search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sale of ganja"

    • சந்தேகத்திற்கு இடமாக அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
    • ரூ. 25,000 மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே அம்பேத்கர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் பேரில் அண்ணாமலை நகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது இவர் அதேபகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 25) என்பதும் இவரிடமிருந்து ரூ. 25,000 மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

    • சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • இந்த பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே ஆத்தூர் ஏரிக்கரைப்பகுதியில்பிரம்மதேசம் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்பு அவரை சோதனை செய்தபோது அவர் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.

    மேலும் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் ஓமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தமுரளி என்பதும் இவர் இந்த பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. இவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக, கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே உள்ள கருமாதி மண்டபம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக, கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு, போலீசார், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் கஞ்சா விற்ற வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து விசாரித்த போலீசார், காரைக்கால் நேருநகரைச்சேர்ந்த அமர்நாத் (வயது22) என்பது தெரியவந்தது. போலீசார் அமர்நாத்தை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 120 கிராம் எடைகொண்ட 12 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • திட்டக்குடி பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பின்னர் 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.

    கடலூர்:

    திட்டக்குடி, ராமநத்தம் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ரகசிய தகவலின் பேரில் நேற்று ராமநத்தம் பொதுப்பணித்துறை அலுவலகம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துக்கொண்டும், குடித்துக்கொண்டும் இருந்த 4 பேரை ராமநத்தம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் திட்டக்குடி பஸ் நிலையத்தில் ஆவின் பாலகம் அருகில் நேற்று மாலை 10 கிராம் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை திட்டக்குடி போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே சித்தானங்கூர் பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா விற்பதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 12 கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே சித்தானங்கூர் பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா விற்பதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரித்த போது அவரிடம் இருந்து 12 கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் திருவெண்ணைநல்லூர் அருகே காந்தளவாடி பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் (வயது 20) என்பது தெரிவந்தது. மேலும் போலீசார் கைது செய்து சரண்ராஜ் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வேப்பூர் அருகே கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் கண்டபங்குறிச்சி சாலையில் ரோந்து சென்றனர்.

    கடலூர்:

    வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் மிஸ்டர் டீனு பையா (வயது 20) இவர் கஞ்சா விற்பதாக வேப்பூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது . அதனை தொடர்ந்து வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் கண்டபங்குறிச்சி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பாப்பாத்தி அம்மன் கோவில் அருகே 1250 கிராம் கஞ்சா வைத்துக்கொண்டு விற்பனை செய்ய காத்திருந்த மிஸ்டர் டீனு பையாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 1250 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.

    • விழுப்புரம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • தப்பியோடிய முருகையனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே பா.வில்லியனூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஸ்ரீ நாதாவுக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. உடனே போலீசார் அவர்களை பிடிக்க முற்பட்ட போது அதில் ஒரு நபர் தப்பி ஓடிவிட்டான் மற்றொருவன் பிடிபட்டான். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயரங்கன் மகன் தினேஷ் (வயது 19) மற்றும் முருகையன் என்பது தெரிய வந்தது. உடனே போலீ சார் தினேஷை கைது செய்தனர். தப்பியோடிய முருகை யனை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் தினேஷிட மிருந்து இருந்து 2000 பணம்,செல்போன் மற்றும் 100 கிராம் கஞ்சா வை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சேத்தியாத்தோப்பில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபர் அங்கு நின்று ெகாண்டிருந்தார்.

    கடலூர்:

    சேத்தியாதோப்பு உட்கோட்ட டி.எஸ்.பி. ரூபன் குமார் உத்தரவின் பேரில் குற்ற பிரிவு தனிப்படை போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் செல்ல பாண்டியன் மற்றும் போலீசார் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபர் அங்கு நின்று ெகாண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர் பேசினார். இதை தொடர்ந்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் புவனகிரி அருகே சீயப்பாடி கிராமத்தைச் சேர்ந்த முரளிதரன் (வயது 20) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, முரளிதரனையும் கைது செய்தனர். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த பச்சை மகன் கோவிந்தன் (வயது 61). இவர் வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் கோவிந்தனை கைது செய்தனர். அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

    ×