search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார்"

    • மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார்.
    • புகழ் பெற்ற சோசியலிசவாதியும் பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமார் அவர்களுக்கு..

    மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனதா தள கட்சித் தலைவரும் பீகார் முதல்வருமான நிதஷ் குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தத்தொடங்கியுள்னர்.

    கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார். இந்நிலையில் இன்று நடக்க ஜனதா தள கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை ஒட்டி  சோட்டு சிங் என்ற முக்கிய தலைவர் இந்த போஸ்டர்கள், கட் அவுட்கள் மூலம் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இவை கட்சி அலுவலகம் உட்பட வழிநெடுக வைக்கப்பட்டுள்ளன.

    அதில் நிதிஷ் குமாருடன் கட்சியை சேர்ந்த தலைவர்கள் படங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் புகழ் பெற்ற சோசியலிசவாதியும் பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமார் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவர் மாநிலத்துக்கு செய்தவையும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் புடைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறன.

    • 2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் வகுத்துக்கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்
    • பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது.

    அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலமான பீகாரில் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி அன்று ஜென் சுராஜ் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். பீகாரில் ஆளும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மீது கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வரும் பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

     

    2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் அமைத்து குஜராத் முதல்வராக இருந்த மோடி இந்தியப் பிரதமர் ஆவதில் முக்கிய பங்காற்றிய பிரசாந்த் கிஷோர் தற்போது மோடி குறித்து கூறியுள்ள கருத்துக்கள் கவனம் பெற்று வருகிறது.

    கட்சி தொடக்க விழாவின்போது அவர் பேசியதாவது, குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடி நிறைய செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில்தான் அவரது பேச்சுகளைக் கேட்டு என்னைப் போன்றவர்கள் பாஜகவுக்கு வாக்களித்தோம்.

     

    ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது. பீகார் மக்கள் வேலை வேறு மாநிலங்களுக்குப் படையெடுத்துச் செல்கின்றனர். குஜராத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களித்தால் பீகார் மக்கள் எப்படி வளர்ச்சி பெற முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    • 'ஜிவித்புத்ரிகா' என்பது பீகாரில் உள்ள மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும்.
    • பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக விரதம் அனுசரித்து நதி அல்லது குளத்தில் புனித நீராடுவார்கள்.

    பீகாரில் ஜீவித்புத்ரிகா என்ற புனித நீராடும் பண்டிகையில் 37 குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பீகார் மாநிலத்தின் 15 மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் பக்தர்கள் புனித நீராடும் போது இந்த துயர சம்பவம் நடந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    'ஜிவித்புத்ரிகா' என்பது பீகாரில் உள்ள மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். இதில் பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக விரதம் அனுசரித்து தங்கள் குழந்தைகளுடன் நதி அல்லது குளத்தில் புனித நீராடுவார்கள்.

    பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகல்பூரில் கங்கை கரையோரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
    • கங்கையை ஒட்டிய சுமார் 12 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பீகார் மாநிலம் பாகல்பூரில் தொடர் மழை காரணமாக கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாகல்பூரில் கங்கை கரையோரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

    கங்கையை ஒட்டிய சுமார் 12 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாட்னா, பாகல்பூர், பக்சர், போஜ்பூர், சரண், வைஷாலி, சமஸ்திபூர், பெகுசராய், லக்கிசராய், கதிஹார், ககாரியா மற்றும் முங்கர் ஆகிய 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    தாழ்வான பகுதிகளில் உள்ள 13.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 376 கிராம பஞ்சாயத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன, பல குடியிருப்பாளர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஆற்றின் கரையோரத்தில் உள்ள வீடுகள் கங்கையில் மூழ்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

    • தொட்டியில் காட்சிக்கு மிதக்கவிடப்பட்டிருந்த மீன்களுக்கு நிதிஷ் குமார் உணவளித்து மகிழ்ந்தார்.
    • நாங்கள் மீன் பிடிக்கத்தான் வந்தோம் நிதிஷ் குமாரை பார்க்க வரவில்லை

    பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் கண்காட்சி ஒன்றை தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்து சென்ற அடுத்த கணமே தொட்டியில் இருந்த மீன்களை மக்கள் திருடிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. நேற்றைய தினம் சஹர்சா பகுதியில் மா விஸ்ஹாரி கோவில் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அமரப்பூரில் அரசு சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    அப்போது பையோப்ளோக் [biofloc] தொட்டியில் காட்சிக்கு மிதக்கவிடப்பட்டிருந்த மீன்களுக்கு உணவளித்து மகிழ்ந்த நிதிஷ் குமார் கண்காட்சியில் இருந்து கிளம்பினார். அவர் கிளம்பிய கண நேரத்திலேயே தொட்டியில் இருந்த மீன்களை பிடிக்க மக்கள் தள்ளுமுள்ளுப்பட்டுள்ளனர்.

    காவலுக்கு யாரும் இல்லாமல் மீன்களை மக்கள் அள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நாங்கள் மீன் பிடிக்கத்தான் வந்தோம் நிதிஷ் குமாரை பார்க்க வரவில்லை என்று இளைஞர்கள் கத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    • 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் போலீசில் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
    • ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

    பீகார் மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

    மனோஜ் சிங் என்பவர் மித்லேஷ் மாஜி என்ற 18 வயது இளைஞரிடம் 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் போலீசில் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

    இதனை உண்மை என நம்பிய இளைஞர் தனது தாய்மாமாவிடம் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை கடனாக வாங்கி மனோஜ் சிங்கிடம் கொடுத்துள்ளார்.

    பின்னர் மனோஜ் சிங் அவரது உடல் அளவீடுகளை எடுத்து அடுத்த நாள் அவரை அழைத்து, ஐபிஎஸ் உடை, பேட்ஜ் மற்றும் துப்பாக்கியை கொடுத்துள்ளார்.

    இதனையடுத்து ஐபிஎஸ் அதிகாரி ஆன மகிழ்ச்சியில் ஐபிஎஸ் சீருடையை அணிந்து கொண்டு இடுப்பில் துப்பாக்கியுடன் தாயை சந்தித்து ஆசி பெற சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மனோஜ் சிங்கை சந்தித்து மீதமுள்ள பணத்தை கொடுக்க அவர் புறப்பட்டுள்ளார். அப்போது அவரைப் பார்க்க கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 'போலி ஐபிஎஸ் அதிகாரி'யை கைது செய்தனர். கைது செய்யப்படும்போது 'நான் ஒரு ஐபிஎஸ்' என்று அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    பின்னர் அந்த இளைஞரிடம் இருந்து சீருடை மற்றும் துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இந்தக் கொடூரச் சம்பவம், பீகாரில் நடக்கும் காட்டு தர்பாருக்கு மற்றுமொரு சான்று
    • இந்த விவகாரம் தொடர்பாக 15 பேர் கைது

    பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள 2 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக நில தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், நிலத்தகராறு தொடர்பாக மஞ்ஹி தோலா எனப்படும் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் உள்ள 21 குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பீகார் மாநிலத்தில் இத்தகைய அராஜகங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் நடக்கின்றன. இந்தக் கொடூரச் சம்பவம், பீகாரில் நடக்கும் காட்டு தர்பாருக்கு மற்றுமொரு சான்று என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

    தலித்துகளின் குடிசை எரிக்கப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • விராட் கோலி எனது கேப்டன்சியில் விளையாடினார். இதைப் பற்றி யாராவது பேசியதுண்டா?
    • எலும்பு முறிவு காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நான் விலகி நேரிட்டது.

    பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி எனது கேப்டன்சியின் கீழ் கிரிக்கெட் விளையாடியுள்ளார் என்று பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ஜீ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தேஜஸ்வி யாதவ் இவ்வாறு பேசியுள்ளார்.

    ஜீ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய தேஜஸ்வி யாதவ், "நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தேன். அதைப் பற்றி யாரும் பேசவில்லை. விராட் கோலி எனது கேப்டன்சியில் விளையாடினார். இதைப் பற்றி யாராவது பேசியதுண்டா? நான் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறேன். எனது இரண்டு தசைநார்களில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நான் விலகி நேரிட்டது" என்று தெரிவித்தார்.

    தேஜஸ்வி யாதவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விராட் கோலியும் தேஜஸ்வி யாதவும் ஜூனியர் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக பல ஆட்டங்களில் ஒன்றாக விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வயல் வெளியில் நிற்கும் ரெயிலை சூழ்ந்து அதிசயமான கிராமவாசிகள் வேடிக்கை பார்த்துள்ளார்.
    • ரெயிலைக் கொண்டு வயலை உழுது பண்படுத்தும் அளவுக்கு நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கிண்டலடித்து வருகிறனர்.

    பீகாரில் வயல்வெளிக்குள் சம்பந்தமே இல்லாமல் கட்டப்பட்ட பாலம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பீகாரின் கயா மாவட்டத்தில் ரகுநாத்பூர் கிராமத்தின் அருகே உள்ள வயல்வெளியில் ரெயில் இன்ஜின் பெட்டி கடந்த வெள்ளிக்கிழமை மாலை எந்த சம்பந்தமும் இல்லாமல் தனிமரமாகக் நின்று கொண்டிருத்தத்தை பார்த்து கிராமவாசிகள் திகைத்துள்ளனர்.

    வயல் வெளியில் நிற்கும் ரெயிலை சூழ்ந்து அதிசயமான நிகழ்வாக கிராமவாசிகள் வேடிக்கை பார்த்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் ரெயிலைக் கொண்டு வயலை உழுது பண்படுத்தும் அளவுக்கு நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கிண்டலடித்து வருகிறனர்.

    வாசிர்கஞ் ரெயில் நிலையத்தில் இருந்து எந்த பெட்டிகளும் இல்லாமல் வந்த ரெயில் இன்ஜின் கயா நோக்கி செல்லும் வழியில் தடம் புரண்டு வயல்வெளிக்குள் சென்றுள்ளதாக பின்னர் தெரிவியவந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ரெயில் அதிகாரிகள் தரப்பில் இதுகுறித்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை.

    • வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று கட்சியை தொடங்க உள்ளார் பிரசாந்த் கிஷோர்
    • மற்ற அரசியல்வாதிகளை போல் பெண்களின் ஒட்டு கிடைக்காதே என்று பயந்து மதுவிலக்குக்கு எதிராக பேச தயங்க மாட்டேன்.

    2014 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பிடிக்க முக்கிய பங்காற்றியவர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். அதுவரை குஜராத் மக்களிடையேயும், அரசியல் களத்தில் மட்டுமே பிரபலமாக இருந்த மோடியை தேசிய பிம்பமாக கட்டமைத்ததில் பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பங்கு உண்டு. தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிராண்டிகிங் ஆலோசனைகளுக்காக பிரசாந்த் கிசோரை நாடத் தொடங்கின.

    பீகார் மாநிலத்தவரான பிரசாந்த் கிஷோர் தற்போது அங்கு ஜன ஜன் சுராஜ் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அடுத்த வருடம் நடக்க உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் களம் காண உள்ளார். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று கட்சியை தொடங்க உள்ள பிரசாந்த் கிஷோர், தாங்கள் ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்துக்குள் அம்மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்வோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டத்திலிருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் செயல்பாடுகளையும், பிராதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் பிரசாந்த் கிஷோர்.

    இந்த நிலையில்தான் தற்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரசாந்த் கிஷோர், மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கு முதல்வர் நிதிஷ் குமாரின் கண்துடைப்பு வேலை. தற்போதுள்ள மதுவிலக்கால் எந்த பிரயோஜனமும் இல்லை. சட்டவிரோதமாக மதுபானங்கள் ஹோம் டெலிவரி செய்யப்படுகிறன. அதேவேளை மதுவிலக்கால் மாநிலத்துக்கு ரூ.20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சட்டவிரோத மது விற்பனையால் பயனடைகின்றனர். நான் நடைமுறைக்கு பயனளிக்கும் அரசியலை நம்புபவன். மற்ற அரசியல்வாதிகளை போல் பெண்களின் ஒட்டு கிடைக்காதே என்று பயந்து மதுவிலக்குக்கு எதிராக பேச தயங்க மாட்டேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 1 மணி நேரத்தில் மதுவிலக்கு துடைத்தெறியப்படும் என்று தெரிவித்துள்ளார். 2016 ஏப்ரல் 1 முதல் பீகாரில் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது சகாக்கள் இருவரும் நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
    • நர்ஸ் உபயோகித்த பிளேடு, ரத்தம் தோய்ந்த துணிகள், மூன்று கைபேசிகள், அரை பாட்டில் சாராயம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

    கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு பலர் போராடி வரும் அதே வேளையில் பீகாரில் உள்ள மருவத்துவமனையில் நர்ஸை டாக்டர் உட்பட மூவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

    பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு, ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது சகாக்கள் இருவரும் சேர்ந்து குடிபோதையில் அங்கு பணியாற்றி வந்த நர்ஸ் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய நர்ஸ், டாக்டர் சஞ்சய் குமாரின் பிறப்பு உறுப்பை கையில் கிடைத்த பிளேடால் அறுத்துவிட்டுள்ளார்.

     

    அதன்பின் மருத்துவமனையில் இருந்து தப்பித்த நர்ஸ், அருகில் இருந்த இடத்தில் மறைந்துகொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விரைத்த போலீஸ் நர்ஸை மீட்டு டாக்டர் சஞ்சய் குமார் உட்பட அந்த மூவரையும் கைது செய்துள்ளனர். நர்ஸை பலாத்காரம் செய்ய முடுவெடுத்ததும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை டாகடர் அணைத்துள்ளார் என்றும் சம்பவ இடத்தில் இருந்து நர்ஸ் உபயோகித்த பிளேடு, ரத்தம் தோய்ந்த  துணிகள், மூன்று  கைபேசிகள், அரை பாட்டில் சாராயம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போலி மருத்துவர் தலைமறைவானார்.
    • இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பித்தப்பை கல்லை அகற்றுவது எப்படி என யூடியூபைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

    தங்களது ஒப்புதலின்றி 'மருத்துவர்' அஜித்குமார் பூரி அறுவை சிகிச்சையைத் தொடங்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போலி மருத்துவர் தலைமறைவானார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    ×