search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shield"

    • மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.
    • சிறப்பாக ஆடிய கபடி வீரருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் முதன்முறையாக கிராமம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. மதுரை,விருதுநகர், ராமநாதபுரம்,கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 75 அணிகள் பங்கேற்றன. அரை இறுதி போட்டியில் ஆலம்பட்டி ஏ அணியினர் மற்றும் ஆலம்பட்டி பி அணியினர் மோதியதில் ஏ அணியினர் 9-7 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றனர். மற்றொரு போட்டியில் துலுக்கப்பட்டி பராசக்தி அணியினரும், ஆலம்பட்டி பொன்னுசாமி அணியினரும் மோதியதில் துலுக்கப்பட்டி அணி 14-5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    இறுதிப் போட்டியில் ஆலம்பட்டி ஏ அணியினர், துலுக்கப்பட்டி பராசக்தி அணி மோதியதில் ஆலம்பட்டி ஏ அணியினர் 3-0 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற ஏ அணியினருக்கு அ.தி.மு.க. திருமங்கலம் யூனியன் தலைவர் லதா ஜெகன் ஆளுயர சுழற் கோப்பை வழங்கினார். 2-வது, 3-வது இடம் பெற்ற அணிக்கும் கோப்பை வழங்கப்பட்டது. சிறப்பாக ஆடிய கபடி வீரருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    • பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 16 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு 2,147 சைக்கிள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச்செல்வம் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், துணைத்தலைவர் கி.ரெ. பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில், அசோக்குமார் எம்.எல்.ஏ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி, தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு செய்து வரும் திட்டங்கள் குறித்து பேசினார்.

    மேலும், அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும், இல்லந்தேடி கல்வித் திட்டம், செஸ் விளையாட்டு போட்டிகளில் மாணவ, மாணவிகளைப் பங்கேற்க செய்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இவ்விழாவில், பேராவூரணி, ஆவணம், குருவிக்கரம்பை, பெருமகளூர், மணக்காடு, மல்லிப்பட்டினம், திருச்சிற்றம்பலம், கரிசவயல், பள்ளத்தூர் உள்ளிட்ட 16 அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 2,147 மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், பள்ளித் துணை ஆய்வாளர் அருள்ராஜ், திமுக ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், இளங்கோ, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சுவாதி காமராஜ், கல்விப்புரவலர் அப்துல் மஜீது, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×