search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shubman Gill"

    • இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 179 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    • இங்கிலாந்து அணி தரப்பில் ரெஹான், பஷிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 14 ரன்களிலும், அடுத்து வந்த சுப்மன் கில் களம் 34 ரன்களிலும் ஷ்ரேயஸ் அய்யர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் தனது 2-வது சதத்தை விளாசினார்.

    ஜெய்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடிய ராஜத் பட்டிதார் 32 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அக்ஷர் படேல் (27) மற்றும் பரத் (17) கட் ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் பஷிர், ரெஹான், 2 விக்கெட்டும் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பர்றினர். ஜெய்ஸ்வால் 170 ரன்களுடனும் அஸ்வின் 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    ஆட்ட நேர முடிவில் இந்திய அணி வீரர்கள் தேவையில்லாமல் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆனது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • தோல்விக்கு 2-வது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டது முக்கிய காரணம்.
    • 2-வது இன்னிங்சில் கில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

    ஐதராபாத்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இந்த தோல்விக்கு 2-வது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டது முக்கிய காரணம். குறிப்பாக சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 23 ரன்களில் அவுட்டான நிலையில் முக்கியமான 2-வது இன்னிங்சில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

    இந்நிலையில் சுப்மன் கில்லின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதல் இன்னிங்சில் சுப்மன் கில் பேட்டிங் செய்த அணுகுமுறையை நாம் பார்த்தோம். அவர் நல்ல ஷாட்டுகளை அடிப்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அப்படி நீங்கள் ரன்கள் அடிக்க முயற்சிக்கவில்லை எனில் சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணி பவுலர்கள் எளிதாக அடிப்பதற்கு தேவையான சுமாரான பந்துகளை உங்களுக்கு வீச மாட்டார்கள்.

    நீங்கள் அங்கே உங்களுடைய திறமையை காண்பிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் பவுண்டரிகளை அடிக்க முயற்சிக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்ற வேண்டும். எனவே அதில் எப்படி முன்னேறலாம் என்பதை அவர் பார்க்க வேண்டும்.

    என்று பார்தீவ் பட்டேல் கூறினார்.

    • நம்மிடம் இருக்கும் திறமையை அனைத்தையும் உடனே காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்.
    • ரன் சேர்க்க வேண்டும் என்றால் களத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும்.

    லாகூர்:

    இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என்று ரசிகர்கள் சுப்மன் கில்லை பாராட்டி வரும் நிலையில் அதற்கு ஏற்றார் போல் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்திலும் சிறப்பாக கில் விளையாடினார்.

    ஆனால் சமீப காலமாக கில் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தடுமாறி வருகிறார். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை வீணடித்து வருகிறார்.

    இந்த நிலையில் இப்படி தான் ஆடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது என கில் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவரிடம் உள்ள திறமைக்கு அவர் அநியாயம் செய்து வருகிறார். கில் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக திகழ்கிறார்.அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. ஆனால் நம்மிடம் இருக்கும் திறமையை அனைத்தையும் உடனே காட்ட வேண்டும் என்று நினைக்கிறார். 20 ரன்கள் அடித்து விட்டு அதன் பிறகு ஒரு தேவையில்லாத ஷாட் அடி ஆட்டமிழந்து விடுகிறார். கடந்த ஆண்டு கில் நன்றாக விளையாடிய போது இந்த தவறை அவர் செய்யவில்லை. ரன் சேர்க்க வேண்டும் என்றால் களத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும்.

    எந்த ஸ்பெஷல் ஷார்ட்டும் ஆடாமல் தொடர்ந்து பேட்டிங் செய்தாலே ரன்கள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் அனைத்து பந்து உங்களுடைய இஷ்டத்திற்கு விளையாட கூடாது என்பதை கில் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பந்திற்கும் எப்படி விளையாட வேண்டும் என்பதை ரியாக்ட் தான் செய்ய வேண்டும். தவிர இப்படி தான் ஆடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது.

    என்று சல்மான் பட் கூறியுள்ளார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் கொஞ்சம் அதிக ஆக்ரோஷத்துடன் விளையாடுவதாக நினைக்கிறேன்.
    • இன்னும் கடினமாக உழைத்து எதிர்காலத்தில் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் 24 வயதான சுப்மன் கில் கடந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 29 ஆட்டங்களில் ஆடி 5 சதம் உள்பட 1,584 ரன்கள் குவித்து கவனத்தை ஈர்த்தார்.

    எதிர்பார்க்கப்பட்ட தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அவர் சோபிக்கவில்லை. அவர் 2 மற்றும் 26 ரன்னில் வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தார். வெள்ளை நிற பந்தில் ஜொலிக்கும் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதுவரை 19 டெஸ்டில் ஆடி 2 அரைசதம் உள்பட 994 ரன் எடுத்துள்ளார். கடைசி 7 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

    இந்த நிலையில் அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் (இந்தியா) டெஸ்டில் எப்படி ஆட வேண்டும் என்பது குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    இது குறித்து கவாஸ்கர் கூறுகையில், 'டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் கொஞ்சம் அதிக ஆக்ரோஷத்துடன் விளையாடுவதாக நினைக்கிறேன். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆடுவதை காட்டிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு சிறிது வித்தியாசம் உள்ளது. ஆனால் அவர் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி போன்றே டெஸ்டிலும் அதிரடியாக ஆட நினைக்கிறார்.

    குறுகிய வடிவிலான போட்டிக்கு பயன்படுத்தப்படும் வெள்ளைநிற பந்தை விட டெஸ்ட் கிரிக்கெட்டுக்குரிய சிவப்பு நிற பந்து காற்றிலும், ஆடுகளத்திலும் வேகமாக நகரும். மேலும் சிவப்பு பந்து அதிகமாக பவுன்சும் ஆகும். அதை மனதில் வைத்து அவர் டெஸ்டிஸ் விளையாட வேண்டும்.

    சுப்மன் கில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய போது, அவரது ஷாட்டுகள் எல்லாம் பாராட்டும்படி இருந்தது. மீண்டும் அவர் பார்முக்கு திரும்புவார் என்று நம்புகிறேன். இன்னும் கடினமாக உழைத்து எதிர்காலத்தில் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறுகையில், 'சுப்மன் கில் 2023-ம் ஆண்டில் முதல் 9-10 மாதங்களில் நன்றாக ஆடினார். அதன் பிறகு தான் தடுமாறுகிறார். மறுமுனையில் ஆடும் ரோகித் சர்மா போன்ற வீரர்களிடம் அவர் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேளை உடல்நலம் பாதிப்பின் (டெங்கு காய்ச்சல்) காரணமாக இந்த தடுமாற்றம் வந்திருக்கலாம். சுப்மன் கில்லிடம் சூப்பர் திறமை இருக்கிறது. வருங்காலத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரராக இருப்பார். 2024-ம் ஆண்டு அவருக்கு நன்றாக அமையும் என்று நம்புகிறேன்' என்றார்.

    • முன்னணி கால்பந்து வீரர்களும் இடம்பெறவில்லை.
    • விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் இடம்பிடிக்கவில்லை

    உலகின் முன்னணி தேடுப்பொறி சேவை வழங்கும் நிறுவனம் கூகுள். உலகளவில் 2023 ஆண்டு அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் அதிசயிக்கும் வகையில் கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி போன்ற முன்னணி கால்பந்து வீரர்கள் இடம்பெறவில்லை.

    இதுதவிர இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. ஆனாலும் உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலில் ஒரேயொரு இந்திய வீரர் இடம்பிடித்துள்ளார்.

     


    வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் தனது அசாத்திய ஃபார்ம் மூலம் இந்திய அணியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில், உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா இடம்பெற்றுள்ளார்.

    அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் டாப் 10 பட்டியல்:

    1 - டமர் ஹேம்லின்

    2 - கிலியன் எம்பாப்பே

    3 - டிராவிஸ் கெல்ஸ்

    4 - ஜா மொரண்ட்

    5 - ஹேரி கேன்

    6 - நோவக் ஜோகோவிக்

    7 - கார்லோஸ் அல்காரஸ்

    8 - ரச்சின் ரவீந்திரா

    9 - சுப்மன் கில்

    10 - கைரி இர்விங்

    • ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகின்றனர்.
    • தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. டோனி தலைமையிலான இந்திய அணி அறிமுக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது.

    இதுவரை 8 டி20 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து (2010, 2022), வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016) தலா 2 முறையும், இந்தியா (2007), பாகிஸ்தான் (2009) இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.

    9-வது டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    ஐ.சி.சி. போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை டோனி தலைமையிலான அணி கைப்பற்றியது. சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றது. சொந்த மண்ணில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெறாதது ஏமாற்றத்தை அளித்தது.

    தற்போது டி20 உலகக் கோப்பை போட்டியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை போட்டிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து அவரை அணுகியதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு அவர் டி20 போட்டியில் ஆடவில்லை. தென்ஆப்பிரிக்க தொடரிலும் அவர் ஓய்வு கேட்டுள்ளார்.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் தொடக்க வீரர்களாக யார் ஆடுவார்கள்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

    ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகிய 5 பேர் தொடக்க வரிசைக்கான போட்டியில் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 20 ஓவர் தொடரில் ஜெய்ஸ்வாலும், ருதுராஜ் கெய்க்வாட்டும் தொடக்க வீரர்களாக வருகிறார்கள். அவர்கள் ஆட்டம் அதிரடியாகவே இருக்கிறது.

    அதே நேரத்தில் ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடக்க வரிசையில் அபாரமாக ஆடக் கூடியவர்கள். இதற்கிடையே அவ்வப்போது இஷான் கிஷனும் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். இதனால் தொடக்க வீரர்களை தேர்வு செய்வதில் தேர்வு குழுவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

    • ஒரு அணிக்கு கேப்டனாகும் போது பல்வேறு பொறுப்புகள் நமக்கு வந்துவிடும்.
    • நான் சிறந்த கேப்டன்களுக்கு கீழ் விளையாடியதாகவும் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் நினைக்கிறேன்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

    அந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் அணிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என குஜராத் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு அணிக்கு கேப்டனாகும் போது பல்வேறு பொறுப்புகள் நமக்கு வந்துவிடும். அர்ப்பணிப்புடன் இருப்பது, கட்டுப்பாடுடன் இருப்பது, கடினமாக உழைப்பது, அணிக்கு விஸ்வாசமாக இருப்பது. இவையெல்லாம் ஒரு கேப்டனின் முக்கியமான தேவைகள்.

    மேலும் நான் சிறந்த கேப்டன்களுக்கு கீழ் விளையாடியதாகவும் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் நினைக்கிறேன். அவர்களின் கீழ் விளையாடிய அனுபவத்திலிருந்து நான் பெற்ற அந்த கற்றல் இந்த ஐபி எல்லில் எனக்கு மிகவும் உதவும் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு கில் கூறினார்.

    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது.
    • ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை குஜராத் அணி எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அந்த பதிவில் உங்கள் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள் ஹர்திக் பாண்ட்யா என தெரிவித்திருந்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேமரூன் கிரின் பெங்களூர் அணியில் இணைந்துள்ளார்.

    • ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்மேன்ஸ்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
    • இதில் இந்திய இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டி காக் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்தில் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவின் வான் டெர் டுசன் 7வது இடத்திலும், அயர்லாந்தின் ஹாரி டெக்டர் 8வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் 9வது இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 10வது இடத்திலும் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் சதத்தால் 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடந்தது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் சதத்தால் 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன்கள் குவித்தார். இதன்மூலம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

    இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 5பவுண்டரிகள் உள்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். சுப்மன் கில் 38 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.

    ஏற்கனவே, தென் ஆப்பிரிக்க அணியின் ஹசிம் ஆம்லா 40 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 80 சதவீதம் குணமடைந்து விட்டதாக பிசிசிஐ மருத்துவக்குழு தகவல்
    • இருந்தபோதிலும் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை

    இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னையில் நடைபெற்ற உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெறும் 2-வது போட்டியிலும் ஆடவில்லை.

    சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 80 சதவீதம் குணமடைந்து விட்டார் என பிசிசிஐ மருத்துவ குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் காய்ச்சலில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியை அடைவதற்கு சுப்மன் கில்லுக்கு மேலும் ஒரு வாரம் ஆகும் என கூறப்படுகிறது.

    இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக 14-ந்தேதி நடைபெறும் ஆட்டத்திலும், வங்காளதேசத்துக்கு எதிராக 19-ந்தேதி நடைபெறும் போட்டியிலும் அவர் ஆடுவது சந்தேகம் என கருதப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உடல் நலம் முன்னேறி வரும் நிலையில், சுப்மன் கில் அகமதாபாத் புறப்பட்டு செல்ல இருக்கிறார்.

    இதற்கிடையே ஜெய்ஸ்வால் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவர் பேக்-அப் வீரராக அழைக்கப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.

    • ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்னதாகவே காய்ச்சலால் பாதிப்பு
    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தபோது, இந்திய வீரர் சுப்மான் கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு டெங்கு உறுதியானது. இதனால் முதல் போட்டியில் விளையாடவில்லை. நேற்று இந்திய அணி டெல்லி புறப்பட்டு சென்றது. நாளை டெல்லியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியிலும் சுப்மான் கில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்திய வீரர்களுடன் டெல்லி பயணிக்கவில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    சாதகமான ரிசல்ட் வந்து, உடல்நிலை சரியானால் நேரடியாக அகமதாபாத் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீப காலமாக தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை சுப்மான் கில் வெளிப்படுத்தி வருகிறார். அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. சென்னையில் இந்திய அணி 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது குறிப்பிடத்தக்கது.

    சுப்மான் கில் இல்லாததால் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்கினார்.

    ×