search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seller"

    • சத்தியமங்கலம் அருகே மளிகை கடையில் ஹான்ஸ்-புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டனர்
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 475 கிராம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

     ஈரோடு:

    சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் குட்டி அண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சத்தியமங்கலம் அடுத்த கோட்டுவீராம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்குபேட்டை அடுத்த கோட்டுவீராபாளையம் பகுதில் உள்ள மளிகை கடையை சோதனை செய்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறிய வெள்ளை சாக்கு பை ஒன்று இருந்தது.

    அதனை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 475 கிராம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சதாசிவம் (29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • மேலும் அவரிடமிருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் 13 ஆயிரத்து 750 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் ராஜா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் சரத்குமார் அங்குள்ள பேக்கரி கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு அறிமுகமான செல்வம் என்பவர் வந்து 3 இலக்க எண்கள் பேனாவில் எழுதப்பட்ட வெள்ளை சீட்டுகளை காட்டி மேற்படி சீட்டுகளை வாங்கினால் உங்களுக்கு பரிசு நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லியுள்ளார்.

    அதற்கு சரத்குமார் தன்னிடம் பணமில்லை என்று கூறி வந்துவிட்டார். இதேப்போல் ஏற்கனவே அவர் பலரிடம் லாட்டரி சீட்டில் பணம் விழும் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் 13 ஆயிரத்து 750 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×