search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seed Storage"

    • திருவெண்ணைநல்லூரில் விதை சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு பூமிபூஜை தொடங்கப்பட்டது.
    • ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம் விதை சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூரில் வேளாண்மைத்துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்புக் கிடங்கு பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வேளாண்மைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம், பேரூராட்சி துணை தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வேளாண்மை இயக்குனர் பிரேமலதா வரவேற்றார். நிகழ்ச்சியில் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம்கணேசன் கலந்துகொண்டு ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம் விதை சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை கணேசன், கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் சித்ரா, திருக்கோவிலூர் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கிருஷ்ணராஜ், நகர பொருளாளர் சையத் நாசர், இளைஞரணி சுலைமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×