search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sangadahara Chaturthi"

    • ஆனந்த விநாயகர் கோவிலில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்து சென்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டைமற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனந்த விநாயகர் கோவிலில் காலையில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

    மாலை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது.இதில் வெள்ளை தாமரைமலர்களால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இதனை காண சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் தரிசித்து சென்றனர்.

    இதேபோன்று செங்கோட்டை, வல்லம், இலஞ்சி, பிரானூர், புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு, உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள செக்கடி விநாயகர் கோவில், பள்ளிமேடு விநாயகர் பால விநாயகர் மற்றும் செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், ஸ்ரீமுக்தி விநாயகர் , வீரகேரள விநாயகர் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலுள்ள விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    • சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில்.திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமார வலசு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிரம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது.

    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.
    • இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் திரவுபதி அம்மன் கோவிலில் விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. பால், தயிர், வெண்ணை, திரவிய பொடி, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்யப்பட்டது.

    இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பூசாரி திருப்பதி வெங்கடேசன்- சுமதி பவதாரணி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது.
    • 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

    வீரபாண்டி :

    திருப்பூர் வீரபாண்டி மாகாளியம்மன் கோவிலில் வில்வ விநாயகர் பெருமானுக்கு ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது.

    பின்பு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டு வினை தீர்க்கும் வில்வ விநாயகரை வழிபாடு செய்தனர்.

    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
    • சிறப்பு ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில்.திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமார வலசு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×