என் மலர்
நீங்கள் தேடியது "slug 232990"
- சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
- அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில்.திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமார வலசு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிரம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.
- ஆவணி மாதத்திலேயே வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
- இன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் திருமண தடை நீங்கும்.
ஆவணி மாதத்தில் பல தெய்வங்களுக்குரிய பண்டிகை தினங்கள் வருகின்றன. இந்த ஆவணி மாதத்தில் தெய்வங்களுக்குரிய வழிபாடு மற்றும் விரதம் இருப்பதால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிச்சயமான வெற்றியை பெறும் என்பது பெரியோர்களின் அனுபவமாக இருக்கிறது. ஆவணி மாதத்திலேயே வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம் இந்த ஆவணி மாதத்தில் தான் விநாயகருக்குரிய விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆவணி சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் உப்பு சேர்க்காத உணவு அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வாசமிக்க மலர்கள், மஞ்சள், விபூதி போன்ற அபிஷேக பொருட்களை தந்து, அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி பூஜையறையில் நைவேத்தியம் வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.
ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமண தாமதமானவர்களுக்கு திருமணம் நடக்கும். புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கி அவர்கள் கல்வியில் சிறக்க செய்யும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.
- விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள்.
- இந்த கோவிலில் தேங்காய் மாலை சாத்தி வழிபடுகிறார்கள்.
மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரே உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விழா, இந்த கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள்.
ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால், கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. சங்கடஹர சதுர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகளை கரு. கருப்பையா செய்து வருகிறார்.
- சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
- கோடிசக்தி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது
மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது. பிறகு கோடிசக்தி விநாயகருக்கு மாலை, மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்
விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கணேஷ் குமார் ஆனந்தவள்ளி, காளீஸ்வரி கர்ணிகா ஆகியோர் செய்திருந்தனர்.
- சோழவந்தான் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.
- இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
சோழவந்தான்
சோழவந்தானில் திரவுபதி அம்மன் கோவிலில் விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. பால், தயிர், வெண்ணை, திரவிய பொடி, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்யப்பட்டது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பூசாரி திருப்பதி வெங்கடேசன்- சுமதி பவதாரணி ஆகியோர் செய்து இருந்தனர்.
- ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது.
- 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
வீரபாண்டி :
திருப்பூர் வீரபாண்டி மாகாளியம்மன் கோவிலில் வில்வ விநாயகர் பெருமானுக்கு ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது.
பின்பு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டு வினை தீர்க்கும் வில்வ விநாயகரை வழிபாடு செய்தனர்.
- சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது.
- இன்று விநாயகரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்..
சதுர்த்தி தினத்தில் சந்திரனை ஆட்டிப் படைத்தவர் விநாயகப் பெருமான். எனவே சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை.
தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்று அதாவது நமக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் போக்கும் சதுர்த்தி என்று போற்றுகின்றன ஞானநூல்கள். அன்றைய நாளில் விரதம் இருந்து செய்யும் விநாயகர் வழிபாடு நம் சங்கடங்கள் எல்லாவற்றையும் போக்கும் என்பது நம்பிக்கை. சங்கடஹர சதுர்த்திகளில் தலையாயது மகா சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தியையே நாம் மகாசங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம்.
இன்று (திங்கட்கிழமை) மகா சங்கடஹர சதுர்த்தி தினமாகும். இன்று விநாயகரைக் கட்டாயம் விரதம் இருந்து வழிபட வேண்டும். ஓராண்டு முழுவதும் வரும் 11 சங்கட ஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்ய இயலாதவர்கள் இன்று மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பது விசேஷம். அவ்வாறு விரதம் இருந்தாலோ மாலையில் விநாயகரை வழிபட்டாலோ ஓராண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும்.
மகாசங்கடஹர சதுர்த்தி நாளில் செய்யும் விநாயகர் விரத வழிபாடு பல்வேறு வரங்களை வழங்கும். குறிப்பாகக் கடன் பிரச்சினைகளில் திண்டாடுபவர்கள் மகாசங்கடஹர சதுர்த்தி அன்று மாலை சந்திர உதயநேரத்தில் வீட்டிலேயே விநாயகப்பெருமானை நினைத்து ஒரு மலர் சாத்தி விநாயகப் பெருமானுக்குப் பிரியமான விநாயகர் அகவல் போன்ற துதிகளைப் பாடிப் போற்றினால் வீட்டில் வறுமை நீங்கிச் செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை.
- அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- சிறப்பு ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில்.திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமார வலசு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.
- இன்று விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினம்.
- சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு புதன் கிரக தோஷங்கள் நீங்கும்.
ஆனி மாதம் தெய்வ வழிபாடு, விரதங்கள், பூஜைகள் மேற்கொள்வதற்கு ஒரு சிறந்த மாதமாக இருக்கிறது. இந்த ஆனி மாதத்தில் ஆனி பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாள் ஆனி தேய்பிறை சதுர்த்தி அல்லது மாத சங்கடஹர சதுர்த்தி தினம் எனப்படுகிறது. விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினம் இந்த ஆனி சங்கடஹர சதுர்த்தி. இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சிறப்பான நன்மைகள் ஏற்படும்.
ஆனி தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வசமிக்க பூக்கள், அபிஷேக பொருட்கள் தந்து, ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.
ஆனி மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் போக மிக காலமாக திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்துக்கள் வாங்கல் போன்ற முயற்சிகளில் தடைகள் நீங்கி, வெற்றிகள் உண்டாகும். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்கங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வர வழிவகை செய்யும் ஆனி மாதம் மிதுன ராசியில் பிறப்பதால் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு புதன் கிரக தோஷங்கள் நீங்கும்.
- விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஏழைப் பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், மாவடி பிள்ளையார், நீலா மேலவீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமன் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வேதாரண்யம் அச்சம் தீர்த்த விநாயகர், வேதாரண்யம் கற்பகவிநாயகர், கட்சுவான் முனிஸ்வரர்சுவாமி கோவிலில் உள்ள விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளது.
- வளர்பிறை சதுர்த்தியில் சாதாரணமாக விநாயகர் வழிபாடு செய்யலாம்.
விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வளர்பிறை சதுர்த்தி சாதாரண சதுர்த்தி. தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி. இப்படி மூன்றுவகையாக உள்ளது.
வளர்பிறை சதுர்த்தியில் சாதாரணமாக விநாயகர் வழிபாடு செய்யலாம். சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து, இரவில் விநாயகரை வழிபட்டால் எல்லா செயல்பாடுகளிலும் தடைகள் நீங்கி வெற்றி பெறலாம்.
ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விநாயகரின் பிறந்தநாள் என்பதால் ஒட்டுமொத்தமாக எல்லாரும் கொண்டாட வேண்டும்.