search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 129339"

    செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமாரின் வீடியோ வைரலாகி வருகிறது. #Sivakumar
    சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது. அந்த வீடியோவில் ரசிகர் சிவகுமார் முன்பாக செல்போனை நீட்டியபடி செல்பி எடுக்க முயற்சிப்பதும், அதனை சிவக்குமார் தட்டிவிடும்படியாகவும் அந்த வீடியோ முடிகிறது.

    முன்னதாக மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுத்த இளைஞர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. 



    இதையடுத்து அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்திருந்த சிவக்குமார், அந்த இளைஞருக்கு புதிய செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Sivakumar

    ரசிகரின் செல்போனை சிவக்குமார் தட்டிவிடும் வீடியோ:

    மேகதாது அணை தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் என்று கர்நாடக மந்திரி சிவக்குமார் கூறியுள்ளார். #MekedatuDam #DKShivakumar

    சென்னை:

    மேகதாது அணை பிரச்சினை பற்றி “தந்தி டி.வி.” சார்பில் கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி சிவக்குமாருடன் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது.

    அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- கர்நாடகாவிற்கு மேகதாது அணை ஏன் தேவை?

    பதில்:- இது கர்நாடகாவுக்கு அல்ல. காவேரி இந்த நாட்டின் நதி. இந்த வருடம், கொடுக்க வேண்டிய 177 டி.எம்.சியை தாண்டி, கிட்டத்தட்ட 450 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளது. நாங்களும் பயன்படுத்த முடியவில்லை, தமிழ்நாடும் பயன்படுத்த முடியவில்லை. வீணாக கடலுக்கு சென்றுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு தான் அதிகம் உதவும். தமிழக விவசாயிகளை பாதுகாக்கவும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவும் தான் இந்த அணை கட்டப்படுகிறது.

    கேள்வி:- தற்போது கபினி, ஹாரங்கி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் காவிரி ஆணைய கட்டுப்பாட்டில் வருகிறது. நீங்கள் கட்டும் புதிய அணையும் அதன் கட்டுப்பாட்டில் வருமா?

    பதில்:- ஆம், நிச்சயமாக. அது அவர்கள் கடமை.

     


     

    கேள்வி:- கர்நாடகாவில் புதிய அணைகள் கட்டப்படும் போதெல்லாம், தமிழக விவசாயிகளுக்கு அச்சம் ஏற்படுகிறது. விவசாயம் செய்யப்படும் பகுதிகளின் பரப்பளவு குறைந்து விடும் என்ற கவலை எழுகிறது. இப்போது மறுபடியும் ஒரு புதிய அணை பற்றி நீங்கள் பேசும்போது, இந்த அச்சம் மீண்டும் ஏற்படுகிறது.

    பதில்:- இல்லை. இதை பற்றி கவலை தேவையில்லை. தமிழகத்திற்கு இந்த அணை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த அணை தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும்.

    கேள்வி:- மேகதாது திட்ட வரைவு நகலில், பெங்களூர் நகருக்கு 5 டி.எம்.சி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 14 டி.எம்.சி எடுத்து கொண்டிருக்கும்போது,  இந்த 5 டி.எம்.சி கூடுதலாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதா?

    பதில்:- இல்லை அப்படி எடுக்க முடியாது. ஏற்கனவே என்ன ஒதுக்கப்பட்டுள்ளதோ அதைதான் எடுக்க முடியும்.

    கேள்வி:- அப்போது இந்த 5 டி.எம்.சி என்பது ஒதுக்கப்பட்ட 14 டி.எம்.சி நீரின் ஒரு பகுதி தானே ?

    பதில்:- ஆம், இது அனுமதிக்கப்பட்ட நீரின் ஒரு பகுதி தான்.

    கேள்வி:- உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுங்கள் என்று சொன்னபோதெல்லாம் அதை கேட்க கூடாது என்று தீர்மானம் போட்டீர்கள்... இப்போது உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று சொல்வது முரணாக இல்லையா?

    பதில்:- ஆதரவு இல்லை. எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நினைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MekedatuDam #DKShivakumar

    மந்திரி டி.கே.சிவக்குமாரை எடியூரப்பா சந்தித்து பேசியது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Yeddvurappa #BJP

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வராவும் உள்ளனர்.

    நீர்பாசன துறை மந்திரியாக டி.கே. சிவக்குமார் உள்ளார். கர்நாடகத்தில் கூட்டணி அரசை உருவாக்குவதில் முக்கிய பங்கை வகித்தார்.

    இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரை முன்னாள் முதல் மந்திரியும், கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவருமான எடியூரப்பா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பின்னணியில் அரசியல் மாற்றம் இருப்பதாகவும், பாரதிய ஜனதாவில் வந்து சேரும்படி டி.கே.சிவக்குமாருக்கு, எடியூரப்பா அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

    முதல் மந்திரியாக உள்ள குமாரசாமி இருதய கோளாறால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு ஏற்கனவே 2 முறை அறுவை சிகிச்சை நடந்து உள்ளது. மீண்டும் அவர் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதாகவும், வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் அவர் முதல் மந்திரி பொறுப்பை, காங்கிரசை சேர்ந்த துணை முதல் மந்திரி பரமேஸ்வராவிடம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


     

    முதல் மந்திரி பொறுப்பை சகோதரர் ரேவண்ணா அல்லது மனைவி அனிதா குமாரசாமி ஆகிய இருவரில் ஒருவரிடம் ஒப்படைக்க குமாரசாமி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மந்திரி டி.கே.சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் எடியூரப்பா திடீரென்று டி.கே.சிவக்குமாரை சந்தித்தது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குமாரசாமி சிகிச்சைக்கு செல்ல முதல் மந்திரி பொறுப்பை ஒப்படைக்க ஆதரவு கொடுக்க கூடாது என்று டி.கே. சிவக்குமாரை எடியூரப்பா வலியுறுத்தியதாகவும், இவர்கள் இருவரும் சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்க போவதாகவும் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. #Yeddvurappa #BJP

    மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகர் சிவக்குமாருடன் செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை தட்டிவிட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். #Sivakumar
    மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. எனவே அந்த சம்பவத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில், நடிகர் சிவகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த வி‌ஷயம். பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள், பாதுகாப்பிற்கு வரும் ஆட்களைக்கூட ஓரம் தள்ளிவிட்டு 20, 25 பேர் செல்பி எடுத்து நடக்கக்கூட முடியாமல் செய்வது நியாயமா? தங்களை புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீர்களா? வி.ஐ.பி. என்றால், தான் சொல்லும்படிதான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?



    ஆயிரக்கணக்கான மக்களுடன் புகைப்படம் எடுத்துள்ளேன். நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப் போல் நானும் ஒரு மனிதன் தான். எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு பின்பற்றுங்கள் என்று கூறவில்லை. அடுத்தவர்களை எந்த அளவுக்கு துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பாருங்கள்.

    இவ்வாறு நடிகர் சிவகுமார் கூறியுள்ளார். #Sivakumar

    குட்கா ஊழல் வழக்கில் கைதான சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #GutkhaScam #CBI
    சென்னை:

    தமிழகத்தின் மிக முக்கிய ஊழல் வழக்குகளில் ஒன்றாக பார்க்கப்படும் குட்கா வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர்கள் உட்பட பல முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுவதால் இந்த வழக்கு மிகத்தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கூறப்படும் இந்த வழக்கில் மாதவராவ் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கடந்த மாதம் சிபிஐ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்.



    இதையடுத்து, சமீபத்தில் ஜாமீன் கோரி சிவக்குமார் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு குறித்து சிபிஐ தனது பதிலை சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. அதில் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், சிபிஐ தரப்பு பதிலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBI
    குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். #GutkhaScam
    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தனர். இதற்காக பெரும் தொகை அமைச்சர், டி.ஜி.பி., போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்டோருக்கு லஞ்சம் வழங்கப்பட்டது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

    இதன் அடிப்படையில், சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த செப்டம்பர் 5ந்தேதி குட்கா கிடங்கு உரிமையாளர்கள், மாதவராவ், சீனிவாசராவ், பங்குதாரர் உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ணன் பாண்டியன் ஆகியோரை முதலில் கைது செய்தனர்.

    பின்னர், கடந்த மாதம் 25-ந்தேதி, திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளரும், முன்னால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியுமான சிவக்குமாரை கைது செய்தனர். பின்னர், இவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த நிலையில், விசாரணை முடிந்து, இன்று காலையில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில், சிவக்குமாரை ஆஜர்படுத்தினர். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். #GutkhaScam
    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித் மற்றும் ஷாலினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #AjithKumar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித், நடிகை ஷாலினி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #AjithKumar

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Suriya #Sivakumar

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் காஞ்சி வீரன்சை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிப்பதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சிவக்குமார் கூறியுள்ளார். #PattaiyaKelappu #CSG #TNPL2018
    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதல் வெற்றியை பெற்றது.

    திண்டுக்கல்லை அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்த 22-வது ‘லீக்’ ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக்க சூப்பர் கில்லீஸ் அணி முதலில் ‘பேட்டிங்’ செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் கார்த்திக் 44 பந்தில் 76 ரன்னும் (11 பவுண்டரி, 2 சிக்சர்), முருகன் அஸ்வின் 17 பந்தில் 34 ரன்னும் (4 சிக்சர்), கேப்டன் கோபிநாத் 22 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பாபா அபராஜித் 2 விக்கெட்டும், சுனில்சாம், அவுசிக் சீனிவாஸ், திவாகர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய காஞ்சி வீரன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற முதல் வெற்றியாகும்.

    காஞ்சி வீரன்ஸ் அணியில் அதிக பட்சமாக அருண் 19 பந்தில் 27 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), விஷால் வைத்யா 18 பந்தில் 24 ரன்னும் (4 பவுண்டரி), திவாகர் 24 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    முருகன் அஸ்வின், சம்ருத்பட், சிவக்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஹரீஷ் குமார் 1 விக்கெட்டும் எடுத்தனர்

    இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சாளர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    5 ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு முதல் வெற்றியை பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை ஏதாவது ஒரு பகுதியில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வந்தோம். இந்த ஆட்டத்தில் 3 பகுதிகளிலும் (பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்) நன்றாக செயல்பட்டோம். இதனால் வெற்றியை பெற முடிந்தது.

    மிடில் ஓவர்களில் தடுமாறுவது கிரிக்கெட்டில் நடக்க கூடியதுதான். சில நேரங்களில் விக்கெட்டை நிலைநிறுத்த சில ஓவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். என்றாலும் இறுதியில் நல்ல ஸ்கோரை குவித்து விட்டோம்.

    ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்ததால் காஞ்சி வீரன்ஸ் அணியினர் நன்றாக ஆடி நெருங்கி வந்தனர். எங்களது பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சி வீரன்ஸ் சந்தித்த 5-வது தோல்வியாகும். தோல்வி குறித்து அந்த அணி வீரர் சுனில் சாம் கூறும்போது, “இந்த ஆடுகளத்தில் 181 ரன்னை சேஸ் செய்ய இயலும். ஆனால் தொடகத்தில் ரன் அவுட் முறையில் விக்கெட்டுகளை இழந்தோம். இது பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் எங்களது பீல்டிங் தரத்தையும் மேம்படுத்த வேண்டும்” என்றார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை வருகிற 3-ந் தேதி எதிர்கொள்கிறது.

    காஞ்சி வீரன்ஸ் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை 5-ந் தேதி சந்திக்கிறது.

    இன்று நடைபெறும் 23-வது ‘லீக்’ ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டூட்டி பேட்ரியாட்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளியும், திருச்சி வாரியர்ஸ் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளியும் பெற்றுள்ளன. ‘பிளேஆப்’ வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும். #PattaiyaKelappu #CSG #TNPL2018
    ×