search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ruturaj Gaikwad"

    • ருதுராஜ் வருங்காலங்களில் இந்தியாவின் கேப்டனாக செயல்படும் அளவுக்கு சிறந்த பொறுமையான குணத்தை கொண்டுள்ளார்.
    • ருதுராஜ் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவதற்காக நான் காத்திருக்கிறேன். ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவருமே நல்ல திறமையை கொண்ட வீரர்கள்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

    இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் ரோகித், கோலி, பாண்ட்யா, ஜடேஜா, கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ஜெய்ஸ்வால், ருதுராஜ், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே போன்ற இளம் வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் வருங்கால கேப்டனாக செயல்பட இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் கிரண் மோர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ருதுராஜ் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவதற்காக நான் காத்திருக்கிறேன். ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவருமே நல்ல திறமையை கொண்ட வீரர்கள். அதில் ருதுராஜ் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் தன்மையைக் கொண்டவர். ஏனெனில் அவருடைய அடிப்படை டெக்னிக் மிகவும் சரியாக இருக்கிறது.

    அத்துடன் அவர் வருங்காலங்களில் இந்தியாவின் கேப்டனாக செயல்படும் அளவுக்கு சிறந்த பொறுமையான குணத்தை கொண்டுள்ளார். குறிப்பாக எம்எஸ் டோனி தலைமையில் விளையாடியுள்ள அவர் அணியை எவ்வாறு கட்டுப்படுத்துவது, கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப்பது போன்ற கேப்டன்ஷிப் அம்சங்களை நிச்சயமாக கற்று கொண்டிருப்பார். எனவே நல்ல தரமான வீரரான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமணத்திற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகல்
    • ருதுராஜ் கெய்க்வாட் மனைவியும் கிரிக்கெட் வீராங்கனை ஆவார்

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் இவர், தனது அதிரடி ஆட்டம் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆதரவை பெற்றுள்ளார்.

    சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். டோனியின் நம்பிக்கைக்குரிய ஒரு வீரராக திகழ்கிறார். ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைத்தது.

    7-ந்தேதி தொடங்கும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் பேக்அப் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் திருமணம் செய்ய இருப்பதால், கலந்து கொள்ள முடியாது என்று பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டார். பிசிசிஐ-யும் அனுமதி அளித்தது.

    இந்த நிலையில் நேற்று ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணம் நடைபெற்றது. உட்கர்ஷா பவார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். உட்கர்ஸ பவார் கிரிக்கெட் வீராங்கனை என்பதை குறிப்பிடத்தக்கது.

    • சேப்பாக்கம் மைதானத்தில் ரெய்னா அணியில் இல்லாமல் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சிஎஸ்கே இன்று விளையாட உள்ளது.
    • சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சேப்பாக்கத்தில் இதுவே முதல் போட்டி.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அகமதாபாத்தில் கடந்த 31- ந் தேதி தொடங்கியது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தோல்வியுடன் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.

    அந்த அணியை வீழ்த்தி சி.எஸ்.கே. வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். சேப்பாக்கத்தில் விளையாடுவது சென்னை அணிக்கு சாதகமானது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சி.எஸ்.கே.வுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    அதே நேரத்தில் லக்னோ அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமநிலையில் இருக்கிறது. இதனால் சி.எஸ்.கே. வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும்.

    சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நல்ல நிலையில் உள்ளார். குஜராத்துக்கு எதிராக அவர் 50 பந்தில் 92 ரன் எடுத்தார். இந்த ஆட்டத்தில் அவர் 9 சிக்சர்கள் அடித்தார். 2021- ம் ஆண்டு சென்னை அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல ருதுராஜ் முக்கிய பங்கு வகித்தார். அவர் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக விளையாடுகிறார். அதிரடியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, கான்வே, ஜடேஜா, கேப்டன் டோனி, தீபக் சாஹர் போன்ற சிறந்த வீரர்களும் இருக்கி றார்கள. பந்து வீச்சு பலவீன மாகவே காணப்படுகிறது. அதை நிவர்த்தி செய்வது அவசிய மாகிறது. சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றது. இதனால் மொய்ன் அலிக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும். குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பந்து வீசவில்லை. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 56 ஆட்டத்தில் விளையாடி 40-ல் வெற்றி பெற்றது. இதனால் இங்கு இருந்து சி.எஸ்.கே. வெற்றி கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாமல் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று விளையாட உள்ளது. அதேபோல சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சேப்பாக்கத்தில் இதுவே முதல் போட்டி.

    கடந்த 2008 முதல் சேப்பாக்கம் மைதானத்தில் 56 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி உள்ளது. அந்த 56 போட்டிகளிலும் ரெய்னா விளையாடி உள்ளார்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டியை எதிர்நோக்கி உள்ளனர்.

    • டீசல் இன்ஜின் காலமெல்லாம் முடிந்து விட்டது. இப்போதெல்லாம் மின்சாரத்தில் தான் அனைத்து வாகனங்களும் ஓடுகிறது.
    • உத்தப்பாவுக்கு மாற்று வீரர்களை தேடி வருகிறார்கள் என கருதுகிறேன்.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை வரும் 31-ம் தேதி அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது.

    கடந்த முறை சிஎஸ்கே அணி ஒன்பதாவது இடத்தை பிடித்ததால் இம்முறை சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் போன்ற அதிரடி ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

    இதனால் இந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடததுதான் காரணம் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறியிருப்பதாவது:-


    நாம் டி20 உலக கோப்பையை பார்த்திருக்கிறோம். அதில் பென் ஸ்டோக்ஸ் சில பந்துகளை முதலில் எதிர்கொண்டு அதன் பிறகு தான் அதிரடியை தொடங்கினார். அவர் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் தான் இறங்கி இருக்கிறார்.

    பென் ஸ்டோக்ஸ் அடித்த சதம் அவர் பேட்டிங் ஆர்டரின் முன் வரிசையில் இறங்கும்போதுதான் நடந்திருக்கிறது. எனினும் இம்முறை சென்னை அணி என்ன யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் உத்தப்பாவுக்கு மாற்று வீரர்களை தேடி வருகிறார்கள் என கருதுகிறேன். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மெதுவாக இன்னிங்சை தொடங்கி அதன் பிறகு தான் வேகத்தை கூட்டுவார்.

    ஆனால் இம்முறை அப்படி விளையாட கூடாது. அதற்கான சூழலும் இல்லை. டீசல் இன்ஜின் காலமெல்லாம் முடிந்து விட்டது. இப்போதெல்லாம் மின்சாரத்தில் தான் அனைத்து வாகனங்களும் ஓடுகிறது. எனவே ருதுராஜ் வேகத்தை அதிகரிக்கக்கூடிய மின்சார வாகனம் போல் இருக்க வேண்டும்.

    என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    ருத்ராஜ் கடந்த 2021-ம் ஆண்டு சீசன்னில் 635 ரன்கள் அடித்திருந்து அசத்தினார். மேலும் கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய ருத்ராஜ் 368 ரன்கள் அடித்தார்.

    • அவர் சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
    • இளம் வீரர் என்பதால் அவருக்கு சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம்.

    ஐபிஎல் 2023 தொடர் மார்ச் 31-ம் தேதி அகமதாபாத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இதனையொட்டி டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாள்தோறும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், 41 வயதாகும் டோனி இந்த ஐபிஎல் தொடருடன் பெரும்பாலும் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆண்டு சிஎஸ்கே விளையாடப்போகும் கடைசி போட்டிக்கு முன்பாக இந்த அறிவிப்பை டோனி வெளியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

    அதேநேரத்தில் அவருக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார் கேப்டன் பொறுப்பை ஏற்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இளம் வீரரின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டோனிக்குப் பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் ஏற்பார் என நம்புகிறேன். அவர் சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார். இளம் வீரர் என்பதால் அவருக்கு சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம். ருதுராஜ் உங்களின் சிஎஸ்கே கேப்டன் பொறுப்புக்கு என்னுயை வாழ்த்துகள்.

    என தெரிவித்துள்ளார்.

    ருதுராஜ் கெய்க்வாட் 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானார். தொடக்க ஆட்டக்காரராக இருக்கும் அவர் 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பியை பெற்றிருந்தார். அந்த சீசனில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களை சிஎஸ்கே அணிக்காக விளாசினார்.

    • ஏற்கனவே கடந்த ஆண்டில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியாமல் வாய்ப்பை இழந்தார்.
    • மகராஷ்டிரா - ஹைதராபாத் அணிகள் மோதிய ராஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்ற அவர் 8, 0 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

    இந்த தொடருக்காக இந்திய அணி சேர்க்கப்பட்டுள்ள இளம் ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகி உள்ளார்.

    இந்த தொடருக்கு முன்னதாக மகராஷ்டிரா - ஹைதராபாத் அணிகள் மோதிய ராஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்ற அவர் 8, 0 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டிக்கு பின்னர் அவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.

    காயம் காரணமாக ஏற்கனவே கடந்த ஆண்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியாமல் வாய்ப்பை இழந்தார். இதைத்தொடர்ந்து தற்போது அணியில் இடம் கிடைத்திருக்கும் இந்த சூழலில் மீண்டும் அவர் வாய்ப்பை இழக்கிறார். 

    • தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், ரோகித் சர்மா, சுப்மன் கில், கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் வேறு இருக்கிறார்.
    • மொத்தமாக 11 சதங்களை அடித்துள்ள அவர் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மனாகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

    நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் 9 சதங்கள் அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்கவைத்தார். ஆனாலும் அவர் இடம்பெற்ற மகாராஷ்டிரா அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

    மொத்தமாக 11 சதங்களை அடித்துள்ள அவர் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மனாகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இப்படி ரன்கள் மேல் ரன்கள் சாதனை மேல் சாதனைகள் படைத்து கேப்டனாக தனது அணியை ஃபைனல் வரை அழைத்து சென்றும் கோப்பை வெல்ல முடியாத அவரது ஆட்டத்திற்கு தொடர் நாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது. அதே சமயம் இந்த தொடர்ச்சியான ஆட்டத்தால் டோனிக்கு பின் ஐபிஎல் தொடரில் சென்னையின் கேப்டனாக ருதுராஜ் வரவேண்டும் என்று விரும்பும் சென்னை ரசிகர்கள் இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள்.

    ஆனாலும் கடுமையான போட்டி நிறைந்த இந்திய அணியில் யாருக்கு பதில் ருதுராஜ் கைக்வாட் வாய்ப்பு பெறுவார் என்று தெரிவிக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின் அதன் காரணமாகவே தற்சமயத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று கூறியுள்ளார்.

    இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றாலும் யாருக்கு பதில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்? யாருக்கு பதில் என்பதை விட அவர் யாருடன் போட்டி போடுகிறார் என்பதை பாருங்கள். ஷிகர் தவான், ரோஹித் சர்மா, சுப்மன் கில் இவர்களுடன் ரிஷப் பண்ட்டும் ஓப்பனிங்கில் களமிறங்குகிறார். மேலும் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு மிகவும் கடினமான ஒரு நாடாகும்.

    • விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் மகாரஷ்டிரா அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 220 ரன்கள் குவித்தார்.
    • இந்த போட்டியில் அவர் 16 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் விளாசினார்.

    விஜய் ஹசாரே டிராபி 2022 தொடரின் இன்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் - மகாராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற உத்தரபிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மகாராஷ்டிரா அணி களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்தில் 220 ரன்கள் குவித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் ஆகும்.

    இந்த போட்டியின் 49-வது ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை ருதுராஜ் படைத்தார். அந்த ஓவரை உத்தரப் பிரதேச அணியின் சிவா சிங் வீசினார். அதில் 43 ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது.

    • ருதுராஜ் ஐபிஎல் 2020ல் தனது ஐபிஎல் அறிமுகத்தை தொடங்கினார்.
    • இருவரும் அடுத்ததாக நவம்பர் 19-ம் தேதி விஜய் ஹசாரே டிராபியின் எலைட் குரூப் போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்குவார்கள்.

    சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் டோனி தான் வாங்கிய புதிய எஸ்யூவி காரில் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டார்.

    ஐபிஎல் 2022 முடிவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி விளையாட்டில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் சில இடங்களுக்குச் சென்றார். சமீபத்தில் ராஞ்சியில் நடந்த டென்னிஸ் போட்டியில் பங்கேற்று இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்றார் டோனி.

    இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2023) அடுத்த சீசனுக்கு அவர் தயாராகிக்கொண்டிருக்கும்போது, ​​சிஎஸ்கே கேப்டன் சமீபத்தில் சிஎஸ்கே அணி வீரர்களுடன் புதிதாக வாங்கிய எஸ்யூவியில் பயணம் மேற்கொண்டுள்ளார். டோனி சமீபத்தில் KIA SV6 என்ற காரை வாங்கியுள்ளார். இது முழுக்க மின்சார கார் ஆகும்.

    ஆன்லைனில் வைரலான அந்த வீடியோவில், ராஞ்சியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முன்னாள் அணி வீரர் கேதர் ஜாதவ் ஆகியோருடன் எம்எஸ் டோனி காணப்பட்டார். சிஎஸ்கே வீரர்கள் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவதற்காக வந்திருந்தனர். இருவரும் டோனியை சந்தித்தது மட்டுமல்லாமல், அவரது புதிய எஸ்யூவியில் பயணம் செய்யும் வாய்ப்பையும் பெற்றனர்.

    இருவரும் அடுத்ததாக நவம்பர் 19-ம் தேதி விஜய் ஹசாரே டிராபியின் எலைட் குரூப் போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்குவார்கள். மகாராஷ்டிரா தற்போது போட்டியில் தோல்வியடையாமல் உள்ளது மற்றும் சர்வீசஸ் அணியை வீழ்த்தினால் குழுவில் முதலிடத்தை பிடிக்க முடியும். ருதுராஜ் ஐபிஎல் 2020ல் தனது ஐபிஎல் அறிமுகத்தை தொடங்கினார். 2021ல் சிஎஸ்கேயில் நிரந்தர உறுப்பினரானார். மறுபுறம் ஜாதவ் சென்னை அணிக்காக மூன்று ஆண்டுகள் விளையாடினார்.

    ×