என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233399"

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.28லட்சத்து 67 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 20.54குவிண்டால் எடை கொண்ட 6 ஆயிரத்து92தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.66-க்கும், சராசரி விலையாக ரூ.23.15-க்கும் என மொத்தம் ரூ.45ஆயிரத்து 149-க்கு விற்பனையானது.

    அதேபோல் 264.44½ குவிண்டால் எடை கொண்ட 527 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.99-க்கும், சராசரி விலையாக ரூ.78.40-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.11-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.11-க்கும், சராசரி விலையாக ரூ.73.79-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 93 ஆயிரத்து 581-க்கு விற்பனையானது.

    அதேபோல் 131.77½வரை குவின்டால் எடை கொண்ட430 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலைக்காய் அதிக விலையாக ரூ73.90-க்கும், குறைந்த விலையாக 63.40 -க்கும், சராசரி விலையாக 72.20 -க்கும் என ரூ8 லட்சத்து 73 ஆயிரத்து 565 க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.28லட்சத்து 67 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.

    • பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.11 லட்சத்து 72 ஆயிரத்து 661-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம்,.பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணை நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 25.40குவிண்டால் எடை கொண்ட 7 ஆயிரத்து 194தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.06-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.06-க்கும், சராசரி விலையாக ரூ.22.59-க்கும் என மொத்தம் ரூ.53 ஆயிரத்து 372-க்கு விற்பனையானது.

    அதேபோல் 153.51½ குவிண்டால் எடை கொண்ட 322 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.76-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.10-க்கும், சராசரி விலையாக ரூ.77.99-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.48-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.99-க்கும், சராசரி விலையாக ரூ.72.12-க்கும் என மொத்தம் ரூ.11 லட்சத்து 19 ஆயிரத்து 289-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.11 லட்சத்து 72 ஆயிரத்து 661-க்கு விற்பனையானது.

    • சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது.
    • ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ. 59.45 லட்சத்துக்கு விற்பனைஆனது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 57.93 1/2குவிண்டால் எடை கொண்ட 16ஆயிரத்து 554தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.25.50-க்கும், குறைந்த விலையாக ரூ.18.79-க்கும், சராசரி விலையாக ரூ.23.70-க்கும் என ரூ.1 லட்சத்து 36ஆயிரத்து 86-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 560.96 1/2குவிண்டால் எடை கொண்ட 1164 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ80.70-க்கும், குறைந்த விலையாக ரூ75.99-க்கும் சராசரி விலையாக ரூ79.79-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.76.69-க்கும், குறைந்த விலையாக ரூ.60.29-க்கும், சராசரி விலையாக ரூ.73.39-க்கும் என ரூ.42லட்சத்து 8ஆயிரத்து 556-க்கு விற்பனை ஆனது. அதேபோல் 240.68 1/2 குவிண்டால் எடை கொண்ட 754 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது.

    இதில் ரூ. 1 கிலோ நிலக்கடலை காய் அதிக விலையாக ரூ.70 .80-க்கும், குறைந்த விலையாக ரூ.63 .29-க்கும் சராசரி விலையாக 68 .20 -க்கும்என ரூ.16 லட்சத்து 646-க்கு விற்பனையானது. இந்த வாரம் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ.59 லட்சத்து45ஆயிரத்து288-க்கு விற்பனை ஆனது.

    • இருட்டணை வருவாய் கிராமங்களில் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • இருட்டணை வருவாய் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பு திட்டப்பணி–கள் குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு மேற்கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை சென்னை விதைசான்று மற்றும் அங்ககச்சான்ற–ளிப்புத்துறை வேளாண்மை இணை இயக்குநர் அசீர்கனக–ராஜன் மேல்சாத்தம்பூர், இருட்டணை வருவாய் கிரா–மங்களில் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செய்த திட்டப்பணிகளை அவர் பார்வையிட்டார். வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்ட திட்டப்பணிகளான பண்ணைக் கருவிகள், தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான்கள், தார்ப்பாய்கள் விநியோகம் குறித்து மேல்சாத்தம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். மேலும் தோட்டக்கலை துறையின் சார்பாக மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி–னார்.

    இருட்டணை வருவாய் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பு திட்டப்பணி–கள் குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் ராஜகோபால் (மாநிலத்திட்டம்), முருகன் (மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்) மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, தோட்டக்லைத்துறை உதவி இயக்குநர் தமிழ்செல்வன், மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.

    • பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை குடுமியான் மலை, சமிதி-ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு மேற்கொண்டார்.
    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இருட்டணை கிராமத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பு ஆய்வு செய்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை குடுமியான் மலை, சமிதி-ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு மேற்கொண்டார். ச.செருக்கலை, இருட்டணை, மேல்சாத்தம்பூர், குன்னமலை வருவாய் கிராமங்களில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது செருக்கலை கிராமத்தில் தரிசு நில மேம்பாடு தொகுப்பில் பருத்தி, சோளம், ஆமணக்கு பயிர்களின் வளர்ச்சி அதன் மூலம் விவசாயிகள் பெற்ற பலன்களை ஆய்வு செய்தார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இருட்டணை கிராமத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பு ஆய்வு செய்தார். ஆய்வின் போது விவசாயி சுமதி தனது நிலத்தில் உள்ள சீமை கருவேல் மரங்களை வயலில் இருந்து வெட்டி எடுத்து மீண்டும் பயிர் செய்ய உள்ளதை எடுத்துக்கூறினார்.

    விதை கிராம திட்டத்தின் கீழ் மேல்சாத்தம்பூர் கிராமத்தில் நிலக்கடலை டி.எம்.வி-14 (சான்று விதை) விவசாயி சந்திரசேகர் பயிர் செய்துள்ளார் அவரது வயலில் ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில் நுட்பங்களான விதை நேர்த்தி செய்தல், அடியுரம், மேலுரம், களவன்கள் களைதல், நுண்ணூட்டம் இடுதல், விதை கிராம திட்டத்தின் கீழ் பதிவுகள் செய்யும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    விவசாயிகளுக்கு கோடைஉழவு, விதைசான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவது, விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்டங்கள், பயறு வகை பயிர்களுக்கு டி.ஏ.பி கரைசல் தெளிப்பு, பருவத்திற்கேற்ற பயிர், பயிர் சுழற்சி, பயிர் இடைவெளியினை பராமரிப்பது, ஊற்றமேற்றிய தொழு உரமிடுதல், உயிர் உரங்களை பயன்படுத்துதல், நுண்ணீர் பாசனம், மழை நீரை சேமித்தல் போன்றவைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். ஆய்வின்போது நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் ஜெகதீசன் (மத்தியத்திட்டம்),.ராஜ கோபால் (மாநிலத்திட்டம்) மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி விதை அலுவலர்கள் மோகன்ராஜ், ராதாகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் நாகராஜன், பிரபு, பூபதி, கவுசல்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சாலைப் புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய் , தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ.25 லட்சத்து13ஆயிரத்து110-க்கு விற்பனை ஆனது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப் புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 37.77குவிண்டால் எடை கொண்ட 11ஆயிரத்து 70தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.25.86-க்கும், குறைந்த விலையாக ரூ.21.29-க்கும், சராசரி விலையாக ரூ.24.36-க்கும் என ரூ.87ஆயிரத்து 109-க்கு விற்பனை ஆனது. அதேபோல் 234.87 குவிண்டால் எடை கொண்ட 502 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ84.39-க்கும், குறைந்த விலையாக ரூ82.20-க்கும் சராசரி விலையாக ரூ83 .76-க்கும் விற்பனையானது.

    இரண்டாம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.40-க்கும், குறைந்த விலையாக ரூ.66.60-க்கும், சராசரி விலையாக ரூ.78.99-க்கும் என ரூ.18லட்சத்து 86ஆயிரத்து 644-க்கு விற்பனை ஆனது. அதேபோல் 81.98½ குவிண்டால் எடை கொண்ட254 மூட்டை நிலக் கடலைக்காய் விற்ப னைக்கு வந்தது. இதில் நிலக்கடலைக்காய் அதிக விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ69.40-க்கும், குறைந்த விலையாகரூ 62.30-க்கும் சராசரி விலையாக ரூ67. 60க்கும் என 5 லட்சத்து39 ஆயிரத்து357 -க்கு விற்ப னையானது.

    இந்த வாரம் சாலைப்பு தூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய் , தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ.25 லட்சத்து13ஆயிரத்து110-க்கு விற்பனை ஆனது.

    • ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 12 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • சொட்டு நீர் பாசனம் மானிய விலையில் அமைத்து தரப்படும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 12 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலராஜகுல ராமன், சோழபுரம், குறிச்சியா ர்பட்டி, கிருஷ்ணாபுரம், சோலைசேரி, அயன்கொல்ல ங்கொ ண்டான், நக்கனேரி, சுந்தரநாச்சியார்புரம், வடக்கு தேவதானம் ,மேலூர் துரைசாமிபுரம், சொக்கநாதன்புத்தூர், மீனாட்சிபுரம் ஆகியவை ஆகும். வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 80 சதவீத திட்டங்கள் இந்த பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளன, இந்த கிராமங்களில் தரிசு நிலங்களை சீர் செய்ய, சொட்டுநீர் பாசனம் அமைக்க போன்றவற்றுக்கு அரசு மானியம் தருகிறது.

    மேலும் 8-க்கும் மே ருக்கு மேல் சீர்த்திருத்தம் செய்யும் போது அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு சொட்டு நீர் பாசனம் மானிய விலையில் அமைத்து தரப்படும்.

    இங்குள்ள விவசாயிகளுக்கு தென்னங்கன்று, தெளிப்பான், தார்பாலின், பண்ணை கருவிகள் போன்றவைகளும் மானிய விலையில் கிடைக்க உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் விவரத்தை அந்தந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலரிடம் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைசாமி தெரிவித்தார்.

    • விற்பனை உரிமம் பெற்றுள்ள விவசாயிகளின் விலை பொருள்களான காய்கறிகள் கீரைகள் பழங்களின் தரத்தை பார்வையிட்டார்.
    • உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தை அதிகரிக்கவும், சாகுபடி தீவிரபடுத்தவும் ஆலோசனைகள் வழங்கி னார்.

    பாபநாசம்:

    ேவளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையினரால் பாபநாசத்தில் நடத்தப்படும் பாபநாசம் உழவர் சந்தையை தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    விற்பனை உரிமம் பெற்றுள்ள விவசாயிகளின் விலை பொருள்களான காய்கறிகள் கீரைகள் பழங்களின் தரத்தை பார்வையிட்டார். தராசுகள் மற்றும் எடைகளை சரி பார்த்தார்.

    உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தை அதிகரிக்கவும், சாகுபடி தீவிரபடுத்தவும் ஆலோசனைகள் வழங்கி னார். விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது பாபநாசம் தோட்டக்கலை உதவி இயக்குனர் பரிமேலழகன், தோட்டக்கலை அலுவலர் தேவதர்ஷினி, உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திகேயன், வேளாண் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகளும், 15 பயனாளிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் பாறை, மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார்.

    திருமருகல் வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன், வேளாண்மை உதவி அலுவலர் பவித்ரா ஆகியோர் முன்னிலை வகித்து துறையில் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கிக் பேசினர்.

    இதில் 20 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகளும், 15 பயனாளிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் பாறை, மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டது.இதில் ஊராட்சி செயலாளர் சாமிநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
    • இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 2022-ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் காலை 10 மணிமுதல் 11.ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 2022-ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப்பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம்.

    மேலும் மதியம் 12.30 முதல் 1.30 முடிய அலுவலர்களின் விளக்கங்களும் தெரிவிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    • நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.
    • இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.

    ஈரோடு வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, துணை இயக்குனர் (மாநில திட்டம்) அசோக், ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஆய்வின் போது கூடுதல் இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:

    இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    உளுந்து விதை பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு அரசு உற்பத்தி மானியம் வழங்குகிறது. இவ்விதை பண்ணை கலவன்கள் இன்றி வயல் தரத்தில் தேர்ச்சி பெற்றவுடன் பாதுகாப்பான முறையில் அறுவடை செய்யப்பட்டு விதை சுத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

    விதை சுத்தி நிலையத்தில் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலைய த்துக்கு அனுப்பப்படும். விதை பரிசோதனையில் பகுப்பாய்வு முடிவில் தேர்ச்சி பெற்றதும் சான்றட்டை இணைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    • அந்தியூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை வேளாண்மை இயக்குனரக கூடுதல் வேளாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை வேளாண்மை இயக்குனரக கூடுதல் வேளாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் மைக்கேல் பாளையம், பிரம்மதேசம் பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் தொகுப்பு நிலத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

    இதன்படி மானாவாரி நிலங்களில் உள்ள விவசாயிகளை பதிவு செய்து போர்வெல் அமைத்து வேளாண்மை தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் நுண்ணீர் பாசன வசதி செய்து கொடுத்து நிலத்தின் தன்மை, நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயிர் சாகுபடி மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.

    மேலும் இக்கிராமங்களில் செயல்படும் அனைத்து துறைகளில் மானியத் திட்டங்கள், தென்னங்கன்றுகள், உளுந்து விதைகள், பண்ணைக் குட்டைகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் கல் வரப்பு மற்றும் மண் பரப்பு போன்ற திட்டங்களை ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு திட்டம் சிறப்பாக செயல்பட ஆலோசனை வழங்கினார்.

    ஆய்வின் போது வேளாண் இணை இயக்குனர் சின்னச்சாமி, துணை இயக்குனர்கள் அசோக், சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, வேளாண் பொறியியல் செயல் பொறியாளர் விஸ்வநாதன், வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தியூர் வட்டார வேளாண் அலுவலர் ஜெயக்குமார், துணை வேளாண் அலுவலர் முருகன் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் மூர்த்தி, செந்தில், பால–முருகன், சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×