search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shops- establishments"

    • பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தராத கடை- நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • சென்னை தொழிலாளர் ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சரின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்டத்தின் படி கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்களது பணி நேரம் முழுவதும் நின்றுகொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து பணியாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் என சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே, மேற்கண்ட சட்டத்தின்படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவளங்களிலும் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தகுந்த இருக்கை வசதிகள் செய்து கொடுத்து சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து தொழில் நிறுவன உரிமையாளர்களும் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இந்த சட்ட திருத்தத்தை கடைப்பிடிக்காத நிறுவன உரிமையாளர்கள் மீது கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள சென்னை தொழிலாளர் ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

    எனவே வரும் காலங்களில் சிறப்பாய்வின் போது கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி மேற்கொள்ளாத உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×