என் மலர்

  நீங்கள் தேடியது "Sensitivity Training"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேளாண் ஏற்றுமதிக்கான விவசாயிகள் உணர்திறன் பயிற்சி வழங்கப்பட்டது.
  • 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொணடு, இறுதியாக விவசாயிகளின் கேள்விகளுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்ப ட்டன.

  விழுப்பரம்:

  தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம் சேலம் சார்பாக மாவட்ட அளவிலான வேளாண் ஏற்றுமதிக்கான விவசாயிகள் உணர்திறன் பயிற்சி விழு ப்புரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. வேளாண்மைதுணை இயக்குநர்கண்ணகி பயி ற்சியை தொடங்கி வைத்து பேசினார். வேளாண்மை உதவி இயக்குநர் (பயிற்சி) வேல்முருகன் ஏற்றுமதி, அடிப்படைமற்றும் ஆவணங்கள்குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

  மாவட்டகலெக்டர் நேர்முகஉதவியாளர் (வேளாண்மை) சண்முகம், தோட்டக்கலை துணை இயக்குநர் கார்ல்மார்க்ஸ், ஆகியோர் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைப் பொருட்களின் ஏற்றுமதி திறன் பற்றி பயிற்சி வழங்கினார். விருத்தாச்சலம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீராம் மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் அவற்றின் ஏற்றுமதி திறன் பற்றி பயிற்சி வழங்கினார். அப்பீடா சென்னை மாநில பொருப்பாளர் ஷோபனா இணையதளம் மூலமாக வேளாண் ஏற்றுமதியில் உட்கட்டமைப்பு, சந்தை மற்றும் தரத்தினை மேம்படுத்துதலில் அப்பீடாவின் பங்கு பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார். சென்னை வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சி அலுவலர் பாக்கியவேலு ஏற்றுமதி உரிமம் பெறும் வழிமுறைகள் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டங்கள் குறித்து பயிற்சி வழங்கினார். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொணடு, இறுதியாக விவசாயிகளின் கேள்விகளுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்ப ட்டன.

  ×