search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shutdown"

    • மாதந்தோறும் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படும்.
    • அதன்படி திண்டுக்கல் நகர் பகுதியில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 27-ந்தேதி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    இதையொட்டி அசோக்நகர், பிள்ளையார் பாளையம், பாண்டியன் நகர், ஆர்த்தி தியேட்டர் ரோடு, பஸ் ஸ்டாண்ட், போடிநாயக்கன்பட்டி, ஸ்பென்சர் காம்பவுண்டு, ஆரோக்கியமாதாதெரு,

    மென்டோன்சான் காலனி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    • பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    பல்லடம் :

    பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, அம்மாபாளையம் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • செலாம்பாளையம் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • க்கனாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    தாராபுரம்,

    தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    செலாம்பாளையம் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நாளை 10-ந் தேதி நடக்கிறது. எனவேநாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம்பாளையம், தளவாய்பட்டணம், ஊத்துப்பாளையம், சென்னாக்கல் பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம், நாட்டுக்கல் பாளையம், கள்ளிவலசு, சிக்கனாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. #PollachiAbuseCase
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு அவரது நண்பர்கள் சபரி ராஜன், சதிஷ், வசந்த குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    நேற்று விசாரணை முடிந்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையின் போது திருநாவுக்கரசு பல்வேறு தகவல்களை கூறியதாக தெரிகிறது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சபரி ராஜன், சதிஷ், வசந்த குமார் ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அவர்களை காவலில் எடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பொள்ளாச்சி நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே ஒருசில கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

    கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து பொள்ளாச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், மாடசாமி ஆகியோர் தலைமையில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொள்ளாச்சி காந்தி சிலை, கடை வீதி, கோவை ரோடு, திருவள்ளூவர் திடல், தேர் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    பொள்ளாச்சியில் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரி கோவையில் இன்று வக்கீல்கள் 2- வது நாளாக கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #PollachiAbuseCase
    அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் நாடாளுமன்றத்தில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளின் உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம்.

    பிரதிநிதிகள் சபையின் தலைவர் விடுக்கும் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உரையை நிகழ்த்துவார். பட்ஜெட் செய்தி, நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் ஜனாதிபதியின் உரையில் இடம் பெறும்.

    அந்த வகையில், வருகிற 29-ந் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்ற வரும்படி ஜனாதிபதி டிரம்புக்கு பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் அடுத்த நாளே தனது அழைப்பை திரும்பப்பெற்றார்.

    மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால் அமெரிக்காவின் பல்வேறு அரசுத்துறைகள் 4 வாரங்களுக்கும் மேலாக முடங்கி இருப்பதால், முதலில் அதற்கு தீர்வுகாண வேண்டும் என்றும், பின்னர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ளும் விதமாக, அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:-

    அரசுத்துறைகள் முடக்கம் நீடிக்கும் வேளையில், நாடாளுமன்றத்தில் உரையாற்ற நான்சி பெலோசி என்னை அழைத்தார். நான் அதனை ஏற்றுக்கொண்டேன். ஆனால் பின்னர் அவர் முடிவை மாற்றிக்கொண்டார். நாடாளுமன்ற உரைக்கு தாமதமான ஒரு தேதியை அவர் பரிந்துரைக்கிறார். அரசுத்துறைகள் முடக்கம் எப்போது முடிவுக்கு வருகிறதோ, அப்போதுதான் நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    அமெரிக்காவில் அரசுத் துறைகள் முடங்கியிருப்பதால், டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கும் தனது குழுவின் பயணத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். #Trump #DavosSummit
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் அதிபர்  டிரம்ப் ஒப்புதல் கேட்டார். அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை.



    அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் சுமார் ஒரு மாத காலமாக, பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன. இதனால் 8 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

    அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, வெள்ளை மாளிகையில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். ஆனால், இந்த கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. தனது நிபந்தனைகள் ஏற்கப்படாததால் பாதியில் வெளியேறினார் டிரம்ப்.

    அரசுத் துறைகள் முடக்கம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், டாவோசில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்பதை டிரம்ப் ரத்து செய்தார். அவர் சார்பில் கருவூலத்துறை மந்திரி ஸ்டீவ் மினுச்சின் தலைமையில், வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, வர்த்தகத்துறை மந்திரி வில்பர் ரோஸ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு டாவோஸ் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஆனால், கடைசி நேரத்தில் அமெரிக்க குழுவின் டாவோஸ் பயணத்தையும் டிரம்ப் ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசுத் துறைகள் முடக்கத்தினால் 8 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காத நிலை நீடிப்பதாலும், அவர்களுக்கு தனது அமைச்சரவை உறுப்பினர்களின் உதவி தேவைப்படுவதாலும் டாவோஸ் பயணத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்திருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

    முன்னதாக, பிரசல்ஸ், எகிப்து, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மேற்கொள்ளவிருந்த பயணத்தை டிரம்ப் நேற்று ரத்து செய்தார்.

    உலக பொருளாதார மன்ற மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #Trump #DavosSummit

    அமெரிக்காவில் அரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பதால் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதை டிரம்ப் தவிர்த்துள்ளார். #Trump #DavosSummit
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார்.

    அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் கடந்த 20 நாட்களாக பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன.



    சமீபத்தில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு டிரம்ப் ஏற்பாடு செய்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. தனது நிபந்தனைகள் ஏற்கப்படாததால் பாதியில் வெளியேறினார் டிரம்ப்.

    அரசுத் துறைகள் முடக்கம் நீடிக்கும் நிலையில், டாவோஸ் சுற்றுப்பயணத்தை டிரம்ப் ரத்து செய்துள்ளார். உலக பொருளாதார மன்ற மாநாட்டிற்காக டாவோஸ் செல்லும் மிகவும் முக்கியமான பயணத்தை ரத்து செய்திருப்பதாக டிரம்ப் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    உலக பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #Trump #DavosSummit

    பந்தளத்தில் போராட்டம் நடத்திய இந்து அமைப்பினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சபரிமலை கர்ம சமிதி உறுப்பினர் உயிரிழந்தார். #SabarimalaProtest #KeralaShutdown #ProtesterDies
    பந்தளம்:

    கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலைக்கு 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்துள்ளது.

    சபரிமலை கர்ம சமிதி சார்பில் பந்தளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றபோது, அங்கிருந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சபரிமலை கர்ம சமிதியைச் சேர்ந்த சந்திரன் உன்னிதான் (55) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இருந்து கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த சந்திரன் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் இறந்துபோனார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே கேரளாவில் இன்று சபரிமலை கர்ம சமிதி அமைப்பு சார்பில்  முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. #SabarimalaProtest #KeralaShutdown #ProtesterDies 
    அமெரிக்காவில் அரசுத் துறைகளின் முடக்கம் நீடிப்பதால் அரசு ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டாய விடுப்பில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. #USGovernmentShutdown #Trump
    வாஷிங்டன்:

    அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் சட்ட விரோதமாக யாரும் நுழையாதபடிக்கு அமெரிக்க–மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்று 2016–ம் ஆண்டு தேர்தலின் போது டிரம்ப் வாக்குறுதி அளித்தார்.

    அதன்படி எல்லையில் சுவர் எழுப்ப மெக்சிகோவிடம் டிரம்ப் நிதி கேட்டார். ஆனால் அந்த நாடு தர மறுத்துவிட்டதால் உள்நாட்டு நிதியை பயன்படுத்த வேண்டிய நெருக்கடி உருவானது. இதற்காக உள்நாட்டு நிதி 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும் என்று, அமெரிக்க பாராளுமன்றத்தை டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால் மெக்சிகோ எல்லைச்சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், அந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறும் ஜனநாயக கட்சி, செலவின மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிக்க மறுத்து விட்டது. இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகள் முடங்கின.



    இந்த நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை கூடியது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இருந்தபோதிலும் உறுப்பினர்களின் கூட்டத்தில் அரசு துறைகள் முடங்கியதை சரி செய்வதற்கான எந்த முடிவும் எட்டப்படவில்லை. மேலும் இரு சபைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இதனால் அரசு துறைகளின் முடக்கம் தொடர்ந்து நீடிக்கிறது.

    அதே சமயம் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன் என்கிற தனது முடிவில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். இதனால் அரசு துறைகளின் செயலிழப்பு புத்தாண்டு வரை தொடரும் நிலை உருவாகி உள்ளது.

    இந்த குழப்பமான சூழலால் அரசு ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. #USGovernmentShutdown #Trump
    கேரள முதல்வர் வீட்டை முற்றுகையிட சென்றவர்கள் மீது போலீசார் நடத்திய அடக்குமுறையை கண்டித்து திருவனந்தபுரத்தில் நாளை முழு அடைப்புக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. #BJPshutdown #Trivandrumshutdown #BJPworkers
    திருவனந்தபுரம்:

    சபரிமலை பகுதியில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை நீட்டித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில சட்டசபையில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவனந்தபுரம் நகரில் நேற்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட சென்ற பா.ஜ.க.வினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.



    போலீசாரின் இந்த அடக்குமுறையை கண்டித்து திருவனந்தபுரம் மாவட்டத்தில் நாளை முழு அடைப்புக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. #BJPshutdown #Trivandrumshutdown #BJPworkers
    யானை தாக்கி சிறுவன் பலியானதை கண்டித்து வயநாட்டில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இது குறித்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் புலியாளம். இங்கு வசித்து வருபவர் சந்திரன். முதுமலை புலிகள் காப்பகத்தில் நெலாக் கோட்டை சரகத்தில் வனக்காப்பளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் மகேஷ் (11). இவர் பள்ளி விடுமுறையில் முதுமலை அடுத்துள்ள கேரள மாநிலம் முத்தங்கா சரணாலயம் பொன்குழி பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    இவர்களது வீடு வனப்பகுதியை ஒட்டி உள்ளது. அங்கு மகேஷ் மற்று சிறுவர்களுடன் சைக்கிள் ஓட்டி விளையாடி கொண்டிருந்தான்.

    அப்போது புதர் மறைவில் இருந்து வெளியே வந்த காட்டு யானை மகேசை தாக்கியது. இதில் அவன் அதே இடத்தில் இறந்தான். முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் சிறுவனின் உடலை மீட்டனர். உடல் பிரேத பரிசோதனைக்கு பின் புலியாளம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    பொன் குழி பகுதியில் அடிக்கடி காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தவறி விட்டனர் என காங்கிரசார் குற்றம் சாட்டினார்கள்.

    வனத்துறையினரை கண்டித்து இன்று கேரள மாநிலம் வயநாட்டில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அங்கு ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #tamilnews
    தூத்துக்குடி போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. #SterliteProtest #BanSterlite
    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட மக்களும், வணிகர்களும் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளாகிய இன்று (நேற்று) 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பல உயிர்கள் பலியாகி உள்ளன. நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இந்த சம்பவத்துக்கு அரசின் மெத்தன போக்கே காரணம். எனவே அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்தை நிறுத்தவேண்டும். முழுமையான நச்சுத்தன்மை குறித்த விவரங்களை உடனடியாக ஆராய்ந்து, அந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்.

    தூத்துக்குடி போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை (இன்று) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நியாயம் கிடைக்காத பட்சத்தில் பேரமைப்பின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தை கூட்டி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #SterliteProtest #BanSterlite
    ×