search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடிதம்"

    • மாவட்ட நீதிபதியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • இனி எனக்கு வாழ விருப்பம் இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களில் நான் நடை பிணமாக மாற்றப்பட்டேன்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் பெண் சிவில் நீதிபதி ஒருவர் சக மாவட்ட நீதிபதி மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அவர் பாரபங்கியில் பதவியில் இருந்தபோது மாவட்ட நீதிபதியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி கடந்த ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நிர்வாக நீதிபதியிடம் புகார் அளித்தும், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது உத்தரபிரதேசத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு அவர் எழுதிய 2 பக்க கடிதத்தில் "இனி எனக்கு வாழ விருப்பம் இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களில் நான் நடை பிணமாக மாற்றப்பட்டேன். இந்த ஆன்மாவும் உயிரும் இல்லாத உடலைச் சுமந்து செல்வதில் எந்த நோக்கமும் இல்லை. என் வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லை. எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் முடிக்க தயவுசெய்து என்னை அனுமதிக்கவும், "என்று குறிப்பிட்டுள்ளார்.

    விசாரணை நிலுவையில் இருந்தபோது மாவட்ட நீதிபதியை இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது என்றும் அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், தான் கடந்த காலத்தில் தற்கொலைக்கு முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தலைமை நீதிபதிக்கு பெண் நீதிபதி எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவர் மாவட்ட நீதிபதிக்கு எதிராக எழுப்பிய பாலியல் புகார்கள் மீதான விசாரணையின் நிலை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்ற நிர்வாகத்திடம் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அறிக்கை கேட்டுள்ளார்.

    • வேலை காரணமாக சிதம்பரம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • அந்த கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்து கேசவமூர்த்தியிடம் விசாரிக்குமாறு கூறினர்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த மணல்மேடு மகாராஜபு ரத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (வயது 27).

    இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில், இவர் கடந்த 11-ந்தேதி தீபாவளி பண்டி கைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊரான சோழபுரத்திற்கு வந்துள்ளார்.

    பின்னர், அவர் கடந்த 13-ந்தேதி வேலை காரணமாக சிதம்பரம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    ஆனால் வீடு திரும்பவில்லை.

    இதைதொடர்ந்து, அசோக் ராஜின் பாட்டி பத்மினி சோழபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்ராஜை தேடி வந்தனர்.

    பின்னர் நடத்திய விசாரணையில் அசோக்ராஜ் கடைசியாக சோழபுரம் மணல்மேடு கீழத்தெருவை சேர்ந்த சித்த வைத்தியரான கேசவமூர்த்தி (47) என்பவர் வீட்டுக்கு சென்றது தெரியவந்தது.

    இதைதொடர்ந்து, கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர், கடந்த 13-ந் தேதி இரவு அசோக்ராஜ் தன்னை வீட்டில் வந்து பார்த்ததாகவும், தனக்கு ஆண்மை குறைவு உள்ளதால் வாழ பிடிக்கவில்லை எனக்கூறி அழுததாகவும் தெரிவித்தார்.

    இதனால் தஞ்சையில் உள்ள தனக்கு தெரிந்த டாக்டரை அணுகுமாறு அவரிடம்கூறி அனுப்பி வைத்ததாக போலீசாரிடம் கூறினார்.

    கடந்த 16-ந் தேதி அசோக்ராஜ் வீட்டிற்கு அவர் எழுதியதாக ஒரு கடிதம் வந்துள்ளது.

    அந்த கடிதத்தில், தனக்கு ஆண்மை குறைவு இருப்பதாகவும், இதனால் இந்த உலகத்தில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என எழுதப்பட்டிருந்தது.

    ஆனால் அந்த கடிதத்தில் இருந்த கையெழுத்து அசோக் ராஜின் கையழுத்து இல்லை என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். மேலும் அந்த கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்து கேசவமூர்த்தியிடம் விசாரிக்குமாறு கூறினர்.

    இதையடுத்து கடந்த 17-ந் தேதி கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் போலீசாரிடம் கூறுகையில், சம்பவத்தன்று நான், அசோக் ராஜிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது, அவருக்கு ஆண்மை வீரியத்திற்காக சித்த மருந்தை கொடுத்தேன்.

    அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

    இதனால் அவர் இறந்து விட்டதாக நினைத்து அசோக்ராஜின் தலையை துண்டித்தேன். பின்னர் உடல் மற்றும் தலையை எரித்து தனது வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்தேன் என்றார்.

    இதையடுத்து திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் போலீசார் நேற்று கேசவமூர்த்தியை அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு அவர் அசோக்ராஜை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார்.

    இதை தொடர்ந்து கோட்டாட்சியர் பூர்ணிமா முன்னிலையில் அசோக்ராஜ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

    உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

    கேசவமூர்த்தியை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக 2019-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.
    • பயங்கரவாதி நஞ்கர்ஹர் மாகாணத்திலோ அல்லது குனார் மாகாணத்திலோ பதுங்கி இருக்கலாம்.

    ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் கடந்த 1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போலி ஆவணங்கள் மூலம் காஷ்மீரின் ஸ்ரீநகருக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    1999-ம் ஆண்டு இந்தியாவின் பயணிகள் விமானத்தை கடத்தி சென்ற பயங்கரவாதிகள், சிறையில் இருந்த மசூத் அசார் உள்பட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க நிபந்தனைகள் விதித்தனர்.

    இதையடுத்து மசூத் அசார் உள்பட 3 பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் 2001-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார். இந்தியா, சர்வதேச நாடுகள் அழுத்தத்தால் மசூர் அசாரை பாகிஸ்தான் அரசு வீட்டு காவலில் வைத்தது.

    ஆனால் அவரை லாகூர் கோர்ட்டு விடுவித்தது. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக 2019-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.

    அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி யது. ஆனால் மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை. குடும்பத்துடன் காணாமல் போய் விட்டார். அவரை தேடி வருகிறோம் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

    இந்த நிலையில் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும், அவரை கண்டுபிடித்து கைது செய்யுமாறு ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச் சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருக்கிறார் என்று நம்புகிறோம். அவர் நஞ்கர்ஹர் மாகாணத்திலோ அல்லது குனார் மாகாணத்திலோ பதுங்கி இருக்கலாம். அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து கைது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் கூறும்போது, "உலகளாவிய பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்பு குழுவின் ஆணைக்கு இணங்கவும், அந்த அமைப்பின் சாம்பல் நிற பட்டியலில் இருந்து வெளியேறவும் பாகிஸ்தானின் முயற்சியாக இது இருக்கலாம்" என்றனர்.

    டெல்லியில் 23-ம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
    புதுடெல்லி:

    மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தொடங்கியுள்ளார்.

    முதல் கட்டமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் அனைவருக்கும் சோனியா ஒரு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

    அந்த கடிதத்தில், டெல்லியில் வரும் 23-ம் தேதி ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்கால அரசியல் பற்றி அதில் விவாதிக்கப்பட உள்ளது. அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.



    இந்நிலையில், டெல்லியில் 23-ம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

    இதேபோல், பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 23-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் டெல்லியில் ஒன்றுதிரட்ட சோனியா அழைப்பு விடுத்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். #MekedatuDam #PMModi #TNCM
    சென்னை:

    பெங்களூர் மக்களின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டினால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும்  நீரின் அளவு குறையும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.
     
    இந்த எதிர்ப்புக்கு மத்தியில் மேகதாது அணை தொடர்பான செயல்திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி தமிழகம் மற்றும் கேரள அரசுகளை மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த செப்டம்பரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் எந்தவிதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது. கர்நாடக அரசின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால் மேகதாது விஷயத்தில் கர்நாடகாவின் அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, மேகதாது அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு அளித்துள்ளது.



    இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க நீர்வள ஆணையத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.

    மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கையை திருப்பி அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்த நிலையில் முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Mekadatu #PMModi #TNCM
    வியாசர்பாடி அருகே தற்கொலை செய்து கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்து சென்ற கணவனை மீட்டு தர கோரி மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    பெரம்பூர்:

    வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்தவர் இம்ஜியாஸ். இவருடைய மனைவி ஆயிஷா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்த இம்ஜியாஸ் சில மாதங்களாக பணம் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

    சமீபத்தில் ஊர் திரும்பிய இம்ஜியாசுக்கும் அவருடைய மனைவி ஆயிஷாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இம்ஜியாஸ், ‘நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. என்னை மன்னித்துவிடு. இனி வரமாட்டேன். இறந்து விடுவேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்று விட்டார்.

    இதுகுறித்து வியாசர்பாடி போலீசில் ஆயிஷா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இம்ஜியாசை தேடி வருகிறார்கள். #tamilnews
    மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சிறப்பு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #MekedatuDam #PMModi #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளித்தன.

    இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.



    அந்த கடிதத்தில், தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியில் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சிறப்பு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமருக்கு அனுப்பப்பட்டது. #MekedatuDam #PMModi #EdappadiPalaniswami 
    ஊட்டியில் செயல்பட்டு வரும் மத்திய உருளைக்கிழங்கு மையத்தை மூடக்கூடாது என பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். #PMModi #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

    உதகையில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மத்திய அரசு மூடக்கூடாது. மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். 



    1957-ல் தொடங்கப்பட்ட இந்த மையம் கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை மூடினால் உதகை,கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

    தென்மாநில விவசாயிகள் பஞ்சாப்பில் உள்ள ஆய்வு மையத்தை நாடும் சூழ்நிலை உருவாகும். வட மாநில ஆய்வு மையம் உருவாக்கும் ரகங்கள் இங்கு பயன்தராது. எனவே, ஆய்வு மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #PMModi #TNCM #EdappadiPalaniswami
    மேகதாது விவகாரத்தை பேசி தீர்க்க கர்நாடக அரசு விரும்புவதாக கூறி தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். #MekedatuDam #KarnatakaMinister #EdappadiPalaniswami
    பெங்களூரு:

    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதி தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.



    இதற்கிடையே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்துவருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டம் தொடங்கியதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் ஒன்றை கொண்டுவர இருக்கிறார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக தீர்வு காண விரும்புவதாக கூறியுள்ளார்.

    ‘மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசும் தமிழக மக்களும் நினைப்பது வேறு, ஆனால் உண்மை நிலை வேறு. மேகதாது பிரச்சினையை பேசி தீர்க்கலாம். சுமுகமாக பேசி தீர்க்கவே கர்நாடக அரசு விரும்புகிறது’ என்று அமைச்சர் சிவக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #MekedatuDam #KarnatakaMinister #EdappadiPalaniswami
    நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தத்துவ அறிஞர் எரிக் குட்னிட் என்பவருக்கு எழுதிய கடிதம் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது. #AlbertEinstein
    நியூயார்க்:

    ஜெர்மனியை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நோபல் பரிசு பெற்றவர். இவர் கடந்த 1954-ம் ஆண்டு தனது 74-வது வயதில் ஜெர்மனியை சேர்ந்த தத்துவ அறிஞர் எரிக் குட்கின்ட் என்பவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

    அவர் தான் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. அறிவியலுக்கும், மதத்துக்கும் இடையேயான விவாத பொருளை மையமாக கொண்டது.

    எனவே, இதை ‘கடவுள் கடிதம்’ என அழைக்கின்றனர். அந்த கடிதம் நியூயார்க்கின் கிறிஸ்டி மையத்தில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

    இக்கடிதத்தை வாங்க ஆன்லைனில் கடும் போட்டி நிலவியது. முடிவில் அது ரூ.20 கோடிக்கு ஏலம் போனது.

    அந்த கடிதம் ரூ.7 கோடி முதல் ரூ.7 கோடியே 70 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரூ.20 கோடிக்கு ஏலம் போனதாக கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஐன்ஸ்டீன் கடிதங்கள் ஏலம் விட்டது இது முதன் முறையல்ல. ஏற்கனவே அவரது கடிதங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. #AlbertEinstein
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு கடிதம் எழுதி உள்ளார். #DonaldTrump #ImranKhan #Afghanistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

    அதில், ‘ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நமது இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் உங்கள்(இம்ரான்கான்) பிராந்தியத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள இதற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும். எனவே தலீபான்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நீங்கள் ஆதரவு அளிக்கவேண்டும். சமாதான பேச்சுக்கும் உதவி செய்யவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

    அல்கொய்தா தலைவர் பின்லேடனுக்கு அபோதாபாத் நகரில் அடைக்கலம் கொடுத்ததை பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு செய்த துரோகம் என்று கடந்த வாரம் டிரம்ப் விமர்சித்து இருந்த நிலையில் இந்த கடிதத்தை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. #DonaldTrump #ImranKhan #Afghanistan
    மேகதாதுவில் முதல்கட்ட ஆய்வு நடத்த அனுமதி அளித்த மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை திரும்ப பெறக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். #MekedatuDam #EdappadiPalaniswamy #PMModi
    சென்னை:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், மேகதாதுவில் அணை கட்ட தமிழக  அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இதற்கிடையே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முதல் கட்டமாக ஆய்வு நடத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.

    மத்திய அரசு ஆய்வு நடத்த ஒப்புதல் அளித்த நிலையில், இறுதி அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவதைத் தடுக்க தமிழக அரசு நீதிமன்றம் செல்லவுள்ளது.

    இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.



    அந்த கடிதத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முதல் கட்ட ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை காவிரி வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும்.

    மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள்  என அதில் தெரிவித்துள்ளார்.

    மேகதாதுவில் அணை கட்ட வழங்கப்படவுள்ள பூர்வாங்க அனுமதியை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர முடிவு செய்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. #MekedatuDam #EdappadiPalaniswamy #PMModi
    ×