என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோகன்லால்"
- 'காந்தாரா சேப்ட்டர் 1' மேக்கிங்கில் உள்ள நிலையில் இதுகுறித்து அப்டேட்கள் வெளியாகி வருகிறது.
- கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவியுடன் ரிஷப் செட்டி மோகன்லாலை சந்தித்தார்.
கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா சேப்ட்டர் 1' மேக்கிங்கில் உள்ள நிலையில் இதுகுறித்து அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. முதல் படமான காந்தரா கதைக்கு முற்கதையாக ப்ரீகுவல் படமாக இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி மலையாள ஹீரோ மோகன்லால் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
அதிலும் குறிப்பாக கதைப்படி ரிஷப் செட்டியின் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து படக்குழு சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவியுடன் ரிஷப் செட்டி மோகன்லாலை சென்று சந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலியல் புகார் குறித்து விசாரிக்க போலீஸ் உள்ளது. அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.
- மலையாள சினிமா சிதைந்து போவதை நினைத்து கவலை கொள்கிறேன்.
திருவனந்தபுரத்தில் கேரள கிரிக்கெட் சங்கத்தின் லோகோவை வெளியிட்ட நடிகர் மோகன்லால், கேரள திரையுலகை உலுக்கிய பாலியல் புகார்கள் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, இங்கே தான் இருக்கிறேன்.
* மலையாள திரையுலகினரின் அம்மா சங்கத்தில் நான் 2 முறை பொறுப்பில் இருந்துள்ளேன்.
* பாலியல் புகார் குறித்து விசாரிக்க போலீஸ் உள்ளது. அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.
* பாலியல் புகார்களால் பெருமை மிகுந்த கேரள சினிமா சிதைந்து போயுள்ளது.
* மலையாள சினிமா சிதைந்து போவதை நினைத்து கவலை கொள்கிறேன்.
* குழு கலைக்கப்பட்டாலும் சங்கத்தின் செயல்பாடுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை, பணிகள் தொடர்கிறது.
* ஹேமா குழு அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டியது ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் தான்.
* பாலியல் குற்றச்சாட்டுகளால் கேரள நடிகர் சங்கம் சிதறி விடக்கூடாது.
* மலையாள நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட்டது. அதன் மீது அவதூறு பரப்ப வேண்டாம்.
* பாலியல் புகார்கள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.
* சங்கத்தில் இருந்து விலகினாலும் இந்த பிரச்சனைகளை கூர்ந்து கவனித்துக்கொண்டு தான் இருந்தேன்.
* கேரள சினிமாவை தகர்த்து விட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பெண்களை பாதுகாக்க முடியாத நிலையில் அவர் எடுத்த முடிவு சரியானதுதான்.
- ஒவ்வொரு ஆணும் நம்ப முடியாத வலியையும் தியாகத்தையும் தாங்கிய ஒரு பெண்ணுக்குதான் பிறந்தான்.
சென்னை:
மலையாள திரை உலகில் புயலை கிளப்பி வரும் நடிகைகளின் பாலியல் புகார்கள் எதிரொலியாக மலையாள திரைப்பட நடிகர் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் மோகன் லால் உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளார்கள்.
மோகன்லாலின் இந்த முடிவை குஷ்பு வரவேற்றுள்ளார். பெண்களை பாதுகாக்க முடியாத நிலையில் அவர் எடுத்த முடிவு சரியானதுதான். இனி சம்பவம் என்று நடந்தாலும் சரி அந்த கர்மா என்றாவது ஒருநாள் நம் தலையில்தான் விழும் என்ற பயம் வரும் என்றார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கலைத்துறையில் நிலவும் இந்த பிரச்சனையில் நிலைத்து நின்று வெற்றி பெற்ற பெண்களுக்கு பாராட்டுகள். தொடரும் இந்த துஷ்பிரயோகத்தை உடைக்க ஹேமா கமிட்டி அவசியப்பட்டது. ஆனால் செய்து முடிக்குமா?
இந்த மாதிரி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது, பாலியல் உதவிகளை கேட்பது, பெண்கள் காலூன்றவோ அல்லது தங்கள் வாழ்க்கையை நடத்தவோ சமரசம் செய்துதான் ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது எல்லாத் துறைகளிலும் இருக்கிறது.
ஒரு பெண் மட்டும் ஏன் இப்படி தவறான வழியில் தான் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்களும் இதை எதிர்கொண்டாலும் வேதனையை சுமப்பது பெண்கள்தான்.
இந்த பிரச்சனை தொடர்பாக எனது மகள்களுடன் நீண்ட நேரம் உரையாடினேன். பாதிக்கப்பட்டவர்களிடம் இருக்கும் பச்சாதாபத்தையும், புரிதலையும் கண்டு வியந்தார்கள்.
இன்று பேசுவதா? நாளை பேசுவதா? என்பது முக்கியமல்ல. பேசுங்கள். உடனடியாக பேசுவதுதான் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவும், திறமையாக விசாரணை நடத்துவதற்கும் உதவும்.
அவமானம் வருமோ என்ற பயம். 'ஏன் செய்தாய்' என்ற கேள்விகளால் தயக்கம் வரும். பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு அந்நியராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எங்கள் ஆதரவு உண்டு.
பாதிக்கப்பட்டவர்கள் ஏன் முன்பே வெளிப்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழலாம். அப்போது அவருடைய சூழ்நிலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை.
ஒரு பெண்ணாகவும், தாயாகவும் பார்க்கும்போது இத்தகைய காயங்கள், சதையில் மட்டுமல்ல ஆன்மாவிலும் ஆழமாக பதிந்து போகின்றன.
இந்தக் கொடூரச் செயல்கள் நமது நம்பிக்கை, அன்பு, வலிமை ஆகியவற்றின் அடித்தளத்தையே உலுக்குகின்றன. ஒவ்வொரு தாய்க்கும் பின்னால், வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு விருப்பம் இருக்கிறது, அந்த புனிதம் சிதைந்தால், அது நம் அனைவரையும் பாதிக்கிறது.
என் தந்தையின் துஷ்பிரயோகம் பற்றி பேச இவ்வளவு நேரம் எடுத்தது ஏன் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் முன்பே பேசியிருக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எனக்கு நடந்தது, என் தொழிலை உருவாக்குவதற்கான சமரசம் அல்ல.
நான் விழுந்தால் என்னைப் பிடிக்க வலிமையான கரங்களை எனக்குத் தருவதாக கருதும் நபரின் கைகளில் நான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்.
அங்குள்ள அனைத்து ஆண்களிடமும், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நிற்கவும், உங்கள் அசைக்க முடியாத ஆதரவைக் காட்டவும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு ஆணும் நம்ப முடியாத வலியையும் தியாகத்தையும் தாங்கிய ஒரு பெண்ணுக்குதான் பிறந்தான். பல பெண்கள் உங்கள் வளர்ப்பில் இன்றியமையாத பாத்திரங்களை வகிக்கிறார்கள்.
உங்களை வடிவமைக்கிறார்கள்-உங்கள் தாய்மார்கள், சகோதரிகள், அத்தைகள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள். உங்கள் ஒற்றுமை நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்கலாம், நீதியும் கருணையும் வெல்லும். எங்களுடன் நிற்கவும், எங்களைப் பாதுகாக்கவும், உங்களுக்கு வாழ்க்கையையும் அன்பையும் வழங்கிய பெண்களை மதிக்கவும்.
வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் குரல் ஒலிக்கட்டும், உங்கள் செயல்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் தகுதியான மரியாதை மற்றும் பச்சாதாபத்தை பிரதிபலிக்கட்டும். நினைவில் கொள்ளுங்கள், நாம் ஒன்றாக வலுவாக இருக்கிறோம், ஒன்றாக இருந்தால் மட்டுமே இந்த காயங்களை சரிசெய்து பாதுகாப்பான, அதிக இரக்கமுள்ள உலகத்திற்கு வழி வகுக்க முடியும்.
பல பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தின் ஆதரவு கூட இல்லை என்பதை புரிந்து கொள்வோம். அவர்கள் கண்களில் நட்சத்திர கனவுகளுடன் சிறிய நகரங்களிலிருந்து வருகிறார்கள், பிரகாசமாக பிரகாசிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள், ஆனால் பெரும்பாலும் அவர்களின் கனவுகள் மொட்டுக்களிலேயே நசுக்கப்படுகிறது.
இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுரண்டல்கள் இத்துடன் நிறுத்தப்படட்டும்.
பெண்களே, வெளியே வந்து பேசுங்கள். உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை ஒரு போதும் சரி செய்யவோ சமரசம் செய்யவோ வேண்டாம்.
இந்த துயரங்களை அனுபவித்த அனைத்து பெண்களுடனும் நானும் நிற்கிறேன். ஒரு பெண்ணாகவும், ஒரு தாயாகவும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பெண்கள் காலூன்றி நிற்க சமரசம் செய்ய வேண்டிய நிலை அனைத்து துறைகளிலும் உள்ளது.
- நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் வரும் இளம்பெண்கள் பலர் மொட்டுகளாக நசுக்கப்படுகின்றனர்.
மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் குவிந்து வரும் நிலையில் புகாரளித்த பெண்களுடன் துணை நிற்பதாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதில் கூறியிருப்பதாவது:-
பாதிக்கப்பட்ட பெண்களுடன் ஒரு தாயாகவும் ஒரு பெண்ணாகவும் துணை நிற்கிறேன்.
பெண்கள் காலூன்றி நிற்க சமரசம் செய்ய வேண்டிய நிலை அனைத்து துறைகளிலும் உள்ளது.
பாலியல் புகார் தெரிவித்துள்ள பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் துணை நிற்க வேண்டும்.
நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் வரும் இளம்பெண்கள் பலர் மொட்டுகளாக நசுக்கப்படுகின்றனர்.
பெண்களே வெளியே வந்து பேசுங்கள். உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை எந்த நிலையிலும் சமரசம் செய்யாதீர்கள்.
No என்றால் கண்டிப்பாக No-தான் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காதீர்கள் என்று பெண்களுக்கு குஷ்பு அறிவுறுத்தி உள்ளார்.
? This moment of #MeToo prevailing in our industry breaks you. Kudos to the women who have stood their ground and emerged victorious. ✊ The #HemaCommittee was much needed to break the abuse. But will it?Abuse, asking for sexual favors, and expecting women to compromise to…
— KhushbuSundar (@khushsundar) August 28, 2024
- தற்பொழுது மோகன்லால் அவரது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
- நடிகர் சங்கத்தில் {AMMA} இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது ராஜினாமா கடித்தத்தை சமர்பித்துள்ளனர்.
கேரள திரைப்படத்துறையில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா அறிக்கை சமர்ப்பித்த நிலையில் இந்த பிரச்சனை மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள திரை உலகில் சமீப காலமாக எரிமலை போல வெடித்திருக்கும் பாலியல் குற்ற சம்பவத்திற்கு மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
மலையாள திரைப்படம் நடிகர்கள் சங்கத்தின் ப்ரெசிடண்ட் பொறுப்பில் இருப்பவர் நடிகர் மோகன்லால். அவர் தற்பொழுது அவரது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இவர் மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தில் {AMMA} இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது ராஜினாமா கடித்தத்தை சமர்பித்துள்ளனர். இதுக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் " சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்வதற்கு காரணம் சங்கத்து உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது. இது கடந்த சில நாட்களுக்காக அனைத்து பத்திரக்கை ஊடங்களில் பேசும் பொருளாக இருக்கிறது. இதனால் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் தார்மீக அடிப்படையில் செயற்குழுவை கலைக்க தீர்மானம் செய்துள்ளோம். புது செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் மறு தேர்தல் வைத்து இன்னும் 2 மாதங்களில் உருவாக்கப்படும்" என தெரிவித்துள்ளனர். மேலும் புது செயற்குழு மற்றும் தலைமை பொறுப்பு விரைவில் இந்த சங்கத்தை மீண்டும் புதிய பலத்துடனும், உத்வேகத்துடனும் மீட்டெடுக்கும். அனைவருக்கும் நன்றி எங்கள் மேல் உள்ள பிழையை சுட்டி காட்டியதற்கு என தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
- குற்றச்சாட்டுகளை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள தொடங்கி உள்ளனர்.
கேரள திரைப்படத்துறையில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா அறிக்கை சமர்ப்பித்த நிலையில் இந்த பிரச்சனை மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள திரை உலகில் சமீப காலமாக எரிமலை போல வெடித்திருக்கும் பாலியல் குற்ற சம்பவத்திற்கு மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
இதுபற்றி டபிள்யூ சி.சி.அமைப்பின் நிறுவன உறுப்பினரும் நடிகையுமான ரேவதி கூறுகையில், இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் இப்போது தீவிரமாக எடுத்துக் கொள்ள தொடங்கி உள்ளனர்.
திரை உலகை சேர்ந்த சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இந்த பிரச்சனைக்கு கருத்து எதுவும் சொல்லாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் எங்களைப் போலவே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாங்கள் பேசுகிறோம். அவர்கள் அமைதியாக இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- மோகன்லால் இயக்கும் முதல் படமாகும். இப்படத்திற்கு 'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
- 3டி-யில் உருவாகும் இந்த படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால். இவர் தற்போது ஒரு படத்தை இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்திற்கு 'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.
குழந்தைகளைக் கவரும் விதமாக உருவாகும் இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார். 3டி-யில் உருவாகும் இந்த படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.
வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்த படம் என்கிறார்கள். இந்நிலையில், இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காப்புரிமை பிரச்சினை இருப்பதன் காரணமாக படத்தினை வெளியிட தடை இருந்தது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளி போனது.
இந்தநிலையில், நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் இப்படம் வருகிற அக்டோபர் 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால்.
- மூச்சு திணறல் பிரச்சனையால் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். தமிழ் சினிமாவிலும் மலையாள சினிமாவிலும் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். தற்பொழுது பிரித்விராஜ் இயக்கும் எம்புரான் திரைப்படத்திலும், பாரோஸ் மற்றும் எல்360 படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் மோகன் லால் மூச்சு திணறல் பிரச்சனையால் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அதிகளவு காய்ச்சல் மற்றும் தசை வலி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மோகன்லாலுக்கு வைரல் தொற்றும் ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 5 நாட்களுக்கு பொது இடங்களுக்கு எங்கும் செல்ல வேண்டாம் எனவும் நன்றாக ஓய்வு எடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
விரைவில் மோகன்லால் குணமாக ரசிகர்கள் மற்றும் மக்கள் பிராத்தித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் மோகன்லால் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
- சவால்களை எதிர்கொண்டாலும், நாங்கள் எப்போதும் வலுவாக இருந்து வருகிறோம்.
டெரிடோரியல் ஆர்மியில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் நடிகர் மோகன்லால் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். ராணுவ வீரர்களிடம் மீட்பு பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "சவால்களை எதிர்கொண்டாலும், நாங்கள் எப்போதும் வலுவாக இருந்து வருகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் ஒற்றுமையாக இருந்து நமது பலத்தை காட்டுவோம், ஜெய்ஹிந்த்" என்று கூறினார்.
நிலச்சரிவை நேரில் ஆய்வு செய்த பின்னர் நடிகர் மோகன்லால், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.3 கோடி ரூபாய் அளித்துள்ளார்.
ஏற்கனவே ஒரு சில தமிழ் நடிகர்கள் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி அளித்துள்ள நிலையில் நடிகர் மோகன்லால் இன்று 3 கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
- ராணுவ வீரர்களின் மீட்பு பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ந்தேதி கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேளையில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டதால் பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.
இந்த கோர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று 5-வது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழலில் நடிகர் மோகன்லால் இன்று காலை கோழிக்கோட்டில் இருந்து சாலை வழியாக மேப்பாடி சென்றார். அவர் ராணுவ சீருடையில் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டார். மோகன்லால் டெரிடோரியல் ஆர்மியில் லெப்டினன்ட் கர்னலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராணுவ சீருடையில் சென்ற மோகன்லால், டெரிடோரியல் ஆர்மியின் அடிப்படை முகாமை சென்றடைந்ததும் அங்குள்ள வீரர்களிடம் கள நிலவரம் பற்றி கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "சவால்களை எதிர்கொண்டாலும், நாங்கள் எப்போதும் வலுவாக இருந்து வருகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் ஒற்றுமையாக இருந்து நமது பலத்தை காட்டுவோம், ஜெய்ஹிந்த்" என்றார்.
life rescue radar என்னும் கருவியுடன் மண்ணில் புதைந்தோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.
- இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று ரசிகர்களை சந்தித்தார்.
நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக வெளிநாடுகளிலும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று ரசிகர்களை சந்தித்தார்.
தக் லைஃப் படத்தை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக கமல்ஹாசனின் தயாரிப்பில் தன்னுடைய எஸ்டிஆர்48 படத்தில் சிம்பு இணையவுள்ளதாகவும் பிரம்மாணடமாக எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் சிம்பு மலையாள இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் உடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டொவினோ தாமஸ் நடிப்பில் 2018 என்ற படத்தை இயக்கினார். இப்படம் குறைந்த பொருட் செலவில் எடுத்தாலும் உலகத்தரத்தில் எடுத்து இருப்பார்.
இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக சிம்பு நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து மோகன்லால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இவர்களுடன் மேலும் ஒரு பெரிய நடிகர் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு .
- அவரது பின் தொடர்ச்சியாக நடிகர் சித்திக் தேர்தலில் போட்டியிட்டார்.
கோகுலம் கருத்தரங்க மையத்தில் நேற்று மாலை நடந்த அம்மா அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் மலையாள நடிகர் சங்கம் தேர்தல் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு . இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக திரைப்பிரபலங்கள் பல நாடுகளில் இருந்து வந்து கலந்துக் கொண்டனர்.
மோகன்லால், மஞ்சு வாரியர், விஜய் பாபு, லால், இந்திரஜித், டொவினோ தாமஸ், கிரேஸ் ஆண்டனி, மதுபால் போன்றவர்கள் கலந்துக் கொண்டனர்,
இம்முறை மோகன்லால் எதிர்ப்பின்றி அம்மா அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த எட்டு முறை அம்மா அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த நடிகர் பாபு தானாக முன்வந்து தனது பதவியை நிறைவு செய்ததுடன் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததை அடுத்து அவரது பின் தொடர்ச்சியாக நடிகர் சித்திக் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகை குக்கு பரமேஸ்வரன் , உண்ணி சிவபால் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலில் நடிகர் சித்திக் , நடிகர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் . இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குக்கு பரமேஸ்வரன் மற்றும் உண்ணி சிவபால் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
அத்துடன் கடந்த காலங்களில் நான்கு முறை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்தவர் நடிகை குக்கு பரமேஸ்வரன். துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை மஞ்சு பிள்ளை தோல்வி அடைந்தார் . அனூப் சந்திரன், ஜெயன் சேர்த்தலா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட பத்திரிக்கை தாக்கல் செய்து இருந்தாலும், நடிகர் மோகன்லால் தேர்தலில் போட்டியிட தயாரானவுடன் அவர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் உண்ணி முகுந்தன் இந்த அமைப்பின் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடிகர் இடைவேளை பாபு கடந்த 2018 -ம் ஆண்டு முதல் தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி வகித்து வருகிறார். இம்முறை நடந்த தேர்தலில் நடிகர்கள் ஜெகதீஷ் மற்றும் ஜெயன் சேர்த்தலா ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் தொடர்ந்து மூன்றாம் முறை வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்