search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seminar"

    • சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • பாதுகாப்பு சட்டத்தில் உள்ள சிக்கல்களை மாண வர்களுக்கு எடுத்துரைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் குறித்த கருத்தரங்கு நடந்தது.

    சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகபாண்டி வரவேற்றார். கணினி பயன்பாட்டுத் துறை பேராசிரியர் கணேஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனிநபர் தரவுகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள சிக்கல்களை மாண வர்களுக்கு எடுத்து ரைத்தார்.

    முடிவில் சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் நிஷாந்த்குமார் நன்றி கூறினார்.

    • ஜெயங்கொண்டத்தில்பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
    • மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமை தாங்கினார்.

    ஜெயங்கொண்டம் 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமை தாங்கினார்.

    அரசு மருத்துவர் கீதா மணிவண்ணன் முன்னிலை வகித்தார். பீனிக்ஸ் பெண்கள் குழந்தைகள் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் கலந்துகொண்டு பெண் குழந்தைகள் உடல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் போது நண்பர்கள் மற்றும் பெற்றோர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் பெண்கள் கல்வி விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை செய்ய வேண்டும் என பேசினார்.

    நிகழ்ச்சியில் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருட் சகோதரிகள் சகாயராணி, நிர்மலா பிரான்சிஸ், இணை செயலாளர் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
    • ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    கந்தர்வகோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    தலைமை ஆசிரியர் தியாகராஜன் தலைமை தாங்கினார். நீலா சிவசங்கரி அனைவரையும் வரவேற்றார். புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, பாக்கியலெட்சுமி, மரிகார்லியா, பவானி, முத்து, பாக்கியலெட்சுமி , சாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நிலவில் ஆய்வை மேற்கொண்டது.ஆதித்யா-எல்.1 சூரியனை ஆய்வு செய்கிறது.
    • இளநிலை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் விண்வெளியில் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    வேதியியல் துறைத்தலை வர் ராஜராஜன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரோசி தலைமை வகித்தார்.வேதியியல் துறை உதவி பேராசிரியர் சித்திரவேல் அறிமுக உரையாற்றினார்.

    இதில் சந்திராயன்- 3, ஆதித்யா எல்- 1 என்ற தலைப்பில் சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநரும் சென்னை ஐ.ஐ.டி. கவுரவ பேராசிரியரும், விஞ்ஞானி யுமான பாண்டியன் பேசு கையில், இந்தியா, நிலவின் தென் துருவத்தில் உலகில் முதன்முதலாக கால் பதித்தது. சந்திராயன்-3 என்ற செயற்கைக்கோள் உதவியுடன் விக்ரம் லேண்டரை இறங்க வைத்து அதிலிருந்து பிரக்யான் ரோவர்என்பது நிலவில் ஆய்வை மேற்கொண்டது.ஆதித்யா-எல்.1 சூரியனை ஆய்வு செய்கிறது.

    இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், இப்போது இஸ்ரோவில் பல்வேறு ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத் திக்கொண்டு பணியாற்றி வருபவரும் சங்கரன் உங்களுக்கெல்லாம் வழிகா ட்டியாக உள்ளார்.

    இளநிலை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இஸ் ரோவில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது என்றார்.

    மேலும், மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். முடிவில் வேதியியல் துறை இணைப் பேராசிரியர் ஞானசுந்தரம் நன்றி கூறினார்.

    • பெண்ணுரிமை பாதுகாப்புக்காக நிறைய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
    • சட்டப்பணிகள் ஆணைகள் குழு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதித்துறையே இலவசமாக வக்கீலை நியமிக்கும்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். என்ஜி னீயரிங் கல்லூரியில் இளை ஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில் கல்லூரி முதல்வர் வேல்முருகன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். உதவி பேராசிரியர் சதீஷ் குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் திரிவேணி கலந்து கொண்டு பேசியதாவது:-

    சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணுரிமை பாது காப்புக்காக நிறைய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பெண்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ப்பட்டு ள்ளது. பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக போக்சோ போன்ற சட்டங்கள் உள்ளன.

    எனவே, சட்டத்தை பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது மிக அவசியம். குடும்ப நல சட்டம் பிரிவு -14 என்பதே பெண்ணுரிமை பாது காப்பதற்காக கொண்டு வரப்பட்டது. ஒரு பெண் தான் சார்ந்த முடிவுகளை தானே எடுப்பதற்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கு சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. சமூகம் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    அதனைத்தொடர்ந்து மூத்த வக்கீல் பிரபாகர் பேசுகையில், சட்டப்பணிகள் ஆணைகள் குழு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதித் துறையே இலவசமாக வக்கீலை நியமிக்கும். இந்த அமைப்பில் எந்த பிரச்சி னையாக இருந்தாலும் இங்கு அணுகலாம்.

    அவர்கள் சமரச நடுவர் ஒருவரை நியமித்து இரு தரப்பினரையும் அழைத்து பேசி பிரச்சினையை சுமூகமாக தீர்வு காண்பார்கள். இதில் பெண்கள், பட்டியலினத்த வர், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு இலவசமாக சட்ட உதவி வழங்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா காபிரியல், உதவி பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க செயலாளர் டேவிட் ஐ லிங், அனைத்து சங்க பொறுப்பா ளர் சந்தியாகு ஸ்டீபன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில்மாநில பேச்சு போட்டி- கருத்தரங்கம்
    • தமிழ்நாட்டின் ஆர்க்கிடெக்ட் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைப்பெற்றது.

     திருச்சி, 

    கலைஞர் கருணாநிதி நுற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மாநகர பொறியாளர் அணி சார்பில், மாநில தழுவிய பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம் அரியமங்கலம் எஸ்.ஐ.டி. கல்லூரியில் நடைப்பெற்றது. இதில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியும் நவீன தமிழ்நாட்டின் ஆர்க்கிடெக்ட் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைப்பெற்றது.

    மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தென்னரசு வரவேற்றார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஜியாவுதீன் , மாநகர பொறியாளர் அணி அமைப்பாளர் மெய்யப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.மாவட்ட - மாநகர பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் த.நடராஜன், கோ.சிபிசக்கரவர்த்தி, பாலசுப்ரமணியன், ப.நவநீதகிருஷ்ணன், கோவி.செல்வராஜ், ஆ.அசோக், சாக்ரடீஸ், செந்தில்ராம், தினேஷ்கண்ணா, மணிகண்டன், கிஷோர், ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .திருச்சி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த இளங்கலை - முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் ,ஐ.டி.ஐ .மாணவர்கள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு தொழில்நுட்ப கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர், தொழில்துறையை உயர்த்திய தமிழின தலைவர், திராவிட மாடலும் திறன்மிக்க கல்வியும், தெற்கு சூரியன், கலைஞரும் தமிழும் என்ற தலைப்பில் பேசினர்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பொறியாளர் அணி மாநிலச்செயலாளர் கு.கருணாநிதி, மாநகர செயலாளர் மு.மதிவாணன், கவிஞர் நந்தலாலா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர் . இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில அணி செயலாளர்கள் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், அ.த.த.செங்குட்டுவன், என்.செந்தில், நூர்கான், சந்திர மோகன், பொன்.செல்லையா, சரோ ஜினி,தமிழ்ச்செல்வம், கே.கே.கே.கார்த்திக், மணிமேகலை, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள நீலமேகம், கே.எஸ்.எம். கருணாநிதி, எஸ். சிவக்குமார், எம்.பழனியாண்டி, எம்.ஆர்.டி.பி.கே.தங்கவேல் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர பொறியாளர் அணி தலைவர் இன்பா நன்றி கூறினார். 

    • மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப ஒரு நாள் கருத்தரங்கு சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெற்றது.
    • தூத்துக்குடி மென்பொருள் பயிற்சியாளர் ரியாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப ஒரு நாள் கருத்தரங்கு சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வாவு வஜுஹா வனிதையர் கல்லூரி, பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, கோவிந்தம்மாள் கலைக்கல்லூரி, பிஷப் கால்டுவெல் கலைக்கல்லூரி, ஏ.பி.சி. மகாலட்சுமி கலைக்கல்லூரி மற்றும் பல கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்துறை பிரிவு தலைவர் ஜெயசுதா பெர்சியா தலைமை தாங்கினார். கல்லூரி பொறுப்பு முதல்வர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

    ஏ.பி.சி. மகாலட்சுமி கலைக்கல்லூரி கணித துறை விரிவுரையாளர் பெலிஸ்டா சுகிர்த லிசி, வாவு வஜுஹா வனிதையர் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் சிதி சமீலா, தூத்துக்குடி மென்பொருள் பயிற்சியாளர் ரியாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கபட்டனர். சாயர்புரம் போப் கல்லூரி தகவல் தொழில்நுட்ப பிரிவு பேராசிரியை சகாய ஹென்ஸி நன்றி கூறினார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

    • இந்திய உழவர் கூட்டுறவு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • யூரியா உரத்தால் மண் வளம் பாதிப்பை தவிர்க்க விளக்கம் அளிக்கப்பட்டது.

    மதுரை

    இந்திய உழவர் கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரை மண்டல இணைப்ப திவாளர் சி.குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டு றவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    விவசாய பெருமக்கள் அதிக அளவு யூரியா உரம் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படுவதை தவிர்த்திட இப்கோ, நானோ யூரியா, இப்கோ டி.ஏ.பி. மற்றும் சகாரிக்கா உரங்கள் பயன்படுத்துவதற்கான வழி முறைகள் குறித்து இப்கோ நிறுவன அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கூட்டுறவு விற் பனை இணையம் (டான் பெட்) துணைப் பதிவாளரும், மண்டல மேலாளருமான ச.பார்த்திபன், டான்பெட் நிறுவன புதிய தயாரிப்பு உரங்களின் சிறப்புகள் பற் றியும், விவசாயிகள் பயன் பெறும் வகையில் டான் பெட் புதிய தயாரிப்பு உரங் கள் பெற்று விநியோகம் செய்திடுமாறும் தெரிவித்தார். இதில் இப்கோ நிறுவ மாநில விற்பனை மேலாளர், டான்பெட் எரியோடு உர ஆலை வல்லுநர், கூட்டுறவுத் துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • மயிலாடுதுறையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • அதி வேகமாக செல்லும் வாகனத்தால் விபத்து ஏற்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தங்கத்திற்கு மாநில அமைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார்.

    மாநிலத் துணைச் செயலாளர் ராஜாராமன் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் ஜெயசங்கர் மாவட்ட ஆட்சி மன்ற குழு அமைப்பாளர் அன்வர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செல்வமுத்து குமணன் வரவேற்றார்.

    சிறப்புரையாக பட்டிம ன்றம் நடுவர் சரவணன், முனைவர் தனவேலன், முருகானந்தம், மாவட்ட செயலாளர் கனகசபை, ஆகியோர் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வை பற்றி விளக்கி கூறினர்.

    கருத்தரங்கில் இரு சக்கரம், நான்கு சக்கரம் வாகனங்களை செல்லும் சிலர் அதி வேகமாக வாகனங்களை இயக்கி சாலையில் செல்லும் பொது மக்கள் மாணவ மாணவிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர் அவர்கள் மீது வாகனத்தை பரிமுதல் செய்து சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல மாவட்ட கிராமங்களில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைகள், ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டுப்பட்ட சாலைகள் பல இடங்களில் சேதம் அடைந்து உள்ளது.

    அதனை சீரமைத்து தர வேண்டும்.

    மயிலாடு நகராட்சி நகர பகுதிகளில் பாதாள சாக்கடை பல இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது தொற்றுநோய் பரவி வரும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கலிய மூர்த்தி, சுவாமிநாதன், தர்மரா ஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் குருமூர்த்தி நன்றி கூறினார்.

    • வில்சன் பாஸ்கர், வரைபடத்தில் தீர்க்கும் தொகுப்புகள் பற்றி விளக்கம் அளித்து பேசினார்.
    • கருத்தரங்கில் 12 கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் 'தூய மற்றும் பயன்பாட்டு கணிதம்' என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

    கருத்தரங்கில் திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகத்தின் கணிதத்துறை பேராசிரியர் சுரேஷ் சிங், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி கணிதத்துறை பேராசிரியர் வில்சன் பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் சுரேஷ்சிங், வரைபட கோட்பாடுகள் பற்றியும், அதன் வாழ்நாள் பயன்பாடுகள் குறித்த வரைபடம் மற்றும் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் பேசினார். வில்சன் பாஸ்கர், வரைபடத்தில் தீர்க்கும் தொகுப்புகள் பற்றி விளக்கம் அளித்து பேசினார்.

    முன்னதாக சிறப்பு விருந்தினர்களை கல்லூரி கணிதத்துறை தலைவர் பசுங்கிளி பாண்டியன் அறிமுகம் செய்து வைத்து, வரவேற்று பேசினார். இதில், துறை தலைவர்கள் பாலு, வேலாயுதம், கவிதா, அந்தோணி சகாய சித்ரா, ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் மற்றும் பல்துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    இக்கருத்தரங்கில் 12 கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெவ்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் மூலம் 42 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. கருத்தரங்க ஏற்பாடுகளை கணிதத்துறை பேராசிரியர்கள் ெசய்திருந்தனர். கருத்தரங்க அமைப்பு ெசயலாளர் சரண்யா நன்றி கூறினார்.

    • ஆண்டிமட விவசாயிகளுக்கு கூழ் மரம் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்
    • தேவனூர் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஆண்டிமடம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதிகளில் நிலக்கரி சுரங்க பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, திரும்ப விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட நிலங்களில் குறுகிய காலத்தில் கூழ் மரம் சாகுபடி செய்து அதிக வருமானத்தை ஈட்டும் வகையில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் சார்பாக தேவனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வனத்துறை சார்பாக வனச்சரக அலுவலர் சரவணகுமார் பங்கேற்று வனத்துறை திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.கூட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன உதவி பொதுமேலாளர் ரவி தலைமை தாங்கினார். கருத்தரங்கில் உதவி பொது மேலாளர் ரவி, முதுநிலை மேலாளர் செழியன், துணை மேலாளர் பிரசாத் மற்றும் தேவனூர் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சவுக்கு, தைலமர மரக்கன்றுகள் கருத்தரங்கில் பார்வைக்காக வைக்கப்பட்டது.

    • மாணவிகளிடையே பொருட்கள் வழி தோன்றல்கள் மற்றும் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்
    • கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வேலாயுதம்பாளையம்  

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல், வணிகக் கணினிப் பயன்பாட்டில், வணிக மேலாண்மை, தொழிற்சார் கணக்கியல் ஆகிய துறைகள், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் உடன் இணைந்து ஒரு நாள் ஆய்வு கருத்தரங்கை கல்லூரி கலையரங்கில் நடத்தினார்கள்.

    மாணவிகளிடையே பொருட்கள் வழி தோன்றல்கள் மற்றும் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வியாபார யுக்திகளை மேம்படுத்தும் வகையில் இக்கருத்தரங்கு அமைந்திருந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான நடேசன் தலைமை வகித்தார்.

    தாளாளர் கோதை நடேசன், செயலாளர் இன்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை வழங்கினர்.

    கல்லூரியின் வணிகக் கணினிப் பயன்பாட்டியல் துறை தலைவர் முனைவர் கன்னியம்மாள் வரவேற்புரை வழங்கினார், துணை முதல்வர் முனைவர் ரதிதேவி வாழ்த்துரை வழங்கினார்.

    வணிகவியல் துறை தலைவர் யமுனா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். வணிகத் தொழிற்சார் கணக்கியல் துறை தலைவர் சுதா நன்றியுரை வழங்கினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×