search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 112200"

    • 3 BHK படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளனர்.
    • 3 BHK படத்தில் சரத் குமார், தேவயாணி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    சித்தார்த்தின் 40 ஆவது திரைப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கி வருகிறார். 

    இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத் குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். அம்ரித் ராம்நாத் கடந்தாண்டு வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சித்தார்த்தின் 40-வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 3 BHK என்று பெயரிட்டுள்ளனர். இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
    • இப்படத்தில் சரத் குமார், தேவயாணி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    சித்தார்த்தின் 40 ஆவது திரைப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தலைப்பு இன்னும் வைக்கப்படவில்லை.

    இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் சரத் குமார், தேவயாணி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். அம்ரித் ராம்நாத் கடந்தாண்டு வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சித்தார்த்தின் 40-வது படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'டெஸ்ட் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.

    'விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரிக்கும் படம் 'TEST. இப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் மணிரத்னத்தின் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில்  இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இத்திரைப்படம் நேரடி ஓடிடி ரிலீஸாகவுள்ளது. இத்திரைப்படம் விரைவில் நெட்பிளிகஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. டீசரின் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் சித்தார்த் - திரிஷா இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Siddharth #Trisha
    சித்தார்த்தும், திரிஷாவும் ஆய்த எழுத்து, அரண்மனை-2, தெலுங்கில் நூஒஸ்தனன்டே ஆகிய 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ள நிலையில் தற்போது, இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மீண்டும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மேன் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து இருந்தனர்.

    இந்த படம் கடந்த வருடம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. ராதிகா ஆப்தே, தபு நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. கடந்த 3-ந் தேதி சீனாவில் இந்த படம் ‘பியானே பிளேயர்’ என்ற பெயரில் வெளியாகி 13 நாட்களில் ரூ.200 கோடி வரை வசூல் குவித்து சாதனை நிகழ்த்தியது.



    இந்த நிலையில், அந்தாதுன் படத்தை தமிழில் தயாரிக்கும் வேலைகள் தொடங்கி உள்ளன. ஆயுஷ்மேன் கதாபாத்திரத்தில் சித்தார்த், ராதிகா ஆப்தே வேடத்தில் திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #Andhadhun #Siddharth #Trisha

    சித்தார்த் - ஜிவி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை பட போஸ்டரை இயக்குனர் ஷங்கர் வெளியிட இருக்கிறார். #SivappuManjalPachai
    ‘பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் குமார், லிஜோமோள் உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். 



    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் 17-4-2019 (நாளை) வெளியிட இருக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார். #SivappuManjalPachai #Siddharth #GVPrakashKumar #Lijomol
    சசி இயக்கத்தில் சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அக்காள்-தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. #SivappuManjalPachai
    ‘பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் குமார், லிஜோமோள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குநர் சசி மற்றும் நடிகர் சித்தார்த்துடன் பயணித்தது இனிமையானது. அருமையான கதை. என்று குறிப்பிட்டுள்ளார்.


    அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். ஒரு முக்கிய வேடத்தில் காஷ்மீரா அறிமுகமாக, இன்னொரு முக்கிய வேடத்தில் மதுசூதனன் நடிக்கிறார்.

    அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார். படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். #SivappuManjalPachai #Siddharth #GVPrakashKumar #Lijomol

    பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். #PollachiRapists
    பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி, பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்த சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

    நடிகர் சித்தார்த் ட்விட்டரில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ’பொள்ளாச்சி சம்பவத்தால் அதிர்ச்சியாகியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். அப்போதுதான் அவர்களால் முன்வந்து பேசி, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கை வலுப்படுத்த முடியும்.

    சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களை வேட்டையாடுவது, வளர்ந்து வரும் அச்சுறுத்தல். அதற்கு எதிராக நாம் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.


    நடிகரும் இசைஅமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், தனது ட்விட்டரில் ‘இந்தக் கொடிய அரக்கர்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
    மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து, பாலியல் கொடுமைப்படுத்திய வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்களைப் பொது வெளியில் நடமாட விடுவது சமூகத்திற்குப் பேராபத்து” என தெரிவித்துள்ளார்.

    பாடகி சின்மயி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சிறுமி ஒருவரைப் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது போன்ற வீடியோக்களை பகிராதீர்கள். கோபத்தை வரவழைக்க இதுபோன்ற வீடியோக்களை பரப்ப வேண்டாம். கோரமான மக்கள்” என பதிவிட்டுள்ளார். 

    இயக்குனர் கரு.பழனியப்பன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், ‘பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரம்கெட்டு நிற்கிறார்கள். பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் கொடுத்து ஆண் பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை’’ என்று கூறியுள்ளார்.


    பா.ஜனதாவில் உள்ள காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘‘பொள்ளாச்சி சம்பவத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன்புணர்வு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளி எந்த அரசியல் பின்னணியை சேர்ந்தவராய் இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.

    பாலியல் குற்றங்கள் அரசியல் அல்ல. இது மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. இதை அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தாதீர்கள். இது தனிநபரின் குற்றம். அந்த நபருக்கு உட்சபட்ச தண்டனை கொடுங்கள். குற்றத்தை ஆதரித்தவர்களையும் தண்டியுங்கள்’’.


    சைக்கோ போல சிந்திக்கும் ஆண்களால் தான் பாலியல் குற்றங்கள் நடக்கிறது. எந்த பணக்கார வீட்டு பையனோ, அரசியல் பின்னணி இருப்பவனோ, குடிகாரனோ, ஏழையோ, யாருக்கும் இந்த குற்றத்தில் இருந்து மன்னிப்பு இருக்கக் கூடாது. எந்த சாக்கும் சொல்லப்படக்கூடாது. இது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.

    தண்டனை இரண்டு மடங்கு அளிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளின் பெயரைப் பயன்படுத்தியோ, வேறெந்த வழியிலும் அவர்கள் தப்பித்து விடக்கூடாது. பொறுத்தது போதும். காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக என எல்லா ஆட்சியிலும் நீண்ட காலமாக பாலியல் குற்றங்கள் நடந்து வருகிறன. எந்த அரசியல் கட்சி என்பதல்ல. ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் சட்டம் மிகவும் கண்டிப்பாக இருந்தது என்பதுதான் உண்மை.

    ஏனென்றால் அவர் ஒரு பெண். பெண்மை எப்போதுமே மதிப்பு வாய்ந்தது. ஆண்கள் பதவி, பணம், காதல், ஆதரவு என எதை வைத்தும் பொய் சொல்லி அப்பாவிப் பெண்களை ஏமாற்றலாம். இந்த சம்பவத்தில் நிறைய அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது’.

    இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். #PollachiRapists #PollachiAssaultCase

    அருவம் படத்தின் வேலைகளில் இருக்கும் சித்தார்த் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் பற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #Siddharth
    புதுமுக இயக்குனர் சாய் சேகர் இயக்கும் அருவம் படத்தில் தற்போது சித்தார்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கேத்தரீன் தெரசா நடிக்கிறார். திகில் படமாக விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 

    சமீபத்தில் இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ‘நானே சுட்டேன்’ என்ற படத்தில் சித்தார்த் நடிக்க உள்ளதாக சில வதந்திகள் வெளியாகின. இதே படத்தில் சிம்புவும், சரத்குமாரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர் என்ற வதந்தி காட்டுத்தீ போல பரவி எப்படியோ சித்தார்த்தையே எட்டிவிட்டது. 



    இந்த வதந்திக்கு விளக்கமளித்துள்ள சித்தார்த், “இந்த செய்தி எல்லாம் யாரோ வடை சுட்ட மாதிரி இருக்கிறது. ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ? இதுல நெருங்கிய வட்டம் வேற. நடத்துங்க” என்று கூறியுள்ளார்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சமீபத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பை துவங்க படக்குழு முடிவு செய்துள்ளது. #Indian2 #KamalHaasan
    கமல்ஹாசன் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்தார். இந்த படம் கமல்-‌ஷங்கர் இணைந்து பணியாற்றிய ஒரே படம்.

    தற்போது 22 ஆண்டுகள் கழித்து இதே கூட்டணியில் ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது. இந்த படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இந்த படத்துக்காக தனது அரசியல் பணிகளுக்கு இடையே உடல் அமைப்பை மாற்றி அமைத்துள்ளார் கமல். பொள்ளாச்சி, சென்னை, ஐதராபாத் மற்றும் பல வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்து இருந்தது. எழுத்தாளர்கள் ஜெய மோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’க்கான வசனங்களை எழுதி உள்ளனர்.



    படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் தீவிரமாக நடந்த நிலையில், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெளியூர் செல்லலாம் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இந்தியன் 2 வேடத்துக்கான மேக்கப்பில் ‌ஷங்கருக்கும் கமலுக்கும் திருப்தி ஏற்படாததால் தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

    அந்த காட்சிகளை பார்த்த ‌ஷங்கரும், கமலும் மேக்கப் இயல்பாகவும், பொருத்தமாகவும் இல்லை என்று கருதி இருக்கிறார்கள். எனவே படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் ‌ஷங்கர் அங்குள்ள மேக்கப் கலைஞர்களுடன் ஆலோசனை நடத்தி மேக்கப் டெஸ்ட் எடுக்க உள்ளார். மேக்கப் பொருந்திய பின்னர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். #Indian2 #KamalHaasan #Shankar #KajalAggarwal

    ‘இந்தியன் 2’ படத்தில் ஆர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், படத்தில் இளைஞர் படை மூலம் கமல்ஹாசன் ஊழலை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #Arya
    கமல்ஹாசன் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

    ‌ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்த படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அக்‌‌ஷய் குமார், அஜய் தேவ்கன், சிம்பு, சித்தார்த், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின.

    இதுதொடர்பாக படக்குழுவினர் தெரிவித்த கருத்து:- ‘இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஒரு வேடமா, 2 வேடங்களா என்று இப்போது கூற முடியாது. ஆனால் கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் சேனாதிபதி வேடத்தில் நடிக்கும் காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகின்றன.



    முதல் பாகத்தில் வெளிநாட்டுக்கு சென்ற அவர் 22 ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியா லஞ்சம், ஊழலில் சிக்கி தவிப்பதால் மீண்டும் தாய்நாட்டிற்கே வந்து இளைஞர்கள் படையை திரட்டி ஊழல், லஞ்சத்துக்கு எதிராக போராடுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. சிம்புவுக்குப் பதிலாக சித்தார்த் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆர்யாவிடம் பேசி உள்ளோம்.

    படப்பிடிப்புக்கான தேதிகளை முழுமையாக முடிவு செய்த பின் தான், யாரெல்லாம் நடிக்க உள்ளார்கள் என்பதை முறையாக அறிவிப்போம். வில்லனாக இந்தி சினிமாவின் முன்னணி நடிகரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது”

    இவ்வாறு கூறினர்.

    கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவண குமார் இணைந்து ‘இந்தியன் 2’ படத்துக்கான வசனங்களை எழுதி உள்ளனர். #Indian2 #KamalHaasan #KajalAggarwal #Siddharth #Arya 

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு தைவான் செல்லவிருக்கிறது. #Indian2 #KamalHaasan #Siddharth
    கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்-2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.

    படத்தில், கமல்ஹாசனின் மகனாக சித்தார்த் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ‘இந்தியன்’ முதல் பாகத்தில் சேனாதிபதி, சந்துரு என இரண்டு கதாபாத்திரங்களில் கமல்ஹாசன் நடித்த நிலையில், சந்துரு கதாபாத்திரத்தின் மகனாக சித்தார்த் வருவதாக கூறுகிறார்கள்.



    காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட மூத்த நடிகர்களும் படக்குழுவில் இணைந்திருக்கிறார்கள். அபிஷேக் பச்சன் வில்லனாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. 

    அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு உலகின் 8 நாடுகளில் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய காட்சிகளுக்காக படக்குழு தைவான் செல்லவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Indian2 #KamalHaasan #Siddharth #KajalAggarwal

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் கமலுடன் இணைகிறார். #Indian2 #KamalHaasan #DelhiGanesh
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியன் படத்தில் தொடர்ச்சியாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். நெடுமுடி வேணு, சித்தார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    அபிஷேக் பச்சன் வில்லனாக ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



    கமல் நடித்த நாயகன், அவ்வை சண்முகி, புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்களில் டெல்லி கணேஷ் நடித்திருக்கும் நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமல் படத்தில் டெல்லி கணேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    லைகா புரொக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Indian2 #KamalHaasan #DelhiGanesh

    ×