search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • நிசான் மேக்னைட் மாடல் இந்திய சந்தை உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியது.
    • நிசான் மேக்னைட் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    நிசான் நிறுவனத்தின் மேக்னைட் மாடல் இந்திய உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. நிசான் மேக்னைட் மாடலின் ஒரு லட்சமாவது யூனிட் அந்நிறுவனத்தின் சென்னை ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.

    இந்திய சந்தையில் அறிமுகமான 30 மாதங்களில் இந்த மைல்கல்லை நிசான் நிறுவனம் எட்டியுள்ளது. தற்போது நிசான் மேக்னைட் மாடல் XE, XL, XV, டர்போ, பிரீமியம், பிரீமியம் டர்போ (O), மற்றும் கெசா எடிஷன் போன்ற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் மர்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 71 ஹெச்பி பவர், 96 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 99 ஹெச்பி பவர், 152 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

    இதன் 1.0 லிட்டர் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • மாருதி ஜிம்னி மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
    • மாருதி ஜிம்னி மாடல் சீட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஜிம்னி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சுசுகி ஜிம்னி மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 74 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஜிம்னி மாடல் முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    இந்த மாடலின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என்றும் அதன் பிறகு ரூ. 25 ஆயிரம் என்றும் மாற்றப்பட்டது. முற்றிலும் புதிய மாருதி ஜிம்னி மாடலுக்கான வினியோகமும் இன்றே (ஜூன் 7) துவங்குகிறது. மாருதி ஜிம்னி மாடல் சீட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    இத்துடன் சிஸ்லிங் ரெட், நெக்சா புளூ, கிரானைட் கிரே, பியல் ஆர்க்டிக் வைட், புளூயிஷ் பிளாக், சிஸ்லிங் ரெட் மற்றும் புளூயிஷ் பிளாக் ரூஃப், கைனடிக் எல்லோ மற்றும் புளூயிஷ் பிளாக் ரூஃப் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஜிம்னி மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள், ப்ரோஜெக்டர் யூனிட், ஐந்து ஸ்லாட்கள் கொண்ட கிரில், பிரமாண்ட் வீல் கிளாடிங், கிரே நிற அலாய் வீல்கள், செவ்வக வடிவம் கொண்ட ஹாலோஜன் டெயில் லைட்கள், டெயில்கேட்டில் ஸ்பேர் வீல் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

    2023 மாருதி ஜிம்னி மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட K15B பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டிரான்ஸ்மிஷனுக்கு 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய மாருதி ஜிம்னி மாடல் ஐந்து கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் குர்கா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய மாருதி ஜிம்னியின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15 லட்சத்து 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் செல்டோஸ் மாடல் மட்டும் 55 சதவீத பங்கு வகிக்கிறது.
    • உலகம் முழுக்க 100-க்கும் அதிக நாடுகளுக்கு செலஸ்டோஸ் எஸ்யுவி மாடல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கியா இந்தியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யுவி மாடல் இந்திய விற்பனையில் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது. விற்பனைக்கு வந்த 46 மாதங்களில் இந்த மைல்கல் சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்திய சந்தையில், கியா செல்டோஸ் எஸ்யுவி-யின் விலை ரூ. 10 லட்சத்து 89 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி வியாபாரத்திலும் செல்டோஸ் மாடல் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் செல்டோஸ் மாடல் மட்டும் 55 சதவீத பங்குகளை பிடித்து அசத்தி இருக்கிறது. இதில் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி யூனிட்களும் அடங்கும்.

     

    இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகள் என்று உலகம் முழுக்க 100-க்கும் அதிக நாடுகளுக்கு செலஸ்டோஸ் எஸ்யுவி மாடல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    கியா செல்டோஸ் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த கார் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

    • நான் வெயிலில் சென்று மீன் விற்க வேண்டாம் என்று கருதி எனது மகன் எனக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார்.
    • வேலை பார்ப்பதற்காக மகன் கார் வாங்கி கொடுத்திருக்கும் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம்(வயது60). இவரது மனைவி காளியம்மாள்(55). இவர்களுக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    சிவானந்தமும், அவரது மனைவியும் ஊரணி மற்றும் கண்மாயில் மீன் பிடித்து விற்பனை செய்து தங்களது பிள்ளைகளை படிக்க வைத்தனர். வறுமை காரணமாக தங்குவதற்கு கூட இடமில்லாமல் தவித்த சிவானந்தம், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கீழக்கரையில் ஒருவரது விவசாய நிலத்தில் தங்கியிருந்தார்.

    தங்களது கஷ்டத்தை பற்றி கவலைப்படாமல் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்தனர். இதனால் சிவானந்தத்தின் மகன் சுரேஷ் கண்ணன் மரைன் என்ஜினீயரிங் படித்து முடித்தார். அவர் தற்போது வளைகுடா பகுதியில் உள்ள கப்பல் நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சம் ஊதியத்தில் என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார்.

    அதன்மூலம் தனது சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்த சுரேஷ் கண்ணன், வீடு இல்லாமல் தவித்த பெற்றோருக்கு புதிதாக வீடும் கட்டி கொடுத்துள்ளார். மேலும் தனது தாய்-தந்தையை வேலைக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார். ஆனால் உழைத்து சாப்பிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சிவானந்தம் மற்றும் அவரது மனைவி தொடர்ந்து மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

    வயதான காலத்திலும் உழைக்கும் தங்களின் தாய்-தந்தையின் கஷ்டத்தை குறைக்கும் வகையிலும், அவர்கள் எளிதாக மீன் விற்பனை செய்வதற்காகவும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள காரை சுரேஷ் கண்ணன் வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரிலேயே தற்போது சிவானந்தம் மீன்களை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருகிறார்.

    மீன் விற்பனை எங்களது குடும்ப தொழில். எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் மீன் விற்க செல்லாமல், வீட்டிலேயே இருக்குமாறு எனது மகன் கூறினார். ஆனால் கடைசி வரை தொழிலை விடாமல் உழைக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாகும்.

    நான் வெயிலில் சென்று மீன் விற்க வேண்டாம் என்று கருதி எனது மகன் எனக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரிலேயே மீன்களை ஏற்றி கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வறுமை நிலையிலும் கடினமாக உழைத்து படிக்க வைத்து ஆளாக்கிய தாய்-தந்தையின் வலியை உணர்ந்து, அவர்கள் எளிதாக சென்று வேலை பார்ப்பதற்காக மகன் சொகுசு கார் வாங்கி கொடுத்திருக்கும் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    • காரை சுத்தமாகவும், எந்த விதமான துர்நாற்றமும் இன்றி பராமரித்தால் எலிகளின் தொல்லை இருக்காது.
    • என்ஜின் பகுதி எலிகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது.

    கார்களை பராமரித்தல் மிகவும் நேர்த்தியான வேலை. ஒவ்வொரு பருவநிலைக்கு ஏற்ப கார்களில் இதை செய்ய வேண்டும், இதை செய்யக் கூடாது என ஏராளமான நுனுக்கங்கள் இதில் உள்ளன. மழை காலங்களில் கார்களுக்குள் எலி புகுந்து கொண்டு அட்டகாசம் செய்வது அதிகரிக்கும். பருவமழை பெய்யும் சீசனும் விரைவில் துவங்க இருப்பதாலும், எப்போதும் கார்களில் எலி தொல்லை ஏற்படாமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    கார்களில் உணவு பண்டங்களை வைக்க வேண்டாம்:

    எலி மற்றும் இதர பூச்சிகள் உணவு பொருட்களை கண்டே கார்களுக்குள் ஈர்க்கப்படலாம். அதனால் கார்களினுள் உணவு பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். கார் இண்டீரியரில் உணவு பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது சிறந்தது. காரை சுத்தமாகவும், எந்த விதமான துர்நாற்றமும் இன்றி பராமரித்தாலே எலிகளின் தொல்லை இருக்காது.

    இருள்சூழ்ந்த பகுதியில் நிறுத்த வேண்டாம்:

    எலிகள் பெரும்பாலும் இருள் சூழ்ந்த பகுதிகளிலேயே தங்க விரும்பும். இதன் காரணமாகவே என்ஜின் பகுதி எலிகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது. கார்களை எப்போதும் சுத்தமான மற்றும் அதிக வெளிச்சமுள்ள பகுதிகளில் நிறுத்தி வைப்பது நல்லது.

    தெளிப்பான்கள்:

    கார்களில் எலி மற்றும் பூச்சிக்கள் வராமல் இருக்க செய்வதற்காக சந்தையில் ஏராளமான தெளிப்பான்கள் (Spray) கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தினாலும், கார்களில் எலி வருவதை தடுக்க முடியும். இவற்றை நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம்.

    செல்லப்பிராணிகள்:

    வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் பெரும்பாலும், எலி மற்றும் இதர பூச்சுகளால் எவ்வித இடையூறும் சந்தித்து இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. பூனை மற்றும் நாய்களை வீடுகளில் வளர்க்கும் போது, எலி மற்றும் இதர பூச்சிகள் வீட்டிற்குள் வர நினைக்காது. செல்லப்பிராணி வைத்திருக்கும் கார் ஓனர்களுக்கு இது சிறந்த வழிமுறை ஆகும்.  

    • கார் மோதி டிரைவர் பலியானார்.
    • வடுகபட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டி பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது36). இவர் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள ஒரு பீரோ கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்தார். நேற்று இரவு வேலை முடித்து விட்டு வாடிப்பட்டிக்கு வரும் டவுன் பஸ்சில் பயணம் செய்து வடுகபட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பின் அங்கிருந்து ஊருக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்றார்.

    அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோகன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • நடுரோட்டில் தீப்பற்றி கார் எரிந்தது.
    • மர்ம நபர்கள் காருக்கு தீவைத்துவிட்டு சென்றார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 49). இவர் தனது காரில் பொருட்களை வாங்க கடைவீதிக்கு சென்றார். அங்கு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு சுரேஷ் பொருட்களை வாங்க கடைக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் ரோட்டில் நின்று கொண்டிருந்த அவரது கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் காரின் பெரும் பகுதி எரிந்து சேதமானது. இந்த சம்பவம் தொடர்பாக ஆனைசேரி கிராமத்தை சேர்ந்த செந்தூர்முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ள்ளனர்.

    காரில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் காருக்கு தீவைத்துவிட்டு சென்றார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • புதிய குளோஸ்டர் ஸ்பெஷல் எடிஷன் மாடல் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    • எம்ஜி குளோஸ்டர் ஸ்பெஷல் எடிஷன் மாடல் 2WD மற்றும் 4WD டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது குளோஸ்டர் எஸ்யுவி-யின் பிளாக்ஸ்டார்ம் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எம்ஜி குளோஸ்டர் பிளாக்ஸ்டார்ம் எடிஷன் விலை ரூ. 40 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் 2WD மற்றும் 4WD என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இத்துடன் 6 மற்றும் 7 சீட்டர் வடிவில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி வெளிப்புறம் மெட்டல் பிளாக் பெயின்ட் மற்றும் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிலேட்கள், ORVM-கள், டோர் பேனல்கள், ஹெட்லைட் கிலஸ்டர் உள்ளிட்டவைகளில் ரெட் கார்னிஷ் செய்யப்பட்டு உள்ளது.

    இத்துடன் முன்புற ஃபெண்டரில் 'பிளாக்ஸ்டார்ம் பேட்ஜிங்' பின்புறம் டெயில்கேட்டில் 'குளோஸ்டர்' லெட்டரிங் இடம்பெற்று இருக்கிறது. டெயில்கேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிளாக்டு-அவுட் கிரில், ஹெக்சகோனல் மெஷ் பேட்டன் உள்ளது. இவைதவிர புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்மோக்டு டெயில்கேட்கள், விண்டோ மற்றும் ஃபாக் லேம்ப் சரவுண்ட்கள் வழங்கப்படுகிறது.

    உள்புறத்தில் டேஷ்போர்டு மற்றும் இருக்கை மேற்கவர்கள் பிளாக் ஃபினிஷ் மற்றும் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் டேஷ்போர்டு மற்றும் செண்டர் கன்சோல் பட்டன்கள், ஸ்டீரிங் வீல், மேட், டோர் பேட் உள்ளிட்டவைகளில் ரெட் பிராகாசமாக காட்சியளிக்கிறது.

    புதிய எம்ஜி குளோஸ்டர் பிளாக்ஸ்டார்ம் எடிஷன் பிஎஸ் 6 2 விதிகளுக்கு ஏற்ற 2.0 லிட்டர் டீசல் எஞ்சின், டர்போ மற்றும் டுவின் டர்போ ஆப்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இரண்டு எஞ்சின்களும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கொண்டுள்ளன. இந்திய சந்தையில் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 43 லட்சத்து 08 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • டீசல் டேங்கில் புகை வந்ததால், டிரைவர் காரை நிறுத்தினார்
    • கோத்தகிரி பகுதியிலும் வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது.

    அரவேனு,

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தட்டப்பள்ளம் அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி சென்ற மாருதி கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

    .

    கார் தட்டப்பள்ளம் அருகே வந்த போது வாகனத்தின் டீசல் டேங்கில் இருந்து புகை வந்துள்ளது. உடனே காரை டிரைவர் நிறுத்தியுள்ளார். காரில் தீ மளமளவென பரவி தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் போலீஸ் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் காரில் பற்றிய தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

    இதனைபோல, கோத்தகிரி நகர் பகுதியில் டானிங் டன் பகுதியில் சக்தி தியேட்டர் பின்புறம் பாரத் என்பவரது வீட்டில் மின்கசிவு காரணமாக தீ பற்றி எரிவதாக கோத்தகிரி போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலையடுத்து தீயணைப்பு துறையுனர் மின்கசிவு ஏற்பட்ட வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர் .

    இந்த 2 தீ விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பிஎம்டபிள்யூ Z4 ரோட்ஸ்டர் மாடலில் 3.0 லிட்டர், ஆறு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது.
    • பிஎம்டபிள்யூ Z4 வாங்குவோருக்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டி அறிவிப்பு.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது Z4 ரோட்ஸ்டர் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ Z4 ரோட்ஸ்டர் மாடலின் விலை ரூ. 89 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் Z4 சீரிசின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இதன் வெளிப்புறம் டுவீக் செய்யப்பட்ட எக்ஸ்டீரியர் டிசைன், உள்புறம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    புதிய பிஎம்டபிள்யூ Z4 மாடலை வாங்குவோருக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் வரம்பற்ற கிலோமீட்டர்கள் வாரண்டி கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் 2023 பிஎம்டபிள்யூ Z4 ரோட்ஸ்டர் மாடலில் புதிய கிட்னி கிரில், அளவில் பெரிய ஏர் இண்டேக்குகள், சாஃப்ட்-டாப் (மேற்கூரை திறந்து மூடும் வசதி), எல்இடி ஹெட்லேம்ப்-கள், புதிய ஏர் வெண்ட்கள், முன்புறம் வீல் ஆர்ச்கள் உள்ளன.

    இத்துடன் 19 இன்ச் அளவில் M லைட் அலாய் வீல்கள், M ஸ்போர்ட் பிரேக்குகள், கிரில் பகுதியில் செரியம் கிரே ஃபினிஷ், ORVM கேப்கள் மற்றும் எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. காரின் உள்புறம் ஆம்பியண்ட் லைட்டிங், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட சீட்கள், மெமரி ஃபன்ஷன், லெதர் மற்றும் அல்காண்ட்ரா இண்டீரியர் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பிஎம்டபிள்யூ லைவ் காக்பிட் ப்ரோஃபஷனல், பிஎம்டபிள்யூ ஒஎஸ் 7.0, கலர்டு ஹெச்யுடி, 408 வாட் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், டிரைவ் மோட்கள், அடாப்டிவ் M ஸ்போர்ட் சஸ்பென்ஷன், M ஸ்போர்ட் டிஃபரென்ஷியல் மற்றும் ஏராளமான டிரைவர் அசிஸ்டன்ஸ் அம்சங்கள் உள்ளன.

    மேம்பட்ட பிஎம்டபிள்யூ Z4 ரோட்ஸ்டர் மாடலில் 3.0 லிட்டர், ஆறு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 340 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும்.

    • ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் வழங்க வேண்டிய அம்சங்களை கச்சிதமாக வழங்கி இருக்கிறது.
    • இந்திய சந்தையின் அதிவேகமாக வளர்ந்து வரும் மைக்ரோ எஸ்யுவி பிரிவில் ஹூண்டாய் களமிறங்குகிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யுவி மாடல் ஜூலை 10 ஆம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஹூண்டாய் இந்தியா நிறுவனம் எக்ஸ்டர் மாடல் பற்றிய அதிக விவரங்களை ஏற்கனவே வழங்கிவிட்டது.

    அந்த வகையில், இந்த பிரிவில் எலெக்ட்ரிக் சன்ரூப், டேஷ்கேம் மற்றும் டூயல் கேமரா உள்ளிட்ட வசதிகளை கொண்ட முதல் கார் என்ற பெருமையை எக்ஸ்டர் பெற்று இருக்கிறது. புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. எக்ஸ்டர் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.

    "வெளிப்புறத்தை பற்றி சிந்திக்கும் போது, கேன்வாஸ் அனிலிமிடெட் தான், ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் வழங்க வேண்டிய அம்சங்களை கச்சிதமாக வழங்கி இருக்கிறோம். இதுவரை வெளியான புகைப்படங்களுக்கு அமோக வரேவற்பு கிடைத்ததை அடுத்து, ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் ஜூலை மாதம் 10 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்," என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி தருன் கார்க் தெரிவித்தார்.

    புதிய எக்ஸ்டர் மாடல் மூலம் இந்திய சந்தையின் அதிவேகமாக வளர்ந்து வரும் மைக்ரோ எஸ்யுவி பிரிவில் ஹூண்டாய் களமிறங்குகிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் டாடா பன்ச் மற்றும் சிட்ரோயன் C3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. எக்ஸ்டர் மாடலின் வெளிப்புறம் பாக்சி டிசைன், ஸ்லோபிங் பொனெட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • டாடா அல்ட்ரோஸ் i-CNG மாடலுக்கான முன்பதிவு துவங்கியது.
    • புதிய அல்ட்ரோஸ் i-CNG மாடலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அல்ட்ரோஸ் i-CNG மாடலை அறிமுகம் செய்தது. புதிய அல்ட்ரோஸ் i-CNG மாடல் விலை ரூ. 7 லட்சத்து 55 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. டாடா அல்ட்ரோஸ் i-CNG மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கார் இந்திய சந்தையில் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும்.

    புதிய டாடா அல்ட்ரோஸ் i-CNG மாடல் XE, XM+, XM+ (S), XZ, XZ+ (S) மற்றும் XZ+ O (S) போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் அவென்யூ வைட், ஆர்கேட் கிரே, டவுன்டவுன் ரெட் மற்றும் ஒபேரா புளூ போன்ற நிறங்களிலும், அவென்யூ வைட் மற்றும் பிளாக் ரூஃப், டவுன்டவுன் ரெட் மற்றும் பிளாக் ரூஃப், ஒபேரா புளூ மற்றும் பிளாக் ரூஃப் போன்ற டூயல் டோன் நிறங்களிலும் கிடைக்கிறது.

    புதிய அல்ட்ரோஸ் i-CNG மாடலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் மற்றும் CNG கிட் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 87 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 72 ஹெச்பி பவர், 103 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டாடா பன்ச் iCNG மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    ×