search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224140"

    • தெருவுக்கு தெரு மதுக்கடைகள் திறந்து வைத்ததின் விளைவாக மேலும் ஒரு துன்பகரமான நிகழ்வு நேற்று நடந்திருக்கிறது.
    • 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தந்தையின் குடி பழக்கத்தால் வேதனை அடைந்து தற்கொலை செய்துள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சில நாட்களுக்கு முன்னர் மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடந்த செய்தி வெளிவந்தது. தற்போது மதுபாட்டிலுக்குள் பாசி மிதப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.

    மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கி குடித்த இருவர் மயக்க மடைந்து வீழ்ந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். தெருவுக்கு தெரு மதுக்கடைகள் திறந்து வைத்ததின் விளைவாக மேலும் ஒரு துன்பகரமான நிகழ்வு நேற்று நடந்திருக்கிறது. 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தந்தையின் குடி பழக்கத்தால் வேதனை அடைந்து தற்கொலை செய்துள்ளார். ஆனால் இவற்றை பற்றி கவலை இல்லாத தி.மு.க. மது ஆலைகள் நடத்தும் தங்கள் கட்சி காரர்களும், சாராய அமைச்சரும் சம்பாதிக்க ஏழை- எளிய மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    கள்ளச்சாராய விற்பனையை தடுக்க திறனில்லாத தி.மு.க. அரசு தற்போது அரசு மதுக்கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப்போகிறீர்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • முதல் முறையாக வேலைக்காக சென்னை புறப்பட்டு உள்ளார். விபத்தில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்டு உள்ளது.
    • முன்பதிவு செய்யப்படாத பெட்டியில்தான் அதிக பலி ஏற்பட்டுள்ளது. அதில் தமிழர்கள் பெரும்பாலும் வந்திருக்க வாய்ப்பில்லை.

    சென்னை:

    ஒடிசா ரெயில் விபத்து பற்றி அறிந்ததும் தமிழக பா.ஜனதா சார்பில் ரெயில்வே பயணிகள் நல வாரிய உறுப்பினர் எம்.கே.ரவிச்சந்திரன், ஏ.என்.எஸ். பிரசாத், ஜெயக்குமார் ஆகிய மூவர் குழுவை மாநில தலைவர் அண்ணாமலை அனுப்பி வைத்தார். பாலசோரில் முகாமிட்டுள்ள இந்த குழுவினர் கூறியதாவது:-

    பாலசோரில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்டோம். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் உதவ கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலம் பரசோரா பகுதியை சேர்ந்தவர் குராபா (24). இவருக்கு திருமணமாகி ஒரு கை குழந்தையும் உள்ளது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் முதல் முறையாக வேலைக்காக சென்னை புறப்பட்டு உள்ளார். விபத்தில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்டு உள்ளது.

    அவரிடம் போனில் பேசி ஆறுதல் கூறிய மாநில தலைவர் அண்ணாமலை குணமாகி சென்னைக்கு திரும்பி வரும்படியும் வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதி அளித் தார்.

    பலியானவர்களின் உடல் களில் பெரும்பகுதி வடக்கு ஒடிசா சேம்பர் ஆப் காமர்ஸ் கட்டிடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    தேடி வரும் உறவினர்களுக்கு 'ஸ்லைடு' மூலம் அடையாளம் காட்டப்படுகிறது. அடையாளம் தெரிந்தவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    முன்பதிவு செய்யப்படாத பெட்டியில்தான் அதிக பலி ஏற்பட்டுள்ளது. அதில் தமிழர்கள் பெரும்பாலும் வந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் குவித்து வைக்கப்பட்டுள்ள பைகளில் தமிழர்கள் பற்றிய அடையாளங்கள் இருக்கிறதா என்பதை ரெயில்வே மற்றும் காவல்துறை உதவியுடன் பார்த்து வருகிறோம். அனைத்து உடல்களும் அடையாளம் கண்டுபிடிக்கப்படும் வரை இங்கேயே தங்கி இருந்து தேவையான உதவிகள் செய்யும்படி மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டணி அமைத்து 25 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிட வேண்டும்.
    • அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் ஒற்றை இலக்கத்தில் தான் சீட் தருவார்கள்.

    வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து பா.ஜனதா 5 எம்.பி.க்களுக்கும், கூட்டணி கட்சிகள் 10 எம்.பி.க்களும் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்பது அண்ணாமலையின் மலைக்க வைக்கும் கணக்கு.

    இதுதான் சரியான கணக்கு என்பதற்கு அண்ணாமலை டெல்லிக்கு சொல்லியிருக்கும் விளக்கம் வித்தியாசமானது. அதாவது தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பலவீனமாகத்தான் உள்ளது. எனவே பா.ஜனதா தலைமையில் பா.ம.க. உள்பட சில கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க வேண்டும். அதுதான் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக அமையும்.

    இப்படி கூட்டணி அமைத்து 25 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிட வேண்டும். தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும். இதில் பா.ஜனதா 5 தொகுதிகளில் நிச்சயம் ஜெயிக்கும்.

    ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் ஒற்றை இலக்கத்தில் தான் சீட் தருவார்கள். அதில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில்தான் பா.ஜனதா வெற்றி பெறும் என்று கூறி இருக்கிறார். ஆனால் டெல்லி மேலிடம் தி.மு.க. வலுவான அணியாக இருப்பதால் இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதே பலம் சேர்க்கும். 2026-ல் தமிழக அரசியல் களம் என்பது தி.மு.க.-பா.ஜனதா இடையேதான் இருக்கும் என்று உறுதியாக கூறி இருக்கிறார்கள். இப்போது பா.ஜனதா போட்டியிட விரும்பும் தொகுதியில் பணிகளை செய்யுங்கள் என்று டெல்லி மேலிடம் அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளது.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் எங்கள் கூட்டணியில் பா.ஜனதாவும் இருக்கும். இது உறுதியான கூட்டணி இதில் எந்த குழப்பமும் வேண்டாம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனும் கூறினார். டெல்லியில் நடந்த உரையாடல்கள் பற்றி அண்ணாமலையிடம் கேட்ட போது "நான் பல விஷயங்களுக்காக டெல்லி செல்வேன். அதையெல்லாம் பொது வெளியில் சொல்ல முடியாது. யூகங்களுக்கு பதில் சொல்லவும் விரும்பவில்லை" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்கள், அவர்கள் வசமிருக்கும் துறைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
    • அமுல் என்பது கூட்டுறவு சங்கம். மத்திய கூட்டுறவு துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா.

    சென்னை:

    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வலைதளத்தில் நடக்கும் மோதல் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வது ஆவின் பால் நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் 'அமித் ஷாவின் 9 ஆண்டுகால வரலாற்றில் மு.க.ஸ்டாலின் எழுதியதை போல் தவறான கடிதத்தை யாரும் எழுதி இருக்க மாட்டார்கள்' என்று குறிப்பிட்டார்.

    அதாவது பால்வளத்துறைக்கும் அமித் ஷா துறைக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டார்.

    அதில், தமிழக பா.ஜ.க.விற்கு 20 ஆயிரம் புத்தகங்கள் படித்தது போதவில்லை என நினைக்கிறேன். இன்னும் நிறைய படிக்க வேண்டியுள்ளது. முதலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும்.

    அதற்கு முன்பு மத்திய அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்கள், அவர்கள் வசமிருக்கும் துறைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். அமுல் என்பது கூட்டுறவு சங்கம். மத்திய கூட்டுறவு துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா. எனவே தான் அவருக்கு கடிதம் எழுதப்பட்டது. தமிழக பாஜகவிற்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.

    தங்கள் சொந்த அரசை பற்றியே தெரியவில்லை. உங்கள் தலைவர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவதை எப்போது தான் நிறுத்தப் போகிறீர்களோ? நீங்கள் அடிக்கும் ஜோக் உங்களுக்கு தான். 9 ஆண்டுகால வரலாறு என்று கூறினீர்களே? அமித்ஷா அமைச்சராக இருப்பதே கடந்த 4 ஆண்டுகளாக தான். இது கூடவா தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கும் பதிலளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தந்தையின் பாரம்பரியத்தில் இயங்குபவருக்கும் தி.மு.க.வின் பகுத்தறிவற்ற தலைவர்களுக்கும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து சில பள்ளிகளில் படிப்பு தேவைப்படும்.

    அமுல் மற்றும் நந்தினி, நந்தினி மற்றும் மில்மா பால் நிறுவனங்களுக்கு இடையேயான எல்லை தாண்டிய சந்தைப்படுத்துதல் தொடர்பான சிக்கல்களை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் தீர்த்து வருகிறது.

    பால்வள மேம்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. நீங்கள் தமிழகத்தின் தொழில்துறை அமைச்சராக இருப்பது வருத்தம் அளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

    துறைகள் தொடர்பான விபரம் தெரிந்தவர் யார் என்ற பாணியில் தொடரும் இந்த யுத்தம் வலைதளத்தில் உலா வருபவர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துணை முதல்-மந்திரி சிவக்குமார் மேகதாது அணை கட்டப்படும் என உறுதியாக கூறியுள்ளார்.
    • தமிழக உரிமைகளுக்கு எதிராக கர்நாடகா, கேரளா செயல்பட்டாலும் அது குறித்து முதலமைச்சர் எதிர்க்கவில்லை.

    தூத்துக்குடி:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை கர்நாடகாவில் வைத்தே நான் எதிர்த்தேன். அம்மாநில துணை முதல்-மந்திரி சிவக்குமார் மேகதாது அணை கட்டப்படும் என உறுதியாக கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரசார் வாய் திறக்கவில்லை.

    தமிழக உரிமைகளுக்கு எதிராக கர்நாடகா, கேரளா செயல்பட்டாலும் அது குறித்து முதலமைச்சர் எதிர்க்கவில்லை. அவர் தமிழக உரிமைகளை விட்டு கொடுத்து வருகிறார்.

    மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் அதனை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். அந்த ஆற்றல் எங்களுக்கு உண்டு.

    அமைச்சர் பொன்முடி ஓசி பயணம் என்றும், வடக்கன்ஸ் என்றும் பேசி வருகிறார். அவர் அமைச்சராக நீடிக்க தகுதியை இழந்துவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊழல் நாடு என்ற பெயர் இந்தியாவிற்கு இருந்தது.
    • எந்தவித ஊழலும் இல்லாத ஆட்சியை பா.ஜனதா கொடுத்துள்ளது.

    மதுரை :

    மதுரை அண்ணாநகரில், மத்திய பா.ஜனதா அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    இந்திய சரித்திரத்தில் மிக முக்கியமான 9 ஆண்டாக, பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம் இருந்துள்ளது. கடைகோடியில் இருக்கிற சாமானிய மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கும் என்பதை யோசித்து பார்த்து வீடு, கியாஸ் சிலிண்டர், வங்கி கணக்கு, அந்த வங்கி கணக்கிற்கு பணம், ரேஷன் அட்டை என பல சலுகைகள் மோடி ஆட்சியில் கிடைத்துள்ளன.

    ஊழல் நாடு என்ற பெயர் இந்தியாவிற்கு இருந்தது. அதனை உடைத்து காட்டியவர், மோடி. 9 ஆண்டுகள் கடந்தும் கூட பிரதமர் மோடியின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் வைக்கமுடியவில்லை. அந்த அளவிற்கு சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனை வீடு, வீடாக எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, பல பெருமைகளை கொண்டது. தமிழை வளர்க்க மோடி பாடுபடுகிறார். தமிழின் பெருமை, தமிழனின் பெருமையை உலகெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார். ஐ.நா. சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என பேசி, திருக்குறளின் பெருமையை பட்டிதொட்டி எல்லாம் எடுத்துரைத்தார். வாரணாசியில், காசி தமிழ் சங்கம் வளர்த்தார். செங்கோலின் பெருமையை பாராளுமன்றத்தில் நிலை நாட்டினார்.

    புதிய பாராளுமன்றத்தில் பேசப்பட்ட முதல் மொழி தமிழ் மொழிதான். பாராளுமன்றத்திற்கு எப்போது செங்கோல் சென்றதோ, இனி தமிழகத்திலும் அறம் சார்ந்த ஆட்சிதான் அமையப்போகிறது.

    தற்போது இருக்கும் தி.மு.க. ஆட்சிக்கும், அறம் என்ற வார்த்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாராளுமன்றத்தில் செங்கோல் மட்டும் நிறுவப்படவில்லை. தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக அஸ்திவாரம் நிறுவப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானில் இருந்து, பிரதமரை பற்றி குறை கூறி வருகிறார். எந்தவித ஊழலும் இல்லாத ஆட்சியை பா.ஜனதா கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை போல ஊழலில் ஈடுபடவில்லை. ஆனால், 2 ஆண்டுகளே ஆட்சி நடத்திய தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது

    தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை குடித்து 22 குடும்பங்கள் துயரத்தில் இருக்கின்றன. ஆனால், வெளிநாட்டில் முதல்-அமைச்சர் சொகுசாக இருக்கிறார். தமிழகம் கள்ளச்சாராய மாநிலமாக மாறிவிட்டது. இதற்கு தி.மு.க.தான் காரணம். ரூ.44 ஆயிரம் கோடி டாஸ்மாக் வழியாக வருவாய் ஈட்டும் மாநிலமாக தமிழகத்தை தி.மு.க. மாற்றி இருக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. அரசு மீது கோபத்தில் இருக்கின்றனர். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை பேசி கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பா.ஜனதா மண்டல் தலைவர்கள் 1200 பேருக்கு, அண்ணாமலை வெள்ளி மோதிரம் வழங்கினார்.

    • தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.
    • பாரதிய ஜனதா நடைபயணம் ஜூலை 9-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது.

    மதுரை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் குறித்து இப்போது பேசப்படுகிறது. ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற வாதத்தின் படி ஒரு குற்றம் சுமத்தப்பட்டால் அதற்கான ஆதாரத்தை பார்க்க வேண்டும். முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். பின்பு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கொடுத்த வீரர்கள், சுப்ரீம் கோர்ட் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரும், புகார் கூறப்பட்டவரை கைது செய்த பின்னர்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறுவது தவறானது.

    தமிழகத்தில் கவியரசு வைரமுத்து மீது எத்தனை புகார்கள் உள்ளது. அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. விசாரணை நடத்தி பின்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

    பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது இலாகா மாற்றம் நடவடிக்கை மதுரை மண்ணுக்கு தி.மு.க. அரசு இழைத்திருக்கும் துரோகம். பி.டி.ஆர். ஒரு தவறும் செய்யவில்லை. முதல்வர் மீது கருத்து சொல்லியதற்காக தூக்கி வீசப்பட்டிருக்கிறார் என்றால் இந்த திராவிட மாடலில் யாருக்கு வேண்டுமானால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை எடுத்துரைக்கிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட செல்லும் போது, அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அப்படி தாக்கியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக, மேயராக மற்றும் பதவிகளில் உள்ளவர்கள். அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை இனி ஒரு அரசு அதிகாரிகள் மீது இது போன்ற செயல்கள் செய்யும் நபர்களுக்கு காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கை பெரிய பாடமாக இருக்க வேண்டும்.

    மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் கட்சியின் பதவி ஏற்பு விழாவில் முதல்வர் கலந்து கொண்டது எந்த வகையில் சரியாகும். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது.

    நிச்சயமாக மேகதாது அணையை கட்டினால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.

    பாரதிய ஜனதா நடைபயணம் ஜூலை 9-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது. 6 மாதம் நடக்கும் இந்த நடைபயணத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது.
    • சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கே. செட்டிப்பாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவும், ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் செயலாளர் எக்ஸ்லான். கே. ராமசாமி வரவேற்புரை ஆற்றினார். மணிப்பூர், மேகலாயா மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும் அவர் 10 ம்வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி காவ்யா மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி பிரதிக்ஷாவிற்கும் சிறப்பிடம் பெற்ற பிற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் தலைவர் வீனஸ். குமாரசாமி நன்றி கூறினார்.

    • போட்டி முடிந்த பின்னர் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
    • ஜடேஜாவின் வின்னிங் ஷாட்டை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

    16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார்.

    கடைசி 2 பந்தில் 10 ரன் தேவை என்ற நிலையில், 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார். போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜடேஜாவின் வின்னிங் ஷாட்டை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஜடேஜாவை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

    அதில், கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி. ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர்! பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்

    இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து வந்துள்ளது அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளோம்.
    • தமிழக பா.ஜனதா சார்பில் நாளை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்குகிறது.

    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நேற்று பாராளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து ஒரு வரலாற்று பதிவையும் செய்துள்ளது.

    அடுத்த கட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் இன்று சென்னை வந்தார். அடை யார் நட்சத்திர ஓட்டலில் அவருடன் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து வந்துள்ளது அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளோம்.

    15 மாநகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. 700 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    2026-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்கும். புதிதாக 7 ஐ.ஐ.டி.க்கள், 7 ஐ.ஐ.எம்.கள் தொடங்கப்பட்டு உள்ளது. 393 பல்கலைக்கழகங்களும் உருவாக்கப்பட்டு உள்ளது. வேளாண்மைத்துறைக்கும் பல புதுமைகளை கொண்டு வந்துள்ளோம். மூட்டையில் வாங்கப்பட்ட யூரியா உரம் இப்போது பாட்டில் அளவில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக பா.ஜனதா சார்பில் நாளை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்குகிறது. இந்த சந்திப்பின்போது கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.

    அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு மூலம் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் துறை வாரியாக நிதி ஒதுக்கீடுகள், செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் விளக்குகிறார்கள்.

    பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தி இவற்றை பிரசாரம் செய்வது, சமூக வலைத்தள ஆதரவாளர்களுடன் கலந்துரையாடுவது, தொழிலாளர்கள், அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடல், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்க உள்ளார்கள்.

    இது தவிர வீடு தோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள். இதற்கான திட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் தயார் செய்யும்படி கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    • அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.
    • வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள்.

    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நேற்று பாராளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து ஒரு வரலாற்று பதிவையும் செய்துள்ளது.

    அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் இன்று சென்னை வருகிறார். மாநில தலைவர் அண்ணாமலையுடன் நிருபர்களை சந்தித்து ஒரு மாத பிரசார திட்டங்களை அறிவிக்கிறார்கள்.

    நாளை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்குகிறது. இந்த சந்திப்பின்போது கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.

    அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு மூலம் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் துறைவாரியாக நிதி ஒதுக்கீடுகள், செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் விளக்குகிறார்கள்.

    பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தி இவற்றை பிரசாரம் செய்வது, சமூக வலைத்தள ஆதரவாளர்களுடன் கலந்துரையாடுவது, தொழிலாளர்கள், அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடல், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்க உள்ளார்கள்.

    இது தவிர வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள். இதற்கான திட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் தயார் செய்யும்படி கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நேற்று பாராளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து ஒரு வரலாற்று பதிவையும் செய்துள்ளது.

    அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் இன்று சென்னை வருகிறார். மாநில தலைவர் அண்ணாமலையுடன் நிருபர்களை சந்தித்து ஒரு மாத பிரசார திட்டங்களை அறிவிக்கிறார்கள்.

    நாளை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்குகிறது. இந்த சந்திப்பின்போது கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.

    அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு மூலம் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் துறைவாரியாக நிதி ஒதுக்கீடுகள், செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் விளக்குகிறார்கள்.

    பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தி இவற்றை பிரசாரம் செய்வது, சமூக வலைத்தள ஆதரவாளர்களுடன் கலந்துரையாடுவது, தொழிலாளர்கள், அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடல், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்க உள்ளார்கள்.

    இது தவிர வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள். இதற்கான திட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் தயார் செய்யும்படி கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    • தமிழ் மீதும் தமிழ் வளர்ச்சி மீதும் அக்கறை கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி.
    • இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதி காலத்தில் சமூக அறிவியல் பாடத்திட்டத்தை தமிழ் வழி பாடப்பிரிவாக கொண்டு வந்தவர் கருணாநிதி.

    விழுப்புரம்:

    தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டாது என அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சுற்றறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டு இருந்தது. அந்தப் பாடப்பிரிவுகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் விழுப்புரம் அண்ணா உறுப்பு கல்லூரி விழாவில் நான் கலந்து கொள்ள சென்ற பொழுது கல்லூரி முதல்வரும் நிருபர்களும் என்னிடம் கூறினார்கள். ஆனால் இது சம்பந்தமாக உயர்கல்வித்துறை செயலாளருக்கோ எனக்கோ எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தன்னிச்சையாக இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டு இருந்தது. உடனடியாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக நேற்று காலை அறிவித்திருந்தார்.

    தமிழ் வழியில் படிக்க மாணவர்கள் இல்லை என்று அதை மூடுவது முக்கியமல்ல. தி.மு.க.ஆட்சிக்காலத்தில் தான் பொறியியல் படிப்பில் தமிழ் வழியில் பாடப் பிரிவுகள் கொண்டு வரவும் சட்டம் இயற்றப்பட்டது.

    நான் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் தமிழ் வழி கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.

    தமிழ் மீதும் தமிழ் வளர்ச்சி மீதும் அக்கறை கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதி காலத்தில் சமூக அறிவியல் பாடத்திட்டத்தை தமிழ் வழி பாடப்பிரிவாக கொண்டு வந்தவர் கருணாநிதி.

    ஒன்றும் அறியாத அண்ணாமலை ஏதோ அரசியல் காரணங்களுக்காக பேச வேண்டும் என்று அவர் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். அவருக்கு தமிழைப் பற்றியும் தெரியாது. தமிழரது வரலாறும் தெரியாது. கன்னடத்தில் இருந்து இங்கு வந்து அரசியல் செய்ய வந்திருக்கிறார். அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரிந்துவிடப் போகிறது. அவர் நான் மழுப்பலாக பதில் அறிவித்திருந்தேன் என்று கூறிவருகிறார். நான் என்ன மழுப்பலாக அறிவித்து விட்டேன். அவர்கள் போல் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டத்தை மக்களிடம் திணிப்பதற்கு முயல்கிறேனா. அவருக்கு ஒன்றும் தெரியாது. தெரியாமல் அரசியல் காரணங்களுக்காக அண்ணாமலை தொடர்ந்து இதுபோல் பேசி வருகிறார்.

    இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் கலைய வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டுமென்று சட்டமாக இயற்றி அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு இது போன்ற பிரச்சனைகள் களையப்படும்

    மேலும் பொறியியல் கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கும் ஒரு சில இடங்களில் நிதி பற்றாக்குறையால் அப்பணிகள் மெதுவாக நடைபெறுகிறது. படிப்படியாக கட்டமைப்பு உயர்த்தப்பட்டு மாணவரின் கல்வித் திறனை உயர்த்துவதற்கு இந்த அரசு தொடர்ந்து பாடுபடும்.

    இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

    ×