search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sachin"

    இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் அணி வீரரான விவிஎஸ் லட்சுமணன், கடந்த 25 ஆண்டு கால இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணியை வெளியிட்டுள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் விவிஎஸ் லட்சுமண். இவர் கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணியில் பல்வேறு காலங்களில் விளையாடிய வீரர்களைத் தேர்வு செய்து 11 பேர் கொண்ட டெஸ்ட் அணியை வடிவமைத்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிகளைப் பொருத்தவரை இந்திய கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே அதாவது, கங்குலி தலைமையில் இருந்து இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணி 15 டெஸ்ட் போட்டிகளுக்கு மேலாகத் தோல்வியை சந்திக்காமல் பயணித்து வந்த நிலையில், அவர்களின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது கங்குலி தலைமையிலான இந்திய அணிதான்.

    அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்துக்கும் இந்திய அணி முன்னேறியது. கங்குலி தலைமைக்குப்பின் வந்த தோனி தலைமையிலும், தற்போது விராட் கோலி தலைமையிலும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே இந்திய அணி செயல்பட்டு வருகிறது.

    இந்த 25 ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கங்குலி, விராட் கோலி, தோனி என எண்ணற்ற பேட்ஸ்மேன்கள், ஸ்ரீநாத், ஜாகீர்கான், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், அஸ்வின் போன்ற பந்து வீச்சாளர்கள் வந்து சென்றுள்ளனர். விவிஎஸ் லட்சுமண் இவர்களில் இருந்து சிறந்த 11 பேர் கொண்ட டெஸ்ட் அணியைத் தேர்வு செய்துள்ளார்.



    இதில் வீரேந்திர சேவாக், முரளி விஜய் ஆகியோரைச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாகத் தேர்வு செய்துள்ளார். 3-வது வீரராக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் டிராவிட் டெஸ்ட் போட்டியில் மிகச்சிறந்த வீரர் என்று அழைக்கப்படக்கூடியவர். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிட், 13, ஆயிரத்து 288 ரன்கள் சேர்த்துள்ளார். இவரின் சராசரி 52.31 ரன்களாகும்.

    4-வது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் வழக்கம்போல் களமிறங்க லட்சுமண் ஆசைப்பட்டுள்ளார். கிரிக்கெட்டில் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் 51 சதங்களுடன் 15921 ரன்கள் குவித்தவர். நடுவரிசையில் கங்குலி, விராட் கோலி, விக்கெட் கீப்பராக மகேந்திரசிங் தோனி ஆகிய சிறந்த வீரர்களை தேர்வுசெய்துள்ளார்.



    பந்து வீச்சாளர்களில் தற்போதுள்ள இந்திய அணியில் இருந்து புவனேஷ்வர் குமாரை மட்டுமே தேர்வு செய்துள்ளார். அணியில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சில் ஸ்ரீநாத், ஜாகீர்கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கங்குலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

    அணி வீரர்கள் விவரம்:-

    வீரேந்திர சேவாக், முரளி விஜய், ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி (கேப்டன்), எம்எஸ் டோனி, விராட் கோலி, அனில் கும்ப்ளே, புவனேஸ்வர் குமார், ஸ்ரீநாத், ஜாகீர்கான்.
    பிரபல கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான சச்சின் தெண்டுல்கரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பெரம்பலூர் அருகே தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. #SachinTendulkar

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் ஊராட்சியில் கோல்டன் சிட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்குமாறு, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் கோல்டன்சிட்டி பகுதி ஊராட்சியை சேர்ந்தது என்பதால், அந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகத்தால் லட்சக்கணக்கான ரூபாய் செலவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் நண்பர், பிரபல கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் தெண்டுல்கருக்கு பழக்கமானவர். இதனால் அவர் மூலம், கோல்டன் சிட்டி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்குமாறு சச்சின் தெண்டுல்கருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், சச்சின் தெண்டுல்கருக்கு கோரிக்கை மனுவுடன் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதம் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, கோல்டன் சிட்டி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 70 ஆயிரத்தை சச்சின் தெண்டுல்கர் ஒதுக்கீடு செய்தார்.

    அந்த நிதியின் மூலம் கோல்டன் சிட்டி பகுதியில் சுமார் 500 மீட்டர் நீளத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், இந்த சாலையானது 3.75 மீட்டர் அகலத்திலும், 20 செ.மீ. தடிமனிலும் வெட்மிக்ஸ் கொண்டு அமைக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டு அடுக்காக தார்ச்சாலை போடப்பட உள்ளது. இச்சாலை இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைய உள்ளது, என்றார்.


    கோல்டன் சிட்டி பகுதியில் தார்ச்சாலை அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்த சச்சின் தெண்டுல்கருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். #SachinTendulkar #tamilnews

    ×