என் மலர்
நீங்கள் தேடியது "slug 225776"
- எந்த வகையான மேக்கப் போடுவதற்கு முன்பும், முகத்தை அதற்கேற்றவாறு தயார் செய்வது முக்கியம்.
- நீங்கள் அணியும் உடைக்கு ஏற்றவாறு மேக்கப் செய்வது முக்கியம்.
அழகுக்கு அழகு சேர்ப்பது போல, ஒருவரது தோற்றத்தை மெருகூட்டி காட்டுவது 'மேக்கப்'. முக அமைப்பு, சரும நிறம் மட்டுமில்லாமல் காலை, மாலை, வெயில், மழை போன்ற கால நேரங்களையும் மேக்கப் போடும்போது கவனத்தில் கொள்ள வேண்டும். காலை நேரத்தில் இயற்கை வெளிச்சம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் விருப்பத்துக்கேற்ற மேக்கப் போட்டுக்கொள்ளலாம்.
மாலை நேரங்களில் நடக்கும் விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் அதிக வெளிச்சம் தருவதற்காக பெரிய மின்விளக்குகள் பயன்படுத்தப்படும். இவை அதிக வெப்பத்தை வெளியிடுவதால், எளிதாக உருகி வழியாதவாறு மாலை நேர மேக்கப் போட வேண்டும். எந்த வகையான மேக்கப் போடுவதற்கு முன்பும், முகத்தை அதற்கேற்றவாறு தயார் செய்வது முக்கியம். மேக்கப் சிறப்பாக அமைய வேண்டுமெனில், சருமம் புத்துணர்ச்சியோடு ஈரப்பதமாக இருப்பது அவசியம். எனவே முகத்தை நன்றாகக் கழுவி, ஸ்கிரப் செய்து, மாய்ஸ்சுரைசர் பூசிய பின்பு அதன் மேல் மேக்கப் போடுவது நல்லது. இதனால் அழகு சாதனப் பொருட்கள், சருமம் முழுவதும் சீராகப் படர்ந்து சிறந்த பினிஷிங் கிடைக்கும்.
மேக்கப்பின் முதல் படியாக பிரைமர் பயன்படுத்த வேண்டும். இது இரவு விளக்குகளின் வெப்பத்தால் உருகாமல், மேக்கப் வெகு நேரம் நீடித்திருக்க துணைபுரியும். இரவு நேர மேக்கப்பிற்கு பவுண்டேஷனை தவிர்த்து, கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் போன்றவற்றை மறைக்க கன்சீலர், முகத்தின் வடிவை மேம்படுத்திக்காட்ட கான்டூர் மட்டும் பயன்படுத்துவது நல்லது. அதிகமான பொருட்களைப் பயன்படுத்துவது, மேக்கப் உருகுவதற்கு வழிவகுக்கும். நீங்கள் அணியும் உடைக்கு ஏற்றவாறு மேக்கப் செய்வது முக்கியம்.
மினுமினுப்பான உடை அணியும்போது லேசான மேக்கப் போடுவது சிறந்தது. சாதாரண உடை அணிந்தால் பளிச் என்ற மேக்கப் பொருத்தமாக இருக்கும். உதடுகளில் அடர்ந்த நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தினால், கண்களில் குறைவாக மேக்கப் போடுவது பொருத்தமாக இருக்கும். கண்களுக்கு அதிக மேக்கப் போடும்போது, உதடுகளில் லேசான நிறம் கொண்ட லிப்ஸ்டிக் போடுவது நன்றாக இருக்கும். இரவுநேரத்தில் மின்விளக்கு வெளிச்சம் முகத்தில் பட்டு அதிகமாக பிரதிபலிப்பதால், கன்னம், மேல் உதடு மற்றும் புருவ வளைவு போன்ற இடங்களில் சிறிது ஹைலைட்டர் பயன்படுத்துவது அந்தப் பகுதிகளை அழகாகவும், எடுப்பாகவும் காட்டும்.
- போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு
- தக்கலை போலீஸ் நிலையம் 1936-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
தக்கலை போலீஸ் நிலையம் 1936-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 77 ஆண்டுகள் போலீஸ் நிலையம் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. 2011-ம் ஆண்டு மாடி கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
அதே வேளையில் பழைய கட்டிடம் போக்குவரத்து போலீஸ் துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. வளாகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் சம்பந்தப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் செடி, கொடிகள் அதிகமாக வளர தொடங்கியது. இதை அவ்வப்போது போலீசார் வெட்டி அகற்றி வளாகத்தை சுத்தம் செய்து வந்தனர்.
இந்நிலையில் போலீஸ் நிலைய வளாகம் முழுவதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆலோசனை வழங்கினார்.
அதன் அடிப்படையில் டி.எஸ்.பி. கணேஷ் வழிகாட்டுதலில் இன்ஸ்பெக்டர் நெப்போலி யன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் இணைந்து முதன் முதலாக தக்கலை பஸ் நிலையத்தில் ஆபத்து விளைவிக்க கூடிய நிலையில் இருந்த புற காவல் அறையை அகற்றி புதிய அறையை கட்ட ஏற்பாடு செய்தனர்.
மேலும் தக்கலை போலீஸ் நிலைய வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வழக்குகள் சம்பந்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஓரமாக அடுக்கி விட்டனர்.தொடர்ந்து வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் பயமின்றி அமர்ந்து செல்ல அந்தப் பகுதியில் இன்டர்லாக் போடப்பட்டது.போலீஸ் நிலையத்திற்கு முன்புறமுள்ள சுவரோரம் முதன் முதலாக பூந்தோட்டம் அமைக்கப்பட்டது.தொடர்ந்து சுமார் 30 மீட்டர் நீளம் 1½ மீட்டர் அகலம் அளவில் பூந்தோட்டம் அமைக்கப்பட்டது.
இந்த பூந்தோட்டத்தில் மக்களை கவரும் விதத்தில் பல்வேறு வகையான பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது. புல் மற்றும் பூந்தோட்டத்தை அமைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர், ஆஷா ஜெபகர், அருளப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உட்பட காவல்துறையை சேர்ந்த அனைவரையும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
- வாரம் ஒருமுறை வீட்டிலேயே பாதங்களை சுத்தம் செய்யலாம்.
- வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூரை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்யும் செயலான பெடிக்யூரை செய்து வந்தால், பாதங்களில் உள்ள அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.
நம் வீட்டிலேயே பாதங்களை சுத்தம் செய்யும் முறையைப் பின்பற்றுங்கள். அதுவே சிறந்த பெடிக்யூர் சிகிச்சையாக விளங்கும். சரி, இப்போது வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூரை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: பால் 4 கப் பேக்கிங் சோடா 3 டேபிள் ஸ்பூன். முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
பாதங்களையும் வைக்கக்கூடிய அளவில் ஒரு டப் எடுத்துக்கொள்ளவும். கணுக்கால் வரை மூழ்கும் அளவுக்கு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பவும். அதில் சிறிது குளியல் உப்பு சேர்க்கவும். நீங்கள் விரும்பும் எசன்ஷியல் ஆயில் சில துளிகள் சேர்க்கலாம். பாதங்களை இந்த தண்ணீரில் 15-20 நிமிடங்கள் வரை ஊறவைத்து நன்கு கழுவ வேண்டும்.
பின்பு ஒரு அகன்ற பாத்திரம் அல்லது பாதங்களை ஊற வைக்கும் வகையிலான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அந்த பாலுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அதில் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப்பர் கொண்டு பாதங்களை தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இறுதியில் துணியால் பாதங்களை துடைத்துவிட்டு, பாதங்களுக்கு எண்ணெய் அல்லது மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், பாதங்களில் வெடிப்புக்கள், வறட்சி போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு, பாதங்களின் அழகும், மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.
- மழையில் நனைந்து உடல் நல பாதிப்புகளை எதிர்கொள்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.
- மழைநீரில் அமிலத்தன்மை, அழுக்கு சேர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது.
மழை காலம் வந்துவிட்டது. மழையின் அழகை ரசிப்பதோடு நின்றுவிடாமல் அதில் நனைந்து ஆனந்த குளியல் போடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி மழையில் குளிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லதா? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனெனில் மழையில் நனைந்து உடல் நல பாதிப்புகளை எதிர்கொள்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். மழையில் குளிப்பது நல்லதா? என்ற கேள்விக்கு டெல்லியை சேர்ந்த தோல் மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜாங்கிட் விளக்கம் அளிக்கிறார்.
''கோடை காலம் முடிவடைந்து தொடங்கும் முதல் மழை வெப்பத்தில் இருந்து ஆறுதல் அளிக்க உதவும். மழை பெய்யும் போது நனைவது, உளவியல் ரீதியாக நிம்மதியாக இருப்பது போன்ற உணர்வை தரும். இருப்பினும் காற்று மாசுபாடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற நச்சு ரசாயனங்கள், வாகன உமிழ்வுகள், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மழை குளியல் உகந்ததல்ல. ஏனெனில் மழைத்துளிகள் காற்றில் கலந்திருக்கும் ரசாயனங்கள், நச்சுக்களுடன் கலந்து சருமத்தை சேதப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. மழைநீரில் அமிலத்தன்மை, அழுக்கு சேர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது.
உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்கள் அமில மழையில் குளித்தால் சருமம் சேதமடையக்கூடும். எனவே மழைக்காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதல் மழையில் குளிப்பது பொடுகு, முகப்பருவை போக்க உதவும் என்று பலரும் நம்புகிறார்கள். உண்மையில் மழை நீரில் அதிக மாசுக்கள் கலந்திருந்தால் முகப்பரு, சரும தொற்றுகள், சரும வெடிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்'' என்கிறார் டாக்டர் ஜாங்கிட்.
மழையில் நனைந்த பிறகு சில சமயங்களில் சருமத்தில் அரிப்பு ஏற்படுவதை கவனித்திருக்கலாம். தலை முடியும் கடினமானதாக மாறும். மழை நீரில் பி.எச் அளவும் அதிகமாக இருப்பதால் சருமம் கடினத்தன்மை கொண்டதாக மாறக்கூடும். கூந்தலும் உலர்வடையக்கூடும். மழை நீரால் தக்கவைக்கப்படும் அதிக ஈரப்பதம் காரணமாக தலைமுடியில் பேன்கள் வளர்ச்சியும் அதிகரித்துவிடும்.
மழைக்காலத்தில் பெண்கள் பின்பற்றவேண்டிய சில அழகு குறிப்புகள் பற்றி டாக்டர் ஜாங்கிட் விவரிக்கிறார்.
"இந்தபருவமழையில், நீங்கள் எதிர்பாராதவிதமாக நனைந்தாலோ அல்லது மழையில் குளித்து மகிழ நினைத்தாலோ, வீட்டிற்கு வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் குளிக்க மறக்காதீர்கள். பேஸ் வாஷை பயன்படுத்தி சருமத்தில் படிந்திருக்கும் அசுத்தங்களை நீக்கிவிடுங்கள். சருமத்தின் மேற்பரப்புக்கு சோப்பையும், தலைமுடிக்கு ஷாம்பூவையும் பயன்படுத்துங்கள்.
குளித்து முடித்ததும் கண்டிஷனரை பயன்படுத்த மறக்காதீர்கள். இது கூந்தலில் ஈரப்பதத்தை பாதுகாப்பதோடு மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். ஆடை அணிவதற்கு முன்பாக டவல் கொண்டு உடலை நன்கு உலர்த்துவது மழைக்கால நோய்த்தொற்றுகளை தவிர்க்க உதவும்'' என்கிறார்.
- ஒவ்வொரு பருவ நிலைக்கு ஏற்ப மேக்கப் போடுவது முக்கியமானது.
- மழைக்காலத்திற்கு ஏற்ப சிறப்பாக மேக்கப் போட்டு கொள்வதற்கு சில குறிப்புகள் இதோ...
பல பெண்களின் அன்றாட பணிகளில் ஒன்றாக 'மேக்கப்' போடுவது உள்ளது. இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக உளவியல் கூறுகிறது. தோற்றத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் மேக்கப் உதவுகிறது. ஒவ்வொரு பருவ நிலைக்கு ஏற்ப மேக்கப் போடுவது முக்கியமானது.
இதனால், மேக்கப் கலையாமல் நீண்ட நேரம் அழகை மெருகேற்றிக்காட்டும். மழைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், அதற்கு ஏற்ப சிறப்பாக மேக்கப் போட்டு கொள்வதற்கு சில குறிப்புகள் இதோ...
மழைக்காலம் என்றாலும் டோனர், மாய்ஸ்சுரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் உபயோகிப்பதைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். இது சரும வறட்சி, எண்ணெய் வழிதலைக் குறைத்து, தொற்று ஏற்படுவதை தடுக்கும்.
மழையில் நனைந்தாலும் அதிக வித்தியாசம் தெரியாமல் இருப்பதற்கு, குறைவான மேக்கப் பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது. கலர் கரெக்டர், பவுண்டேஷன், கன்சீலர் என்று அடுக்கு அடுக்காக போடாமல், முக்கியமான பொருட்களைமட்டும் உபயோகித்தால், மழையில் நனைந்தாலும் உங்கள் முகம் சிறப்பாக தோற்றமளிக்கும். குறிப்பாக பிரைமரைத் தொடர்ந்து கன்சீலர் மற்றும் காம்பாக்ட் மட்டும் போட்டுக்கொள்வது மழைக்காலத்திற்கு ஏற்றது. பவுண்டேஷன் போட்டுக்கொள்ள விரும்பினால் அதனை பிரைமருடன் கலந்து போடுவது நல்லது.
தண்ணீரில் அழியாத மேக்கப் பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அதே சமயம் முழு மேக்கப்புக்கு தேவையான, அனைத்து பொருட்களும் கிடைப்பது இல்லை. சில வாட்டர்-புரூப் மேக்கப் பொருட்களை மட்டும் பயன்படுத்தி, மற்றவற்றுக்கு சாதாரணப் பொருட்களை உபயோகித்தால் அது மேக்கப்பின் தரத்தைக் குறைக்கும்.
ப்ளஷ் (Blush) மற்றும் ஹைலைட்டர் (Highlighter) போன்றவற்றை பயன்படுத்த விரும்பினால் 'பவுடர்' வடிவில் இருப்பவற்றை பயன்படுத்தலாம்.
புருவம், இமைகள் மற்றும் விழிகளை சிறப்பாகக் காட்டும் ஐ லைனர், கண் மை (காஜல்) மற்றும் மஸ்காரா போன்றவை வாட்டர்-புரூப் வகையில் அனைத்து கடைகளிலும் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம்.
காஜல் அணியும்போது, வழக்கமான கருப்பு நிறத்தில் அணியாமல் வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் அணிந்தால் கரைவது தெரியாது, கண்கள் பெரிதாகத் தெரியும்.
வாட்டர்-புரூப் லிப்ஸ்டிக் சந்தையில் கிடைக்கிறது. அதில் மேட் ரகத்தில் உள்ளவற்றை பயன்படுத்தலாம். லேசான நிறங்களான பிங்க் மற்றும் பழுப்பு நிறங்கள் மழைக்காலத்தில் சிறப்பாக இருக்கும்.
இமைகளில் மஸ்காரா அணியும்பொழுது, முதலில் வழக்கமான ஒன்றை அணிந்து கொண்டு பின்னர் அதன் மேல் வாட்டர் புரூப் வகையை பயன்படுத்தினால் அதிக நேரம் நீடிக்கும். இமைகளை நீளமாக காட்டும். நீரில் அழியாது. மேக்கப் என்பது நம் அம்சங்களை மேம்படுத்துவதற்கு பயன்படுவது. அது சரியான அளவில் மற்றும் சீரான நிறத்தில் இருந்தால்தான் சிறப்பான தோற்றம் பெற முடியும். மழைக்கால மேக்கப்பை பொறுத்த வரை, குறைவான பொருட்களை பயன்படுத்துவதால் அழகான தோற்றம் பெறலாம்.
- அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம்.
- ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும்.
தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.
பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத்துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.
- ஆணுக்கும் பெண்ணுக்கும் லட்சணமான முகம் அத்தியாவசியமாகிறது.
- முகத்தை சீர்படுத்தி அழகாக்கும் முக சீரமைப்பு சிகிச்சை இப்போது நவீன தொழில்நுட்பத்தின் வந்துள்ளது.
இந்த உலகில் வாழும் ஒவ்வொ ருவரிடமும் அழகுக்கான ஏக்கம் இருக்கிறது. அழகு இருந்தால் தான் மற்றவர்கள் ரசிக்கும் விதத்தில் நல்ல வாழ்க்கை வாழ முடியும். அதாவது தன்னம்பிக்கை தரும் அளவுக்காவது முகத்தின் அமைப்பு அழகாக இருக்க வேண்டும். எந்த வகையிலும் காண் பவரை உறுத்தும் வண்ணம் முக அமைப்பு இருந்து விடக்கூடாது. நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் போதுகூட தோற்றத்திற்கு அங்கே மதிப்பிருக்கிறது. தகுதிகள், திறமைகளுக்கு இணையாக தோற்றமும் இருக்கிறதா என்று எடை போடுகிறார்கள். அதனால்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் லட்சணமான முகம் அத்தியாவசியமாகிறது. யாருமே அவலட்சணமான முகத்திற்கு ஆசைப்படுவதில்லை.
ஆனால் பிறவியிலேயே தாடை, பற்கள் மற்றும் உதடு குறைபாடு ஏற்பட்டிருந்தால் முக அமைப்பு திருப்தி இல்லாமல் போய்விடுகிறது. இதெல்லாம் இயற்கை கொடுத்த தண்டனை என்று விரக்தி அடையாமல், முகத்தை சீர்படுத்தி அழகாக்கும் முக சீரமைப்பு சிகிச்சை இப்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈடன்ஸ் பல் மற்றும் முக சீரமைப்பு மருத்துவமனையில் செய்யப்படுகிறது.
உதடு பிளவு குறைபாடுடன் கிட்டத்தட்ட 800-க்கு ஒரு குழந்தை பிறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறவியிலேயே சிலருக்கு குறைவான அல்லது கூடுதல் வளர்ச்சியுடன் தாடை இருக்கும்.
பற்கள் நேர்வரிசையாக இல்லாமல் ஏறுக்குமாறாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு முகம் ஒருபக்கம் கோணலாக அமைந்திருக்கும். இது போன்ற குறைபாடுகளுக்கு காரணம், முக எலும்புகள் முழுமையாக வளர்ச்சி அடையாததுதான். இதுதவிர, விபத்துகளால் தாடை, பற்கள் சேதமடைந்து முகத்தின் அழகு பாதிக்கப்படலாம். சிலருக்கு முக எலும்புகள் உடைந்து சேதமடையலாம். கதிர்வீச்சு போன்ற காரணிகளாலும் முகத்தில் குறைபாடு தோன்றலாம். சிலர் தங்கள் பழக்க வழக்கத்தாலும் குறைபாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது ஒரு சில குழந்தைகள் மட்டும் பள்ளிக்குச்செல்லும் வயதைத்தாண்டிய காலகட்டத்திலும் கை சூப்பும் பழக்கத்தை தொடருகிறார்கள்.
இதனால் முகத்தின் அமைப்பு சற்று மாறிவிடுகிறது. இதுதவிர வாயைத்திறந்து துங்கும் பழக்கம் சிலரிடம் இருக்கிறது. இதுபோன்ற பழக்கங்களாலும் இன்னும் சில கணிக்கமுடியாத காரணங்களாலும் முக அமைப்பில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.
முகத்தில் எலும்புகள், பற்கள், தாடைகளில் தோற்றக்குறைபாடுகள் இருந்தால் அதை சீர்படுத்தி இயல்பான அழகுக்கு கொண்டு வந்து விடஇயலும். உதட்டுப்பிளவு, அண்ணப்பிளவு போன்ற குறைபாடுகளையும் சிகிச்சை மூலம் எவ்வித தழும்புகளும் வெளியேதெரியாதவண்ணம் சீராக்கிவிடலாம்.
இவ்வாறு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
டாக்டர் N.தினக்ஸ்குமார்
டாக்டர்.ஸ்டெலின் தினக்ஸ்
- தோல் அழகாகவும், மாசு மருவின்றி சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
- சில தோல் மற்றும் முடி பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.
உடலின் தோல் பகுதி, உடலின் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் கவசமாக இருப்பதுடன், உடலின் அழகை காட்டும் ஆடையாகவும் உள்ளது. சுத்தமாக சலவை செய்யப்பட்ட ஆடை போல் தோல் அழகாகவும், மாசு மருவின்றி சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களால் தோலில் பரு, தழும்பு, புழுவெட்டு, பொடுகு என்று பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இன்றைக்கு தோலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நவீன சிகிச்சைகள் இருப்பதால், அவற்றை எளிதில் குணப்படுத்திக் கொள்ள முடியும். பரவலாக காணப்படும் சில தோல் மற்றும் முடி பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.
முகப்பரு
பள்ளி, கல்லூரி மாணவிகள் பலரின் முக்கிய பிரச்சினையாக இருப்பது முகப்பரு. இந்த பருக்கள் முகத்தின் அழகை கெடுத்து அவர்களுக்கு கவலையை உருவாக்கி விடுகிறது. கடந்த காலங்களில் முகப்பரு பாதிப்பை போக்க சரியான மருந்து, மாத்திரைகள் இல்லை. சரியில்லாத மருத்துவ சிகிச்சையால் தழும்புகளும் ஏற்பட்டு விடும். கண்ட ஆலோசனைகளை எல்லாம் கேட்டு முகத்தில் கண்ட களிம்புகளையும் பூசி கடைசியில் முகத்தில் குழி, தழும்புகளை உண்டாக்கி முக அழகை நிரந்தரமாக கெடுத்துக் கொண்டு மன உளைச்சலால் அவதிப்படுவோர் நிறையவே உண்டு. இப்போது, முகப்பருக்களை நிரந்தரமாக போக்கும் ஐசோட்ரெடினாயின் மாத்திரை, மருந்துகள் வந்து விட்டன. இவை முகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் முகப்பருக்களை போக்கும். இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். 20 வார தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டால் முகப்பருக்களை முற்றிலும் கட்டுப்படுத்த இயலும்.
பருத்தழும்பு
பருக்கள் ஏற்பட்டு சரியான சிகிச்சை பெறாத போது பருத்தழும்புகள் முகத்தில் தங்கி விடும். பருத்தழும்புகளால் சீர் கெட்டு போன முகத்தை லேசர் மற்றும் இதர நவீன சிகிச்சை மூலம் மீண்டும் பொலிவுள்ள அழகான முகமாக மாற்ற முடியும்.
முடி கொட்டுதல்
அன்றாடம் கொத்து கொத்தாக முடி கொட்டுதல் பெண்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். இன்றைக்கு நீண்ட கூந்தல் இருப்பது அரிது. தற்கால உணவு, மன அழுத்தம், மருத்துவரின் ஆலோசனையின்றி கண்ட எண்ணெய்கள், குளியல் பூச்சுகளை பயன்படுத்துவது ஒரு காரணம். அம்மை, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு 3 மாதங்கள் கழித்து மிக அதிக அளவில் முடி கொட்டும். பொதுவாக, முடி தொடர்பாக எந்த பிரச்சினை இருந்தாலும் அதற்கான அனைத்து தீர்வுகளையும் ஒரு தோல் மருத்துவரால் மட்டுமே தீர்வு காண முடியும். தற்போது, அனைத்து வகையான முடி கொட்டுதல் பிரச்சினைக்கும் உலகத்தரம் வாய்ந்த யூ.எஸ்.எப்.டி.ஏ. அங்கீகரித்த மருந்துகள் வந்துள்ளன. தற்போது புதியதாக அறிமுகமாகியுள்ள மருந்துகளால் 35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் வழுக்கையும் சரி செய்ய முடியும். இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். முடி சிகிச்சைக்கு என தனியாகப் படிப்போ, டாக்டரோ கிடையாது.
வெண்படை நோய்
புதியதாக அறிமுகமாகியுள்ள மருந்துகளால் நாள்பட்ட வெண்படை நோய்க்கும் விரைவாகத் தீர்பு கான முடியும்.
இளநரை
முடியின் வேரில் இருந்து முடி வளர தொடங்கும்போது, அதில் உள்ள நிற அணுக்களில் இருந்து மெலானின் என்ற நிறத்தை உருவாக்கும் பொருள் கலக்கப்படும். இதனால், முடி கருமையடைகிறது. இந்த மெலானின் சுரப்பி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் போது இளநரை ஏற்படுகிறது. இளநரை ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு. எந்த காரணத்தால் இளநரை தோன்றுகிறது என்பதை சரியாக கண்டறிந்து தகுந்த மாத்திரை, மருந்துகளை எடுத்துக்கொள்வதால் இளநரையை நீக்கி முடியை கருமையடைய செய்யலாம்.
பரம்பரை வழுக்கை
பரம்பரை வழுக்கைக்கு தீர்வு இல்லை என்பது பழைய நம்பிக்கை. இப்போது பக்க விளைவுகள் இல்லாத மிகச்சிறந்த மருந்து மாத்திரைகள் அமெரிக்க மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தற்போது இந்தியாவிலும் சுலபமாக கிடைக்கின்றன. இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பரம்பரை வழுக்கையை, பாதிப்பு ஏற்படும் முன் தடுத்து கொள்ளலாம். மேலும் இழந்த முடியையும் திரும்ப வளர வைக்கலாம். தற்போது இந்த மருந்துகளின் வருகையால் தலையில் வழுக்கையை மறைக்கும் முடி மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொடுகு தொல்லை
பொடுகு என்பது, பல வகை தோல் வியாதிகளால் ஏற்படும் செதில் உதிர்தலை குறிக்கும். சாதாரண பொடுகு, சொரியாசிஸ், தலை தோல் அலர்ஜி, தலை தோல் வறட்சி போன்ற காரணங்களால் பொடுகு உருவாகலாம். ஒருவருக்கு பொடுகு தொல்லை இருந்தால் அதற்கான காரணத்தை துல்லியமாக கண்டறிந்து அதற்கு தகுந்த மருந்துகளை தர வேண்டும். அதை விடுத்து, கண்ட எண்ணெய்களை தேய்ப்பது, கை வைத்தியம் பார்ப்பது சரிவராது. தலையில் பொடுகு பிரச்சினையை அசட்டையாக விட்டு விட்டால் முடியின் ஆரோக்கியம் கெட்டு முடி கொட்டுவதையும் நிறுத்த முடியாது.
புழு வெட்டு
தலையில் ஆங்காங்கே செதுக்கியது போல் சொட்டை விழுவது புழுவெட்டு. தலையில் திடீரென்று வட்ட வடிவில் முடி உதிர்ந்து முடி இல்லாமல் போகும் பாதிப்பை புழுவெட்டு என்கிறோம். இது தலையில் மட்டும் அல்லாமல் புருவம், தாடி, மீசை போன்ற இடங்களிலும் வரலாம். சிலருக்கு சில இடங்களிலும், சிலருக்கு ஒட்டுமொத்தமாக தலைப்பகுதி முழுவதும் கூட பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு புழுவோ, பூச்சியோ காரணம் இல்லை. நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களின் தவறான செயல்பாடே காரணம். வெங்காயம் தேய்ப்பது, கண்ட எண்ணெய்களை தேய்ப்பதால் புழுவெட்டு நீங்காது. தோல் மருத்துவர் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். இதற்கு சமீபத்தில் மிகச் சிறந்த புது மருந்துகள் வந்துள்ளன.
சொரியாசிஸ்
சொரியாசிஸ் நோய்க்கும் தற்போது மிக சிறப்பான மருந்துகள் வந்துவிட்டன. இவற்றால் மிகக்குறுகிய காலத்தில் சிறந்த பலன் கிடைக்கும்.
படர்தாமரை
நவீன மருந்து மாத்திரைகள் மூலம் நாள்பட்ட படர்தாமரையும் நிரந்தரமாக சரிசெய்ய முடியும்.
ஆண் முகத்தில் முடி இல்லாமை
ஆண்களுக்கு முகத்தில் நல்ல ரோம வளர்ச்சி இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. தற்போது, தாடி வளர்த்து விதவிதமாக ட்ரிம் செய்வது பேஷனாகவும் இருக்கிறது. பொதுவாக, ஆண்கள் முகத்தில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு பரம்பரைத் தன்மை மற்றும் ஹார்மோன் குறைபாடு காரணமாகும். இதற்கு முறைப்படி காரணத்தை கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் முகத்தில் நன்கு முடி வளரச் செய்யலாம்.
பெண்களுக்கு தேவையற்ற முடி வளர்ச்சி
சில பெண்களுக்கு முகத் தாடை, உதட்டின் மேல் பகுதி போன்ற இடங்களில் தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கும். இந்த முடிகளை வேக்சிங் அல்லது திரெடிங் முறையில் அகற்றினால் அது இன்னும் அதிகமாக வளரும். தற்போது, இந்த தேவையற்ற முடிகளை அகற்ற உலகத்தரம் வாய்ந்த டையோடு லேசர், லாங் பல்ஸ் என்டியாக் லேசர் மற்றும் ட்ரிபிள் வேவ்லென்த் லேசர் கருவிகள் இங்கு இருக்கின்றன. இவற்றின் மூலம் மிக எளிதாக நிரந்தரமாக முகத்தில் உள்ள தேவையற்ற முடி வளர்ச்சியை நீக்க முடியும். இந்த லேசர் கருவிகளை முறையாக தெரிந்த தோல் நோய் மருத்துவர் மட்டுமே பயன்படுத்த முடியும். திருநங்கைகளுக்கு இந்த சிகிச்சை மிகப்பெரிய வரப்பிரசாதம். எங்கள் மருத்துவமனையில் இந்த கருவிகள் மூலம் நிறைய பேர் பயன்பெற்று மகிழ்வுடன் செல்கின்றனர்.
பச்சை அகற்றுதல்
சிறுவயதில் பேஷன் என்ற பெயரில் உடம்பில் பச்சை குத்துவது அதிகரித்து வருகிறது. உடம்பில் பச்சை குத்திக் கொண்டவர்கள் ராணுவம், காவல் துறை உள்ளிட்ட அரசு சீருடை பணிகளில் சேர முடியாது. தொடர்பில்லாத பெயர்களை பச்சை குத்தி வைத்திருக்கும் சிலருக்கு இது திருமண வாழ்க்கையில் பிளவைக் கூட ஏற்படுத்தி விடுகிறது. தற்போது, எங்கள் மருத்துவமனையில் உள்ள பைகோ செகண்ட் க்யூ ஸ்விட்ச்டு லேசர் மூலம் இந்த பச்சை அடையாளங்களை துல்லியமாக தோலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நீக்கி விடுகிறோம்.
இதர பாதிப்புகள்
மேற்சொன்ன தோல் பிரச்சினைகள் மட்டுமின்றி தோல் அலர்ஜி, வெண்படை, குஷ்டம் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் உள்ளன. எந்த தோல் வியாதியையும் எளிதாக இவற்றால் சரி செய்ய முடியும். எனவே, உடலின் அழகை வெளிக்காட்டும் தோல் பகுதியை பொலிவாக வைத்து தன்னம்பிக்கையுடன் வாழ வழி செய்வோம்.
குறிப்பு: பெண்களுக்கு பெண்களாலேயே பரிசோதனை செய்யப்படும்.
தொடர்புக்கு, ஆதித்தன் தோல் முடி லேசர் மருத்துவமனை, ஆண்டாள்புரம், மதுரை.
செல்போன்-81110 00000,
73731 41111, 73731 42222
- வயது வரம்பின்றி அனைவரும் முக அழகை விரும்புவார்கள்.
- கையில் பச்சை குத்தியது, கால் ஆணிகள் சிறந்த லேசர் முறையில் அகற்றப்படும்.
அழகுக்கு மயங்காதவர் எவரும் இல்லை. எனவே ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, வயது வரம்பின்றி அனைவரும் முக அழகை விரும்புவார்கள். நாம் அன்றாடம் சாதாரணமாக உபயோகப்படுத்தும் சோப் மற்றும் கிரீம் போன்ற அழகு படுத்தும் சாதனங்கள் முதல் இயற்கை வைத்தியங்கள் வரை பயன்படுத்தாதவர்கள் நம்மில் எவருமில்லை. இத்தனை பராமரிப்பிற்கு பிறகும் முகத்தில் பொலிவு இல்லை என்று கவலைப்படுபவர்கள் தான் நம்மில் பலர் உள்ளனர்.
முக அழகை கெடுக்கும் பிரச்சினைகளான கரும்புள்ளிகள், கருவளையங்கள், முகப்பருக்கள், கருந்திட்டுகள், முகப்பரு தழும்புகள், முகச்சொரசொரப்புகள், வயதின் காரணமாக ஏற்படும் சுருக்கங்கள், வெயிலின் பாதிப்பால் ஏற்படும் கருமை, தோல் முடிச்சுகள் போன்றவற்றிற்கு சரியான தீர்வை தேடி கொண்டு இருக்கிறோம்.
மேற்கூரிய பிரச்சினைகளால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் மக்களுக்காக நமது மாவட்டத்தில் எங்களது எஸ்.ஜே. மருத்துவமனையில் முக அழகு சிகிச்சைக்கென தனிப்பிரிவு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கருந்திட்டுகள் அகற்றும் சிகிச்சை
உடலில் ஏற்படும் பருவ மாற்றங்கள், உடலில் மாறுபடும் ஹார்மோன் பிரச்சினைகள், சூரிய ஒளியின் பாதிப்பு, சுற்றுப்புற சூழல் மாசு, சரியான முகபராமரிப்பு இல்லாதது, தவறான அழகு சாதனங்கள் பயன்படுத்துதல், வயது முதிர்வின் காரணமாக, சர்க்கரை நோய் போன்ற மருத்துவ காரணங்களாலும் முகக்கருமை தோன்றுகிறது.
எங்கள் மருத்துவமனையில் முக கருமை, மேற்கூரிய காரணங்களில் எவற்றால் ஏற்படுகிறது என்று கண்டறிய, அதற்குரிய நவீன பரிசோதனைகளான ரத்த பரிசோதனை, ஹார்மோன் அனாலிஸிஸ் மற்றும் டெர்மாஸ்கேனர் என்ற நவீன கருவி கொண்டு தோலின் தன்மை, கருமையின் ஆழம், தழும்புகளின் ஆழம், தோலின் வறட்டு தன்மை, வயதின் காரணமாக ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவற்றுக்கு சிறந்த சிகிச்சையான Deep cleaning, Fruit peels, Vampire facial, Laserfacial, Oxy facial, Skin polishing ஆகிய முறைகள் கொண்டு கருமை தன்மை அகற்றப்படுகிறது. எங்கள் மருத்துவமனையின் சிறப்பு அம்சம் திருமணத்துக்கு தயாராகி கொண்டு இருக்கும், மணப்பெண்களில் கருமை நிற தோல் உடையவர்களை வெண்மையாக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முகப்பரு சிகிச்சை
முகப்பருக்கள் எதனால் ஏற்படுகிறது என்ற காரணத்தை கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சை மருந்துகள், Special Deep Cleaning, Fruit Peel ஆகிய சிகிச்சைகளை கொண்டு சரி செய்யப்படுகிறது.
முகத்தை இளமையாக்கும் சிகிச்சைகள்
முதுமையினால் குறிப்பாக 40 வயதுக்கு மேல் முகத்தில் பல காரணங்களால் தோல் வறட்சி, சுருக்கங்கள், கோடுகள், கரும்புள்ளிகள், கருந்திட்டுகள், கருவளையங்கள், முகச்சதை தொங்குதல் போன்றவை ஏற்படுகிறது. இவற்றை சரி செய்ய Galvanic Treatment, Botox Treatment. Dermafiller ஆகிய சிகிச்சை முறைகளில் சரி செய்யப்படுகிறது.
முடி உதிர்தல்-ஆண், பெண்-Hair Scan PRP சிகிச்சை மூலம் முடி வளர செய்யலாம்.
முகத்தில் உள்ள தோல் முடிச்சுகள், பால் உண்ணிகள், தழும்புகள், பிறப்பின் போது உள்ள தேவையற்ற மச்சங்கள் இவையனைத்தும் நவீன லேசர் சிகிச்சை முறையில் அகற்றப்படும். கையில் பச்சை குத்தியது, கால் ஆணிகள் மற்றும் கொழுப்பு கட்டிகள் சிறந்த லேசர் முறையில் அகற்றப்படும். மேற்கூரிய பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காண டாக்டரை அணுகி சிகிச்சை பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
டாக்டர் ரூத்
- குதிகால் வெடிப்பை நாம் சில இயற்கை முறைப்படி சரி செய்ய முடியும்.
- பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை குதிகால் வெடிப்பு தான்.
நம் பாதங்களில் இருக்கும் பகுதிகளில் குதிகால் பகுதி தான் அதிக அழுத்தத்தை தாங்குகிறது. இதனால் தான் அதிகமாக நடப்பது, நின்று கொண்டே இருப்பது போன்ற விஷயங்களால் நிறைய பேர் பாத வெடிப்பை சந்திக்கின்றனர். இந்த குதிகால் வெடிப்பு எந்த காரணத்தினால் உண்டாகிறது. மேலும் அதற்கு எப்படியெல்லாம் சிகிச்சை செய்யலாம் என அறிந்து கொள்வோம்.
இதனால் பாதங்களில் பிளவுகள் உண்டாகி வலி ஏற்படுகிறது. இந்த குதிகால் வெடிப்பை நாம் சில இயற்கை முறைப்படி சரி செய்ய முடியும். இயற்கையாகவே பாதங்களில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் போது குதிகால் வெடிப்பு மறைகிறது. பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை குதிகால் வெடிப்பு தான். குதிகால் வெடிப்பு காலின் அழகைக் கெடுப்பதோடு பல சமயங்களில் நமக்கு வலியையும் ஏற்படுத்துகிறது. இது அப்படியே வளர்ச்சி அடைந்து செல்லுலாய்டிஸை உண்டாக்குகிறது. குதிகாலில் உள்ள சருமம் வறண்டு போகும் போது அதில் வெடிப்புகள் உருவாகின்றன.
அதே மாதிரி நாம் நடக்கும் போது குதிகால் பகுதி அதிக அழுத்தத்தை சந்திக்கிறது. இதனால் அதிக அழுத்தம் உண்டாகி அந்த சருமம் தடினமாகி குதிகால் வெடிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிளவுகள் ஆழமாக போகும் போது தான் நமக்கு வலியை ஏற்படுத்துகிறது குதிகால் வெடிப்பை கால்சஸ் என்ற பெயரில் அழைக்கின்றனர். குதிகால் பகுதியை சுற்றியுள்ள சருமம் கடினமாகி வறண்டு போய் வெடிப்பானது உண்டாகிறது.
நீங்கள் தொடர்ச்சியாக நடந்து குதிகாலுக்கு அழுத்தத்தை கொடுக்கும் போது நிலைமை இன்னும் மோசமாகலாம்.நீண்ட நேரம் நிற்பது. வெறுங்காலில் நீண்ட தூரம் நடப்பது. சூடான நீரில் குளிப்பது. காலநிலை மாற்றம். கடினமான சோப்புகளால் தோல் வறண்டு போதல். குளிர்ச்சியான காலநிலையால் வறண்ட சருமம் தோன்றுதல். இவற்றால் பாத வெடிப்புகள் உருவாக காரணமாக கூறப்படுகிறது.
- எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
- தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும்.
முகம் மட்டும் அழகாக இருந்தால் போதாது கால்களும்(legs) பார்க்க அழகாக இருக்க வேண்டும். அப்போது தான் உடைக்கு ஏற்ற காலணிகள் நாம் தேர்வு செய்து அணிய முடியும். இல்லையெனில் கால்கள்(legs) பொலிவிழந்து காணப்படும். பாவடை அணிய ஆசைப்படுபவர்கள் கால்கள்(legs) பொலிவுடன் இல்லாததால் அணிய தயங்குவார்கள். நல்ல பொலிவான பளபளப்பான கால்களை(legs) பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
பாதங்களிலுள்ள சொரசொரப்பு நீங்க :
* ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால்(legs) வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகள் தங்காது.
* கடுகு எண்ணெயை தினமும் கால்(legs) பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு நீங்கும். மென்மையான பாதங்களாக திகழும். தினமும் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை பாதத்தில் தேயுங்கள். சொரசொரப்பான பாதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
மிருதுவான பாதங்கள் கிடைக்க :
* தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் உப்பு அல்லது சோடா உப்பை குதிகால்களில்(legs) தேய்த்து, கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி மாறி மாறி வாரம் மூன்று முறை செய்தால் பாதம் மெத்தென்று ஆகும்.
* வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில்(legs) தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், மென்மையான பாதங்கள் கிடைக்கும்.
* கால்கள்(legs) அழகாக இருக்கும்போது, பாதங்களும் வெடிப்பில்லாமல் இருந்தால் தானே அதுவொரு கம்ப்ளீட் அழகாக இருக்க முடியும். அதனால், பாதங்களில் வெடிப்பு இருந்தால், நல்லெண்ணெயில் 2 சொட்டு டீ ட்ரீஆயில் கலந்து வெடிப்புகளில் தடவி வரலாம். டீ ட்ரீ ஆயில் கிடைக்கவில்லை என்றால் லாவண்டர் ஆயிலுடன் 4 சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து பாதங்களில் தொடர்ந்து அப்ளை செய்து வாருங்கள். பாதங்களில் ஈரத்தன்மை பேலன்ஸாக இருக்க ஆரம்பித்தால், வெடிப்புப் பிரச்னை போயே போய் விடும்.
* ஸ்கர்ட் போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு நினைப்பார்கள். ஆனால், கால்கள்(legs) வறண்டு பொலிவிழந்து இருக்கிறது என அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்கள். அவர்கள், சர்க்கரையையும் உப்பையும் சமமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கால்கள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்தால் அந்தப் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாய்ந்து, கால்கள்(legs) உயிர்ப்புடன் மின்னும். தயக்கமின்றி நடைபோடலாம்.
வெடிப்பு மறைய :
* மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேயுங்கள். 10 நிமிடன்ம் கழித்து பாதத்தை கழுவலாம். இது கால்(legs) வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.
* மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால்(legs) வெடிப்பில் பூசி வர கால்(legs) வெடிப்பு குணமாகும்.
* கற்றாழையில் இருக்கும் சதைபகுதியை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் ஒரே மாதத்தில் வெடிப்பு சரியாகிவிடும்.
* உருளைக் கிழங்கி சாறினை எடுத்து பாதங்களில் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து குதிகால்கள்(legs) அழகு பெறும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால்(legs) பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.
* பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால்(legs) பாதங்களில் தடவி வந்தால் கால்(legs) வெடிப்பு மறையும்.
- அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
- குளிக்கும்போது சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.
எத்தனை முறை குளிக்கலாம்?
வாரத்திற்கு 10 முறை குளிப்பது தவறில்லை. ஆனால் ஏற்கனவே சரும பிரச்சினை கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு 5 முறைக்கு மேல் குளிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சருமத்தின் தன்மையை பரிசோதித்துவிட்டு மருத்துவரிடம் எத்தனை தடவை குளிப்பது பொருத்தமானது என்று ஆலோசனை கேட்கலாம்.
அதிகமாக குளித்தால் சருமத்திற்கு என்ன பாதிப்பு நேரும்?
பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத் துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.
குளிக்கும் நேரத்தை குறையுங்கள்
ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், குளிக்கும் நேரத்தை குறையுங்கள். உதாரணமாக, தினமும் 10 நிமிடங்கள் குளித்தால், அதை 5 நிமிடங்களாக குறையுங்கள். எவ்வளவு குறைவாக சருமத்தில் தண்ணீர் படிகிறதோ அவ்வளவு குறைவாக சரும பிரச்சினைகள் ஏற்படும்.
சூடான நீரை தவிருங்கள்:
அதிகமாக குளித்தால், சுடுநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். அதிலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சரும வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை குறைக்கும். சரும துளைகள் திறப்பதை தடுக்கும். கூடுமானவரை15 நிமிடங் களுக்கு மேல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
மென்மையான குளியல் சோப்பைப் பயன் படுத்துங்கள்:
குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப் உள்ளிட்டவை ரசாயன கலப்பு அதிகம் அல்லாமல் இயற்கை தயாரிப்புகளாக இருப்பது நல்லது. இரண்டாவது முறை குளிக்க விரும்பினால் சோப்பை தவிர்த்துவிட்டு தண்ணீரில் அப்படியே குளிப்பதுதான் நல்லது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மென்மையான அல்லது பால் கலந்த ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தலாம். இது அதிகப்படியான குளியலால் ஏற்படக்கூடிய தோல் பிரச்சினைகளை குறைக்கும்.
உடலை உலர வையுங்கள்:
குளித்து முடித்ததும் உடலை உலர்வடைய செய்வதற்கு டவலை கொண்டு அழுத்தமாக தேய்க்கக்கூடாது. அது சருமத்தில் உராய்வை, எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடும். டவலை கொண்டு மென்மையாக துடைப்பதுதான் சரியானது. உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான நீரை அகற்றும் விதத்தில்தான் துடைக்க வேண்டும். குளித்து முடித்ததும் 'பாத் ரோப்' எனப்படும் மென்மையான உடையை அணிவது நல்லது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் இருக்க வேண்டுமெனில், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியமானது.