என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கும்பகோணம்"
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கவர தெருவை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 32). இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு இனிப்பு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் பாலகிருஷ்ணனுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு 7 மணியளவில் பாலகிருஷ்ணன் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது கும்பகோணம் உள்ளூர் வாய்க்கால் அருகே சென்ற போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் வந்தது. இதனால் அவர் வாய்க்காலில் அருகே சைக்கிளுடன் திடீரென தவறி விழுந்தார்.
இதில் சைக்கிளுடன் வாய்க்கால் தண்ணீரில் விழுந்த பாலகிருஷ்ணன் சிறிதுநேரத்தில் மூழ்கி பலியானார்.
இன்று காலையில் வாய்க்காலில் பாலகிருஷ்ணன் உடல் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி கும்பகோணம் மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வாய்க்காலில் மிதந்த பாலகிருஷ்ணன் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தண்ணீரில் மூழ்கி பலியான பாலகிருஷ்ணனுக்கு தீபலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கும்பகோணம்:
கும்பகோணம், நாகேஸ்வரன் வடக்குவீதியில் ஒரு நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு செக்யூரிட்டியாக அருண்ராஜ் (வயது 40) மற்றும் கலியமூர்த்தி (45) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நகைக்கடைக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 2 மர்ம நபர்கள் மது அருந்தி விட்டு அருண்ராஜ் மற்றும் கலியமூர்த்தியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் இவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து அருண்ராஜ் மற்றும் கலியமூர்த்தி ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.