என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 209749"
- வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
- வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
காங்கயம் :
திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், படியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கனிமங்கள் மற்றும் குவாரிகள் சிறு கனிம திட்டத்தின் கீழ் ரூ.19.60 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டும் பணிகள், கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் எஸ்.என்.எம். சாலை முதல் படியூா் வரை சாலை மேம்படுத்துதல், சிவன்மலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.9.59 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்கால் அமைத்தல், ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமானப் பணிகள் என ரூ.7.11 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேற்கண்டப் பணிகளை கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராகவேந்திரன், விமலாதேவி ஆகியோா் உடனிருந்தனா்
- பெரம்பலூர் நரிக்குறவர் காலனியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
- பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் பணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டுமானங்களை அமைத்திட வேண்டும் என்று அந்நிறுவன பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள எறையூர் கிராமத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சிமெண்டு சாலைகள் இல்லாத தெருக்களில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய புதிய சாலைகள் அமைக்கவும், ஏற்கனவே சாலைகள் இருக்கும் பகுதிகளில் புதிய கழிவுநீர் வாய்க்கால்களை அமைக்கவும், அனைத்து தெருக்களிலும் தெருவிளக்குகள் அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயார் செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும், இப்பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா? என்று அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும், அப்பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ள நபர்களின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்து, உரிய நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, எறையூர் பகுதியில் சிப்காட் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டு வரும் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட கலெக்டர் அதனை சுற்றியுள்ள கிணறுகளில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் பணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டுமானங்களை அமைத்திட வேண்டும் என்று அந்நிறுவன பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
- உலக குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு நாள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் குழந்தைகளின் கல்வியில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அவினாசி :
அவிநாசியில் குழந்தை தொழில் உழைப்புக்கு எதிரான பிரசார இயக்கம் சாா்பில் உலக குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு நாள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநில அமைப்பாளா் கருப்புசாமி தலைமை வகித்தாா். முன்னாள் மாநில அமைப்பாளா் செல்லையா நம்பி முன்னிலை வகித்தாா். மேற்கு மண்டல அமைப்பாளா் குருசாமி வரவேற்றாா்.
இதில், 18 வயதுக்கு உள்பட்ட அனைவரும் குழந்தைகளே, இவா்களுக்கு கல்வி பெறும் உரிமை உள்ளது. புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் குழந்தைகளின் கல்வியில் அரசு கவனம் செலுத்த வேண்டும். நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளா் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அரியலூரில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
- தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.இதன்படி ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) திரு.எஸ்.முருகண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
- மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும் போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவையின் 2023-2024-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு தஞ்சை மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது.
இதனையொட்டி மேற்குறிப்பிட்ட மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள் அல்லது குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப்பே ரவை, சென்னை 600 009 என்ற முகவரிக்கு வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும்.
பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்சினைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும்.
ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
ஆனால் மனுவில் உள்ள பொருள் கீழ்கண்டவைகளாக இருத்தல் கூடாது:-
தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மாற்றம் மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டு தல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப்பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல், சட்ட மன்றப்பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும் போது ஆய்வுக்கு எடுத்துக்கொ ள்ளப்படும்.
ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும். ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொ ள்ளப்படும்.
அப்போது மனுதாரர் முன்னிலையில், குழுக்கூட்ட த்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.
இது குறித்து, மனுவில் உள்ள பொருள் கலெக்டர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் அனுப்பப்படும்.
20-ந்தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் ஆய்விற்கு எடுத்துக்கொ ள்ளப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.75 லட்சம் மதிப்பில் புதிய நகர்புற நலவாழ்வு மையத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
- கலெக்டர் விஷ்ணு சந்திரன் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதை பார்வையிட்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சிக் குட்பட்ட லேதம்ஸ் பங்களா, பரமக்குடி சந்தை கடை தெரு, மஞ்சள்பட்டினம் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய அரசு நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள் ளன. இதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து நலவாழ்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிகிச்சை அளிப்பதை பார்வை யிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு நலவாழ்வு மையத்திலும் தலா, ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவமனை பணியாளர் என பணிபுரிவார்கள். மேலும் இங்கு காலை 8 மணி முதல் 12 மணி வரை மற்றும் 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஆகிய நேரங்களில் 12 வகையான மருத்துவ சேவைகள், 14 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். மேலும் இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் தேவையான மருத்துவ சிகிச்சைகள் பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த திறப்பு விழாவில் முருகேசன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள்அர்ஜூன் குமார் (ராமநாதபுரம்), இந்திரா (பரமக்குடி), ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், நகர்மன்ற உறுப்பி னர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டை பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
- ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் பதிவேடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார்.
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு மேற்கொண்டார். கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதுப்பட்டி ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளின் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து கந்தர்வகோட்டை தாலுக்கா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் பதிவேடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திட்ட அலுவலர் கவிதா பிரியா, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், வட்டாட்சியர் காமராஜ், ஆணையர்கள் நளினி, திலகவதி ஆகியோர் உடன் இருந்தனர்.
- தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்.
- திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.84.70லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்குபல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டப்பணிகள்பொதுமக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டுஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சியில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் ரூ.1.52 லட்சம் மதிப்பீட்டில்கணக்கம்பாளையம் மீனாட்சி நகரில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியினையும்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ்ரூ.6.31 லட்சம் மதிப்பீட்டில் பெரியார் காலணி முதல் பி.என் சாலை வரை கான்கிரீட் கற்கள் பதிக்கும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.6.86 லட்சம் மதிப்பில் கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டிநிறுத்துக்கூடம் அமைக்கும் பணியினையும், ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகட்டும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ.2.32 லட்சம் மதிப்பீட்டில் தண்டக்காரம்பாளையம் ரோடு முதல் பெரியபள்ளம்வரை சங்கன்பிட் அமைக்கும் பணியினையும்,
விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்கணக்கம்பாளையம் பொன்விழா நகரில் ஊரட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.41.25லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணிகளையும், கனிமங்கள் மற்றும்குவாரிகள் சிறு கனிம திட்டத்தின் கீழ் ரூ.0.79 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் சமையலறை பழுதுபார்க்கும் பணிகளையும், பள்ளி உள்கட்டமைப்புமேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.08 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டடம் பழுதுபார்க்கும் பணிகளையும்,
நாதம்பாளையத்தில் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.11லட்சம்மதிப்பீட்டில் நாதம்பாளையம் விநாயகர் கோவில் முதல் சமத்துவபுரம் வரை நடைபெற்றுவரும் சாலை பணிகளையும், ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் வாவிபாளையம் ரோடுமுதல் விக்னேஷ்வரா நகர் பிரிவு வரை நடைபெற்று வரும் சாலை பணிகளையும் எனமொத்தம் ரூ.84.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் ஆய்வுமேற்கொள்ளப்பட்டன. திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள்பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும்திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன்,திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதி, ஸ்ரீதர்,உதவிப் பொறியாளர் கற்பகம், மேற்பார்வையாளர் லதா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களிடம் பல்வேறு மனுக்களை பெற்றுக்கொண்டார்.
- குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பொதுமக்களிடம் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வ ராஜ் எம்.எல்.ஏ., இன்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடம் பல்வேறு மனுக்களை பெற்றுக்கொண்டார்.அப்போது பொதுமக்கள் 43 ம் நம்பர் அரசு பேருந்து இந்த வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்பட வேண்டும்.
மேலும் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். தெருவிளக்கு அமைத்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் கோரிக்கை மனுவாக வழங்கினர். கவுன்சிலர்கள் ராதா கிருஷ்ணன்,வேலம்மாள், காந்தி,நெருப்பெரிச்சல் பாலன்,வார்டு செயலாளர் பாபுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- லால்குடியில் ரூ9.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தடுப்பணை பணிளை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்
- பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
திருச்சி,
லால்குடி வட்டம் காணக்கிளியநல்லூர் கிராமத்தில் நீர்வளத்துறையின் சார்பில் ரூ.9.23 கோடி மதிப்பீட்டில் நந்தியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணைப் பணிகளை இன்று, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அருகில் கலெக்டர் மா.பிரதீப்குமார், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
- மாணவர்கள் 150 பேர் செஞ்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
- கல்வெட்டுகள், வரலாற்று நினைவிடங்கள் ஆகிய வைகளை ஆய்வு செய்தனர்.
விழுப்புரம்:
தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் 150 பேர் செஞ்சி பகுதியில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் வரலாற்று நினைவிடங் களை ஆய்வு மேற்கொண்டனர்.
செஞ்சி அருகே உள்ள ஜெயினர்களின் நிறை விடமான திருநாதங்குன்று, நெகனூர், பட்டி, ஆகிய இடங்களில் அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் செஞ்சிக்கோட்டை செஞ்சி அருகே உள்ள வெடால், தொண்டூர், சீயமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்வெட்டுகள், வரலாற்று நினைவிடங்கள் ஆகிய வைகளை ஆய்வு செய்த னர். இடங்களை பேரா சிரியர்கள் வசந்தி, ஜீவா, தமிழரசு ஆகியோர் மாண வர்களுக்கு விளக்கி கூறி னார்கள். அப்போது அகிம்சை நடை ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதரன், சேட்டு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- மாவட்டத்தில் மொத்தம் 1,660 பள்ளி வாகனங்கள் இயங்குகின்றன.
- வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 570 பள்ளி வாகனங்கள், தெற்கு வட்டாரத்தில் 616, தாராபுரத்தில் 208, உடுமலையில் 260 என மாவட்டத்தில் மொத்தம் 1,660 பள்ளி வாகனங்கள் இயங்குகின்றன.
பள்ளி வாகனங்களின் நிலை குறித்து ஆண்டுக்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கடந்த மாதம் 10-ந்தேதி திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.பள்ளிகளின் நிலை, படிக்கட்டு உயரம், பஸ்களில் வைக்கப்பட்டுள்ள முதலுதவி வசதி, இருக்கை, வேக கட்டுப்பாட்டு கருவி, தகுதிச்சான்று கால அவகாசம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதுவரை நடந்த ஆய்வில் 40 சதவீதத்துக்கும் அதிகமான வாகனங்கள், இன்னமும் சான்றிதழ் பெறாமல் உள்ளன. இந்நிலையில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.திருப்பூர் வடக்கு போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்