search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sekar Babu"

    • போதிய வருமானம் இல்லாத கோயிலாக இருந்தாலும் ஆணையர் நிதி ஒதுக்கீடு செய்து தேர் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • முழுமையான பணிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிக்கப்பட்டு திறக்கப்படும்.

    சட்டப்பேரவையில் இன்று வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலுக்கு நான்கு சிறு திருத்தேர்கள் அமைத்துதர அரசு ஆவன செய்யுமா என்றும், அவ்வையாருக்கு மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் அ.தி.மு.க .உறுப்பினர் ஓ.எஸ் மணியன் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, போதிய வருமானம் இல்லாத கோயிலாக இருந்தாலும் ஆணையர் நிதி ஒதுக்கீடு செய்து தேர் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டித் தரப்படும் என கடந்த 2022-23 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டதாகவும், இந்த மணிமண்டபம் தொடர்பான வரைபடம் முதலமைச்சரும் காண்பிக்கப்பட்ட போது இன்னும் சிறப்பாக அமைக்க வலியுறுத்தியதால், மறு வடிவம் செய்யப்பட்டு வருகிறது எனவும், ரூ.12 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதோடு, விரைவில் இதற்கான முழுமையான பணிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்றும், இந்த நிகழ்வில் அ.தி.மு.க. உறுப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    • சேகர்பாபு ஏற்கனவே அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியோடு ஒன்றாக இருந்தவர்தான்.
    • தி.மு.க.வில் இணைந்து இப்போது அமைச்சராக இருக்கிறார்.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனத்தை போல 4 நாட்கள் மழை பெய்ததே எங்களை போல் வீதியில் இறங்கி சுற்றினீர்களா? இல்லை நிவாரண பணிகளை செய்தீர்களா? எங்கெங்கு தண்ணீர்கள் தேங்கி இருக்கிறது என்பதை பார்த்தீர்களா? எதுவும் செய்யாமல் வீட்டில் இருந்து கொண்டே கேள்வி கேட்பதா என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி எழுப்பி இருக்கிறார். அதாவது சென்னையில் மழை நீர் தேக்கத்திற்கு அரசு எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியதற்குத்தான் இப்படி ஒரு கேள்வியை சேகர்பாபு எழுப்பி இருக்கிறார்.

    நாங்கள் வீதி, வீதியாக சென்று எங்கெங்கெல்லாம் தண்ணீர் தேங்கி இருக்கிறதோ அதை வடிய செய்வதற்கு ஏற்பாடு செய்தோம். மக்களுக்கு உதவி செய்தோம். உங்கள் ஆட்சி காலத்தில் நீங்கள் எதுவுமே செய்யாததால்தான் இப்போது இந்த தண்ணீர் தேக்கமும். எங்களுடைய நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என்று கூறினார். சேகர்பாபு ஏற்கனவே அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியோடு ஒன்றாக இருந்தவர்தான். தி.மு.க.வில் இணைந்து இப்போது அமைச்சராக இருக்கிறார். இதை குறிப்பிட்டு தன்னோடு இருந்த நிர்வாகிகளிடம் எடப்பாடி சொன்னாராம்.... "இப்போது அவர் கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் போயிருக்கிறார். அதை நாம் கேட்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். காலம் இனியும் மாறத்தான் செய்யும்" என்றாராம்.

    • பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் வழங்கப்படுகிறது.
    • கோவில் பிரசாதம், மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    சென்னை :

    தமிழகத்தில் பொதுமக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டு போற்றி வருவதோடு, ஒரே நாளில் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவதை பெருவிருப்பமாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு, இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் 'தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவ கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிக பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.

    இதனை செயல்படுத்தும் வகையில், கடந்த ஆடி மாதம் புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத்துறையுடன், இந்து சமய அறநிலையத்துறை இணைந்து ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சை ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைதோறும் குறைந்த கட்டணத்தில் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிக சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிக சுற்றுலாவை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    அதேபோல், 2-ம் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயல் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீர ராகவபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். இந்த 2 திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன். இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், சுற்றுலாத்துறை இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, கூடுதல் கமிஷனர் சி.ஹரிப்ரியா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொது மேலாளர் பாரதி தேவி, இணை இயக்குனர் பி. புஷ்பராஜ், இணை கமிஷனர்கள் ஆர்.சுதர்சன், ந.தனபால், கே.ரேணுகா தேவி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • பத்து திருக்கோயில்களில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
    • இவ்வாண்டு மேலும் ஐந்து திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று அந்த துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:

    இந்த ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் 165 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு ஒவ்வொன்றாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து  கோயில்களில் நடைபெற்று வருகிறது.

    இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

    பத்து திருக்கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் தற்போது பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு மேலும், ஐந்து திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

    121 திருக்கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் பசு மடங்கள் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மேலும், பசுமைத் திருக்கோயில்கள் திட்டத்தின் கீழ் 5 திருக்கோயில்களின் அன்னதானக் கூடங்களில் பசுமை எரிவாயு திட்டம் ரூ.1 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

    திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள் வாடகை நிலுவைத் தொகையை வசூலிக்கவும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்களில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அந்தந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்விற்கு சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு
    • பிரச்சினைகளுக்கு சுமூக முடிவு காணப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

    சிதம்பரம்:

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலின் வரவு-செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் (புதன்கிழமை) ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு நோட்டீசு அனுப்பி இருந்தனர். அறநிலையத்துறையினர் ஆய்வின்போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்விற்கு சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    முன்னதாக நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கனகசபையில் ஏறி நடராஜரை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் பொது தீட்சிதர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீட்சிதர்களின் கோரிக்கைகளின் நிலைப்பாடுகளையும், அரசின் நிலைப்பாடுகளையும் பகிர்ந்து கொண்டோம் என்றார்.

    அனைவருக்கும் சமமான நீதி வழங்க வேண்டும், அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது, யாருக்கும் எந்த விதமான பாதிப்பு ஏற்படாமல் சுமுகமான சூழ்நிலை ஏற்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர் பாபுவின் தந்தை உடலுக்கு மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். #DMK #MKStalin
    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்.எல்.ஏ.யின் தந்தை பி.கிருஷ்ண சாமி. இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரான இவர் ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெருவில் வசித்து வந்தார்.

    உடல் நலக்குறைவால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணசாமி இன்று காலை காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விரைந்து சென்று கிருஷ்ணசாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சேகர்பாபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எவ.வேலு, எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், தாயகம் கவி, ஜெ.அன்பழகன், ரவிச்சந்திரன் மற்றும் வி.ஜி.ராஜேந்திரன், ஆர்.டி. சேகர் உள்பட பகுதி மற்றும் வட்ட செயலாளர்கள் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    கிருஷ்ணசாமிக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும் தேவராஜ், சேகர் பாபு என்ற 2 மகன்களும் பிரமிளா, லதா, சுமதி, காந்திமதி என்ற 4 மகள்களும் உள்ளனர். இறுதி சடங்கு ஓட்டேரி இடுகாட்டில் நாளை (புதன்) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
    ×