search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டிகள்"

    • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி உலக செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.
    • தமிழ்நாட்டின் செஸ் விளையாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர் விஸ்வநாதன் ஆனந்த்

    இன்று [ஜூலை 20] உலக செஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1924 ஆம் ஆண்டு பாரிஸில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்ட தேதியைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி உலக செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இந்த தருணத்தில் இந்தியாவில் அதிக அளவில் கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்ட, உலக செஸ் போட்டிகளில் பெரிதளவில் பங்குபெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்பது நினைவுகூரத்தக்கது. தமிழக கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ் மற்றும் பல தமிழக வீரர்களின் சாதனைகள் இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றன.

    இந்தியாவில் இவர்கள் போன்ற பல சாதனையாளர்களை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் செஸ் விளையாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிப்பவர் ஐந்து முறை செஸ் உலக சாம்பியனும், மற்றும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) துணைத் தலைவருமான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.

    உலக செஸ் தினத்தைக் கொண்டாடும் வகையில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விஸ்வநாதன் ஆனந்த் தனது சொந்த முயற்சியில் செஸ் போர்டுகளை ஆட்டோகிராஃபுடன், அன்பளிப்பாக வழங்கினார்.

     

    அதனுடன் செஸ் விளையாட்டில் தனது அனுபவம் குறித்த கடிதம் ஒன்றையும் அவர் மாணவர்களுக்கு வழங்கினார். அந்த கடிதத்தில் செஸ் விளையாட்டால் ஒருவரின் திறமைகள் எவ்வாறெல்லாம் வளர்கிறது என்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார்,

    விஸ்வநாதன் ஆனந்தின் அயராத உழைப்பும், இது போன்ற பல ஈடுபாடுகளும் மாணவர்களுக்கு செஸ் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும். இதன் மூலம் நம் மண்ணில் இன்னும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகுவார்கள் என்பது நிச்சயம். 

    • 120 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 2 அணிகளிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை
    • கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் தொடர் ஆகும்

    யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிகள் ஜெர்மனியின் ஹாம்பெர்க் நகரில் வைத்து அனல் தெறிக்க நடந்து வரும் நிலையில் பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் அணிகள் நேற்று நடந்த காலிறுதியில் பலப் பரீட்ச்சை செய்தன. 120 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 2 அணிகளிலும் ஒரு கோல் கூட அடிக்காததால் வெற்றியை பெனால்டி மூலம் தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.

    பெனால்டி ஆட்டத்தில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெர்னார்டோ சிலவா, நினா மெண்டிஸ் ஆகோயோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆனால் பிரான்ஸ் 5 பெனால்டி கோல்களை விளாசி 5-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் ஸ்பெயினுடன் பிரான்ஸ் மோத உள்ளது.

    நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் போர்ச்சுகல் தொடரில் இருந்து தற்போது வெளியேறியுள்ளது மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது. மைதானத்தில் உணர்ச்சி வயப்பட்டு காணப்பட்டார். தோல்வியால் அழுத்த பெபேவுக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக இந்த தொடரோடு யூரோ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரொனால்டோ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    • டேனி ஆல்மோ ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயினை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.
    • மிகெல் மெரினோ தலையால் முட்டி அடித்த அதிரடி கோல் அந்த அணியின் வெற்றிக்கு அச்சாரமானது.

    யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிகள் நடந்து வரும் நிலையில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான நேற்றைய காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    விறுவிறுப்பாக தொடங்கிய போட்டியின் 51 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றைஅடித்து ஸ்பெயின் வீரர் டேனி ஆல்மோ ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயினை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.

     

    பின் ஆட்டத்தின் மறு பாதியில் 89 வது நிமிடத்தில் ஜெர்மன் அணி வீரர் ஃபுளோரியன் ரிட்ஸ் அணியின் முதல் கோலை பதிவு செய்தார். 90 நிமிடங்கள் முடிவில் இரண்டு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்ததால் ஆட்டம் கூடுதல் நேரம் நீடித்தது.

    இறுதியாக ஆட்டம் முடிய 1 நிமிடம் மட்டுமே இருந்த தருவாயில் ஸ்பெயின் வீரர் மிகெல் மெரினோ தலையால் முட்டி அடித்த அதிரடி கோல் அந்த அணியின் வெற்றிக்கு அச்சாரமானது. இதைதொடர்ந்து அரையிறுதியில் பிரான்ஸ் அணியுடன் ஸ்பெயின் அணி பலப்பரீச்சை செய்ய உள்ளது.

     

    • கூடைப்பந்து, மென் பந்து எறிதல் ஆகிய எட்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
    • மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் , உதவி திட்ட அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல் அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில், 12 முதல் 14 வயது, 15 முதல் 17 வயது 18 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில், கை கால் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, அறிவுத்திறன், மனவளர்ச்சி குறைபாடு, கண்பார்வை யற்ற வர்களுக்கு, 50, 100 மீட்டர் ஓட்டப் போட்டியும், குண்டு எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், மினி கூடைப்பந்து, மென் பந்து எறிதல் ஆகிய எட்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

    இந்த போட்டிகளை மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் முருகேசன், உதவி திட்ட அலுவலர் வடிவேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் சர்தார், கணேசன், பள்ளி ஆய்வாளர் சுதாகர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால், உடற்கல்வி இயக்குனர் மாதையன் மற்றும் மாற்றுத்திறனாளிக ளுக்கான சிறப்பு பயிற்று னர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாற்றத்தி றனாளிகள் வரும் 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடக்கும் முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி களில் கலந்து கொள்ள உள்ளனர். இதில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்தி றனாளிகள் கலந்து கொண்டனர்.

    • வினாடி வினா , கதை விமர்சனம் ஆகிய பிரிவு களில் போட்டிகள் நடை பெற்றன.
    • 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட அளவிலான போட்டி களுக்கு அனுப்ப படுகின்றனர்.

    தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்தறை தருமபுரி வட்டார வள மையம் சார்பில் வட்டார அளவிலான போட்டிகள் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் வட்டார வளமை யத்துக்குட்பட்ட அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குட்பட்ட பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்டுரை, பேச்சு, கவிதை எழுதுதல், குறும்படம் தயாரித்தல், தனி நடிப்பு, அறிவியல் கண்காட்சி, அறிவியல் செயல்திட்டம், அறிவியல் நாடகம், வினாடி வினா மற்றும் கதை விமர்சனம் ஆகிய பிரிவு களில் போட்டிகள் நடை பெற்றன.

    இதில் வட்டார அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட அளவிலான போட்டி களுக்கு அனுப்ப படுகின்றனர்.

    வட்டார அளவிலான போட்டிகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா நடத்தினார். இதில் அவ்வையார் மகளிர் மேல்நி லைப் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, வட்டாரக் கல்வி அலுவ லர்கள் ஜீவா, நாசர், கலை ச்செல்வி, வட்டார ஒருங்கி ணைப்பாளர் பானுரேகா மற்றும் ஆசிரியர் பயிற்று நர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலானடேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் போட்டிகள்

    பெரம்பலூர், 

    பெரம்பலூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது.

    பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி விளையாட்டு அரங்கில் நடந்த போட்டிக்கு பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் அங்கையற்கண்ணி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன், உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டு போட்டிகள் 14, 17, 19 ஆகிய வயது பிரிவின் கீழ் நடந்தது. உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி, பிரேம்நாத் ஆகியோர் பொறுப்பு அலுவலராக செயலாற்றினர். இப்போட்டிகளில் 30 பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டி களில் முதலிடம் பெறுவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவர்.

    • முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
    • 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பான் செக்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 5-வது கல்லூரி நிறுவன தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு மன்னார்குடி கீர்த்தி கிளினிக் டாக்டர். ரவீந்திரன் தலைமை தாங்கினார். முதல்வர் விக்டோரியா முன்னிலை வகித்தார்.

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியரும், தமிழ்நாடு அறிவியல் கழக துணைத்தலைவருமான சுகுமாரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மேல்நிலை படிக்கும் மாணவர்கள் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் கலந்து கொண்டனர். மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ ஆரோ க்கிய ராஜ், மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர். விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கினர். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், செல்வராஜ் எம்.எல்.ஏ., முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.
    • கலை திருவிழா போட்டிகளில் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு கலையரசன்,கலையரசி விருதுகள் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படவுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் மாதிரி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2023-2024ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், செல்வராஜ் எம்.எல்.ஏ., முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பின்படி 2022-2023 ம்ஆண்டு முதல் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்தொடர்ச்சியாக 2023 - 2024 ம் கல்வி ஆண்டிலும் கலைத்திருவிழா போட்டிகள் மாவட்ட அளவில் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறையின் முன்னெடுப்பின்படி மாநிலம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் கலைத்திரு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நடனம், இசை, ஓவியம், நாட்டுப்புற கலைகள், நவீன கலை வடிவங்கள் என பலவற்றிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.பள்ளி மாணவர்களின் கலைத்திறனை ஊக்கப்படுத்துவதன் வழியாக அவர்களுக்கு கல்வியின் மீதான ஈடுபாட்டையும் வளர்த்தெடுக்க முடியும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கலைத் திருவிழாப் போட்டிகள் 10.10.2023 முதல் 14.10.2023 வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் 1,25,613மாணவர்கள் பங்கேற்று 32,860 மாணவர்கள் வெற்றி பெற்றனர். தொடர்ந்து வட்டார அளவிலான போட்டிகள் 18.10.2023 முதல் 21.10.2023 வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் 22,994 மாணவர்கள் பங்கேற்று 8,877 மாணவர்கள் வெற்றிபெற்றனர். மேலும், கலைத்திருவிழாப்போட்டிகள் மாவட்ட அளவில் ஜெய்வாபாய்மாதிரி நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி 28.10.2023 வரை நடைபெறவுள்ளது. இக்கலைத்திருவிழாவில் பல்வேறு போட்டிகளில் 6,801 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.அதனைத்தொடர்ந்து, மாநில அளவிலான போட்டிகள் 21.11.2023 முதல்24.11.2023 வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் கட்டுரை, பேச்சு, ஓவியம்,நடனம், இசைக்கருவிகள் இசைத்தல் முதலிய வகைகளில் கீழ்க்கண்ட 3பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு 33வகையான போட்டிகள், 9 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு 75 வகையான போட்டிகள் மற்றும் 11 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 82 வகையானபோட்டிகள் நடைபெறுகிறது.கலை திருவிழா போட்டிகளில் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு கலையரசன்,கலையரசி விருதுகள் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படவுள்ளது. மேலும் கலைத் திருவிழாப் போட்டிகளில் சிறப்பாக செயல்படக்கூடிய 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பரமணியன், திருப்பூர் மாநகராட்சி4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, கவுன்சிலர் திவாகரன், மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.   

    கரூரில் மாவட்ட அளவில் கலைத்திருவிழா போட்டிகள்; மாணவ-மாணவிகள் நடனம் ஆடி அசத்தல்

    கரூர், 

    தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங் களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத்தி றன்களை வெளிக்கொண்டு வரும் விதமாகவும், பள்ளிக் கல்வித்துறை செயல்பாடு களின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட் டங்களை ஒருங்கிணைக்கும் நோக்கோடு கலைத்திருவிழா நடத்தப்படுகிறது.

    அந்தவகையில் 2023-24-ம் கல்வியாண்டில் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடைபெற்ற மாவட்ட அள விலான கலை திருவிழா போட்டியில் 4,149 மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனம், ஓவியம் மற்றும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.

    கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து போட்டி களை தொடங்கிவைத்து பேசினார்.

    அப்போதுஅவர் தெரிவித்ததாவது:-

    மாவட்டத்தில் உள்ள, 279 அரசு, ஊராட்சி ஒன்றிய நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும், 46,193 மாவட்ட மாணவர்களில் அளவிலான கலை திருவிழா போட்டி களில், 4,149 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட அளவில் நடை பெறும் போட்டியில், முதல் இடம் பெறும் மாணவர்கள், மாநில அளவில் நடை பெறும் போட்டிகளில் கலந்து கொள்வர். மேலும், மாநில அளவிலான போட் டிகளில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடு களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உள்ளனர்.

    கலைத்திருவிழா போட்டிகளை, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்த வேண்டும். அப் போதுதான் மாணவர்களின் திறமை களை நன்கு அறிய உதவும் என்றார்.

    நிகழ்ச்சியில், எம். எல்.ஏ.,க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மணிவண்ணன், கரூர் ஆர். டி.ஓ. ரூபினா உள்பட பலர் பங்கேற்றனர்.

    • 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டார அளவில் நடத்தப்பட்டது.
    • பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 1,50,791 மாணவர்கள் கலந்து கொண்டு அதில் முதலிடம் பெற்ற 39,780 மாணவர்கள் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகளில் பங்கு பெற்றனர்.

    சேலம்:

    மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாண்டும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டார அளவில் நடத்தப்பட்டது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 6 பிரிவுகளில் 33 இனங்களிலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9 பிரிவுகளில் 74 இனங்களிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9 பிரிவுகளில் 81 இனங்களிலும் என மொத்தம் 188 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 1,50,791 மாணவர்கள் கலந்து கொண்டு அதில் முதலிடம் பெற்ற 39,780 மாணவர்கள் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகளில் பங்கு பெற்றனர்.

    தற்போது வட்டார அளவில் முதல் 2 இடங்கள் பெற்ற 11,177 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

    அதன்படி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை புனித பால் மேல்நிலைப்பள்ளி, பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, ஹோலி ஏஞ்சல் மெட்ரிக்பள்ளி, காமராஜர் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிறுமலர் தொடக்கப் பள்ளி, பத்மாவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சக்தி கைலாஷ் கல்லூரி உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெறுகிறது.

    தொடக்க விழா கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று மரவனேரி புனித பால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    • நாளை தொடக்கம்
    • 3 பிரிவு களிலும் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அனைத்து அரசு, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைச்செயல்பாடுகள், உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர கூடிய வகையில் கலைத்திரு விழா போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பா டுகள் வழி வகுக்கிறது.

    2023-24-ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் 10.10.2023 முதல் 14.10.2023 வரையில் நடைபெற்றது. வட்டார அளவில் இப் போட்டிகள் கடந்த 18.10.2023 தொடங்கியது. மாவட்ட அளவில் கலை திருவிழா போட்டிகள் நாளை (26-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரையிலும், மாநில அளவில் 21.11.2023 முதல் 24.11.2023 வரையிலும் நடைபெற உள்ளது. கலைத் திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு 3 பிரிவுகளில் நடைபெறுகிறது. மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நாகர்கோவில் அனந்த நாடார்குடி புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடை பெறவுள்ளது. இந்நிகழ்ச்சி தொடக்க விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

    வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளில் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ ருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.

    இவ்விருதுகள் 3 பிரிவு களிலும் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாண வர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடு களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஓவியம் வரைதல், வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, ஓவியம் வரைதல்,வினாடி-வினா போட்டிகள் நடை பெற்றது.

    250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனா. இந்த போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தொடங்கிவைத்தார்.முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், தனியார் பள்ளி டி.இ.ஓ. அமலா தங்கதாய், கமலா சுப்பிரமணியம் முதல்வர்தெய்வபாலன், ஜேக்கப், வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ×