என் மலர்

  நீங்கள் தேடியது "shop robbery"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே 2 கடைகளில் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  தேனி:

  தேனி அருகே கோடாங்கிபட்டி போடி மெயின்ரோடு பகுதியில் தனியார் மசாலா கம்பெனி உள்ளது. இங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 12 சீரக மூட்டைகளை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது.

  இது குறித்து அதன் மேலாளர் ஜெகதீசன் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவர் கம்பம் மெயின்ரோட்டில் அரிசி கடை நடத்தி வருகிறார்.

  சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை மூடிச் சென்றார். மறுநாள் காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர் முத்தையாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது 31 அரிசி மூட்டைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

  இது குறித்து உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் அருகே மளிகை கடையில் இருந்த 40 பவுன் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருவள்ளூர்:

  திருவள்ளூைரை அடுத்த காக்களூர் தேவா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். அதே பகுதி டீச்சர்ஸ் காலனியில் மளிகை கடை வைத்து உள்ளார்.

  கிருஷ்ணகுமாரின் வீடு ஒதுக்குப்புறமாக உள்ளது. இதனால் வீட்டில் இருந்த 40 பவுன் நகை, ரூ.78 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மளிகை கடையில் வைத்து இருந்தார்.

  இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் கடையை பூட்டி விட்டு கிருஷ்ணகுமார் வீட்டுக்கு வந்தார். இன்று அதிகாலை கடையை திறக்க சென்ற போது ‌ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது.

  உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த 40 பவுன் நகை, ரூ.78 ஆயிரம் ரொக்கம், ½ கிலோ வெள்ளிப் பொருட்கள் மாயமாகி இருந்தது.

  மேலும் 25 கிலோ எடையுள்ள 10 அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களும் கொள்ளை போய் இருந்தன.

  நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் கடையில் இருந்த நகை-பணம் உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்று இருப்பது தெரிந்தது.

  மளிகை கடையில் நகை- பணம் வைத்திருப்பதை அறிந்து கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது கிருஷ்ணகுமாருக்கு அறிமுகமான நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

  இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவெறும்பூர் பகுதியில் மளிகை கடை மற்றும் பேன்சி ஸ்டோரில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருவெறும்பூர்:

  திருவெறும்பூர் பகவதி புரத்தை சேர்ந்தவர் ஆயிஷா (வயது 70). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்லும் முன்பு தனது சகோதரி மும்தாஜிடம் கடையின் பொறுப்பை விட்டுச்சென்றார்.

  இதையடுத்து மும்தாஜ் இரவில் கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடையில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகள் திருடு போயிருந்தது.

  இதேபோல் திருவெறும்பூர் வேங்கூர் சாலையில் புவனேஸ்வரி என்பவர் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.

  இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாயல்குடியில் கடையை உடைத்து ரூ.85 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

  ராமநாதபுரம்:

  சாயல்குடி அருகே உள்ள எஸ்.உறைகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் காசிராஜா (வயது 28). இவர் மூக்கையூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

  நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் காசிராஜா கடையை பூட்டிச் சென்றார். நேற்று காலை கடைக்கு வந்த அவர், கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்துள்ளன. இதனால் கொள்ளை நடந்திருப்பது தெரியவர, சாயல்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

  சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாரதா மற்றும் போலீசார் விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர். கடையில் இருந்த ரூ.85 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக காசிராஜா போலீசாரிடம் தெரிவித்தார்.

  கடைக்குள் புகுந்து பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரச்சலூர் அருகே மளிகை கடையில் புகுந்து திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  அரச்சலூர்:

  அரச்சலூர் அருகே உள்ளது ராட்டை சுற்றி பாளையம். இங்கு ஜெயச்சந்திரன் (42) என்பவர் 25 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார்.

  வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு ஜெயச்சந்திரன் வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் மர்ம ஆசாமிகள் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

  அங்கு கல்லா பெட்டி மற்றும் பல்வேறு இடங்களில் துழாவி பார்த்தனர். ஆனால் எங்கும் பணம் இல்லை. வழக்கம் போல் ஒவ்வொரு நாளும் வசூலான பணத்தை ஜெயச்சந்திரன் வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார். அதே போல் எடுத்து சென்றதால் பணம் தப்பியது.

  பணம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மர்ம ஆசாமிகள் 25 கிலோ (ஜிப்பம்) கொண்ட 12 அரிசி மூட்டைகளை தூக்கி கொண்டு சென்று விட்டனர்.

  இது குறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முத்துப்பேட்டை அருகே மளிகை கடையில் ரூ.46 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  முத்துப்பேட்டை:

  திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(48). இவர் கடைத்தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் செல்வராஜ் கடையில் இருந்தபோது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் தங்களிடம் 100 ரூபாய் நோட்டுகள் 20 உள்ளது. திருமணத்திற்கு மொய் கவரில் வைக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டாக தாருங்கள் என்று கேட்டுள்ளனர்.

  செல்வராஜிம் 100 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தார். அப்போது செல்வராஜ் கடை கல்லாவில் இருந்த பணத்தை கவனித்த வாலிபர்கள் மளிகை சாமான்கள் வாங்குவது போல் நடித்து 10 கிலோ வெங்காயம் கேட்டுள்ளனர்.

  இதனையடுத்து அருகில் இருந்த கடையில் செல்வராஜ் பல்லாரியை எடுக்க சென்றபோது வாலிபர்கள் கடை கல்லாவில் இருந்த ரூ.46 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றனர். பின்னர் அங்கு வந்த செல்வராஜ் வாலிபர்கள் 2 பேரையும் காணாததால் குழப்பமடைந்தார்.

  கடையில் கல்லாவில் இருந்த பணத்தை பார்த்த போது அது கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சிய அடைந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 வாலிபர்களையும் தேடிவருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே பெட்டி கடையை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  ஆண்டிப்பட்டி:

  ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வருசநாடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொம்மையசாமி (வயது35). இவர் அதே பகுதியில் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தான் வாங்கிய நபரிடம் பணத்தை திருப்பி தருவதற்காக ரூ.1 லட்சம் பணத்தை கடையில் வைத்திருந்தார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

  இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

  இது குறித்து பொம்மையசாமி வருசநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. மோப்பநாய் வைத்தும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆண்டிப்பட்டி பகுதியில் அதிகரித்து வரும் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

  ×