி, வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு தலைச்சுற்றல், சுவாசிப்பதில் சிரமம், இதய துடிப்பு அதிகரிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். தேனீ கொட்டினால் உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பாதிப்பு கடுமையாகிவிடும்.

    * தேனீ கொட்டிய இடத்தில் சோப்பு நீரை தடவி மசாஜ் செய்துவிட்டு கழுவிவிடலாம். பிறகு காட்டன் டவலை கொண்டு சுத்தம் செய்துவிட்டு ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுக்கலாம். அவ்வாறு செய்வது ஒவ்வாமையை தடுக்கும். வீக்கத்தையும் குறைக்கும். உடலுக்குள் விஷம் செல்வதும் தடுக்கப்படும்.

    * தேனீயின் விஷம் உடலுக்குள் ஊடுருவாமல் தடுப்பது முதலுதவி சிகிச்சையில் முக்கியமானது. பேக்கிங் சோடாவுக்கு விஷத்தின் வீரியத்தை கட்டுப்படுத்தும் தன்மை இருக்கிறது. மேலும் வலி, வீக்கம், சருமம் சிவத்தல், அரிப்பு போன்றவற்றையும் கட்டுப்படுத்தும் பண்புகளையும் கொண்டிருக்கிறது. சிறிதளவு தண்ணீரில் பேக்கிங் சோடாவை குழைத்து தேனீ கொட்டிய இடத்தில் பூசலாம்.

    * தேனீயின் விஷத்தன்மையை நீக்குவதற்கு வினிகரையும் உபயோகிக்கலாம். ஆப்பிள் சிடேர் வினிகரை சிறிதளவு தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்.

    * பற்பசையையும் இதற்கு பயன்படுத்தலாம். அதில் இருக்கும் காரத்தன்மை தேனீயின் விஷத்தில் இருக்கும் அமிலத்தன்மையை குறைக்க உதவும். பற்பசையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவிவிட்டு கால் மணி நேரம் கழித்து கழுவி அப்புறப்படுத்திவிடலாம்.

    * பெரும்பாலானோருக்கு தேனீ கொட்டினால் கடும் பாதிப்பு ஏதும் ஏற்படாது. முதலுதவி சிகிச்சை மேற்கொண்டாலே போதுமானது. அதில் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.

    தேனீ கொட்டிய இடத்தில் தேனையும் தடவலாம். தேன் ஆண்டி பாக்டீரியல் பண்புகளை கொண்டது. நோய்த்தொற்றுக்குள்ளாகி இருக்கும் பகுதியில் படிந்திருக்கும் கிருமிகளை நீக்கவும் உதவும். அரிப்பு, வலியையும் குறைக்கும். குறிப்பாக வீக்கம் ஏற்பட்டால் அதில் சிறிதளவு தேன் தடவி துணி கொண்டு கட்டிவைக்கலாம். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து கழுவிவிடலாம்.

    • தலை மற்றும் முடிக்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தடவவும்.
    • பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது.

    பேன்கள் நமது தலை, முடி, முதுகு மற்றும் கழுத்து மீது ஊர்ந்து நமது ரத்தத்தை உறிஞ்சுகின்றன. பேன்களின் முட்டைகள் முடியுடன் ஓட்டிக்கொள்கிறது. மேலும் இது அரிப்பை ஏற்படுத்துகிறது. ஒருவரின் தலை தொடர்பிலிருந்து மற்றொருவருக்கு பேன்கள் உருவாகின்றன. பேன் முடியின் வழியாக மற்றொருவருக்கு பரவுகிறது.

    பேன்கள் கருப்பு, பழுப்பு, மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது. பேன் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவர் தலையை அடிக்கடி சொறிந்து கொண்டிருப்பார். பேன் இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் இரவு நேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும்.

    பேன்கள் 3 வகை பேன்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. பேன்கள் மற்றொருவருக்கு மாற படுக்கைகள் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உங்களால் முடிந்தவரை அடிக்கடி உங்கள் படுக்கை விரிப்புகளை மாற்றவும். உங்கள் துணிகளை வெந்நீரில் ஊறவைத்து கழுவவும். இதனால் பேன்களை அகற்றி பேன்கள் பரவுவதை தடுக்க முடியும்.

    தலை மற்றும் முடிக்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தடவவும். தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது போன்களை அழிக்க உதவும். குறைந்தது அரைமணி நேரம் கழித்து முடிக்கு அடியில் இருக்கும் பேன்கள் வெளியே வரும். இப்போது மெல்லி குறுகிய சீப்பு கொண்டு முடியை சீவவும். இதனால் அனைத்து பேன்களும் வெளியே வரும்.

    அத்தியாவசிய எண்ணெயில் நச்சுகள் உள்ளன, அவற்றை நேரடியாக முடிக்கு பயன்படுத்தக்கூடாது. இவை மற்ற எண்ணெய்களுடன் கலக்கப்பட வேண்டும். தேயிலை மர எண்ணெய், ஆலிவ் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், வேம்பு, யூகலிப்டஸ், மிளகுத்தூள், ஜாதிக்காய் எண்ணெய் போன்ற எண்ணெகளில் ஏதேனும் ஒன்றை எடுத்து இந்த எண்ணெயில் ஏதேனும் ஒன்றை தலைமுடிக்கு தடவி 10 மணிநேரம் ஊறவிட்டு விடுங்கள். பின்னர் குளித்தால் பேன் தொல்லை குறையும்.

    ×