என் மலர்
நீங்கள் தேடியது "slug 232451"
- ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி 11 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இது தொடர்பாக கலெக்டரிடம் குடும்பத்தினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள கழநீர் மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அவருடன் உறவினர்கள் 11 பேரை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்து அவர்களுக்கு பொது கண்மாயில் குளிக்கவும், குடிநீர் குழாயை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டதாம். இதுகுறித்து சிக்கல் காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் 11 பேரும் தங்களது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கலெக்டரிடம் குடும்பத்தினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
- இந்த சந்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 260 கடைகள் உள்ளன. இதில் 130 கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. மற்ற கடைகள் காலியாக உள்ளன
- காலையில் மாநகராட்சி அதிகாரிகள் கனகமூலம் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வந்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் வடசேரியில் கனகமூலம் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 260 கடைகள் உள்ளன. இதில் 130 கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. மற்ற கடைகள் காலியாக உள்ளன.
இந்த நிலையில் கனகமூலம் சந்தையில் வியாபாரிகள் தங்களது கடைக்கு முன் நடைபாதையில் மேற்கூரை அமைத்து காய்கறிகள் மற்றும் பொருள்களை அதில் வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து கடைகளுக்கு முன் போடப்பட்டுள்ள மேற்கூரையை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். ஆனால் வியாபாரிகள் அவற்றை அகற்றவில்லை. இதையடுத்து வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் மேற்கூரை அகற்றப்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலையில் மாநகராட்சி அதிகாரிகள் கனகமூலம் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வந்தனர்.
மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராம் மோகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் ஞானப்பா, சுப்பையா சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது சந்தையின் ஒரு புறத்தில் இருந்த பொருட்களை மட்டும் வியாபாரிகள் மாற்றினார்கள்.
மறுபுறத்தில் இருந்த பொருட்களை மாற்றவில்லை. அவர்கள் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் முதலில் சந்தையில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு செட் இடித்து அகற்றப்பட்டது. அதன்பிறகு கடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். ஆனால் வியாபாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற கொண்டு வந்திருந்த ஜே.சி.பி. எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து வியாபாரிகள் ஜே.சி.பி. எந்திரம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து நாகர்கோவில் டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
தொடர்ந்து அதிகாரிகளும், போலீசாரும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் தரப்பில் நாங்கள் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள மேல் கூரையின் கீழ் பொருட்கள் எதுவும் வைக்க மாட்டோம். அப்படி பொருட்கள் எதுவும் வைத்தால் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி அதிகாரிகள் பொருட்களை எடுத்து செல்லுங்கள் ஆனால் மேற்கூரைகளை அகற்றக்கூடாது என்று கூறினார்கள்.
இதையடுத்து அதிகாரிகள் இது தொடர்பாக மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேச முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.இதை தொடர்ந்து அங்கிருந்து அதிகாரிகள் மேற் கூரைகளை அகற்றாமல் சென்றனர்.தொடர்ந்து வியாபாரிகளும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், "ஏற்கனவே கொரோனா காலத்துக்கு பிறகு நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். தற்பொழுது ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மேற்கூரைகளை அகற்றுவது எங்கள் வயிற்றில் அடிப்பதற்கு சமமானதாகும். நாங்கள் ஏற்கனவே பல லட்ச ரூபாய் செலவு செய்து மேற் கூரைகளை அமைத்துள்ளோம். மேற்கூரைகளை அகற்றுவதால் காய்கறிகள் வெயிலில் நாசமாகி விடும். எனவே இதை அகற்ற கூடாது" என்று தெரிவித்தனர்.தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவியது.
- குன்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், புதிய சாலை அமைக்கும் பணி, சமுதாய கூடம் அமைத்தல் போன்ற பணிகளை டெண்டர் எடுத்து பணியாற்றி வருகின்றார்.
- இனி வரும் காலங்களில் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் குன்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், புதிய சாலை அமைக்கும் பணி, சமுதாய கூடம் அமைத்தல் போன்ற பணிகளை டெண்டர் எடுத்து பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் குன்னூரில் உள்ள ஊராட்சி பள்ளிகளுக்கு பராமரிப்பு மற்றும் வண்ணங்கள் பூசும் பணிகளுக்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு தராமல் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்தம் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை கண்டித்து திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இது தொடர்பாக மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முடிவு செய்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களை அழைத்து நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் இனி வரும் காலங்களில் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- ராசாவுக்கு ,எதிராக பாஜக மகளிர் அணியினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர்
- ராஜாவை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்.
ஊட்டி
ஊட்டியில் மாவட்ட பாஜக சார்பில் ராசாவின் மதப்போக்கு பிரிவினையை கைவிடக்கோரி மண்டல் தலைவர் பிரவீன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது
மாவட்டத் தலைவர் மோகன்ராஜ்கௌடா , மாவட்ட பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நகர நிர்வாகிகள் பொதுச்செயலாளர்கள் சுரேஷ்குமார் ,ராஜேந்திரன், நகர துணைத் தலைவர் சுதாகர் ,ஹரி கிஷன் ,மணி ஸ்மூத்லி, நகர மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்,
ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசாவுக்கு ,எதிராக பாஜக மகளிர் அணியினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர்
நீலகிரி மாவட்டத்தில் ராசா ஒரு இந்து வீட்டிலேயு கூட ஓட்டு கேட்க முடியாது. அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் உதகை நகர பாஜக நிர்வாகிகள் கூறினர்
- பலியான மீனவர் உடல் இன்று பிரேத பரிசோதனை
- ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தின் தென் மேற்கு பகுதியில் அமைந்து உள்ளது தேங்கா ப்பட்டணம் மீன்பிடித் துறை முகம். இந்த துறைமுகம் கட்டப்பட்ட நாளில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
சரியான கட்டமைப்புடன் துறைமுகம் கட்டப்படாத தால் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர் கதை யாக நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இங்கு 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார். அவரது உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
இந்த சூழலில் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமு கத்தை மறு சீரமைப்பு செய்ய வலியுறுத்தி இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த 15 மீனவ கிராம மக்கள் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்கள் அமல்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் மீன்பிடி துறைமுக ஏலக் கூடத்தில் வைத்து போராட்டம் நடத்தி னர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கூறுகையில், இதுவரை 28 மீனவர்கள் இறந்துள்ளனர். இனியும் தாமதிக்காமல் துறைமுகத்தை உடனே மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றனர். மேலும் பணிகள் தொடங்கிட துறை முகத்தை மூட வேண்டும், உயிரிழந்த வர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
போராட்டம் குறித்த தகவல் கிடைத்ததும் பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, கிள்ளி யூர் தாசில்தார் ராஜேஷ் ஆகியோர் விரைந்து வந்து மீனவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். துறைமுகத்தை மூடுவது பற்றியும், நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
அதன்பிறகு இரவு 7.30 மணிக்கு அமல்ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக போலீசாரிடம் ஒப்படை க்கப்பட்டது. போலீசார் உடலை பெற்று ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று அமல்ராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டு இருந்தது.
- திகாயத்தின் கைதுக்கு ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
- ஏராளமான போலீசார் எல்லைகளில் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி :
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (திங்கட்கிழமை) விவசாயிகள் போராட்டம் (மகா பஞ்சாயத்து) நடத்த முடிவு செய்துள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சாதான் இதற்கும் அழைப்பு விடுத்திருந்தது.
இதை ஏற்று டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று முதலே ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் ஆக்கிரமித்து இருந்ததால், இந்த போராட்டத்தை தீவிரமாக ஒடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லியை அடையும் அனைத்து சாலைகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடியுள்ளனர். அத்துடன் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசாரை எல்லைகளில் காவலுக்கு நிறுத்தி உள்ளனர்.
மேலும் ரெயில்வே தண்டவாளங்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது. எந்தவித அசம்பாவிதங்களையும் தவிர்ப்பதற்காக டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதீய கிசான் யூனியன் செய்தி தொடர்பாளரும், சன்யுத் கிசான் மோர்சசா அமைப்பின் மூத்த தலைவருமான ராகேஷ் திகாயத் நேற்று ஜந்தர் மந்தர் சென்று கொண்டிருந்தார்.
அவரை காசிப்பூரில் தடுத்து நிறுத்திய டெல்லி போலீசார், பின்னர் கைது செய்து மது விகார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு வைத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது.
போலீசாரின் வற்புறுத்தலை தொடர்ந்து அவர் போராட்டக்களம் செல்லாமல் திரும்பி சென்றார். எனினும் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் ஆணைப்படி இயங்கும் டெல்லி போலீசாரால், விவசாயிகளின் குரலை அடக்க முடியாது என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.
திகாயத்தின் கைதுக்கு ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன் வைத்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- திருச்சி ரெயில்வே குட்ஷெட்டில் லாரிகள் பாதுகாப்பாக நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும்
- சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளில் இருந்து பேட்டரிகள் மற்றும் உதிரி பாகங்கள் திருடப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகிறது.
திருச்சி :
திருச்சி ரெயில்வே குட்ஷெட்டில் லாரிகள் பாதுகாப்பாக நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும், பார்க்கிங் இல்லாததால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளில் இருந்து பேட்டரிகள் மற்றும் உதிரி பாகங்கள் திருடப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகிறது.
இந்த பிரச்சினை தொடர்பாக குட்ஷெட் தலைமை கூட்ஸ் பொறுப்பாளர்கள் மற்றும் ரெயில்வே முதுநிலை வணிக பிரிவு மேலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் விரைந்து ரெயில்வே நிர்வாகத்திடம் பேசி பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரக்கோரி பல முறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டி ரெயில்வே சரக்கு வேகன்களில் வரும் உரம், கோதுமை மற்றும் மத்திய தொகுப்பிற்கு கொண்டு செல்லப்படும் சிமெண்டு மூட்டைகளை இறக்க மறுத்தும், சரக்கு லாரிகள் இயக்குவதை நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 450-க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் குட்ஷெட்டில் லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதேபோல் சரக்கு இறக்கும் தொழிலாளர்களும் இணைந்து போராட்டத்தில் குதித்தனர்.
இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவதாகவும், 1-ந்தேதிக்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ரெயில்வே நிர்வாகம் முன்வராவிட்டால் ஒன்றாம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவோம் எனவும் ரெயில்வே நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் அதிகாரிகள் தரப்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றித்தரப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் அவர்கள் தங்களது பணிகளுக்கு சென்றனர்.
- மின் கட்டணத்தை உயா்த்துவதாக அறிவித்துள்ளதை கண்டித்து நடந்தது.
- நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவா் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊட்டி:
தமிழக அரசு மின் கட்டணத்தை உயா்த்துவதாக அறிவித்துள்ளதை கண்டித்து நீலகிரி மாவட்ட பாஜக சாா்பில் ஊட்டியில் கலெக்டர் அலுவலகத்துக்கு நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவா் மோகன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொதுச் செயலாளா் ஈஸ்வரன், குமாா், பரமேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினா் ராமன், விவசாய அணி செயலாளா் சௌந்தரபாண்டியன் மற்றும் சபீதா போஜன், பிரவீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அப்போது, மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளதை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷங்களை எழுப்பினா்.
- சுரங்கப்பாலத்தை சுற்றி புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி பாதை அமைக்கப்படாததால், இப்பகுதி மக்கள் போக்கு வரத்துக்கு வழியின்றி அவதிக்குள்ளாகினர்.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீட்டு உரிமையாளர்கள் சிலர், பொக்லைன் எந்திரத்திற்கு அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாழப்பாடி:
வாழப்பாடி பேரூராட்சி காளியம்மன் நகர் அருகே, சேலம்-விருதாச்சலம் ரெயில்பாதையில் குறுக்கிடும் ஆளில்லாத ரெயில்வே கேட்டிற்கு மாற்றாக 3 ஆண்டுகளுக்கு முன் ரெயில்வே சுரங்க ப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், சுரங்கப்பாலத்தை சுற்றி புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி பாதை அமைக்கப்படாததால், இப்பகுதி மக்கள் போக்கு வரத்துக்கு வழியின்றி அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இறந்து போனதால், அவரது சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல வழி இல்லாததால், ஏரி புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி, இப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடிக் கட்டி கடந்த 3-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, நேற்று, வாழப்பாடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில், டி.எஸ்.பி. (பொ) சக்கரபாணி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர், துணை தாசில்தார் செல்வராஜ்,பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர், பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு வீடுகள், கடை மற்றும் கொட்டகைகளை அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீட்டு உரிமையாளர்கள் சிலர், பொக்லைன் எந்திரத்திற்கு அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பட்டா நிலத்துடன் இணைத்து கட்டப்பட்டுள்ள புறம்போக்கு இடத்திலுள்ள கட்டுமானங்களை அகற்றிக்கொள்ள அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்ததால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
- மக்கள் பிரச்சினைக்காக தி.மு.க.அரசை எதிா்த்து போராடவும் தயங்க மாட்டோம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
- பொதுமக்கள் பிரச்சினைக்காக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. அரசை எதிா்த்துப் போராடவும் தயங்காது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடந்தது.முன்னதாக, அவா் நிருபர்களிடம் கூறியதாவது:-
அக்னிபத் திட்டம் நாட்டின் ராணுவத்தை படிப்படியாக தனியாா் மயமாக்கும் வகையில் உள்ளது. அ.தி.மு.க. கட்சிக்குள் நடக்கும் தலைமைக்கான அதிகாரப் போட்டியால் அக்கட்சியே பலவீனப்படும். அரசியல் ஆதாயத்துக்காக பா.ஜனதா அ.தி.மு.க.வினரை இரு பிரிவாக்கியுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. ஒருபோதும் வெற்றி பெறமுடியாது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சா்கள் மீதான ஊழல் வழக்குகளை விரைவுபடுத்தவும், அதில் சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், தி.மு.க. அரசு தயக்கம் காட்டக்கூடாது.
தி.மு.க. ஆட்சியில் காவல் மரணங்கள் அதிகரித்துள்ளன. அதேபோல் போதைப் பொருள் பயன்பாடு, பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளன. அதைத் தடுக்கும் வகையில், ஜூலை மாதம் முதல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சாா்பில் மக்களிடையே விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
தி.மு.க. அளித்த தோ்தல் வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டாலும், குடும்பத்தலைவிக்கு மாத ஊதியம், அரசு துறைகளில் ஒப்பந்தப் பணியாளா்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்றுதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவற்றை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.
பொதுமக்கள் பிரச்சினைக்காக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. அரசை எதிா்த்துப் போராடவும் தயங்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, மாநிலக் குழு உறுப்பினா் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் காசிநாததுரை, தாலுகா செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனா்.
- மத்திய அரசு ‘அக்னிபத்’ திட்டத்தை திரும்பப்பெறக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில், சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
- நகர தலைவர் பட்சிராஜா வன்னியராஜ் தலைமை தாங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
'அக்னி பத்' திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில், சத்தியாகிரக போராட்டம் நகர அஞ்சலகம் முன்பு நடந்தது. நகர தலைவர் பட்சிராஜா வன்னியராஜ் தலைமை தாங்கினார். சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ராஜ்மோகன், மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் முருகேசன், இலக்கிய அணி சுந்தரம், ஆர்.டி.ஐ. மாநில துணைத் தலைவர் சுந்தரம், மாநில துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், வர்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஆறுமுகம், மகளிர் அணி மாநில இணைச் செயலாளர் காளீஸ்வரி, மம்சாபுரம் ஜெயக்குமார், வத்திராயிருப்பு லட்சுமணன், வசந்தம் சேதுராமன், துள்ளுக்குட்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் காமராஜர் நன்றி கூறினார்.
- கூட்செட் சாலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் பணிமனை ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
- தனியார் ரெயிலில் ஆட்கள் போதிய அளவிற்கு இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது.
கோவை:
கோவை கூட்செட் சாலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் பணிமனை ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அடிப்படை வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் கோவை கோட்ட கிளை செயலாளர் ஜோன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து கோட்ட கிளை செயலாளர் ஜோன் கூறும்போது, ரெயில்வே பணிமனையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் ரெயிலில் ஆட்கள் போதிய அளவிற்கு இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் பணிமனையில் அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை செய்து தர வலியுறுத்தியுளளோம். இது சம்பந்தமாக ஏற்கனவே உயர் அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்களது கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்றார்.