search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seed"

    • 1லட்சத்து 10 ஆயிரத்து 542 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • 187 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று வியாழக்கிழமை 187 விவசாயிகள் கலந்து கொண்டு 1லட்சத்து 10 ஆயிரத்து 542 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 13 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.71.99க்கும், குறைந்தபட்சம் ரூ.58.69க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்தம் ரூ.74லட்சத்து 97ஆயிரத்து 597க்கு வணிகம் நடைபெற்றது.

    விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தற்போது பிசான பருவம் தொடங்க இருக்கிறது.
    • விதைகள் விற்பனை செய்வதற்கு விதை ஆய்வு துணை இயக்குனரிடம் இருந்து உரிமம் பெற்றிருக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பிசான பருவம் தொடங்க இருக்கிறது.

    விதை விற்பனையாளர்கள் அதிக முளைப்புத்திறன், இனத்தூய்மை நல் விதைகளை விவசாயி களுக்கு வழங்க வேண்டும் என நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

    விதைகள் விற்பனை செய்வதற்கு விதை ஆய்வு துணை இயக்குனரிடம் இருந்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் இன்றி அல்லது காலாவதியான உரிமத்துடன் விதை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

    விதை விற்பனை யாளர்கள் தம்மிடம் உள்ள விதை இருப்பு மற்றும் விலை விபர பட்டியலை விவசாயிகளுக்கு தெரியும்படி எடை போடும் இடத்தில் வைத்திருக்க வேண்டும். விதைகளை உரம் மற்றும் பூச்சி மருந்துடன் சேர்த்து வைக்காமல் தனியாக வைத்திருக்க வேண்டும்.

    விதை விற்பனை யாளர்கள் தங்களிடம் உள்ள விதைகளின் இருப்பு மற்றும் விற்பனை விபரங்களை ஒவ்வொரு வியாழன் அன்றும் "SPECS" இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    இதனால் விற்பனை நிலையங்களில் உள்ள இருப்பு அறிந்து எவ்வித விடுதலும் இன்றி விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதால் தரமான விதைகள் விவசாயி களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

    மேலும் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் விதை எந்த விற்பனையாளரிடம் எவ்வளவு இருப்பில் உள்ளது என்பதை சம்பந்தப்பட்ட விதை விற்பனையாளரின் கைபேசி எண்ணுடன் அறிந்து கொள்ள முடியும்.

    தனியார் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் உண்மைநிலை விதைகள் அனைத்தையும் கோய முத்தூர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தமிழ்நாடு தட்பவெப்ப நிலைக்கு பொறுத்தமில்லாத மற்றும் தரமற்ற தனியார் நிறுவன விதைகள் விற்பனை செய்யப்படுவது கட்டுப்படுத்தபட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே பதிவு எண் பெறாத விதைகளை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

    விதை வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனை ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் போன்ற விபரங்களுடன் விவசாயி மற்றும் விற்பனையாளர் கையொப்பம் இருக்க வேண்டும்.

    மேற்கண்ட விதிகளை கடைபிடிக்காத நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட விதை விற்பனையாளர்கள் மீது விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன விவசாயிகளுக்கு‘’தரமான விதை உற்பத்தி’’குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
    • பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிற்சி வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம், மேல்சாத்தம்பூர், ஆவாரங்காட்டு மேடு சமுதாயக்கூடத்தில் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன விவசாயி களுக்கு''தரமான விதை உற்பத்தி''குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியில் தரமான விதை உற்பத்தியின் நோக்கம், விவசாயத்தின் ஆதாரமாம் விதையின் முக்கியத்துவம், சாகுப டிக்கு ஏற்ற விதையின் உற்பத்தி திறன், உணவு உற்பத்தியில் விதைகளின் முக்கியத்துவம்,பயிர் காப்பீடு திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிற்சி வழங்கினார்.

    நாமக்கல், விதை சான்றளிப்புத்துறையின் வேளாண்மை உதவி இயக்குநர் சித்திரைசெல்வி,

    வேளாண்மை அலுவலர் அருண்குமார் ஆகியோர் விதை உற்பத்தியில் மண்பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

    பயிற்சியில் பரமத்தி வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், ஆகியோர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் பயன்கள், மானாவாரி மேம்பாட்டு இயக்கம், நடப்பு பருவ பயிருகளுக்கான மானியத்திட்டங்கள் குறித்தும், மேற்கண்ட பயிற்சியின் நோக்கம் அதன் பயன்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.

    பரமத்தி உதவி விதை அலுவலர்கள் மோகன்ராஜ், ராதாகிருஷ்ணன் உதவி வேளாண்மை அலுவலர், கவுசல்யா,, வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் தரமான விதைகள் தேர்வு, விதை நேர்த்தி செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

    • விளைநிலங்களில், தனிப்பயிராகவும், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகவும் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
    • நல்ல விலை கிடைக்கும் செவ்வாழை ரகத்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதியில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொழிவு காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து காய்கறி மற்றும் இதர சாகுபடி பரப்பு கடந்த சீசனில் அதிகரித்தது.அதே போல், நீர் வளம் மிகுந்த பகுதிகளில்வாழை சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விளைநிலங்களில், தனிப்பயிராகவும், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகவும் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.

    முன்பு நேந்திரன் மற்றும் இலைத்தேவைக்கான வாழை ரகங்களே உடுமலை பகுதி விவசாயிகளின் தேர்வாக இருந்தது.தற்போது பிற ரகங்களையும் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக நல்ல விலை கிடைக்கும் செவ்வாழை ரகத்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் செவ்வாழை ரகங்களுக்கான கன்றுகள் போதுமான அளவு கிடைப்பதில்லை. எனவேவிவசாயிகள் தேவையறிந்து பிற மாவட்டங்களில் இருந்து கன்றுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    அதில் தேனி மாவட்டம் வருஷநாடு பகுதியிலிருந்து கொண்டு வந்து ஒரு கன்று 120 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், 'அதிக நீர் தேவையுள்ள வாழை சாகுபடியை இந்தாண்டு பலர் தேர்வு செய்துள்ளனர். சீசனுக்கேற்பதோட்டக்கலை பண்ணை வாயிலாக வாழைக்கன்று உற்பத்தி செய்து, மானிய விலையில் விற்பனை செய்யலாம். இதனால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவார்கள் என்றனர்.

    • தென்காசி மற்றும் சங்கரன்கோவில் விதை ஆய்வாளர்கள் விதை மாதிரிகள் எடுத்து நெல்லையில் உள்ள விதை பரிசோதனை நிலையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
    • தென்காசி நீதிமன்றத்தில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை, விதை ஆய்வு துணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள விதை ஆய்வாளர்கள் நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்கும்பொருட்டு விதை விற்பனை நிலையங்களை தொடர்ந்து ஆய்வு செய்து விதைச் சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.

    தென்காசி மற்றும் சங்கரன்கோவில் விதை ஆய்வாளர்கள் விதை மாதிரிகள் எடுத்து நெல்லையில் உள்ள விதை பரிசோதனை நிலையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதில் ஆறு நெல் விதை மாதிரிகள் தரமற்றது என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தரமற்ற விதைகள் முடக்கம் செய்யப்பட்டது. மேலும் தென்காசி, ஆலங்குளம் மற்றும் மடத்துப்பட்டியில் இவ்விதைகள் விற்பனை செய்த விற்பனையாளர்கள் மீது ஆலங்குளம் நீதிமன்றத்தில் 4 வழக்குகளும், தென்காசி நீதிமன்றத்தில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

    ஆலங்குளம் மற்றும் தென்காசி நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தரமற்ற நெல் விதைகளை விற்பனை செய்த தென்காசி ஆலங்குளத்தைச் சேர்ந்த 4 விதை விற்பனையாளர்களுக்கும், தென்காசி மற்றும் மடத்துப்பட்டியைச் சேர்ந்த 2 விற்பனையாளர்களுக்கும், கயத்தாரில் உள்ள 2 விதை விநியோகஸ்தர்களுக்கும் ஐதராபாத் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கும் ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் தொடர்ந்து தரமான விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தரமற்ற விதைகளை விற்பனை செய்யும் விதை விற்பனை நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுத்தருவதுடன், உரிமங்கள் ரத்து செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நெல்லை விதை ஆய்வு துணை இயக்குநர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

    • 25 விவசாயிகள் கலந்து கொண்டு 10 ஆயிரத்து 260 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய், வியாழன் ஆகிய இரு தினங்களில் தேங்காய் பருப்பும், சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது.

    நேற்று ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 25 விவசாயிகள் கலந்து கொண்டு 10 ஆயிரத்து 260 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.72.09க்கும், குறைந்தபட்சம் ரூ.55.16க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.6லட்சத்து 55ஆயிரத்து22 க்கு வணிகம் நடைபெற்றது.

    விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.
    • இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.

    ஈரோடு வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, துணை இயக்குனர் (மாநில திட்டம்) அசோக், ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஆய்வின் போது கூடுதல் இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:

    இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    உளுந்து விதை பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு அரசு உற்பத்தி மானியம் வழங்குகிறது. இவ்விதை பண்ணை கலவன்கள் இன்றி வயல் தரத்தில் தேர்ச்சி பெற்றவுடன் பாதுகாப்பான முறையில் அறுவடை செய்யப்பட்டு விதை சுத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

    விதை சுத்தி நிலையத்தில் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலைய த்துக்கு அனுப்பப்படும். விதை பரிசோதனையில் பகுப்பாய்வு முடிவில் தேர்ச்சி பெற்றதும் சான்றட்டை இணைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    • ரூ. 10 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்றது.
    • 290 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.

    வெள்ளக்கோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 10 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு களத்தூா், தொடாவூா், எரியோடு, பட்டுத்துறை, டி. கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 22 விவசாயிகள் தங்களுடைய 290 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 14,124 கிலோ. ஈரோடு, முத்தூா், காங்கயத்தில் இருந்து 3 வணிகா்கள் விதைகளை வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ.62.75 முதல் ரூ. 77.19 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 73.89. கடந்த வார சராசரி விலை ரூ. 70.79. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 10.06 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    • 22 விவசாயிகள் கலந்து கொண்டு 9 ஆயிரத்து 472கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.6லட்சத்து 71ஆயிரத்து 181 க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்,

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று வியாழக்கிழமை 22 விவசாயிகள் கலந்து கொண்டு 9 ஆயிரத்து 472கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.75.49க்கும், குறைந்தபட்சம் ரூ.63.49க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.6லட்சத்து 71ஆயிரத்து 181 க்கு வணிகம் நடைபெற்றது.

    விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கடந்த 2017 ம் ஆண்டு வெளியிடப்பட்ட எஸ்விபிஆர்6 ரக பருத்தியானது நீண்ட இழைப் பருத்தியாகும்.
    • விதைகளைப் பெற்று பருத்தி சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் பலன் பெறலாம்.

    உடுமலை,

    பருத்தி சாகுபடி அதிகரிப்பதால் அதற்கான விதைத் தேவையும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து விதை உற்பத்தியின் மூலம் வருவாய் ஈட்டும் வாய்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில் பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (சைமா) மூலம் உடுமலையையடுத்த சந்தனக்கருப்பனூர் விவசாயி ராஜேந்திரன் தோட்டத்தில் பருத்தி விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.இந்த விதைப்பண்ணையை திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது:- ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் கடந்த 2017 ம் ஆண்டு வெளியிடப்பட்ட எஸ்விபிஆர்6 ரக பருத்தியானது நீண்ட இழைப் பருத்தியாகும்.அதிக உற்பத்தித்திறன் கொண்ட இந்த ரகம் தமிழகத்தில் நீர்ப்பாசனம் உள்ள பகுதிகளில் கோடையில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற ரகமாகும். 155 நாட்கள் வாழ்நாள் கொண்ட இந்த ரகம் ஒரு ஏக்கருக்கு 1,357 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. மேலும் பாக்டீரியா, இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களுக்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்டது. தரமான சான்று பெற்ற விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பருத்தி விதைப்பண்ணையில் பூப்பருவம், முதிர்ச்சிப்பருவம், அறுவடைக்குப் பிறகு என பல்வேறு கட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. பிற ரகக் கலவன்கள் நீக்கப்பட்டு, வயல் தரத்தில் தேறும் தரமான விதைப் பருத்தி அறுவடை செய்யப்பட்டு அரசு அனுமதி பெற்ற விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. சுத்திகரிப்புப் பணி முடிந்ததும் அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டு முளைப்புத்திறன், ஈரப்பதம், சுத்தம் உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. விதைத் தரத்தில் தேறும் விதைகளுக்கு சான்றட்டை பொருத்தப்பட்டு, தரமான சான்று பெற்ற விதைகளாக விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

    அந்த விதைகளைப் பெற்று பருத்தி சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் பலன் பெறலாம். மேலும் விதைப்பண்ணைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது விதைச்சான்று அலுவலர் ஷர்மிளா மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

    ×