search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivagangai"

    • புதிய நகர்மன்ற நல வாழ்வு மையத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை உழவர் சந்தை பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நகர் மன்ற நல வாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் நல வாழ்வு மையத்தில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், எம்.எல்.ஏ. செந்தில்நாதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி மையத்தினை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் வட்ட சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், டாக்டர்கள் கலாதேவி, அபிராமி, கிருஷ்ணவேணி, வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி, மற்றும் கவுன்சிலர்கள் ராஜா, அயூப்கான், துபாய்காந்தி, ஜெயகாந்தன், ராமதாஸ், ராபர்ட், விஜயகுமார், வீனஸ்ராமநாதன் மற்றும் சுகாராத ஆய்வாளர்கள். அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பலர் கலந்து கொண்டனர். 

    • எலக்ட்ரீசியன் மாயமானார்.
    • இன்ஸ்பெக்டர் கோட்டசாமி வழக்கு ப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே சின்னபெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன், எலக்ட்ரீ சியன். வேலைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் அருண் பாண்டியனின் தந்தை அழகர் கொடுத்த புகாரி ன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டசாமி வழக்கு ப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகிறார்.

    • கிடா வெட்டு திருவிழா நடைபெற்றது.
    • கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வெளியாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கருஞ்சி வலையபட்டி கிராமத்தில் கரந்தமலை கருப்பர், வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு கிடா வெட்டு திருவிழா திருவிழா நடந்தது. முன்னதாக 2-ந் ேததி மது எடுப்பு விழா நடந்தது.

    தொடர்ந்து மறுநாள் அருகருகே அமைந்துள்ள கருப்பருக்கும், வீரமாகாளிக்கும் பூ அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து வாளுக்கு வேலி வகையறா சார்பில் நேர்த்திக்கடனாக 9 கிடாய்கள் வெட்டப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கறி விருந்து உபச்சார விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்றனர்.

    இப்பகுதியில் பிறந்து திருமணம் முடித்துச் சென்ற பெண்கள் இங்கு வந்து சேவல், கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். முடிவில் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை வாளுக்கு வேலி வகையறா பங்காளிகள், மாவட்ட கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

    • சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடக்கிறது.
    • கலைஞர் பவளவிழா மாளிகையில் பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கத்தில் நடக்கிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கேஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை (27-ந்தேதி) மாலை 4 மணிக்கு காரைக்குடியில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கத் தில் நடக்கிறது.

    மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் அ.கணேசன் தலைமை தாங்குகிறார். இதில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பாரா ளுமன்ற தேர்தலுக்கான சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள். வி.பி.ராஜன் (திருப்பத்தூர்), ந.செந்தில் (காரைக்குடி), மருத்துவர் யாழினி (சிவ கங்கை). எஸ்.தினேஷ் (மானாமதுரை) ஆகியோர் கலந்து கொண்டு பாராளு மன்ற தேர்தல் பணிகள் செய்வது குறித்து ஆலோ சனை வழங்குகின்றனர்.

    மேலும் கூட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடத்துவது குறித்தும், சென்னையில் நடைபெற்ற தி.மு.க. செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    எனவே கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    காரைக்குடி

    மத்திய அரசை கண்டித்து காரைக்குடி வ.உ.சி. சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் மாங்குடி

    எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர்.

    இதில் நிர்வாகிகள் பங்கேற்று கோஷம் எழுப்பினர். நகர தலைவர் பாண்டி, கவுன்சிலர் ரத்தினம், வட்டார தலைவர்கள் செல்வம், கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர் கோவிலூர் அழகப்பன், கண்டனூர் நகர தலைவர் குமார், வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஜெயப்பிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரவீன், சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜான்பால், நிர்வாகிகள் நெல்லியான், அப்பாவு, பழ காந்தி, மணச்சை பழனியப்பன், கருப்பையா, தட்சிணாமூர்த்தி, புதுவயல் முகமது மீரா, அருணா, பாலா, மாஸ்மணி, மகளிரணி சூர்யா, நாச்சம்மை, வசந்தாதர்மராஜ், மாரியாயி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    இதேபோன்று தேவகோட்டை ஸ்டேட் வங்கி முன்பு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாவட்ட துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, நகர தலைவர் இரவுசேரி சஞ்சய், இலக்கிய அணி சாமிநாதன், வடக்கு வட்டார காங்கிரஸ் இளங்குடி முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சாகிர்உசேன் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
    • கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவாக நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஆய்வக திறப்பு, கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவாக நடந்தது. முதல்வர் முஹம்மது முஸ்தபா வரவேற்று ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

    கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முஹம்மது உசைன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

    ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் பேசினர். உடற்கல்வி துறை ஆண்டறிக்கையை உடற்கல்வி இயக்குனர் கோகுல் சமர்ப்பித்தார். கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லாஹ் கான் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    பொருள் அறிவியல் உதவிப்பேராசிரியர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். கணித பேராசிரியை கல்பனா பிரியா தொகுத்து வழங்கினார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு ரூ.4.35 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
    • தன்னார்வ சட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 15 மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) அமைக்கப்பட்டன.

    இதையடுத்து மாவ ட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின் பேகம், குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் சத்திய நாராயணன், மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 71 குற்றவியல் வழக்குகளும், 86 காசோலை மோசடி வழக்குகளும், 262 வங்கிக் கடன் வழக்குகளும், 198 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், மின்வாரியம் சம்மந்தப்பட்ட வழக்குகள் 1, 37 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 171 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 981 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 1807 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன.

    இதில் 1066 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.3 கோடியே 2 லட்சத்து 24 ஆயிரத்து 399 வரையில் வழக்காடிகளுக்கு நிவாரணமாக கிடைத்தது. அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 450 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 192 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 33 லட்சத்து 32 ஆயிரத்து 50 வரையில் வங்கிகளுக்கு வரவானது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிர்வாக உதவியாளர்கள், இளநிலை நிர்வாக உதவியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர். வழக்காடிகள் திரளாக கலந்து கொண்டு தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர். தன்னார்வ சட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.

    காரைக்குடி

    காரைக்குடி மின் கோட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, கானாடுகாத்தான், கல்லல், சாக்கவயல், தேவகோட்டை துணை மின் நிலையங்களில் நாளை(24-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை உயரழுத்த மின் பாதையில் உள்ள மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ள மின்கம்பங்கள் மாற்றும் பணிக்காக மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    அதன்படி காரைக்குடி துணை மின் நிலையத்தில், அண்ணாநகர் பீடரில் ஜீவா நகர், போலீஸ் காலனி, செக்காலை, சுப்பிரமணியபுரம் தெற்கு, புதிய பஸ் நிலையம், அழகப்பாபுரம், எச்.டி.சி. பீடரில் ஆறுமுகநகர், மன்னர் நகர், திலகர் நகர், பாரிநகர், தந்தை பெரியார் நகர், சிக்ரி. கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் கானாடுகாத்தான், சூரக்குடி, திருவேலங்குடி, ஆத்தங்குடி, பலவான்குடி, உ.சிறுவயல், ஆவுடைப் பொய்கை, நெற்புகப்பட்டி, நேமத்தான்பட்டி.

    கல்லல் துணை மின் நிலையத்தில் சாத்தரசம்பட்டி பீடரில் கல்லல், கீழப்பூங்குடி, அரண்மனை சிறுவயல், சாத்தரசம்பட்டி, வெற்றியூர், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, சாக்கவயல் துணை மின் நிலையத்தில் வீரசேகரபுரம், கருநாவல்குடி, மித்திரங்குடி, பீர்க்கலைக்காடு, ஜெயம்கொண்டான், சிறுகப்பட்டி செங்கரை. மித்ராவயல் பீடரில் சாக்கவயல், மித்ராவயல், திருத்தங்கூர், மாத்தூர், இலுப்பக்குடி, லட்சுமி நகர், பொன்நகர். தேவகோட்டை துணை மின் நிலையத்தில், வேப்பங்குளம் பீடரில் - உடப்பன்பட்டி, கோட்டூர், மாவிடுதிகொட்டை, திருமணவயல் மேலமுன்னி, வேலாயுத பட்டினம். கண்ணங்குடி பீடரில் கண்ணங்குடி, ராம்நகர், இறகுசேரி, பைக்குடி, அகதிகள் முகாம், நடராஜபுரம், அனுமந்தகுடி ஆகிய கிராமங்களில் மின் வினியோகம் தடைசெய்யப்படும்.

    இத்தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

    மானாமதுரை மற்றும் பொட்டப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகள், தெ.புதுக்கோட்டை, இடைக்காட்டூர் ஆகிய 4 உயரழுத்த மின் பாதைகளில் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் நாளை ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, நல்லாண்டிபுரம், எஸ்.காரைக்குடி, சன்னதி புதுக்குளம், மேலப்பிடாவூர், குசவபட்டி, காஞ்சிரங்குளம் காலனி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. ஆனால் மானாமதுரை சிப்காட், கொன்னக்குளம், மனக்குளம், மானாமதுரை நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

    • சிவகங்கையில் யோகா தின பேரணி நடந்தது.
    • பதாகைகள் ஏந்திய 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் மவுண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சார்பில் சர்வதேச யோகாதின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    பதாகைகள் ஏந்திய 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சண்முகராஜா கலையரங்கம் முன்பாக தொடங்கி பேருந்து நிலைய பகுதிகள் வரை நடைபெற்ற பேரணியில் பள்ளியின் நன்மாணாக்கர் சான்று பெற்ற மாணவர்களின் பெற்றோர் ஆரோக்கியதேவி, சிவகலா, பௌமியா, சர்மிளா மற்றும் நகர்ப்பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஆதிலிங்க போஸ் தலை மையில் ஜெயபாலன், ராஜ்குமார், முத்தையா, ஆனந்தகுமார் ஆகியோர் தகுந்த பாதுகாப்பு வழங்கி பேரணியினை சிறப்பாக நடத்தினர்.

    பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் தியாகராசன், அனிதா, சுரேஷ்கண்ணன், அகிலாண்டேசுவரி, பாண்டியராஜன், சந்திரலேகா, முத்துப்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

    • பிளஸ்-2 தேர்வில் சிவகங்கை மாவட்டம் 96.58 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • சிவகங்கை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 660 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

    சிவகங்கை

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.

    சிவகங்கை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 660 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 15 ஆயிரத்து 125 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.58 சதவீதம் ஆகும்.

    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் 93.62 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • சிவகங்கை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.

    சிவகங்கை

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.

    சிவகங்கை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இதில் 16 ஆயிரத்து 537 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.62 சதவீதம் ஆகும்.

    தி.மு.க. அரசை பற்றி எதிர்காலத்தில் அண்ணாமலை வாழ்த்துவார் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டியில் கூறியுள்ளார்.
    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் முறையூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்  பெரியகருப்பன் வழங்கினார்.

    இதில் தமிழரசி எம்.எல்.ஏ. பேசுகையில், பெண் பிள்ளைகளை பெற்றெடுப்பதில் நீங்கள் தயக்கம் காட்டினால் என்றால் ஆண்-பெண் விகிதாச்சாரம் என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றம் பெண் பிள்ளைகள் இல்லை என்று சொன்னால் ஆண்கள் திருமணம் முடிக்கும் போது பெண்களே இருக்கமாட்டார்கள்.   ஆகையால் பெண் பிள்ளை களை பெற்றெடுப்பதில் தயக்கம் காட்டவேண்டாம் என்றார்.

    பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாராட்ட வேண்டும் என்பதற்காக முதலமைச்சரோ, அமைச்சர்களோ செயல்பட தேவையில்லை. மக்களுடைய தேவைகளை உணர்ந்து அந்த தேவைகளை பூர்த்தி செய்து அதன் மூலம் மக்கள் பாராட்டினால் அதுதான் நல்ல அரசுக்கு அடையாளம்.  இப்படிப்பட்ட   நல்ல அரசை பற்றி எதிர்காலத்தில் அண்ணாமலையே வாழ்த்துவதற்கான வாய்ப்புகளும் இருக்கலாம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை இணைஇயக்குநா் ராம் பிரகாஷ், குடும்ப நலத்துறை இணை இயக்குனர் முருகேஸ்வரி, பிரான்மலை ஆரம்ப சுகாதார மைய வட்டார மருத்துவ அதிகாரி நபீஸா பானு, முறையூர் ஊராட்சி மன்ற தலைவர்  சுரேஷ், சிங்கம்புணரி ஒன்றியச்செயலாளர் பூமிநாதன், சிவபுரி சேகர், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, மருத்துவர்கள் பரணிதரன், ராஜ்குமார், மற்றும் வட்டாட்சியர் கயல்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×