search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school teacher"

    மதுரையில் பள்ளி ஆசிரியையிடம் 12 பவுன் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை சத்யசாய் நகரில் உள்ள ரோஜா வீதியை சேர்ந்தவர் வீரபாண்டி.இவரது மனைவி லட்சுமி பிரபா(வயது30), இவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர் தினமும் மதுரையில் இருந்து பஸ்சில் அறந்தாங்கிக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று காலை லட்சுமி பிரபா எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்திற்கு தனது மொபட்டில் புறப்பட்டார். புதூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென்று லட்சுமி பிரபாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினான்.

    இதுகுறித்து புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகிறார்கள்.

    திருவிடைமருதூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #TeacherMurdered
    திருவிடைமருதூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா (வயது 24). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று உமா மகேஸ்வரபுரம் காவிரி ஆற்றின் படித்துறையில் வசந்தபிரியா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ஆசிரியை வசந்தபிரியாவுக்கும், வலங்கைமானை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த மாதம் 28-ந் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வசந்தபிரியா நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார்.

    மாலையில் பள்ளி முடிந்ததும் பள்ளியில் இருந்து புறப்பட்ட அவர் வீட்டுக்கு செல்லவில்லை. சம்பந்தமே இல்லாமல் காவிரி ஆற்றின் படித்துறையில் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

    அங்கு யாருடன் அவர் வந்தார்? அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. கொலை நடந்த இடத்தில் 2 செல்போன்கள், பேனா கத்தி ஆகியவை கிடந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வருகிறார்கள். #TeacherMurdered

    செங்கம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது 50 பேர் கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்நாச்சிப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்ணன் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர், 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் சில்மி‌ஷம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ஆயுதபூஜை விடுமுறைக்கு முன்பு சிறப்பு வகுப்பு என்று அந்த மாணவியை தனியாக அழைத்து சீருடையை கழற்றுமாறு கூறி ஆசிரியர் கண்ணன் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் புகார் கூறப்படுகிறது.

    இதுப்பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது, விவகாரம் வெளியே தெரிந்தால் உன் படிப்புக்கு தான் பிரச்சினை’ என்று மிரட்டியுள்ளார்.

    ஆயுதபூஜை உள்ளிட்ட 4 நாள் தொடர் விடுமுறைக்கு பின்னர், இன்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால், மாணவி பள்ளிக்கு செல்லவில்லை.

    பெற்றோர் கேட்டதற்கு அழுது கொண்டே தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி கூறினார். இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்களுடன் பள்ளிக்கு சென்றனர்.

    இவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர்.

    வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர் கண்ணனை பயங்கரமாக தாக்கி அடித்து உதைத்தனர். வகுப்பறையில் இருந்த மாணவ-மாணவிகள் அலறி கூச்சலிட்டனர்.

    மாணவியின் உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் கண்ணனை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர்.

    வகுப்பறையில் இருந்த நாற்காலிகள், மேஜைகளை தூக்கி ஆசிரியர் கண்ணனை அடித்தனர். இதில் ஆசிரியர் நிலை குலைந்து போனார். அப்போதும், அவரை விடாமல் தொடர்ந்து தாக்கி கொண்டே இருந்தனர்.

    தகவலறிந்ததும், செங்கம் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பலத்த காயமடைந்த ஆசிரியர் கண்ணனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
    உத்தரபிரதேசத்தில் தனியார் பள்ளியில் 8 வயது மாணவனை ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் சிகிச்சை பலன் இன்றி இறந்தான். #SchoolTeacher #Student
    பாண்டா:

    உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 வயது மாணவன் அர்பஜ் என்பவனை ஆசிரியர் ஜெய்ராஜ் கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மாணவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி இறந்தான்.

    இது குறித்து மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் ஆசிரியர் ஜெய்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பழனியில், ஓடும் ஆட்டோவில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியை பவித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #PalaniSchoolTeacher #pavithra
    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் பகவதி. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு பவித்ரா (வயது 24), மயில், அனிதா ஆகிய மகள்கள் உள்ளனர். பி.ஏ. படித்துள்ள பவித்ரா, பழனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு, அடுத்த மாதம் (ஆகஸ்டு) திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை இவர், கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டைவிட்டு வெளியே சென்றார். பின்னர் பழனி ஆர்.எப். ரோட்டில் ஒரு வாலிபரை அவர் சந்தித்தார். அங்கிருந்து அவர்கள் 2 பேரும், முத்துராமலிங்கம் என்பவரின் ஆட்டோவில் அடிவாரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    ஆட்டோவில் ஏறியதில் இருந்தே பவித்ராவிடம் அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. பழனி பூங்கா ரோட்டில் உள்ள தேவர் சிலை அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது, ஆட்டோவில் இருந்து திடீரென பவித்ரா அலறினார். இதனால் திடுக்கிட்ட டிரைவர் முத்துராமலிங்கம் சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்தினார்.

    இதனையடுத்து அந்த வாலிபர், ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து தப்பியோடி விட்டார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பவித்ரா ரத்தவெள்ளத்தில் ஆட்டோவுக்குள் இருந்தார். அவர் அருகே, ஒரு பிளேடு கிடந்தது. அந்த பிளேடால் அவருடன் பயணம் செய்த வாலிபர், பவித்ராவின் கழுத்தை அறுத்திருப்பது தெரியவந்தது.

    இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த முத்துராமலிங்கம், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆசிரியை பவித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிசென்ற பவித்ராவின் உறவினர் மாயவனை போலீசார் தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் தான், பவித்ரா கழுத்து அறுக்கப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #PalaniSchoolTeacher #pavithra
    நாகை அருகே பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகள் கதறி அழுது பாச போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1939-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியைகள்-ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் இரண்டாம் வகுப்பு ஆசிரியையாக இசபெல்லா ஜூலி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி, இசபெல்லா ஜூலியை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். பள்ளி ஆசிரியையின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியில் குவிந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை இசபெல்லா ஜூலியை சூழ்ந்து கொண்டு, நீங்கள் வேறு பள்ளிக்கு போகக்கூடாது என்று கூறி அவரது கையை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    மாணவ, மாணவிகளின் பாசப்போராட்டத்தை கண்ட ஆசிரியையும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அங்கு நடைபெற்ற மாணவர்கள், ஆசிரியையின் பாச போராட்டத்தை கண்ட பெற்றோர்களும், பொதுமக்களும் கண்ணீர் விட்டனர். மாணவ, மாணவிகள் ஆசிரியையை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. 
    நெல்லையில் பள்ளி ஆசிரியையை பணி நிரந்தரம் செய்ய ரூ.3¼ லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் ரேச்சல் ஜானட் (வயது 42). இவர் நம்பித்தலைவன் பட்டயத்தில் உள்ள ஆர்.சி. தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பள்ளிக்கூட நிர்வாகம் பணி நியமனம் செய்த போதும், கல்வித்துறை அந்த பணியை நிரந்தரம் செய்து ஒப்புதல் அளிக்கவில்லை.

    பணி நிரந்தரம் செய்வதற்கு களக்காடு உதவி தொடக்க கல்வி அலுவலர் இசக்கிமுத்து, அவருடைய உதவியாளர் கனகசபாபதி ஆகியோர் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று ஆசிரியையின் சகோதரர் ஜான் வின்சென்ட்டிடம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜான் வின்சென்ட் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து போலீசாரின் அறிவுரைபடி ரசாயன பவுடர் தடவிய ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை நேற்று மாலையில் நெல்லையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு ஜான் வின்சென்ட் கொண்டு சென்றார். அங்கு இருந்த இசக்கிமுத்து, கனகசபாபதி ஆகியோர் அந்த பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக 2 பேரையும் பிடித்து கைது செய்தனர்.

    ×