search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "science death"

    பெங்களூரு நகரில் உள்ள பிரசித்திபெற்ற இந்திய அறிவியல் கழகத்தில் இன்று நைட்ரஜன் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரு விஞ்ஞானி உயிரிழந்தார். #scientistdied #hydrogencylinderexplosion #erospacelabexplosion #IndianInstituteofScience
    பெங்களூரு:

    இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science) நாட்டின் மிகத் தரம்வாய்ந்த அறிவியல் சார்ந்த முதுநிலைக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். 

    சுவாமி விவேகானந்தரின் ஆலோசனைப்படி ஜாம்ஷெட்ஜி டாடாவால் இந்த நிறுவனம் கடந்த1909-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 

    இந்நிலையில், இந்திய அறிவியல் கழக வளாகத்தில் உள்ள விண்வெளி தொடர்பான ஆய்வகத்தில் இன்று சிலர் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, எதிர்பாராத வகையில் நைட்ரஜன் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி ஒரு விஞ்ஞானி உயிரிழந்தார். மேலும், மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவர் ஐதராபாத் நகரை சேர்ந்த கே.மனோஜ்(32) என்று தெரியவந்துள்ளது. #scientistdied #hydrogencylinderexplosion #erospacelabexplosion #IndianInstituteofScience 
    ×