என் மலர்
நீங்கள் தேடியது "Sami"
- சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பம்பா ளையம் வெள்ளை கரடு திம்ம ராய பெருமாள் கோவில் 2-வது சனிக்கிழ மையை முன்னிட்டு சாமி ஊர்வலம் விழா நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பம்பா ளையம் வெள்ளை கரடு திம்ம ராய பெருமாள் கோவில் 2-வது சனிக்கிழ மையை முன்னிட்டு சாமி ஊர்வலம் விழா நடந்தது. கருட வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பூ அலங்காரத்தில் சாமி ஊர்வலம் வெள்ளாண்டி வலசை நடுத்தெரு காளியம்மன் கோவில் வீதி வீரப்பம்பாளையம் வழியாக பெண்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதி வழியாக சாமி ஊர்வலம் சென்று பின்பு கோவிலை அடைந்தனர். அதைத்தொடர்ந்து கொடி தீபம் ஏற்றப்பட்டது.
பின்பு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ராமு, கிட்டு, குப்புசாமி பண்டிதர் மற்றும் மருத்துவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.