என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 227938"
- ராமநாதபுரத்தில் போட்டி தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.
- பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது. இதன் வாயிலாக பல்வேறு வகையான போட்டி தேர்வு களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணை யத்தால் வெளியிடப் பட்டுள்ள சார்பு ஆய்வாளர் (Sub-Inspectors of Police (Taluk, Armed Reserve, TSP & Station Officer 2023) பணிக்காலியிட அறிவிக்கை வெளியிடப்பட்டு 743 பணிக்காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 1.7.2023 தேதியில் குறைந்த பட்சம் 20 வயது அதிகபட்சம் பொதுப் போட்டியினருக்கு 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 32 வயது வரையிலும், பட்டியல் மற்றும் பழங்கு டியினர், திருநங்கைகளுக்கு 35 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரையிலும், முன்னாள் படைவீரர்க ளுக்கு 47 வயது வரையிலும் இருக்க வேண்டும்.
இந்த தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகட்டணம் ரூ.500 ஆகும்.
இப்போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
இதில் கலந்து கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அலுவலக தொலைபேசி எண் 04567-230160 மூலமாகவோ, 78670 80168 என்ற அலைபேசிக்கு வாட்ஸ்-அப் வாயிலாக வோ, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரடியாகவோ தொடர்பு கொண்டு இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாநில அளவில் ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 4 நாட்களாக உடையாப்பட்டியில் நடைபெற்றது.
- சேலம், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.
சேலம்:
சேலம் மாவட்ட கைப்பந்து கழகம், ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப், இயற்கையை நேசி அமைப்பு ஆகியவை சார்பில் மாநில அளவில் ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 4 நாட்களாக உடையாப்பட்டியில் நடைபெற்றது. இதில் சேலம், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.
இறுதியில் ஆண்கள் பிரிவில் ஏ.வி.எஸ். கல்லூரி அணி முதல் இடத்தை வென்றது. வி.வி.சி. அணி 2-வது இடமும், சாய்டிரைலர்ஸ் அணி 3-வது இடமும், ஓமலூர் கொங்குபட்டி அணி 4-வது இடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை ஏ.என்.மங்கலம் செயின்ட் மேரிஸ் பள்ளி அணி வென்றது. சக்தி கைலாஷ் கல்லூரி அணி 2-வது இடத்தையும், ஆத்தூர் பாரதியார் பள்ளி அணி 3-வது இடத்தையும், சென்னை மினிஸ்போர்ட்ஸ் அணி 4-வது இடத்தையும் பெற்றன.
பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் இயக்குனர் சீனிவாசன் வரவேற்று பேசினார். போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா கலந்து கொண்டு பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார்.
- கோவில்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது
- 12 காளைகள், 108 வீரர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை,
அறந்தாங்கி அருகே கோவில்பட்டி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 காளைகள் வந்திருந்தன. 108 வீரர்கள் கலந்து கொண்டனர். மஞ்சுவிரட்டில் கயிற்றில் ஒரு காளையை கட்டிவிட்டு அதை அடக்க 9 பேர் கொண்ட குழு மாடுபிடி வீரர்களையும் களத்தில் இறக்கவிட்டு 25 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் வீரர்கள் காளைகளை அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. பின்னர் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்க உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.
- திருப்பத்தூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தளக்காவூரில் புனித ஜெபமாலை மாதா ஆலய சப்பர திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி ஒய்.எம்.சி.ஏ கத்தோலிக்க இளைஞர் மன்றத்தால் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் பங்கேற்றன. 20 நிமிடங்களுக்குள் காளையை அடக்க வேண்டும் என்று விழா குழுவினரால் நேரநிர்ணயம் செய்யப்பட்டது.
இதில் 9 பேர் கொண்ட 15 குழுவினர் களம் இறங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதை பார்பதற்காக சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். விழாவில் காரைக்குடி வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் காயமடைந்த வீரர்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் முதலுதவி வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- கோடைகால கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
- இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
கடலூர்:
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடைகால கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
இதற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கி பரிசுகளை வழங்குகிறார். நிகழ்ச்சியில் ஆய்வாளர் குருமூர்த்தி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து 595 பதிவுகள் பெறப்பட்டது.
- 6 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான போட்டி தனித்தனியே நடத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் நாஞ்சிக்கோ ட்டை சாலையில் அமைந்துள்ள ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப்பில் உள்ள நீச்சல் குளத்தில் கோயம்புத்தூர் ஸ்போர்பி இவெண்ட்ஸ் என்ற நிறுவனம் மற்றும் தஞ்சாவூர் ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாநில அளவிளான "அக்வா சாலஞ்" நீச்சல் போட்டி நடத்தப்பட்டது.
இதில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெ ல்வேலி, விருதுநகர், சேலம், நாகப்பட்டினம், திண்டுக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 595 பதிவுகள் பெறப்பட்டது.
இப்போட்டியினை தஞ்சாவூர் நீச்சல் சங்கம் செயலாளர் ராஜேந்திரன்,
ஸ்போர்பி இவெண்ட்ஸ் தலைவர் ரகு மற்றும் ஷியாம், ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர்கள் மார்டின், ஜோன்ஸ், ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் தலைமை நீச்சல் பயிற்றுனர் சார்லஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்போட்டியில் 6 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான போட்டி தனித்தனியே நடத்தப்பட்டது.
நீச்சலில் ஆறு வகைகளில் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற சிறுவர்-சிறுமிக ளுக்கான பதக்கங்கள், சான்றிதழ்கள் ஸ்போர்பி இவெண்ட்ஸ் சார்பாக வழங்கபட்டது.
- சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- இப்போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை கலெக்டர் கார்மேகம் வாசிக்க, தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
108 அவசர சிகிச்சை வாகனம், காவல்துறை பாதுகாப்பு, பார்வையா ளர்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வா கத்தால் மேற்கொள்ளப்பட்டு ள்ளன. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்ப டுவதை உறுதி செய்யும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்யப்படு கிறது.
மேலும், விழாக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், காளை களின் உரிமையாளர்கள் அரசின் அனைத்து விதி முறைகளையும் முழுமை யாகக் கடைபிடித்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு மாறன், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- படுகர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் கால்பந்து போட்டி நடைபெற்றது.
- போட்டியில் கால்பந்து ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரவேணு,
கோத்தகிரி காந்தி மைதானத்தில் பொரங்காடு படுகர் நல சங்க சார்பில் படுகர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியில் சுண்டட்டி அணியும், உல்லாடா அணியும் விளையாடியது.
இதில் உல்லாடா அணி 1 கோல் அடித்தது. அதனைத் தொடர்ந்து சுண்டட்டி அணி 5 கோல் அடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து அன்ணிகொரை அணியும், அரக்கம்பை அணியும் விளையாடியது. இதில் அன்ணிகொரை அணி 3 கோல் அடித்து வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இளித்தொரை அணியும், கடைகம்பட்டி அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் யாரும் கோல் அடிக்காததால் டைப் பிரேக்கர் முறையில் இளித்தொரை அணி வெற்றி பெற்றது.
முன்னதாக பொரங்காடு படுகர் நல சங்க நிர்வாகிகள் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தனர். போட்டியில் கால்பந்து ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர் லப்பைகுடிக்காட்டில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடைபெற்றது
- கபடியில் போலீசும், கைப்பந்தில் பொதுமக்களும் வெற்றிவாகை சூடினர்
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காட்டில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் விதமாக கபடி மற்றும் கைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டியில் காவல்துறை சார்பாக ஒரு அணியும் பொதுமக்கள் சார்பாக ஒரு அணியும் என இரு அணிகள் கலந்து கொண்டனர். இரண்டு அணியும் சிறப்பாக விளையாடிய நிலையில் இறுதியாக கைப்பந்து போட்டியில் பொதுமக்கள் அணியும் கபடி போட்டியில் காவல்துறை அணியினரும் வெற்றி வாகை சூடியது.
விளையாட்டு போட்டியின் இறுதியாக வெற்றி பெற்ற அணியினருக்கும் சிறப்பாக விளையாடியவர்களை பாராட்டியும் பரிசு பொருட்களை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளா தேவி வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மங்களமேடு டி.எஸ்.பி. சீராளன், மங்களமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசுவரன் மற்றும் காவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
- முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பரமக்குடி
பரமக்குடி புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. பள்ளி தலைவர் முகைதீன் முசாபர் அலி, முருகேசன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, குரு ஏழுமலை, தேசிய தலைவர், அகத்திய ஞானம் நிறுவன பொதுச் செயலாளர் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் பரமக்குடி நகர் மன்ற கவுன்சிலர் அப்துல் மாலிக், முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
போட்டியை அப்துல்கலாம் பள்ளி குழுவினர் மற்றும் பாரதி விளையாட்டு சங்க தலைவர் அசான் சண்முகவேல் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
- 35 வயதுக்கு உட்பட்டவர்கள், 36 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவின் கீழ் போட்டி நடந்தது.
- 5 கி.மீ தூரத்திற்கான இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை தணுவர்சன் அறக்கட்டளை சார்பில் பெண்கள் நலன் மற்றும் உடல் ஆரோக்கியம், பெண் கல்வி, பெண் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெண்களுக்கான நடைப்போட்டி இன்று தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய நடைப்போட்டியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மேலவெளி ஒன்றிய கவுன்சிலர் பத்மசினி முரளிதரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
35 வயதுக்கு உட்பட்டவர்கள், 36 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவின் கீழ் போட்டி நடந்தது. 5 கி.மீ தூரத்திற்கான இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கமும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, டாக்டர் சாத்தப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, ரெட் கிராஸ் துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தணுவர்சன் அறக்கட்டளை நிறுவனர் உலகநாதன் செய்திருந்தார்.
- 8 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.
- கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற வாசக–ர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 23ஆம் தேதியிலிருந்து இன்று வரை 8 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. வாசகர்களுக்கான கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது. மேலும் புத்தக கண்காட்சியும் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று உலகப் புத்தக நாள் நிறைவு விழா நடைபெற்றது.
பேராசிரியர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் முத்து, வாசகர் வட்ட தலைவர் கோபால கிருட்டிணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரேஷ் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் இசையில் இலக்கியம் குறித்து கவிஞர் சாமி மல்லிகா பேசினார். திருக்குறள் குறித்து குறள் நெறி செம்மல் கந்தசாமி, சிலப்பதிகாரம் பற்றி கவியருவி வல்லம் தாஜுபால், பெரியபுராணம் பற்றி நல்லாசிரியர் புகழேந்தி, குற்றால குறவஞ்சி குறித்து நல்லாசிரியர் அல்லி ராணி, இயேசு காவியம் பற்றி கவிஞர் டொமினிக் சேகர், காத்திருங்கள் காதலிப்போம் குறித்து பன்முக கவிஞர் ராகவ் மகேஷ் பேசினர்.
தொடர்ந்து விழாவில் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்விற்கு படித்து தற்போது அரசு துறையில் பணியாற்றி வருபவர்களை மராட்டி அவர்களுக்கு சான்றிதழ்களை எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. வழங்கினார் . இதே போல் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற வாசக–ர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டம் கூடுதல் துணை தலைவர் முத்தையா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்