search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selection"

    • பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

    பரமக்குடி

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ராமநாதபுரம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி லக்சிதா ஸ்ரீ 579 மதிப்பெண்களும், மாணவர்கள் அதீஸ்வரன் 576 மதிப்பெண்களும், பாலாஜி 571 மதிப்பெண்களும் பெற்றனர்.

    அதேபோல் தரணி என்ற மாணவி பொருளியல், கணக்குப்பதிவியல் ஆகிய படங்களில் தலா 100 மதிப்பெண்களும், மாணவன் பிரவீன் பாண்டி வணிகவியல், வரலாறு ஆகிய பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தனுஸ்ரீ என்ற மாணவி கணிப் பொறியியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவி துர்கா கணிப்பொறியியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவன் இந்திரஜித் தாவரவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவி பிரியா வணிகவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும் பெற்றனர்.

    இந்த மாணவ-மாணவிகளை பள்ளியின் கல்வி குழு தலைவர் ராசி போஸ், இணைத்தலைவர் பாலுசாமி, பள்ளியின் தாளாளர் லெனின் குமார், ஆயிர சபை செயலாளர் செல்வராஜ், கவுரவ செயலாளர் வக்கீல் செந்தில்குமார், தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர், உதவி தலைமை ஆசிரியை சுமதி, கல்விக்குழு உறுப்பினர்கள் சுதர்சன், பூபாலன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

    • உத்தமர் கோவிலில் சித்திரை தேராட்டம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதுமான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் உத்தமர்கோவில் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் புருஷோத்தம பெருமாளுக்கு ஆதியில் சத்கீர்த்திவர்த்தனன் என்கிற சோழ அரசரால் ஏற்படுத்தப்பட்ட சித்திரை பெருந்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து புருஷோத்தம பெருமாள் அனுதினமும் முறையே சூரியபிரபை வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம் யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் புருஷோத்தம பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு புருஷோத்தம பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் புருஷோத்தம பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதனைத்தொடர்ந்து கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் கோவிலை சுற்றி தேரோடும் வீதியில் வீதியுலா வந்து நிலையை அடைந்தது. இந்த தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர் வழங்கப்பட்டது.

    • விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் 13-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது.
    • சிறப்பு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் அரசுத்தேர்வுகள் இயக்குநர் அறிவிக்கையின்படி, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு அரசுப் பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதிவரை நடைபெற உள்ளது. விருதுநகர் கல்வி மாவட்ட த்தில் 44 தேர்வுமையங்களும், 2 தனித்தேர்வர்களுக்கான தேர்வு மையங்களும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 53 தேர்வுமையங்களும், 1 தனித்தேர்வர்களுக்கான தேர்வுமையத்திலும் தேர்வு நடைபெற உள்ளது.

    இந்த தேர்வில் வருவாய் மாவட்ட அளவில் 12-ம் வகுப்பில் 23 ஆயிரத்து 368 தேர்வர்களும், 11-ம் வகுப்பில் 22 ஆயிரத்து 36 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வுகளில் மாற்றுத்தி றனாளி மாணவர்களாக 12-ம் வகுப்பில் 105 தேர்வர்களும், 11-ம் வகுப்பில் 102 தேர்வர்களும் தேர்வெழுத உள்ளனர். இந்த தேர்வுகளில் 104 முதன்மை கண்காணிப்பா ளர்களும், 104 துறை அலுவலர்களும், 1236 அறைக்கண்கா ணிப்பா ளர்ளும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சொல்வதை எழுதுப வர்களாக 110 ஆசிரியர்களும் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    அனைத்து தேர்வு மையங்களையும் கண்காணிக்க பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 மில்லியன் பயணிகளை கையாண்ட பிரிவில் சிறந்த விமான நிலையமாக தேர்வு
    • விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி பேட்டி

    கே.கே.நகர், 

    திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் அனைத்திலும் விமான நிலைய சேவை மற்றும் தரத்தினை கையாளும் குழுவின் சார்பில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்ப–டும். அந்த வகையில் 28 விமான நிலையங்களிலும் மேற்கண்ட குழுவின் சார் பில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.இவ்வாறு மேற்கொள்ளப் படும் ஆய்வில் விமான நிலையத்தில் ஒவ்வொரு நிலைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகா–ரிகளின் பணிகள், பயணிக–ளுக்கான சேவையின் போது மன நிறைவு அளிக்கும் வகையில் உள்ளதா என ஆய்வு நடத்தப்படும்.பாதுகாப்பு, சுங்கத்துறை, குடியுரிமை பிரிவு, விமான நிறுவனங்களின் சேவை போன்ற பல்வேறு பிரிவுக–ளின் மூலம் மேற்கண்ட குழுவின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சிறந்த விமான நிலையம் தேர்வு செய்யப்படுவது வாடிக் கையாகும்.

    அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடத் தப்பட்ட சோதனையில் 2 மில்லியன் பயணிகளை கையாளும் விமான நிலைய பட்டியலில் திருச்சி விமான நிலையம் பசிபிக் நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் முதலி–டத்தை பிடிததுள்ளது.அத்துடன் பயணிகள் விரும்பும் வகையில் சேவை வழங்கி வருவதாகவும் மேற்கொள்ளப்பட்ட ஆய் வின் மூலம் அறிக்கை அளிக் கப்பட்டது. மேலும் வளர்ந்து வரும் விமான நிலையங்க–ளில் அதிக அளவில் பயணிகளை கையாளும் திறன் கொண்ட விமான நிலையமாகவும் அதனை தற்போது அதிகரித்து வரும் பயணிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையம் ஆசிய பசிபிக் நாடுகளில் 2 மில்லியன் பயணிகளை கையாளும் பிரிவில் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இந்தோனே–சியாவில் உள்ள மற்றொரு விமான நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறி–னார்.

    • 300 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
    • சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நன்முறையில் பயிற்சி வழங்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் ஆப்த மித்ரா - பேரிடர் கால நண்பன் பேரிடர் மீட்பாளார்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சியின் முதற்கட்டமாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது 300 தன்னார்வலர்களுக்கு 9 கட்டங்களாக இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் மூலம் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நன்முறையில் பயிற்சி வழங்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

    இயற்கை பேரிடர்களின் போது அவசர சூழ்நிலைகளில் சமுதாயத்திற்கு உதவி வழங்கிடவும், தன்னார்வ கலாச்சாரத்தை ஊக்குவித்திடவும் கடினமான சூழ்நிலைகளில் சமுதாயத்திற்கு சேவை செய்திடும் வகையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பணிகள் மேற்கொள்ள தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

    இப்பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் பேரிடர்களின்போது பாதிக்கப்படும் பகுதிகளை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் அடையும் வரை உடனடி பதில் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 6500 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 300 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    பயிற்சி பெறும் தன்னார்வலர்கள் அனைவரும் மனித நேயத்துடன் மற்றும் மதிப்புடனும் நடந்து கொள்ளவேண்டும். தேசியம், இனம், பாலினம், கருத்துக்கள் அல்லது மத நம்பிக்கைகளுக்கு எதிரான பாகுபாடு இல்லாமல் கடமைகளை மேற்கொள்ளவேண்டும். தன்னார்வ தொண்டு புரிதலின் அவசியத்தை புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 300 தன்னார்வலர்களும் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்பில் 12 நாட்கள் தங்க வைக்கப்பட்டு, சிறந்த பயிற்றுநர்களால் அவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    அவர்கள் பயிற்சி பெற்றமைக்கு அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மனோ பிரசன்னா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், ரெட் கிராஸ் சேர்மன் வரதராஜன், துணைத் தலைவர் முத்துக்குமார், பொருளாளர் ஷேக் நாசர், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, வரும் மார்ச் 13, 14ல், அரசு பொதுத்தேர்வு துவங்க உள்ளது.
    • நாமக்கல் மாவட்டத்தில், தொடங்கிய செய்முறை தேர்வு,இன்று, நாளை, 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். செய்முறை தேர்வுக்காக 147 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, வரும் மார்ச் 13, 14ல், அரசு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இந்த நிலையில், முதற்கட்டமாக, பிராக்டிக்கல் தேர்வு, மாநிலம் முழுவதும் துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்து வரும், 198 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்கின்றனர். பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வில், 17 ஆயிரத்து 810 பேர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 19 ஆயிரத்து 877 பேர் என, மொத்தம், 37 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள், மேல்நிலைக்கல்வி அரசு பொதுத்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில், தொடங்கிய செய்முறை தேர்வு,இன்று, நாளை, 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். செய்முறை தேர்வுக்காக 147 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில், முதன்மை கண்காணிப்பாளர் தலைமையில், புற தேர்வு, அக தேர்வு மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டு, செய்முறை தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண்களை அளிப்பார்கள். இந்த மதிப்பெண்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் இடம்பெறும். பிராக்டிக்கல் தேர்வுக்கான ஏற்பாடுகளை, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்ேததியும், பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் வருகிற 14-ந்தேதியும் தொடங்குகிறது.
    • சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதும் இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே மாணவர்களின் விபரங்கள் அடங்கிய முகப்பு பக்கங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை விடைத்தாளுடன் தைக்கும் பணி நடந்து வருகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்ேததியும், பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் வருகிற 14-ந்தேதியும் தொடங்குகிறது.

    மாநிலம் முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதும் இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே மாணவர்களின் விபரங்கள் அடங்கிய முகப்பு பக்கங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை விடைத்தாளுடன் தைக்கும் பணி நடந்து வருகிறது.

    செய்முறை தேர்வு தொடங்கியது

    இதனிடையே பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கியது. வருகிற 7-ந்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 325 அரசு பள்ளிகள், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 16,706 மாணவர்கள், 19,436 மாணவிகள் என மொத்தம் 36,142 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதுகின்றனர்.

    இதேபோல் 18,830 மாணவர்கள் 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதுகின்றனர். இதுதவிர தனித்தேர்வர்களும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

    ஆர்வம்

    செய்முறை தேர்வில் இம் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று எழுதினர். பள்ளி ஆய்வகத்தில் மாணவ- மாணவிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட செய்முறையை உடனுக்குடன் ஆய்வு செய்து காட்டினர்.

    ஒரு சில பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று, தேர்வு முறையாக நடைபெறுகிறதா?, ஆய்வக கூடத்தில் போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், செய்முறை தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அட்டவணை

    இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், மனையியல், ெதாழிற்கல்வி, உள்ளிட்ட பாடங்களுக்கு தனித்தனி அட்டவணைகளில் மாண வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பட நடத்தப்படுகிறது. செய்முறைத் தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் மேற்கொண்டுள்ளனர்.

    • பள்ளி வளாகத்தில் 20 பேர் வீதம் 18 அறைகளில் நடைபெற்றது.
    • அந்தந்தப்பள்ளி ஆசிரியர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகைக்காக தேர்வு நேற்று நடைப்பெற்றது.

    இதில் முத்துப்பேட்டை வட்டாரத்தில்உள்ள த.கீழக்காடு, கல்லடிக்கொல்லை, பெருக வாழ்ந்தான், காடுவெட்டி, ஆரியலூர், மககலூர், பெத்தவேளாண்கோட்டகம், புதுத்தெரு, ஆசாத்நகர்உட்பட 35அரசு பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் 357பேர் இந்த தேர்வை எழுதினர்.

    இந்த தேர்வு பள்ளி வளாகத்தில் உள்ள 20 பேர் வீதம் 18 அறைகளில் நடைபெற்றது.

    இந்த தேர்வுக்கு முதன்மை கண்காணிப்பாளராக பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை தமிழ்ச்செல்வி செயல் பட்டார்.

    துறை அலுவலராக முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் மேற்பா ர்வையில் ஈடுபட்டனர்.

    முன்னதாக பள்ளி வளாகத்திற்கு தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு அந்தந்தப்பள்ளி ஆசிரியர்கள் மூலம் அடையாளம் கண்டு அவர்களை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது.

    மேலும் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    • ஆண்டு பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வாணவேடிக்கை நிகழ்ச்சியும், தப்பாட்டமும் நடைபெற்றது.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மாதா கோவிலின் உபகோவிலான பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிகக்ப்பட்ட சப்பரத்தில் மைக்கல்ச ம்மனசு, புனித அந்தோனியார், செபஸ்தியார், எழுந்தருளிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

    அதனைதொடர்ந்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், தப்பாட்டமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை முக்குலத்தோர் கத்தோலிக்க சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

    • தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

    சேலம்:

    தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

    அதன்படி தமிழகத்தில் 2022-2023ம் கல்வியாண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான என்எம்எம்எஸ் தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி- 25ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இத்தேர்விற்கான விண்ணப்பங்களை வரும் 26-ம் தேதி முதல் ஜனவரி 20-ம் தேதி வரை, https://dgel.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து, மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமை யாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் . இதற்கான கடைசி நாளாக ஜனவரி 24-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • மாநில அளவில் நடக்கவுள்ள போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவர், குழுவினர் விபரங்களை மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
    • கும்மிநடனம், நடனம் (செவ்வியல்) ஆகிய நான்கிலும் முதலிடம் பெற்று 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அசத்தியுள்ளது.

    திருப்பூர்:

    மாநில அளவிலான கலைத்திருவிழாவுக்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 120 தனிநபர், 390 குழு நபர்கள் என மொத்தம் 510 பேர் தேர்வாகினர். அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்த பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் கலைத்திருவிழா பள்ளிகல்வித்துறையால் நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட அளவிலான தனிநபர், குழு போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மாநில அளவில் நடக்கவுள்ள போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவர், குழுவினர் விபரங்களை மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தனிநபர் பிரிவில் 120 பேரும், குழுபிரிவில் 390 பேரும் தேர்வாகியுள்ளனர்.

    தனிநபர் போட்டிகள்

    செவ்வியல் இசை - அனுமிதா (ஜெய்வாபாய் பள்ளி ), நாட்டுப்புற பாடல் - மீனா (குன்னத்தூர்) மெல்லிசை தனிப்பாட்டு - யோகேஸ்வரி (சோமன் கோட்டை - மூலனூர்), வாத்திய கருவிகள், கம்பிகருவி - நிரஞ்சன் (நெசவாளர் காலனி), காற்றுக்கருவி, தோல்கருவி இரண்டிலும் தபாஸ்ரீதரன் (கொழிஞ்சிவாடி, தாராபுரம்). அழகு கையெழுத்து தமிழ் - கார்த்திகா (எருகாம்பட்டி, குண்டடம்), ஆங்கிலம், -லிக்கித் கோகுல் (ப.வடுகபாளையம்), ஓவியம் - ஸ்ருதி (பாண்டியன் நகர்), களிமண் சுதை வேலைப்பாடு - வடுகபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொங்கலுார்.

    செதுக்கு சிற்பம் - இந்திரேஷ்குமார் (கணபதிபாளையம், வெள்ளகோவில்), மனதில் பதிந்த இயற்கை காட்சி வரைதல் - சர்வேஷ் (கானூர்புதூர்), வரைந்து வண்ணம் தீட்டுதல் - லோகேஸ்வரி (ஆண்டிபாளையம்), செவ்வியல் நடனம் தனிநபர் - தாரணி (பூலுவப்பட்டி), பிறவகை நடனம், ராகுல் (அலங்கியம்), மேற்கத்திய நடனம், ஜீவாஸ்ரீ (குன்னத்தூர்). தனிநபர் நடிப்பு - விஸ்வா, (செம்பாகவுண்டம்பாளையம், அவிநாசி). நகைச்சுவை - பிரதீப் (முத்துார்), பலகுரல் பேச்சு - தேவராஜ் (முத்தூர்), கட்டுரை போட்டி ஆங்கிலம் - ரம்யா (முத்தூர்), தமிழ் - தனுஸ்ரீ (சிறுபூலுவப்பட்டி), கதை எழுதுதல் தமிழ் - மதுஸ்ரீ (வீரணாம்பாளையம், காங்கயம்). ஆங்கிலம் - மதுமிதா (15 வேலம்பாளையம்).

    கதை சொல்லுதல் - பரத், (லிங்கமநாயக்கன் பாளையம், குடிமங்கலம்), கவிதை - தனுஷியா (எஸ்.எஸ்., புதூர், உடுமலை), திருக்குறள் ஒப்புவித்தல் - அனுஸ்ரீ (நரசிங்கபுரம், தாராபுரம்), பேச்சு போட்டி ஆங்கிலம் - சாருநேத்ரா (பழனியம்மாள் பள்ளி, திருப்பூர்), தமிழ் - காத்தவராயன் (முத்தூர்).

    குழு போட்டிகள்

    இசை வில்லுப்பாட்டு: கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கிராமிய நடனம்: அரண்மனைப்புதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, குழு நடனம்: அரசு மேல்நிலைப்பள்ளி, ராக்கியாபாளையம் (அவிநாசி). பிறவகை நடனம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திம்மநாயக்கன்பாளையம் (ஊத்துக்குளி), மேற்கத்திய நடனம்: பழையகோட்டைபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (காங்கயம்), நாடகம்: அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. மொழித்திறன் போட்டி: இசை (மனித நேய பாடல் பிரிவு), கும்மிநடனம், நடனம் (செவ்வியல்) ஆகிய நான்கிலும் முதலிடம் பெற்று 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அசத்தியுள்ளது. 

    • பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
    • பணியாளர் தேர்வாணையத்தால்(எஸ்எஸ்.சி) அறிவிக்கப்பட்டுள்ள உள்ளஎஸ்.எஸ்.சி.(சிஎச்எஸ்எல்) தேர்வுக்கான இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாளர் தேர்வாணையத்தால்(எஸ்எஸ்.சி) அறிவிக்கப்பட்டுள்ள உள்ளஎஸ்.எஸ்.சி.(சிஎச்எஸ்எல்) தேர்வுக்கான இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது.

    இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வழியாக டி.என்.பி.எஸ்.சி., எஸ்எஸ்சி., ஐபிபிஎஸ்., போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கங் லோயர் டிவிசனல் கிளார்க், ஜூனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டெண்ட், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் போன்ற பதவிகளில் 4500 பணிக்காலியிடங்களுக்கு 6.12.2022 அன்று பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எஸ்.எஸ்.சி.(சிஎச்எஸ்எல்) தேர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 04.1.2023.

    இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன் முழுவிவரம் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

    இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் 4-வது தளத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 8.12.2022 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறும்மாறும் கூடுதல்விவரங்களுக்கு 0421-2971152 மற்றும் 9499055944 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.  

    ×