search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sempatti pullvetti lake"

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆத்தூர் காமராஜர் அணை முழுகொள்ளளவான 23.5 அடியை எட்டி மறுகால் சென்றது.
    • புல்வெட்டி குளம் நிரம்பியதால் இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான ஆடலூர், பன்றிமலை, தாண்டிகுடி, பெரும்பாறை உள்ளிட்ட பகுதியில் பெய்த தொடர் மழையால் ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆத்தூர் காமராஜர் அணை முழுகொள்ளளவான 23.5 அடியை எட்டி மறுகால் சென்றது. அணைக்கு மேலே கன்னிமார் கோவில் என்ற இடத்தில் இரண்டாகப் பிரிந்து மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் மழைதண்ணீர் ஒரு பகுதி காமராஜர் அணைக்கும், மற்றொரு பகுதி ராஜ வாய்க்கால் வழியாக சித்தையன்கோட்டை தாமரைக்குளம், அழகர்நாயக்கன்பட்டி குளம், வாடி குளம், செங்கட்டான் குளம் வழியாக, நிலக்கோட்டை கொங்கர் குளத்திற்கு செல்கிறது. இதில் ஒரு பகுதி தண்ணீர் செம்பட்டி பகுதிக்கு வருகிறது.

    தொடர் மழையால் கருங்குளம், நடுக்குளம் மற்றும் புல்வெட்டி குளம் நிரம்பி அதன் தண்ணீர் குடகனாறு வழியாக செல்கிறது. புல்வெட்டி குளத்திற்கு அதிக தண்ணீர் வரத்து இருந்தது.

    கருங்குளம், நடுக்குளம், புல்வெட்டி குளம் நிரம்பி மறுகால் செல்கிறது. இதனால், இந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் புல்வெட்டி குளத்தில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். புல்வெட்டி குளம் நிரம்பியதால் இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×