search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure of cannabis"

    • சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசாரை பார்த்ததும் ேமாட்டார் சைக்கிளை திருப்பி தப்பி செல்ல முயற்சி செய்தனர். போலீசாரை பார்த்ததும் ேமாட்டார் சைக்கிளை திருப்பி தப்பி செல்ல முயற்சி செய்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் அடுத்துள்ள வெள்ளகிணர் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி ராஜபாண்டியன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஞானராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திலக் உள்ளிட்ட போலீசார் வெள்ளகிணர் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவை சரவணம்பட்டியில் இருந்து வெள்ளகிணர் பிரிவு அருகே ேமாட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் ேமாட்டார் சைக்கிளை திருப்பி தப்பி செல்ல முயற்சி செய்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 21 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    அதில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த காத்தாடி என்கிற லக்கு சாமி (வயது 28), கூல் என்கிற அஜித்குமார் (24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கஞ்சாவை வாங்கி கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வதும், வரும் வழியிலேயே 2 லட்சம் ரூபாய்க்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். லக்கு சாமி மற்றும் அஜித்குமார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். 

    ×