search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "saravana bhava mantra"

    சரவண பவ மந்திரத்தை தினந்தோறும் உச்சரித்து அன்பனை வணங்கினால் ஆன்மா ஒருமுகப்பட்டு இறைவனை அடையலாம் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
    இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளையும் குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். சிவனுக்கு ஐந்தெழுத்து மந்திரமாகிய நமசிவாய, திருமாலுக்கு நமோ நாராயணாய என்றும், அம்மனை ஓம் சக்தி என்ற வகையில் பக்தர்கள் நாமத்தை உச்சரிக்கின்றனர்.

    அந்த வகையில் கலியுக கடவுளான சுப்பிரமணியனை சரவண பவ என்னும் மந்திரத்தால் பக்தர்கள் வழிபடுகின்றனர். இதில் ச என்பது மங்கலம் என்பதையும், ர என்பது ஒளிக் கொடை என்ற பொருளையும், வ என்பது சாத்வீகம் என்ற பொருளையும், ண என்பது போர் என்ற பொருளையும், பவ என்பது உதித்தவன் என்பதையும் உணர்த்துகிறது.

    இதன்மூலம் இந்த மந்திரத்தை தினந்தோறும் உச்சரித்து அன்பனை வணங்கினால் ஆன்மா ஒருமுகப்பட்டு இறைவனை அடையலாம் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
    ×