என் மலர்
நீங்கள் தேடியது "ஏஐ"
- ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.
- இவை என்னை சிரிக்க செய்தன.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி வருகிறார். மேலும் அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அவ்வாறு அவர் உருவாக்கிய போலி வீடியோ ஒன்றில் 1980-க்களில் பிரபலமாக "வோயேஜ் வோயேஜ்" பாடலுக்கு அவரே நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை உருவாக்கியவர்களை பாராட்டிய மேக்ரான் "வீடியோக்கள் அருமையாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவை மிக அழகாக உள்ளன. இவை என்னை சிரிக்க செய்தன," என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஏ.ஐ. உச்சிமாநாட்டை ஊக்குவிக்கும் வகையில், மேக்ரான் இந்த வீடியோக்களை உருவாக்கி இருக்கிறார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கு இந்தியாவும் இணைந்து தலைமை தாங்குகிறது.
இது தொடர்பாக அதிபர் மேக்ரானின் இன்ஸ்டாகிராம் பதிவு அதிக பார்வையாளர்களை பெற்றதோடு, அதிகளவு பகிரப்பட்டும் வருகிறது. எனினும், சிலர் அதிபர் மேக்ரானின் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.
- சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான டீப் சீக் புதிய ஏஐ மாடல் ஒன்றை அறிமுகப்டுத்தியது.
- சாட்ஜிபிடி கொடுத்து வந்த அனைத்து நவீன வசதிகளையும் டீப்சீக் ஏஐ இலவசமாகவே வழங்குகிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கிய சாட்ஜிபிடி ஏஐ உலகளவில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் சமீபத்தில் சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான டீப் சீக் புதிய ஏஐ மாடல் ஒன்றை அறிமுகப்டுத்தியது. மற்றவற்றைக்காட்டிலும் இதை உருவாக்க வெறும் 6 மில்லியன் டாலர்கள் மட்டுமே செலவானதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
இதனால் உலகளவில் சாட்ஜிபிடி உள்ளிட்ட அமெரிக்க ஏஐ மாடல்கள் கடும் பின்னடைவை சந்தித்தது. பிரீமியம் முறையில் சாட்ஜிபிடி கொடுத்து வந்த அனைத்து நவீன வசதிகளையும் டீப்சீக் ஏஐ இலவசமாகவே வழங்குகிறது. இதனால் ஏஐ தொழில்துறையில் சர்வதேச அளவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு டீப்சீக் தலைவலியாக மாறியுள்ளது.
இதனிடையே டீப் சீக் ஏஐ நிறுவனத்தின் சி.இ.ஓ. லியாங் வென்ஃபெங் என்று ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஆனால் அப்புகைப்படம் டீப் சீக் ஏஐ நிறுவன சி.இ.ஓ.-ன் புகைப்படம் இல்லை என்று தெரியவந்துள்ளது.
சீன கட்டுமான பொருட்கள் நிறுவனத்தின் இயக்குநர் லியாங் வென்ஃபெங் புகைப்படத்தை டீப் சீக் ஏஐ நிறுவன சி.இ.ஓ. என தவறாக பரப்பியுள்ளனர்.
டீப் சீக் ஏஐ நிறுவன சி.இ.ஓ.-ன் பெயரும் லியாங் வென்ஃபெங் என்று இருந்ததே இந்த குழப்பத்திற்கு காரணம். டீப் சீக் ஏஐ வெளிவரும் வரை லியாங் வென்ஃபெங் தனது ப்ரோபைலில் தன்னை பற்றிய போதுமான விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. டீப் சீக் ஏஐ வெளிவந்தவுடன் இது தொடர்பாக கடந்த வாரம் அவர் பேசியபோது தான் பலருக்கும் அவரை பற்றி தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தடை செய்துள்ளன.
- சாம் ஆல்ட்மேன் இந்தியா வருகை தந்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளார்.
உலக அளவில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க நிறுவனமான ஓபன் ஏஐ உருவாக்கிய சாட்ஜிபிடி, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ, மெட்டா ஏஐ, கார்க் ஏஐ ஆகியவற்றுடன் தற்போது சீனாவின் டீப்சீக் ஏஐ புதிதாக அறிமுகமாகியுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சாட்ஜிபிடி, டீப் சீக் உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்களை அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகிக்க வேண்டாம் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தங்களது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது.
இவற்றால் அரசின் பாதுகாக்கப்பட்ட தரவுகள், ஆவணங்கள் ஆகியவற்றின் ரகசியத்தன்மை சீர்குலையும் அபாயம் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இதுபோன்ற பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி டீப்சீக் பயன்பாட்டை தடை செய்துள்ளன.
இதற்கிடையே சாட்ஜிபிடி உடைய தாய் நிறுவனமான ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் இந்தியா வருகை தந்துள்ள நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- ஜன்தன் ஆதார் மொபைல் ஆகியவற்றின் மூலம் நேரடி மானியம் வழங்குவதை தொடங்கினோம்.
- நாட்டின் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை 10 ஆண்டுகளில் நாம் அமைத்திருக்கிறோம்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடந்த விவாதம் நடைபெற்றது.
அதன் முடிவில் இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசியல் லாப நஷ்டங்களை பற்றி கவலைப்படுபவர்கள் அல்ல நாங்கள்
* ஏழைகளுக்கு சேவை செய்வது மட்டுமே மத்திய பாஜக அரசின் நோக்கம்
* முன்பு பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை ஒரே ஒரு கட்சியின் ஆட்சி மட்டுமே இருந்தது
* ஜன்தன் ஆதார் மொபைல் ஆகியவற்றின் மூலம் நேரடி மானியம் பட் வழங்குவதை தொடங்கினோம்.
* நாட்டின் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை 10 ஆண்டுகளில் நாம் அமைத்திருக்கிறோம்.
* AI என்ற வார்த்தை மிகவும் நாகரீகமாக மாறிவிட்ட இந்த நேரத்தில், இந்தியா இரட்டை AI இன் சக்தியை கொண்டுள்ளது.
* முதல் AI என்பது செயற்கை நுண்ணறிவையும் இன்னொரு AI ஆஸ்பிரேஷனல் இந்தியாவை குறிக்கிறது" என்று தெரிவித்தார்.
- தற்போதுள்ள சட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் எடுக்கக்கூடிய நிர்வாக நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறோம்.
- அமெரிக்க பாராளுமன்றத்தின் மூலமாக சட்டம் கொண்டு வர உள்ளதாக ஆர்த்தி பிரபாகர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவின் போக்கை வடிவமைப்பதில் இந்தியா போன்ற ஒத்த சிந்தனையுள்ள நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவியல் ஆலோசகர் ஆர்த்தி பிரபாகர் இன்று தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்கும் வழிமுறைகள் குறித்து கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து அமெரிக்க அரசாங்கம் செயலாற்றி வருகிறது.
இந்தியாவில் பிறந்த அமெரிக்க பொறியாளரான ஆர்த்தி பிரபாகர், அமெரிக்க வெள்ளை மாளிகையின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கொள்கைக்கான அறிவியல் ஆலோசக அலுவலகத்தின் 12வது இயக்குனர் ஆவார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஈடுபடும் நிறுவனங்களை தாங்கள் செய்யும் செயலுக்கு பொறுப்பேற்கும் வகையில் செயல்பட வைக்க முயற்சித்து வருகிறோம். தற்போதுள்ள சட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் எடுக்கக்கூடிய நிர்வாக நடவடிக்கைகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். செயற்கை நுண்ணறிவின் தீங்குகளை சமாளிக்கும் திறனை அதிகரிக்கவும், செயற்கை நுண்ணறிவை மக்களின் நன்மைக்காக பயன்படுத்தவும் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க அதிபர் தயாராக உள்ளார்.
இந்த பிரச்சனையில் நிர்வாக ரீதியாக தற்போது இவ்வளவுதான் செய்ய முடியும். இதற்கு பிறகு அமெரிக்க பாராளுமன்றத்தின் மூலமாக சட்டம் கொண்டு வர போகிறோம். பின்னர் இதற்கான கருத்து பரிமாற்றங்களுடன் இந்தியா உட்பட நமது சர்வதேச நட்பு நாடுகளுடன் சேர்ந்து செயலாற்றுவோம்.
இது ஒரு உலகளாவிய தொழில்நுட்பம். இது எல்லா இடங்களிலும் உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்கிறார்கள். இது அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கப் போகிறது.
இதன் போக்கை வடிவமைக்க ஒத்த சிந்தனை கொண்ட பல நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.
கடந்த மாதம் வாஷிங்டன் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் சந்தித்தபோது நடைபெற்ற கருத்து பரிமாற்றங்களில் செயற்கை நுண்ணறிவும் முக்கியமான ஒன்றாக இருந்தது.
இவ்வாறு ஆர்த்தி கூறியிருக்கிறார்.

