search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SideDish"

    பிரெட்டில் பிரெட் பட்டர் ஜாம், பிரெட் சென்னா, சான்விச் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பிரெட்டில் பொரியல் செய்வது எப்படி என்று பாக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 15
    நெய் - 50 கிராம்
    தக்காளி - 2
    குடை மிளகாய் - 1
    இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மல்லி தூள் - 1 ஸ்பூன்

    தாளிக்க...

    கிராம்பு - 1
    ஏலக்காய் - 1
    பட்டை - 1 சிறிய துண்டு
    சோம்பு - ½ ஸ்பூன்



    செய்முறை :

    பிரெட்டை ஓரங்களை நீக்கி விட்டு துண்டுகளா வெட்டி கொள்ளவும்.

    குடைமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு தாளித்து பின் இஞ்சி விழுது சேர்தது வதக்கிய பின்னர் தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது கிளறி அதில் பிரெட் துண்டுகளை சேர்த்து லேசாக கிளறி எடுக்கவும்.

    இதில் சிறிது சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    சூப்பரான பிரெட் பொரியல் ரெடி.

    தேவைப்பட்டால் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பிரெட் பொரியலை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, இட்லி, தோசை, நாண், புலாவ், பிரியாணி, சாதத்திற்கு என அனைத்து வகையான உணவிற்கும் இந்த பகரா பேங்கன் அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கத்திரிக்காய் - கால் கிலோ,
    தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,
    புளி - எலுமிச்சை அளவு,
    வெங்காயம் - 100 கிராம்,
    தனியா - 3 டீஸ்பூன்,
    எள், சீரகம் -  தலா 2 டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப,
    வேர்க்கடலை - 3 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    இஞ்சி - சிறிய துண்டு,
    பூண்டு - 5 பல்,
    எண்ணெய், சீரகம் - தாளிக்க தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

    கத்தரிக்காயை காம்பை நீக்கி துண்டுளாக வெட்டி வைக்கவும்.

    கடாயில் தனியா, எள், வேர்க்கடலை, சீரகம், மிளகு, முந்திரியை தனித்தனியாக வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்…  

    தேங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும்.

    வதக்கிய அனைத்தையும் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு, பச்சை வாசனை போனவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கவும்.

    பிறகு புளிக்கரைசல், அரைத்த விழுது, அரைத்த மசாலா பொடி, சேர்த்து வதக்கவும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, கத்திரிக்காயுடன் சேர்த்து, ஓரங்களில் எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பகரா பேங்கன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    ஊறுகாயில் நிறைய வகைகள் உள்ளன. அதில் ஒன்றாக பூண்டு ஊறுகாயை எப்படி எளிமையான முறையில் வீட்டில் செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பூண்டு - 1 கப்
    எலுமிச்சை சாறு - 1/2 கப்
    சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - 1/4 கப்



    செய்முறை :

    பூண்டை தோல் உரித்து தனியாக வைக்கவும்.

    சீரகம், வெந்தயம், மல்லியை தனித்தனியாக கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டை போட்டு வதக்க வேண்டும்.

    பூண்டு வதங்கம் போதே அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு அதனுடன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.

    அடுத்து எலுமிச்சை சாற்றை விட்டு, நன்கு கெட்டியாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். சற்று கெட்டியானதும், இறக்கி அதனை குளிர வைத்து, ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு, பயன்படுத்த வேண்டும்.

    இப்போது பூண்டு ஊறுகாய் தயார்!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே மட்டனை வைத்து எளிய முறையில் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரைக்க...

    மட்டன்கொத்துக்கறி - 150 கிராம்,
    இஞ்சி, பூண்டு விழுது- 3 தேக்கரண்டி,
    சோம்பு தூள் - அரை தேக்கரண்டி,
    மட்டன் மசாலா - 3 தேக்கரண்டி,
    உப்பு - சிறிது.



    செய்முறை :

    மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டன் கொத்துகறியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், மட்டன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த மட்டன் கலவையை ஒரு குச்சியில் நீளவாக்கில் உருட்டி கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள மட்டன் குச்சிகளை வைத்து நன்றாக திருப்பி விட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.

    சூப்பரான மட்டன் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் குடல் வறுவல். இன்று இந்த மட்டன் குடல் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் குடல் - 1 (சிறியது)
    சின்னவெங்காயம் - 50 கிராம்,
    காய்ந்த மிளகாய் - 4,
    பச்சை மிளகாய் - 4,
    எண்ணெய் - 6 தேக்கரண்டி,
    கறிவேப்பிலை, மட்டன் மசாலா - 4 தேக்கரண்டி,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    மிளகு தூள் - தேவையான அளவு,
    உப்பு - சிறிதளவு.



    செய்முறை :

    குடலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கிவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய  பின்னர் வேகவைத்த குடலை சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் அதனுடன், மட்டன் மசாலா, உப்பு, மிளகு தூள் சேர்த்து தண்ணீர் எல்லாம் வற்றி உதிரியாக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி கிளறி எடுத்து பரிமாறவும். 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புலாவ், நாண், சப்பாத்தி, பூரி, சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் சுக்கா. இன்று இந்த சுக்காவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 300 கிராம்
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - அரைத்தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
    கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    நெய் - 2 தேக்கரண்டி
    வெண்ணெய் - 1 தேக்கரண்டி
    உப்பு - சுவைக்கு
    எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி



    செய்முறை :

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து 1 தேக்கரண்டி நெய் விட்டு வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    கடாயில் மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி அத்துடன்  மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    மசாலா சுண்டி வரும் போது வெண்ணெய் சேர்த்து பிரட்டி சுக்காவாக இறக்கவும்.

    இறக்கும்போது எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.

    சூப்பரான பன்னீர் சுக்கா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபி குடிக்கும் போது காரமாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சுவையுங்கள்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 20
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
    அரிசி மாவு - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

    நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து இறக்கினால், சூப்பரான வெண்டைக்காய் சிப்ஸ் ரெடி!

    இந்த வெண்டைக்காய் சிப்ஸை தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இறாலை வறுவல், குழம்பு, கிரேவி, பிரியாணி என பலவகைகளில் சமையல் செய்து உண்ணுகிறார்கள். அதில் இறால் மசாலா தொக்கு செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 1/2 கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி -2
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    சோம்பு தூள் - 1/ 2டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
    மல்லித்தூள் -2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போட்டு லேசாக நிறம் மாறியதும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு குழைய நன்றாக வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் அதில் இறாலை போட்டு 10 நிமிடம் வதக்கியதும் சோம்புத்தூள், மிளகுத்தூள் போட்டு கிளறி விடவும்.

    தொக்கு சுருள வதங்கி வந்தவுடன் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    ருசியான இறால் மசாலா தொக்கு ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ராஜ்மா, பன்னீர் கறியை சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா  - ஒன்றரை கப், 
    பன்னீர் - 150 கிராம்,
    வெங்காயம் - 2 (நடுத்தரமான அளவில்),
    தக்காளி - 2,
    இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - இரண்டு டீஸ்பூன்,
    மஞ்சள் போடி - அரை டீஸ்பூன்,
    மிளகாய்ப் பொடி - அரை டீஸ்பூன்,
    மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்,
    சீரகப்பொடி - அரை டீஸ்பூன்,
    கரம் மசாலா - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    இரவே ராஜ்மாவை ஊறவைக்க வேண்டும். ஊறிய ராஜ்மாவைத் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, வேகவைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம், சீரகப்பொடி சேர்த்து, வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    கடைசியாக பன்னீர் துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

    ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, வேகவைத்த ராஜ்மா மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வரை வேகவைத்து இறக்கவும்.

    சூப்பரான ராஜ்மா பன்னீர் கறி ரெடி.

    இந்த ராஜ்மா பன்னீர் கறியை வேகவைத்த அரிசி சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பன்னீர் பொடிமாஸ். இன்று இந்த பொடிமாஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 200 கிராம்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - 3
    பூண்டு - 2 பல்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை

    பன்னீரை உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.

    பூண்டை நசுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கிய பின்னர் நசுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல் உப்பு சேர்க்கவும்.

    பிறகு, அதில் உதிர்த்து வைத்துள்ள பன்னீர், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான பன்னீர் பொடிமாஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய் ஊறுகாய் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊறுகாயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 200 கிராம்,
    கடுகுத்தூள்  - ஒரு டீஸ்பூன்,
    ஆம்சூர்பொடி  - ஒரு டீஸ்பூன்,
    வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன்,   
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    பச்சை மிளகாயை வட்ட வடிவில் கொஞ்சம் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும்.

    நறுக்கிய பச்சை மிளகாயுடன் கடுகுத்தூள், மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

    கடைசியாக, கடுகு எண்ணெய் விட்டுக் கலந்து… ஈரமில்லாத பாட்டிலில் போட்டு வைத்து, தினமும் குலுக்கி விட வித்தியாசமான சுவையில் பச்சை மிளகாய் ஊறுகாய் தொட்டுக்கொள்ள தயார்.

    இந்த ஊறுகாய் இரண்டு, மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி - கால் கிலோ
    பூண்டு - 6 பல்
    காய்ந்த மிளகாய் - 6
    வெந்தயப் பொடி - ஒரு டீஸ்பூன்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    நல்லெண்ணெய், - தேவையான அளவு
    புளி - சிறிதளவு
    பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளுங்கள்.

    மிளகாய் ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைத்து, பூண்டு, புளி, தக்காளியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக சுருண்டு வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெந்தயப் பொடியைத் தூவி இறக்கிவையுங்கள்.

    இந்தத் தக்காளி ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×