என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சரண்"
- மதுரையை சேர்ந்த கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார்.
- தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார்.
மதுரை, அக்.16-
மதுரை வில்லாபுரம் பகுதியில் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அப்பள கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். லோகநாதனுக்கு கார்த்திக் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் கூட்டுக்குடித்தனமாக வசித்து வந்தனர்.
சமீபத்தில் கார்த்திக் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார். இதற்காக அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் பணம் வசூலித்து வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருந்தார். அதனை தீபாவளி பண்டிகையின் பணம் வசூலித்தவர்களுக்கு பலகாரம், பரிசுப்பொருள் மற்றும் வட்டியுடன் கொடுக்க திட்டமிட்டு இருந்தார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார். தீபாவளிக்கு முன்னதாக அந்த பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் அவர் உறுதியளித்து இருந்தார். ஆனால் தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது வரை லோகநாதன் ரூ.3 லட்சத்தை திருப்பித்தரவில்லை.
இதுதொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு அந்த பணத்தை கார்த்திக் தந்தையிடம் கேட்டபோது மீண்டும் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தந்தை என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லோகநாதனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
பின்னர் அவர் நேராக அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கொலையுண்ட லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கார்த்திக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீபாவளி சீட்டு பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பித்தராத தந்தையை மகனே கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆந்திராவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாலதி. இருவரும் சென்னை கொட்டிவாக்கத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை பணிகள் செய்து வந்தனர்.
அப்போது அப்பகுதி ஆட்டோ டிரைவர் ஜெகன் என்பவருடன் மாலதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதை அறிந்த நாகராஜ் கடந்த 1-ந் தேதி தனது நண்பர் மாரிமுத்துவுடன் சேர்ந்து கள் விருந்து எனக்கூறி ஜெகனை மாமல்லபுரம் அடுத்த தெற்குபட்டு சவுக்கு தோப்புக்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இந்த வழக்கில் மாமல்லபுரம் போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர். ஆந்திராவுக்கு தப்பி ஓடிய நாகராஜை போலீசார் தேடி வந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
On sets of Dir.Charan’s movie “Market Raj’s MBBS” with Aarav and good friend Bette pic.twitter.com/JmHDRB6VZz
— Radikaa Sarathkumar (@realradikaa) March 20, 2019
சிரியாவில் அரசுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரும் அதே வேளையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு காலூன்றி கடும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.
அதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் களம் இறங்கியது. அதன் மூலம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்து அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டன.
எனினும் டெயிர் எஸ் ஜோர் மாகாணத்தில் உள்ள பாகுஸ் கிராமம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதையும் அவர்களிடம் இருந்து மீட்க அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து, சிரிய ராணுவம் அங்கு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், முழுக்கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டதால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு ராணுவத்திடம் சரணடைந்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரிய ராணுவ வீரர்களிடம் சரணடைந்தனர்.
பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை ரத்து செய்யக்கோரி வார இறுதிநாட்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மஞ்சள் அங்கி போராட்டம் என அழைக்கப்படும் இந்த போராடம் 2 வாரங்களாக ஓய்ந்திருந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் வலுப்பெற்றது.
மேலும் கடந்த வார போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்ததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அந்நாட்டின் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியனான கிறிஸ்டோப் பெட்டிங்கர் என்பவர் போலீசாரை சரமாரியாக குத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில், தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து, கிறிஸ்டோப் பெட்டிங்கர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். #France #YellowVest #Protest #ChristopheDettinger #Boxer
காட்பாடி:
காட்பாடி சேனூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 57). சிக்கன் கடை வைத்திருந்தார். இவரது மனைவி நிர்மலா. மகன்கள் சுரேஷ், பிரபு (19).
கடந்த மாதம் நிர்மலா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து கண்ணனுக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
அந்த பெண்ணுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு கண்ணன் வீட்டில் இருந்தார். அப்போது பிரபு கள்ளக்காதல் விவகாரம் குறித்து கேட்டுள்ளார்.
இதனால் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபு கத்தியால் கண்ணண் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயமடைந்த கண்ணன் துடிதுடித்து இறந்தார்.
கொலை செய்ய பயன்படுத்திய கத்தியுடன் பிரபு விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்றார். தந்தையை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் கூறி சரணடைந்தார்.
விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குபதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.கள்ளக்காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தந்தையை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Officially #MarketRajaMBBS directed by Saran Sir is my next one..we have commenced shooting..Blessed and humbled to be part of a Bigger project.Thanks Chennai Times. https://t.co/kobstJSA1H
— Arav (@Nafeez_Arav) January 4, 2019
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள மதகளிர் மாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது48). தொழிலாளி.
இவரது தம்பி வீரமுத்துக்கும் அதே கிராமத்தை சேர்ந்த செல்வரங்கம் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் வீரமுத்துவிடம், முன்விரோதம் காரணமாக செல்வரங்கம், அவரது மகன்கள் செல்வமணி, ஞானகுரு மற்றும் உறவினர்கள் சுரேஷ், கல்யாணசுந்தரம், ராஜேஷ் ஆகிய 6 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அவர்கள் வீரமுத்துவை தாக்கினர். இதை பார்த்த கொளஞ்சி ஏன் என் தம்பி வீரமுத்துவை தாக்குகிறீர்கள் என தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த செல்வரங்கம் உள்பட 6 பேரும் சேர்ந்து கொளஞ்சியை உருட்டுகட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் செல்வரங்கம் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் கொலையாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொலை வழக்கில் தொடர்புடைய ராஜேசை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மற்ற 5 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று செல்வரங்கம், செல்வமணி, ஞானகுரு, சுரேஷ் ஆகிய 4 பேர் சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதையடுத்து நீதிபதி உத்தரவுப்படி அவர்கள் 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் கல்யாணசுந்தரத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் வீரன் சுந்தரலிங்கம் நகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது 28). பிரபல ரவுடியான இவர் கடந்த 23-ந்தேதி இரவில் ஏரல் அருகே மேலமங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டு பகுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் வினோத் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகில் தாமிரபரணி ஆற்றில், நேற்று முன்தினம் குரும்பூர் அருகே கல்லாம்பாறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (22) உடலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக மிதந்தார். இவரும், வினோத்தும் நண்பர்கள்.
வினோத் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து ராமச்சந்திரனும் மாயமானது தெரியவந்தது. வினோத்தும், ராமச்சந்திரனும் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டது, போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து இரட்டைக்கொலை வழக்காக போலீசார் மாற்றி பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வினோத், ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கொலை செய்ததாக, மேலமங்களகுறிச்சி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த துரைமுத்து என்ற ராஜா (26), அவருடைய மைத்துனர் முத்துமுருகன் (26) ஆகிய 2 பேரும் ஸ்ரீவைகுண்டம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் சரண் அடைந்தனர்.
2 பேரையும் அவர் ஏரல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து ராஜா, முத்துமுருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைதான ராஜா, முத்துமுருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இரட்டைக்கொலைக்கு பயன்படுத்திய 2 அரிவாள்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இரட்டை கொலையில் தலைமறைவான தனுஷ்கோடி, கண்ணன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த கண்ணன், தனுஷ்கோடி ஆகிய இரண்டு பேரும் நேற்று மாலை ஏரல் சிறுதொண்டநல்லூர் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்தனர். இதையடுத்து சரணடைந்த 2 பேரையும் ஏரல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சுமார் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் காப்பகத்தின் பொறுப்பாளர் பிரஜேஷ் தாக்கூர் உள்பட 17 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு பீகார் மாநில சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்திரசேகர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் மஞ்சு வர்மா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
இதைதொடர்ந்து, தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவின் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது அனுமதி பெறாத கள்ளத்துப்பாக்கிகள் மஞ்சு சர்மா வீட்டில் கிடைத்தன. இதன் அடிப்படையில் கணவன் - மனைவி இருவருக்கும் எதிராக ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்தனர். இவ்விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்த தொடங்கியது.
இதனால் தன்னை இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க பாட்னா உயர் நீதிமன்றத்தில் மஞ்சு வர்மா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து போலீசார் கையில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா கடந்த மாதம் பேகுசராய் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எம்.பி.லோக்குர், எஸ்.அப்துல் நசீர் மற்றும் தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தது.
பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி ரஜேஷ் தாக்கூர் சிறைக்குள் கைபேசி வைத்திருந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் குறிப்பிட்டதையடுத்து, பிரஜேஷ் தாக்கூரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு நிறைந்த பாட்டியாலா சிறைக்கு உடனடியாக மாற்றுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய தவறியதற்காக பீகார் அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் இன்னும் மஞ்சு வர்மாவை கைது செய்யாதது ஏன்? என பீகார் மாநில அரசின் சார்பில் வாதாடும் வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினர்.
சுப்ரீம் கோர்ட்டின் கெடுபிடியால் கலக்கமடைந்துள்ள பீகார் போலீசார் மஞ்சு வர்மாவை கைது செய்ய வாரண்ட் வழங்குமாறு உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதைதொடர்ந்து கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மஞ்சு சர்மாவை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சுமார் 3 மாதங்களாக போலீசார் கண்ணில் சிக்காமல் இருந்த மஞ்சு வர்மா பேகுசராய் மாவட்டத்தில் உள்ள மஞ்ஹவுல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். யாரும் தன்னை அடையாளம் காணாமல் இருப்பதற்காக முகத்தை துப்பட்டாவால் மறைத்தவாறு நீதிமன்றத்துக்குள் நுழைந்த அவர் நீதிபதியிடம் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். #ManjuVerma #ManjuVermasurrenders
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்