search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    • 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    • 5 மத்திய மந்திரிகளும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    சத்தீஷ்கர் மாநிலத்தில் 2 நாட்கள் நடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரர்களின் அதிரடி வேட்டையில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநில முதல்-மந்திரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (7-ந்தேதி) ஆலோசனை நடத்துகிறார்.

    டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

    ஆந்திரா, பீகார், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், தெலுங்கானா, ஒடிசா, மராட்டியம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    5 மத்திய மந்திரிகளும் இதில் கலந்து கொள்கிறார்கள். துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மத்திய மாநில அரசுகளின் ஆயுதபடை உயர் போலீஸ் அதிகாரிகளும் இதில் பங்கேற்கிறார்கள்.

    கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி இந்த கூட்டம் நடைபெற்றது. நக்சலைட்டுகளின் பாதிப்பு 86 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக குறைந்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
    • தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடத்தப் படுகிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    கடந்த 18-ந்தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 2-ம் கட்டமாக நேற்று 26 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுபதிவு நடத்தப்பட்டது. 2 கட்ட வாக்குப்பதிவும் அமைதியாக நடந்து முடிந்தது.

    மீதமுள்ள தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    காஷ்மீரில் எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என பாரதீய ஜனதாகளம் இறங்கி உள்ளது. பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    3- ம் கட்டமாக வாக்குப் பதிவு நடக்கும் தொகுதிகளில் இன்று மத்திய மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். பல்வேறு இடங்களில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

    3-ம் கட்டமாக தேர்தல் நடக்கும் தொகுதிகளில் வருகிற 29-ந்தேதியுடன் பிரசாரம் முடிவடைய இருக்கிறது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி போட்டியிடுகிறது. மேலும் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட மாநில கட்சிகளும் களத்தில் உள்ளன.

    தேர்தலில் பதிவான ஓட்டுகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகின்றன. அன்று காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க போவது யார்? என்பது தெரிந்து விடும்.

    • காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.
    • பாகிஸ்தான் மந்திரியின் இந்தக் கருத்து காங்கிரஸ் கூட்டணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ராணுவ மந்திரியாக இருந்து வரும் கவாஜா ஆசிப் பாகிஸ்தான் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சிக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவது அந்தக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அரசும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கூட்டணியும் ஒரே பக்கத்தில் நிற்கின்றன என தெரிவித்தார். அவரது கருத்து காங்கிரஸ் கூட்டணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் கூட்டணிக்கு பாகிஸ்தான் ராணுவ மந்திரி ஆதரவு தெரிவிப்பதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு பாகிஸ்தான் ராணுவ மந்திரி ஆதரவு தெரிவித்திருப்பது மீண்டும் காங்கிரசை அம்பலப்படுத்தியுள்ளது.

    காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் ஒரே நோக்கம், ஒரே திட்டம் இருப்பதை அந்நாட்டு ராணுவ மந்திரியின் கருத்து மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

    ராகுல் கடந்த சில ஆண்டுகளாக தேசவிரோத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறார்.

    சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து ஆதாரம் கேட்டார். இந்திய ராணுவத்துக்கு எதிரான விஷயங்களைப் பேசினார். இப்படி ராகுலின் காங்கிரசும், பாகிஸ்தானும் எப்போதும் ஒரே மாதிரி செயல்படுகின்றன.

    ஆனால், மத்தியில் மோடி அரசு இருப்பதை காங்கிரசும், பாகிஸ்தானும் மறந்துவிட்டன. எங்கள் ஆட்சியில் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தோ அல்லது பயங்கரவாதமோ மீண்டும் வரவே வராது என உறுதியாக தெரிவித்தார்.

    • பா.ஜ.க. அரசு பதவி ஏற்ற முதல் 100 நாட்களில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை அரசு மிக விரைவில் வெளியிடும்.

    புதுடெல்லி:

    மோடி தலைமையிலான அரசு 3-வது முறையாக பதவி ஏற்று 100 நாட்கள் கடந்த நிலையில் அரசின் சாதனை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. அரசு பதவி ஏற்ற முதல் 100 நாட்களில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 60 கோடி இந்தியர்களுக்கு வீடுகள், கழிவறைகள், குடிநீர், மின்சாரம் ஆகியவை கிடைத்துள்ளன. நாட்டில் சொந்த வீடு இல்லாதவர்களே இருக்கக்கூடாது என்பதே எங்கள் இலக்கு. மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை அரசு மிக விரைவில் வெளியிடும்.

    மணிப்பூரில் நிரந்தர அமைதிக்காக மைதேயி மற்றும் குகி ஆகிய இரு சமூகத்தினரிடமும் அரசு பேசி வருகிறது. பிரச்சனைக்கு மூல காரணமான இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் பணியை தொடங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் அறிக்கையை உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார்.
    • மாணவர்களுக்கு ஆண்டுதோறும் போக்குவரத்து அலவன்சாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.

    ஸ்ரீநகர்:

    மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு என்பது வரலாறு. அது மீண்டும் வரவே வராது.

    ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தில் உள்ள முதிய பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

    உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2 சிலிண்டர் வழங்கப்படும்.

    3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.

    மாணவர்களுக்கு ஆண்டுதோறும் போக்குவரத்து அலவன்சாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

    காஷ்மீரில் பயங்கரவாதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

    மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் மாநில மக்களுக்கு கிடைக்க செய்வோம். சுற்றுலாவை வளர்க்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

    • ஐ.சி.சி.யின் புதிய தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • டிசம்பர் 1-ம் தேதி அவர் பொறுப்பு ஏற்க இருப்பதாக ஐ.சி.சி. அதிகாரபூர்வமாக தெரிவித்தது.

    கொல்கத்தா:

    ஐ.சி.சி. தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்கிளே இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

    இதையடுத்து ஐ.சி.சி.யின் தலைவர் பதவிக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம் இதற்கான கடைசி நாளாகும். பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை என்பதால், ஐ.சி.சி.யின் புதிய தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். டிசம்பர் 1-ம் தேதி அவர் பொறுப்பு ஏற்க இருப்பதாக ஐ.சி.சி. அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் ஐ.சி.சி. தலைவராக பதவி ஏற்கும் குறைந்த வயது நிர்வாகி என்ற பெருமையை ஜெய்ஷா பெற்றுள்ளார். அவருக்கு இந்திய வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஐ.சி.சி. தலைவராக ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, மம்தா பானர்ஜி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய உள்துறை மந்திரிக்கு வாழ்த்துகள். உங்கள் மகன் அரசியல்வாதி ஆகவில்லை. ஆனால், அதைவிட மிக முக்கிய பதவியான ஐ.சி.சி. தலைவராகி உள்ளார். உங்கள் மகன் மிகவும் சக்தி வாய்ந்தவராகிவிட்டார். அவரின் இந்த உயர்ந்த சாதனைக்கு உங்களை வாழ்த்துகிறேன், சபாஷ் என பதிவிட்டுள்ளார்.

    • தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் தீவிர ஆலோசனை.
    • தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்படுகிறது.

    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் செப்டம்பர் 18, 25-ந்தேதி, அக்டோபர் 1-ந்தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் தொடர்பாக பா.ஜனதாவின் மூத்த தலைவரான மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் அவரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இதில் தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, ராம் மாதவ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்படுகிறது.

    • மத்திய அரசு மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தது.
    • இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    புதுடெல்லி:

    மத்திய அரசு பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவுக்கு பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின்தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.

    இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றுப் பேசினர்.

    இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், கன்னோஜ் தொகுதி எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் மக்களவையில் இன்று பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், உங்கள் உரிமைகள் மற்றும் எங்கள் உரிமைகள் குறைக்கப்படுகின்றன. நீங்கள் ஜனநாயகத்தின் நீதிபதி என நான் சொல்லி இருந்தேன். உங்களின் சில உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், உங்களுக்காக நாங்கள் போராட வேண்டும் என கேள்விப்பட்டேன் என தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்டுப் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, இது தலைவரை அவமதிக்கும் செயலாகும். சபாநாயகரின் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு சொந்தமானது அல்ல. முழு சபைக்கும் சொந்தமானது. இதுபோல் இனிமேல் பேசாதீர்கள். நீங்கள் சபாநாயகரின் உரிமைகளைப் பாதுகாப்பவர் அல்ல என காட்டமாக பதிலடி கொடுத்தார்.

    இதைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவிடம் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, நீங்களும், சபையின் மற்ற உறுப்பினர்களும் தலைவர் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது. இது எனது எதிர்பார்ப்பு. சபாநாயகர் நாற்காலி குறித்து தனிப்பட்ட கருத்துக்கள் எதுவும் கூறக்கூடாது என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி 2029-லும் மீண்டும் வெற்றி பெறுவார் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
    • அப்போதும் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரும் என தெரிவித்தார்.

    சண்டிகர்:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சண்டிகரில் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    2029-ம் ஆண்டிலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி தயாராக இருக்க வேண்டும்.

    எதிர்க்கட்சியினர் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். 2029-ல் பிரதமர் ஆக மோடி மீண்டும் பதவி ஏற்பார்.

    கடந்த 3 தேர்தலிலும் காங்கிரசை விட பா.ஜ.க. கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை.

    எதிர்க்கட்சியினர் நிலையற்ற தன்மையை விரும்புகின்றனர். இதனால்தான் பா.ஜ.க. அரசு நீடிக்காது எனக் கூறிவருகின்றனர்.

    இந்த பதவிக்காலத்தை முழுமையாக பா.ஜ.க. நிறைவு செய்வதுடன், அடுத்து நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொறுப்பான எதிர்க்கட்சியாக எப்படி செயல்பட வேண்டும் என அவர்கள் பாடம் படிக்கவேண்டும் என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை கவர்னர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • வரும் 4-ந்தேதி மீண்டும் தமிழகம் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டின் கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு அவர் நாகலாந்து கவர்னராக இருந்தார். இவரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

    இதனால் இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், 4 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை கவர்னர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவர் வரும் 4-ந்தேதி மீண்டும் தமிழகம் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    இதனிடையே, தமிழக கவர்னராக ஆர்.என்.ரவியே தொடருவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • மாநிலங்களவையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.
    • மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கையை கேரளா புறம் தள்ளியது ஏன்?

    கேரள வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மண்ணில் புதையுண்ட பலரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். இதனால், உயிரிழப்பு எண்ணக்கை மேலும் உயர வாயப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில் மாநிலங்களவையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

    அதில், கனமழை குறித்து கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    குஜராத்தில் சூறாவளி ஏற்பட்டபோது அது குறித்து 3 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை வழங்கினோம். எச்சரிக்கையை குஜராத் அரசு அபாயத்தைப் புரிந்துக்கொண்டதால் ஒரு பசு கூட இறக்கவில்லை.

    இதுபோல், மழை மற்றும் நிலச்சரிவு குறித்து கேரளாவிற்கு 2 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கையை கேரளா புறம் தள்ளியது ஏன்?

    பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்களை முன்கூட்டியே வெளியேற்றாதது ஏன் ?

    முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தான், தேசிய பேரிடர் மீட்பு படை முன்கூட்டியே அங்கு சென்றது.

    மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 90 சதவீத தொகையை செலவழிப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

    இயற்கை பேரிடர் குறித்து 7 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை வழங்கும் முதன்மையான 4 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஜார்க்கண்டில் நடந்த பா.ஜக. செயற்குழு கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார்.
    • அப்போது பேசிய அவர், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர் என்றார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜக. செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:

    ஜார்க்கண்டில் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடியினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 81 சட்டசபை தொகுதிகளில் 52 தொகுதிகளில் ஏற்கனவே தாமரை மலர்ந்துள்ளது.

    ஜார்க்கண்டில் ஆட்சி அமைப்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. ஆட்சி அமைத்த பிறகு பழங்குடியின மக்களின் நிலங்கள், இட ஒதுக்கீடு மற்றும் மக்கள் தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்.

    பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்கமுடியாமல் ராகுல் உள்பட இந்தியா கூட்டணியினர் ஆணவத்தைக் காட்டி வருகின்றனர். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர்.

    கடந்த 2014, 2019, 2024-ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் மொத்தமாக காங்கிரஸ் வெற்றி பெற்றதை விட, இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தது. அதை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார்.

    ×