search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shahrukh Khan"

    பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 53வது பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து சொல்ல நள்ளிரவு முதலே அவரது வீட்டை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #HappyBirthdaySRK
    மும்பை:

    பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இன்று 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதலே அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

    ஷாருக் கான் தற்போது நடித்து வரும் ஜீரோ உள்ளிட்ட இரண்டு படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

    இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஷாருக் கானுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.



    இந்நிலையில், மும்பையில் உள்ள மன்னாட் பகுதியில் வசித்து வரும் ஷாருக் கான் வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கிலான ரசிகர்கள் குவிய தொடங்கினர்.

    ரசிகர்கள் கூடியதை அறிந்த ஷாருக் கான், தனது வீட்டின் பால்கனிக்கு வந்து நின்றார். அங்கிருந்து தனது ரசிகர்களை பார்த்துக் கையசைத்து வாழ்த்து பெற்றார். இதனால் அந்த பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. #HappyBirthdaySRK
    பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன், அடுத்ததாக ஷாருக்கான் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். #ShahrukhKhan #AmitabhBachchan
    ஷாருக்கான் ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பெரும்பாலும் ஷாருக்கான் நடிக்கும் படங்களும் ஜான் ஆப்ரஹாம், சித்தார்த் மல்ஹோத்ரா, அஜய் தேவ்கன், நடித்த படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. முதன்முறையாக ஷாருக்கான் தயாரிப்பில் அமிதாப்பச்சன் நடிக்க இருக்கிறார்.

    பிரதான பாத்திரத்தில் அவர் நடிக்கும் இந்த படத்திற்கு ‘பட்லா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுஜய் கோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். முக்கிய வேடத்தில் டாப்ஸி நடிக்கிறார். அமிதாப் பச்சன், டாப்ஸி இருவரும் ஏற்கெனவே ‘பிங்க்’ படத்தில் நடித்துள்ளனர்.



    ஷாருக்கான் தயாரிப்பில் முதல் முறையாக அமிதாப் நடிப்பது, ‘பட்லா’ திரைப்படம் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #ShahrukhKhan #AmitabhBachchan
    ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜீரோ’ படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். #shahrukhkhan #Dhanush #Zero
    இந்தி நடிகர் ஷாருக்கான் உடலை வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கம். தற்போது ‘ஜீரோ’ என்ற இந்தி படத்தில் குள்ள மனிதராக நடிக்கிறார். குள்ளமாக நடிக்கும் ஷாருக்கானின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

    இந்த படத்தை தனுஷ் நடித்த ‘அம்பிகாபதி’, மாதவன் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகிகளாக அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார்.

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த டீசரில் சல்மான் கானும், ஷாருக்கானும் இடம் பெற்றிருக்கிறார்கள்.



    10 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கானும் சல்மான் கானும் ஒரே படத்தில் தோன்றுவது இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பையிடம் 102 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததற்கு ஷாருக்கான அந்த அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். #IPL2018 #KKRvMI
    ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.

    பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 108 ரன்னில் சுருண்டது. சொந்த மைதானத்தில் எந்தவித போராட்டமும் இல்லாமல் சரணடைந்தது.



    நேற்றைய போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களின் ஒருவரான ஷாருக் கான் நேரில் கண்டு ரசித்தார். இந்த மோசமான தோல்வியால் அவர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதுகுறித்து ஷாருக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘விளையாட்டு என்பது ஸ்பிரிட் (Spirit) பற்றியது. வெற்றி தோல்வியால் அது பாதிக்காது. ஆனால் நேற்றைய தோல்விக்கு, அணியின் உரிமையாளராக உத்வேகத்தின் குறைபாட்டிற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    ×