search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷித்கான்"

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் உலக சாதனை படைத்துள்ளார். #RashidKhan #WorldRecord
    டேராடூன்:

    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. முகமது நபி 81 ரன்கள் (36 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார். அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் ‘ஹாட்ரிக்’ உள்பட தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியதும் அடங்கும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. #RashidKhan #WorldRecord

    அறிமுக டெஸ்டில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் மாயாஜால பந்து வீச்சாளர் ரஷித் கான். #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் கடந்த 14-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இரண்டே நாட்களில் முடிந்த இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா தவான் (107), முரளி விஜய் (105) ஆகியோரின் சதத்தால் இந்தியா 474 ரன்கள் குவித்தது.

    டி20 போட்டியில் மாயாஜால பந்து வீச்சால் முன்னணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்திய ரஷித் கானால் ‘ரெட்’ பந்தில் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. அவருடன் முஜீப் உர் ரஹ்மானும் திணறினார். முஜீப் உர் ரஹ்மான் அறிமுக போட்டியில் 15 ஓவரில் 75 ரன்கள் விட்டுக்கொடுது ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். இதில் ஒரு மெய்டன் ஓவர்தான்.



    ரஷித் கான் 34.5 ஓவர்கள் வீசி 154 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். 35 ஓவரில் இரண்டு மெய்டன் ஓவர்கள் மட்டுமே வீசினார்.

    அறிமுக போட்டியில் 154 ரன்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம் அறிமுக போட்டியிலேயே அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 1952-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வீரர் அமிர் எலாஹி 134 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிக ரன்களாக இருந்தது.
    சில தினங்களுக்கு முன்பு எங்கள் நாட்டில் (ஆப்கானிஸ்தான்) நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிப்பதாக ஐதராபாத் பவுலர் ரஷித்கான் கூறியுள்ளார். #RashidKhan
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் ஐதராபாத் நிர்ணயித்த 175 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் 8.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன்களுடன் நல்ல நிலையிலேயே இருந்தது. ஆனால் நிதிஷ் ராணா (22 ரன்) ரன்-அவுட் ஆனதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. மேலும் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 3 முன்னணி விக்கெட்டுகளை சாய்க்க, கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுக்க முடிந்தது.

    10 பந்தில் 34 ரன், 3 விக்கெட், 2 கேட்ச் என்று ஆல்-ரவுண்டராக ஜொலித்து அட்டகாசப்படுத்திய ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் 19 வயதான ரஷித்கான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். அவர் கூறுகையில், ‘சில தினங்களுக்கு முன்பு எங்கள் நாட்டில் (ஆப்கானிஸ்தான்) கிரிக்கெட் ஆட்டம் நடந்து கொண்டிருந்த போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிக்கிறேன். என்னிடம் இருந்து இத்தகைய செயல்பாடு மிகவும் தேவையாக இருந்தது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறைகளிலும் 100 சதவீத திறமையை வெளிப்படுத்தவே எப்போதும் முயற்சிக்கிறேன். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் எனது பங்களிப்பை அளிக்க முடியாமல் போகும் போது, அடுத்து எனது கவனம் பீல்டிங் மீது இருக்கும்’ என்றார்.  #RashidKhan

    ×