search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157148"

    • இலவச பஸ் பயணம் மூலம் 33 கோடியே 38 லட்சம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.
    • மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தால் அவர்களது பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் பேசினார்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மதுரை புதூர் பணிமனையில் டிரைவர், கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி ஓய்வறையை திறந்து வைத்தார். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வுகால பலன்கள் மற்றும் விபத்தில்லாமல் பணியாற்றிய டிரைவர், கண்டக்டர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    கிராமப்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1972-ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சி காலத்தில் அதிகளவில் அரசு பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. பஸ் வசதி இல்லாத பகுதிக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு பஸ்கள் விடப்பட்டன.

    தமிழகத்தில் கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் கீழ் இதுவரை 33 கோடியே 38 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ள னர். கட்டணமில்லா பஸ்சில் சராசரியாக ஒரு நாளைக்கு 5 லட்சத்து 56 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.

    மதுரைக்கு 251 மாசு இல்லாத பஸ்கள் மற்றும் 100 மின்சார பஸ்கள் கொள்முதல் செய்ய திட்டம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

    மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தால் அவர்களது பொருளாதார நிலை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் மது குடித்து வந்தார் இதனை மனைவி ராக்கம்மாள் (42) கண்டித்தார். இதில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த ராக்கம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கண்மாய்பட்டி மனோகரன் காலனியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி தேவதாய் (69). உடல்நல குறைவு காரணமாக விரக்தியில் இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் நடவடிக்கை.
    • ஜூன் 10-ந் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கு சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் விருது வழங்கப்படவுள்ளது.

    இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தமிழகத்தை சோ்ந்தவராகவும், 18வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணியாற்றியவராகவும், தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவையாற்றியிருக்க வேண்டும். ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூகசேவகா் மற்றும் தொண்டு நிறுவனம் இருந்தால் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் ஜூன் 10-ந்தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த 2 பெண்கள் குழந்தைகளுடன் மாயமாகினர்.
    • மகளுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டுச் சென்றார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் கற்பகம் நகரை சேர்ந்தவர் மாயண்டி. இவரது மகள் ரோஜா (வயது33). இவர் தனது கணவர் மணி என்பவருடன் 10 ஆண்டுகளாக கோயம்புத்தூரில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரோஜா சில மாதங்களுக்கு முன்பு மகளுடன் தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் அவர் பூ வியாபாரம் செய்து வந்தார்.

    இவரது தோழி காமராஜர் வடபகுதியை சேர்ந்த காயத்திரி(27) என்பவரும் பூ வியாபாரம் செய்து வந்தார். இவரும், கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த ரோஜா, மகளுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ரோஜா மாயமான, அதே நாளில் காயத்திரியும் தனது 2 குழந்தைகளுடன் மாயமாகி இருந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குழந்தைகளும் தன் எல்லா தேவைகளுக்கும் தாயையே சார்ந்து இருப்பார்கள்.
    • பெண்களுக்கு தனக்கென எதுவுமே இல்லையே என்ற வெறுமை உணர்வு தலை தூக்க துவங்கும்.

    அம்மா!! நமக்கு உயிர் கொடுத்தவள், ஊன் கொடுத்தவள், பிறந்த பின்பு ஊட்டச்சத்துடன் அன்பையும் ஊட்டி வளர்த்தவள். வாழ்க்கை முழுவதும் நம் சுமைகளை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தாங்க விரும்புபவள். அப்படிப்பட்ட அம்மாவிற்கும் வயதாகும். வயதாவதினால் ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்சனைகளும் தோன்றும். அவற்றை மகன் அல்லது மகள், அவர்களுக்கு நாம் திருப்பி செலுத்தக்கூடிய கடனாகவும் கடமையாகவும் அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு உதவுவது சிறந்தது. அந்த வகையில் 45, 50 வயதை கடக்கும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கீழ் வருமாறு பார்ப்போம்.

    மாதவிடாய் நிற்கும் காலம்

    இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு இயற்கையாய் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு குறைவதோ தாறுமாறாக சுரப்பதோ நிகழ்வது இயற்கையான ஒன்றே. அந்த நேரத்தில் மனநிலையிலும் உடல் நிலையிலும் பலவிதமான அறிகுறிகளும் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக உணர்வு ரீதியாக அந்த நேரத்தில் பெண்கள் எரிச்சல், கோபம், அழுகை, காரணம் இல்லாத சோர்வு, பிடிமானம் இல்லாத நிலை, வெறுப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள் இது மாதவிடாய் நின்று சில காலங்களில் சரியாகிவிடும் என்றாலும் அந்த நேரத்தில் அவர்களுக்கு மருத்துவ உதவியும் அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் அன்பும் அரவணைப்பும் இந்த பிரச்சனைகளை வெகுவாக குறைக்கும் என்பது உறுதி.

    உடலளவில் கை கால் மூட்டு வலிகள்,, தலைவலி முதுகு வலி, பசியின்மை, வயிறு உப்புசம், அதிக மாதவிடாயினால் ஏற்படும் உடல் சோர்வு, இரத்த சோகை போன்ற பல உடல் ரீதியான பிரச்சனைகளும் இந்த நேரத்தில் பெண்களுக்கு ஏற்படுகிறது. அவற்றை தகுந்த மருத்துவ ஆலோசனையின் மூலம் மருந்துகளோ, ஊட்டச்சத்து மாத்திரைகளோ கொடுத்து சரி செய்வது நல்லது.

    எலும்பு தேய்மானங்கள்

    45, 50 வயதுகளில் பெண்களுக்கு பொதுவாக எலும்பு தேய்மானத்தினால் கால் மூட்டு வலி ஏற்படுவது இயற்கையே. தனக்கென உடற்பயிற்சி செய்யாமல் ஊட்டச்சத்தில் கவனம் எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே ஏற்படுகிறது. எனவே மருத்துவ பரிசோதனையின் மூலம் எலும்பு மூட்டுகளில் தேய்மானம் இருக்கிறதா, எலும்பின் அடர்த்தி குறைந்து இருக்கிறதா,, உடல் பருமன் இருக்கிறதா ரத்த சர்க்கரை,, ரத்த அழுத்தம் ரத்த கொழுப்பு போன்றவை சரியாக இருக்கிறதா என்பதை எல்லாம் பரிசோதித்து அதில் பிரச்சனை இருக்குமானால் உடனடியான மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது. எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் கால்சியம் கொண்ட உணவுகளை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டியதும் கணவர் மகன் மகள்களின் கடமையாகும்.

    ரத்த சோகை

    பெரும்பாலான பெண்களுக்கு சிறு வயது முதலே மாதவிடாய் ஏற்படுவதினால் ரத்த சோகையும் இருக்கும். அதை பெரும்பாலான பெண்கள் கவனிப்பதில்லை. மாதவிடாய் நிற்கும் சமயத்தில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் பெண்களுக்கு ரத்த சோகை ஏற்படுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்ற புரதம், உடலுக்கு தேவையான சத்துக்களையும் பிராணவாயுவையும் எடுத்துச் செல்வது.

    இது சரியான அளவில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஒருவர் பலமாகவும் துடிப்பாகவும் இயங்க முடியும். உதிரப்போக்கு அதிகமாக இருப்பதினால் ஹீமோகுளோபின் அளவு உடலில் குறையலாம். இதுவே ரத்த சோகை. இந்நிலையில் உடலுக்கு தேவையான பிராணவாயுவும் ஊட்டச்சத்துக்களும் இரும்பு சத்தும் சரியான அளவில் செல்களுக்கு போகாத பட்சத்தில் அதீத சோர்வு, மூச்சு வாங்குதல், குறிப்பாக மாடிப்படி ஏறும் போது மூச்சு வாங்குதல், எந்த வேலையும் செய்ய பிடிக்காமை, அஜீரணம், பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    இதை பெரும்பாலான பெண்கள் கவனிப்பதில்லை. கடமை, வேலைப்பளு போன்ற விஷயத்தினால் இதை உதாசீனப்படுத்தி விடுகின்றனர். நாலாவட்டத்தில் ரத்த சோகை மேலும் பலவித நோய்களுக்கு வழி வகுக்கிறது. எனவே ரத்த சோகை இருக்கும் பட்சத்தில் பரிசோதனை செய்த பின்பு அவர்களுக்கு சரியான இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகள் சரியான விகிதத்தில் புரதம் போன்றவைகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மன அழுத்தம்

    பொதுவாக பெண்கள் படித்து வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களாக இருந்து, பின் திருமணமான பின்பு குழந்தைகளை வளர்க்கும் கடமைக்காக தனக்கென ஒரு தொழில் இல்லாமல் வருமானமும் இல்லாமல் வீட்டை பராமரித்து வருவது இயல்பு. குழந்தைகளும் தன் எல்லா தேவைகளுக்கும் தாயையே சார்ந்து இருப்பார்கள். பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் ஆகும் பொழுது குழந்தைகள் விடலை பருவத்தில் இருப்பார்கள். அவர்கள் அம்மாவிடம் செலவழிக்கும் நேரம் குறைந்துவிடும். சில குழந்தைகள் படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கோ வெளியூர்களுக்கோ சென்று விடுவதும் உண்டு.

    திருமணம் ஆகி குழந்தைகள் தனியே பிரிந்து சென்று விடுவதும் உண்டு. இதே காலகட்டத்தில் கணவன்மார்கள் தங்களுடைய தொழில் அல்லது வேலையில் முழு வீச்சில் இயங்கும் சூழல் இருப்பதால் அவர்களும் மனைவியுடன் போதுமான நேரத்தை செலவழிக்க முடியாமல் போய்விடுகிறது. அந்த நேரத்தில் பெண்களுக்கு தனக்கென எதுவுமே இல்லையே என்ற வெறுமை உணர்வு தலை தூக்க துவங்கும். இந்த நேரத்தில் மாதவிடாய் கோளாறுகளும் எலும்பு தேய்மானங்களும், இரத்த சோகை போன்ற ஊட்டச்சத்து குறைபாடு நோய்களும் சேர்ந்து கொண்டு அவர்களை பாடாய்படுத்தி விடுவதுண்டு.

    இந்த நேரத்தில் ஆண் பெண் குழந்தைகள் அம்மாவின் நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள அவர்களுக்கு பிடித்த ஒரு பொழுதுபோக்கு அல்லது வருமானம் ஈட்டக்கூடிய தொழில் அல்லது ஏதேனும் தொண்டு செய்வதற்கான வாய்ப்பு போன்ற ஏதாவது ஒன்றில் ஈடுபடுத்தி அவர்களின் மனநிலையை பலப்படுத்தி, உடல் நிலையையும் சரிபடுத்தி, தங்களுக்காக தியாகம் செய்த தன் அம்மாவின் நிலையை சரிப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.

    • தீக்குளித்து 2 பெண்கள் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி செம்பொன் நெருஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (வயது35). இவர் கந்தசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு தூத்துக் குடியில் தங்கி அங்குள்ள உப்பளத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் திருவிழாவுக்காக பஞ்சவர்ணம் தனது கிராமத்துக்கு வந்திருந்தார். சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பஞ்சவர்ணம் வாழ்க்கையில் விரக்தி யடைந்து தீக்குளித்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பஞ்சவர்ணம் இறந்தார்.

    விருதுநகர் தண்டிய னேந்தல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் அரியநாச்சி (வயது27). இவர் 2-வதாக அழகர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக அழகருக்கும், அரியநாச்சிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த அரியநாச்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள குப்பாம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன்(49), தொழிலாளி. இவரது மனைவி பொன்னுத்தாயி சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் என்பவருடன் சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த ஆனந்தன் விஷம் குடித்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த ஆனந்தன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
    • திருமண நிகச்சிக்கு என வீட்டை வாடகைக்கு எடுத்து, அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக புகார்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இதில் கன்னியாகுமரி பகுதியில் வீட்டில் வைத்து விபசாரம் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சுசீந்திரத்தில் ஒரு வீட்டில் இருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

    இதற்கிடையில் மார்த்தாண்டம் அருகே உள்ள பம்மம் ஈடன் கார்டன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடத்தப்படு வதாக புகார் வந்தது. மார்த்தாண்டம் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது, குழித்துறை பெரியவிளை பகுதியை சேர்ந்த சுனில் (வயது 45) என்பவர் வெளிமாநில அழகிகளை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் பறித்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்த 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    இதேபோல் ஆரல்வாய்மொழியில் திருமண நிகச்சிக்கு என வீட்டை வாடகைக்கு எடுத்து, அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தி ஒருவரை கைது செய்தனர். இதில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வர, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அங்கி ருந்த பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டனர்.

    • ராஜபாளையம் பச்சமடம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
    • இதில் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் பச்சமடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-வது நாளான நேற்று தண்டியல் தட்டு சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனை தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர், கருப்பசாமி, அம்மன் உள்ளிட்ட சாமிகளின் உருவங்களை பொறித்த முளைப்பாரிகள் முன் செல்ல குழந்தைகள், பெண் கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

    இளைஞர்கள் நடனத்துடன் மேள தாளம் முழங்க கோவிலில் தொடங்கிய ஊர்வலம் பொட்டல்பட்டி, தெற்கு வைத்தியநாதபுரம், சங்கர பாண்டியபுரம், அம்பலபுளி பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

    ஊர்வலத்தின் இடையே சாரல் மழை குறுக்கிட்டாலும், மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

    • நீதி கேட்டு போராடும் அந்த வீராங்கனைகளும் எங்களது மகள்களை போன்றவர்கள் தான்.
    • எதற்கும் கலங்க வேண்டாம், உங்களுக்கான நீதி நிச்சயம் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர்.

    அவரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், தில்லியில் நீதி கேட்கும் மகள்கள், தமிழகத்தில் இருந்து ஆதரவு தரும் தாய்மார்கள் என்ற மவுன அறவழி போராட்டம் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    தஞ்சை ரெயிலடியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 50 பெண்கள் கலந்து கொண்டு தங்களது கண்களில் கருப்புத்துணி கட்டி தில்லியில் போராடும் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில்:-

    ஒன்றுபட்ட இந்தியாவில் நீண்ட நாட்களாக நீதி கேட்டு போராடும் அந்த வீராங்கனைகளும் எங்களது மகள்களை போன்றவர்கள் தான்.

    போராடும் நாங்கள் பெறாத அந்த பிள்ளைகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு தாய்மார்கள் இருக்கிறார்கள், எதற்கும் கலங்க வேண்டாம், உங்களுக்கான நீதி நிச்சயம் வழங்கப்படும் என்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • பொருளாதாரத்தால் பின்தங்கிய பெண்களுக்கு தையல் எந்திரம், பாய், போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் சிங்கப்பூர் ஜீவ காருண்யா நண்பர்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், மற்றும் பொருளாதாரத்தால் பின்தங்கிய பெண்களுக்கு தையல் இயந்திரம், பாய், போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எழில்நம்பி தலைமை தாங்கினார். செம்பனார் கோவிலில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட கவுன்சிலர் துளசிரகா ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், கேசவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர், சிங்கப்பூர் ஜீவ காருண்யா மேலாளர் குடந்தை கண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்,

    இதில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ.வும் தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் கலந்து கொண்டு 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், தையல் இயந்திரம் வழங்கினார். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வைத்தியநாதன் நன்றி கூறினார்.

    • ஆண்களுக்கு இணையாக பெண்கள் உழைக்கின்றனர்.
    • கட்டிட வேலை மற்றும் சிறு சிறு வியாபாரங்களில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை

    உலகம் இயங்குவதற்கு தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. காட்டை வயலாக்கி நாட்டை வளமாக்கி வருபவர்கள் தொழிலாளர்கள். இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க தொழிலாளர்கள் படாதபாடு படுகிறார்கள்.

    கிராமங்களில் வேலை வாய்ப்பு இல்லாத சூழ்நிலை யில் நகரங்களில் பல்வேறு பணிகளை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற தொழில் நகரங்கள் முன்னேற்றத்திற்கு தொழி லாளர்கள் முதுகெலும்பாக உள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு மற்றும் அச்சகத் தொழிலில் சாதனை படைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் தொழிலாளர்கள். மதுரை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் பல்வேறு தொழில்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது ஒருவரின் வருமானம் போதாது என்பதால் பெண்களும் கட்டாயமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்கள் செய்யும் கடினமான வேலைகளையும் பெண்கள் செய்து வருகின்றனர்.

    கொளுத்தும் வெயிலில் கட்டிட வேலை மற்றும் சிறு சிறு வியாபாரங்களில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல குடும்பங்களில் ஆண்கள் மது குடித்துவிட்டு குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் பெண்கள் வீதிக்கு வந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தற்போது ராணுவத்தில் கூட பெண்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு தொழிலா ளர்களும் தங்கள் குடும்ப நலனுக்காக பல்வேறு துன்பங்களை தாங்கிக் கொண்டு தினம் தினம் உழைத்து வருகின்றனர்.

    மாற்றுத்திறனாளிகளும் நம்பிக்கையுடன் சுயதொழில் செய்து வருகின்றனர். பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம், கோவில் உள்ளிட்ட இடங்களில் மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருமானம் பெறுகின்றனர்.

    தொழிலாளர்களை நினைவு கூற வைக்கும் இந்த மே தின நாளில் அனைவரும் உழைத்து உயர உறுதிமொழி ஏற்போம்.

    • 35 வயதுக்கு உட்பட்டவர்கள், 36 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவின் கீழ் போட்டி நடந்தது.
    • 5 கி.மீ தூரத்திற்கான இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தணுவர்சன் அறக்கட்டளை சார்பில் பெண்கள் நலன் மற்றும் உடல் ஆரோக்கியம், பெண் கல்வி, பெண் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெண்களுக்கான நடைப்போட்டி இன்று தஞ்சையில் நடைபெற்றது.

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய நடைப்போட்டியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மேலவெளி ஒன்றிய கவுன்சிலர் பத்மசினி முரளிதரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    35 வயதுக்கு உட்பட்டவர்கள், 36 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவின் கீழ் போட்டி நடந்தது. 5 கி.மீ தூரத்திற்கான இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கமும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, டாக்டர் சாத்தப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, ரெட் கிராஸ் துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தணுவர்சன் அறக்கட்டளை நிறுவனர் உலகநாதன் செய்திருந்தார்.

    ×