என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நகுல்"
- அண்மையில் நகுல் நடிப்பில் வெளியானது வாஸ்கோடகாமா திரைப்படம்.
- ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
தமிழ் திரையுலகில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். அண்மையில் நகுல் நடிப்பில் வெளியானது வாஸ்கோடகாமா திரைப்படம். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
அருன் என்.வி. இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் குமரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். படத்தின் ஓடிடி ரிலிஸ் அப்டேட் தற்பொழுது வெளியாகவுள்ளது. பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகிறது. அமேசான் பிரைமிலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாஸ்கோடகாமா படத்தை ஆர்ஜிகே இயக்கி உள்ளார்.
- இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை ஏழுமலை ஆதிகேசவன் மேற்கொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். அதன்பிறகு தனது உடல் எடையை குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு மாறி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவ்வாறு நகுல் நடித்து வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், நகுல் நடிப்பில் உருவாகி இருக்கி, விரைவில் வெளயியாக இருக்கும் புதிய படம் வாஸ்கோடகாமா. ஆர்ஜிகே இயக்கி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
வாஸ்கோடகாமா திரைப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தின் சென்சார் விவரங்களும் வெளியாகி உள்ளது. வாஸ்கோடமாகா திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு சான்று வழங்கி உள்ளது.
அருன் என்.வி. இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் குமரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். உறியடி, உறியடி 2, ஃபைட் கிளப் போன்ற படங்களின் கலை இயக்குநராக பணியாற்றிய ஏழுமலை ஆதிகேசவன் இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.
- இப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த' வாஸ்கோடகாமா ' திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள்.
விழாவில் நடிகை தேவயானி பேசும் போது,
"என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவனுக்கு நான் முறையில் அக்கா என்றாலும் வயதில் சின்னவனாக இருப்பதால் அவனை நான் அம்மாவைப் போல் பார்த்துக் கொள்வேன்.அவனுக்கு நான் இன்றும் அம்மாதான்.சின்ன வயதில் இருந்து துறுதுறு என்று இருப்பான். நல்ல திறமைசாலி.
இன்று என் அப்பாவும் அம்மாவும் இல்லை. ஆனால் இங்கே நாங்கள் இருப்பதைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நான் இங்கே இருப்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசீர்வாதம் இங்கே நிரம்பி இருப்பதாக நினைக்கிறேன்.எப்போதும் அவனுக்கு ஆதரவாக இருந்த அவர்கள் இப்போதும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் "என்று கூறி வாழ்த்தினார் .
நாயகன் நகுல் பேசும் போது,
"எனது வாழ்க்கை எங்கே தொடங்கி எங்கே போகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. மும்பையில் பள்ளியில் படித்த போது அக்கா இங்கே நடிக்க வந்து விட்டார். அவருக்காக, அவர் அழைத்ததால் இங்கு வந்து விட்டோம்.
நான் முதலில் பைலட் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டு முயன்றேன் . பிறகு விஸ்காம் சேர்ந்தேன். அதுவும் ஒரு காதலுக்காக மாறினேன். அதுவும் நிறைவேறவில்லை.
ராணுவத்தில் சேர ஆசைப்பட்டேன் .அதற்காக எடையெல்லாம் குறைத்தேன்.அதுவும் நடக்கவில்லை .
ஏதோ ஒரு அதிர்ஷ்டம், ஏதோ ஒரு ஆசீர்வாதம் காரணமாக இங்கு வந்து சேர்ந்து விட்டேன்.
ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் தான் பாய்ஸ் படத்தில் நடிக்க வந்தேன். பிறகு காதலில் விழுந்தேன் வந்தது. நான் ஒன்று நினைத்தால் எல்லோரும் இன்னொன்றை என்னிடம் ரசித்தார்கள். நான் பாடலாம் என்றால் அவர்கள் நகுல் நன்றாக ஆடுகிறார் என்றார்கள்.
பல தடைகள் தாமதங்களுக்குப் பிறகு எப்படியோ அடுத்தடுத்த படங்கள். இப்படித்தான் மாசிலாமணி வந்தது, பிறகு வல்லினம் வந்தது.சில மாதங்கள் எந்த வேலையும் இல்லாமல் கூட இருந்தேன் .ஒரு கட்டத்தில் புலம்பதில் பயனில்லை என்று புரிந்தது. எதெது எப்போது நடக்குமோ அதது அப்போது நடக்கும் என்கிற தெளிவு வந்தது.
இரண்டு மணி நேரம் சிரிக்கச் சிரிக்க இந்த வாஸ்கோடகாமா படத்தின் கதையைச் சொன்னார் ஆர்ஜிகே. அதேபோல் எடுத்துள்ளார். இதுவரை நான் நடிக்காத டார்க் ஹ்யூமர் கதை இது .
சினிமாவில் விமர்சனம் கூடாது என்பது அல்ல ,அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சினிமா நூற்றாண்டு கண்டு விட்டது. இதை நம்பி பலபேர் இருக்கிறார்கள். விமர்சனம் என்கிற பெயரில் சினிமாவை அழித்து விடாதீர்கள்." என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாஸ்கோடகாமா படத்தை ஆர்ஜிகே இயக்கி உள்ளார்.
- இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை ஏழுமலை ஆதிகேசவன் மேற்கொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். அதன்பிறகு தனது உடல் எடையை குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு மாறி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவ்வாறு நகுல் நடித்து வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
எனினும், இடையில் சிலகாலம் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், நகுல் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நகுல் நடித்துள்ள புதிய படம் வாஸ்கோடகாமா என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது.
ஆர்ஜிகே இயக்கி இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஜூலை 20 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் படி நகுல் நடிப்பில் உருவாகி இருக்கும் வாஸ்கோடகாமா திரைப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தின் சென்சார் விவரங்களும் வெளியாகி உள்ளது. வாஸ்கோடமாகா திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு சான்று வழங்கி உள்ளது.
அருன் என்.வி. இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் குமரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். உறியடி, உறியடி 2, ஃபைட் கிளப் போன்ற படங்களின் கலை இயக்குநராக பணியாற்றிய ஏழுமலை ஆதிகேசவன் இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாஸ்கோடகாமா படத்திற்கு அருன் எஸ்வி இசையமைத்துள்ளார்.
- இந்த படத்திற்கு ஏழுமலை ஆதிகேசவன் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். அதன்பிறகு தனது உடல் எடையை குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு மாறி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவ்வாறு நகுல் நடித்து வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
எனினும், இடையில் சிலகாம் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், நகுல் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நகுல் நடித்துள்ள புதிய படம் வாஸ்கோடகாமா என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது.
ஆர்ஜிகே இயக்கி இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஜூலை 20 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக புது போஸ்டரும் வெளியிடப்பட்டு உள்ளது.
அருன் என்.வி. இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் குமரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். உறியடி, உறியடி 2, ஃபைட் கிளப் போன்ற படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிய ஏழுமலை ஆதிகேசவன் இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார்.
தற்போது ஆடியோ, டிரைலர் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ள நிலையில், படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த 2008 ஆம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.
- டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார்.
பிரபல தமிழ் நடிகை தேவயானியின் இளைய சகோத்தரர் நகுல் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். நகுல் நடப்பில் கடந்த 2008 ஆம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.
இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னணி பாடகராகவும் உள்ள நகுல் இடையில் சூப்பர் சிங்கர் 7 நிகச்சியில் சிற்ப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டார்.
தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த 'வாஸ்கோடகாமா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி 'வாஸ்கோடகாமா' படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தி டார்க் ஹெவன் படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
- இதன் டைட்டில் லுக்கை நடிகர்கள் சசிகுமார், பரத் ,சிபிராஜ் வெளியிட்டனர்.
நகுல் நடிக்கும் அடுத்த படத்திற்கு 'தி டார்க் ஹெவன்' என பெயரிடப்பட்டு உள்ளது. இதற்கான டைட்டில் லுக் போஸ்டரை சசிகுமார், பரத் மற்றும் சிபிராஜ் வெளியிட்டனர்.
இந்த படத்தை பாலாஜி இயக்குகிறார். டீம் பி புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிக்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக தி டார்க் ஹெவன் உருவாகிறது. இதில் புலனாய்வு செய்யும் காவல் அதிகாரியாக நகுல் நடிக்கிறார்.
ரேணு சௌந்தர் நாயகியாக நடிக்கிறார். சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயால், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி பாலாஜி இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே உடன்பால் படத்திற்கு இசையமைத்தவர். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது.
- இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது.
- இந்த படத்தில் நடிகர் நகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரஜின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டி3' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி. இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் நகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஜே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் எம்.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
நிற்க அதற்கு தக போஸ்டர்
கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'நிற்க அதற்கு தக' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான முதல் தோற்ற போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
வயலினில் ரத்தம் வடிவது போன்று உருவாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
Really excited to team up with Director Balaaji of #D3 fame. Loving the title so much..! #newavatar #crime #investigation #thriller #workinprogress pic.twitter.com/hAFXzXFU5J
— Nakkhul (@Nakkhul_Jaidev) June 7, 2023
- ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல்.
- காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமாடைந்தார்.
2003-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நகுல். பின்னர் 2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது. தொடர்ந்து மாசிலாமணி, கந்தகோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் நடிகர், பின்னணிப் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் கைவசம் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் எரியும் கண்ணாடி படமும், ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் வாஸ்கோடகாமா படமும் உள்ளது.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2020 ஆகஸ்ட் மாதம் அகிரா என்ற மகள் பிறந்தார். சமீபத்தில் கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் நகுல்-ஸ்ருதி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியை பகிர்ந்துள்ளனர். இவர்கள் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தத் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்