search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "running"

    • காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு சமயபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒழுங்காக படிக்குமாறு தங்களது மகளுக்கு அவர்கள் அறிவுரை கூறினர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி தனது பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டுக்கு திரும்பி வராததால் அச்சம் அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவர்கள் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

    ராமசாமி நகரை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி. இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.

    சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி அவரது காதலனுடன் சென்றது தெரிய வந்தது. மாணவியை போலீசார் தேடி வருகிறார்கள். 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலனின் பெற்றோர் மாணவியை பெண் கேட்டு வீட்டிற்கு வந்தனர்.
    • இது குறித்து மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் காரமடையில் உள்ள அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக சேலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். அப்போது அவர்களிடம் மாணவி தான் இனிமேல் காதலனுடன் பேச மாட்டேன் என கூறினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலனின் பெற்றோர் மாணவியை பெண் கேட்டு வீட்டிற்கு வந்தனர்.

    ஆனால் மாணவியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து விட்டனர். சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    அப்போது மாணவி தனது இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மாணவியின் பெற்ேறார் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார்.

    இந்தநிலையில் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பழனியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் மாணவியை அவரது பெற்றோர் குரும்பபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். அவரை அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவியை தேடி வருகிறார்கள்.

    • எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற்றது.
    • 1200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியன்கோட்டை - உடையநாடு ராஜராஜன் கல்வி நிறுவனத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சுப.சேகர் தலைமை வகித்தார்.

    பள்ளி தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் அனைவரையும் வரவே ற்றார். சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி. முத்துமாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் குழ.செ.அருள்நம்பி, ஊமத்தநாடு ஊராட்சி மன்ற தலைவர் என். குலாம்கனி, காரைக்குடி அழகப்பா கல்வி குழுமம் சி.மாதவன், பேராவூரணி நகர வர்த்தகர் கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சுவாதி காமராஜ், வீரியங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா அய்யப்பன், கவுன்சிலர் மகாலட்சுமி சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் பெருமகளூர் பேரூராட்சி பெருந்தலைவர் சுந்தரதமிழ் ஜெயபிரகாஷ், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், கரம்பக்காடு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா குகன், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வி.சாந்தி, மாவட்ட கவுன்சிலர் இலக்கியா நெப்போலியன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர்.

    பள்ளி கொடியினை டாக்டர் துரை. நீலகண்டன் ஏற்றி வைத்தார். மாணவர்க ளுக்கான போட்டியினை மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவர் தென்னங்குடி ஆர்.ராஜா துவக்கி வைத்தார். மாணவிக ளுக்கான போட்டியினை புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவர் எஸ்.ஆர்.சந்திரசேகர் துவக்கி வைத்தார்.உடற்கல்வி ஆசிரியர்கள்எம்.சோலை, குழ.மதியழகன், என்.ரவி,ஏ.அன்பரசன், கே. அழகப்பன, எஸ் , சங்கீதா, பாரதிதாசன் கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர்எஸ்.நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சனிக்கிழமை எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களுக்கு தடகள போட்டி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை 6ம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை படித்த மாணவ- மாணவிகளுக்கு தடகள போட்டி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் 50 மீட்டர்,100 மீட்டர்,200 மீட்டர், 400 மீட்டர்,600 மீட்டர்,1200 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், திருச்சி, ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் நீலகண்டன் நன்றி கூறினார்.

    • தாரமங்கலம் அருகி லுள்ள கருக்கல்வாடி கிரா மம், எருமைக்காரன் வளவு பகுதியில் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு சின்ன மாமனாருடன் பெண் ஓட்டம்.
    • தகவல் அறிந்து வந்த சின்னம்மாள் முத்துசாமி மீது தாரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள கருக்கல்வாடி கிரா மம், எருமைக்காரன் வளவு பகுதியைசேர்ந்த பழனிசாமி முத்துசாமி (வயது 33) நெசவு தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த அண்ணன் மருமகள் உறவு முறை கொண்ட சுரேஷ்குமாரின் மனைவி கோமதி (27) என்பவருடன் கள்ள தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 10-ந்தேதி முத்துசாமியும், கோமதியும் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது, இதுபற்றி கோமதியின் மாமியார் சுந்தராம்பாள் பாணா புரத்தில் உள்ள கோமதியின் தாய் சின்னம்மாளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த சின்னம்மாள் முத்துசாமி மீது தாரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோமதிக்கு 2 குழந்தை கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 குழந்தைகளை தவிக்க விட்டு அவர் ஓடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புதுப்பெண் கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார்
    • கணவர் வெளிநாட்டில் ேவலை பார்க்கிறார்

    திருச்சி:

    சமயபுரம் அருகேயுள்ள சிறுகனூர் பகுதியில் 8 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார். சிறுகனூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வர்ஷினி (வயது19). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    பின்னர் வேலை நிமித்தமாக பெரியசாமி அரபு நாட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் தாய் வீடு திரும்பிய வர்ஷினி வீட்டில் இருந்து மாயமானார். அவர் சங்கர் என்ற வாலிபருடன் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வர்ஷினியின் தாய் வினோதினி சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மாவட்ட அளவில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மணிபாரதி முதலிடம்.
    • 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜெகதீஸ்வரன் மூன்றாமிடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் குறுவ ட்டம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட அளவிலான நடந்த தடகள மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ ர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா கழக துணைத்தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த மணிபாரதி, தட்டு எறிதலில் முதலிடம் பிடித்த விஜய், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடம் பிடித்த ஜெகதீஸ்வரன் மற்றும் குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அன்பழகன், ஆசிரியர் நாகராஜன்ஆகியோரையும் பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பிரகாஷ் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
    • இதை பரமத்தி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதை பரமத்தி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    மாரத்தான் ஓட்டம் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி பள்ளி சாலை ,திருவள்ளூர் சாலை ,பழைய தேசிய நெடுஞ்சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை அடைந்தது. இதில் பரமத்திவேலூர் உட்கோட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம், பரமத்தி, நல்லூர், வேலகவுண்டன்பட்டி ஆகிய 5 காவல் நிலையங்களை சேர்ந்த காவலர்கள், பரமத்தி வேலூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், செந்தில்வேல் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • டி.என்.பாளையம் அடுத்த வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இதனையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியையொட்டிய வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே பங்களாப்புதூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஒற்றை குழல் நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    துப்பாக்கி கிடந்தது வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் யாரோ வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி விட்டு விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

    வழக்கமாக அப்பகுதியில் ரோந்து செல்லும் வனத்துறையினர் இது போன்று துப்பாக்கி கிடப்பதை எப்படி கவனிக்க தவறினர் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானோர் சென்னை, பெங்களூரு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பணி நிமித்தமாக குடும்பத்துடன் தங்கி உள்ளனர்.
    • பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நேற்று இரவு முதலே அவர்கள் குடும்பத்துடன் பஸ், ரெயில்களில் பணி செய்யும் இடங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனையொட்டி விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள் மீண்டும் பணிபுரியும் இடங்களுக்கு செல்வதற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானோர் சென்னை, பெங்களூரு, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் பணி நிமித்தமாக குடும்பத்துடன் தங்கி உள்ளனர். பள்ளி தேர்வு முடிந்து வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

    இந்நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நேற்று இரவு முதலே அவர்கள் குடும்பத்துடன் பஸ், ரெயில்களில் பணி செய்யும் இடங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இன்று 2-வது நாளாக புதிய பஸ் நிலையத்தில் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது. நெல்லை போக்குவரத்து கழகம் சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை தவிர்த்து நேற்று இரவு 30 சிறப்பு பஸ்கள் இயங்கின. இவை அனைத்தும் முழுவதுமாக நிரம்பிவிட்டது.

    இதனால் இன்று மாலை முதல் பயணிகள் கூட்டத்தை பொறுத்து மேலும் 10 பஸ்கள் வரை கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும் நாளை காலை முதல் வழக்கமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடிக்கு பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 900 பஸ்களும் கண்டிப்பாக இயக்கப்பட வேண்டும் என்றும், டிரைவர், கண்டக்டர்களுக்கு விடுப்பு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் விரைவு போக்குவரத்து கழக பணிமனை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று சென்னைக்கு 23 பஸ்களும், கோவைக்கு 3 பஸ்களும், பெங்களூருவுக்கு 7 பஸ்களும் இயக்கப்பட்டன.

    இன்று சென்னைக்கு கூடுதலாக 10 பஸ்கள் வரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் லட்சுமணன் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார். #AsianGames #LakshmananGovindan
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் லட்சுமணன் கோவிந்தன் வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் லட்சுமணன் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக ஆசிய விளையாட்டு போட்டி நிர்வாகத்தினர் கூறுகையில், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் லட்சுமணன் ஓட்டப்பந்தய தடத்திற்கு வெளியே கால் வைத்ததால் தகுதியிழப்பு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, 4-ம் இடம் பிடித்த சீனாவின் சாங்காங் ஷாவோ வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என தெரிவித்தனர்.  #AsianGames #LakshmananGovindan
    வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் பஸ் இயக்கப்பட்டன.
    வேலூர்:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இன்று, தி.மு.க. கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. ஆனால், வேலூர் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படவில்லை.

    அரசு மற்றும் தனியார் பஸ்கள், ரெயில்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கியது. தனியார் பஸ்கள், லாரி, ஆட்டோ, மற்றும் வாகனங்கள் வழக்கம் போல் ஓடியது.

    அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டிருந்தனர். பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்த கூடாது என்று எஸ்.பி. பகலவன் எச்சரித்தார்.

    பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. தலைக்கவசம், லத்தியை போலீசார் கையில் வைத்திருந்தனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க, அதிரப்படை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், வேலூர் மாவட்டம் முழுவதும் அதிரடிப்படை மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தி.மு.க. முழு அடைப்பு போராட்டத்தால், அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு விடுப்பு வழங்கப்படவில்லை. முன்கூட்டியே மருத்துவ விடுப்பு எடுத்திருந்த தொழிலாளர்களும் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.

    ஆனாலும், ஆளும் கட்சி தொழிற்சங்கத்தை தவிர மற்ற தொழிற்சங்கத்தினர் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    வேலூரில் அண்ணா சாலை, லாங்கு பஜார், மெயின் பஜார், காந்திரோடு, காட்பாடி ரோடு, ஆற்காடு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன.

    நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படாமல் இருந்தது. திறக்கப்பட்டிருந்த கடைகளில் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பத்தூர் நகரின் மைய பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரி ரோடு, வாணியம்பாடி ரோடு, சின்னக்கடை தெரு, பெரியக்கடை தெரு உள்ளிட்ட திருப்பத்தூர் நகர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    வாணியம்பாடியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சி.எல். ரோடு, கச்சேரி ரோடு, ஜின்னா ரோடு, முகம்மது அலி பஜார், நகைக்கடை தெரு ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    ஜோலார்பேட்டை ரெயில் நிலைய பகுதி, கோடியூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    அரக்கோணம், குடியாத்தம், ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர் மற்றும் ஆம்பூர், பேரணாம்பட்டு உள்பட வேலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படவில்லை. பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கியது. இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்படவில்லை.

    தி.மு.க. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படவில்லை. கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    திருவண்ணாமலை நகரில் சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் ஆரணி, செங்கம், சேத்துப்பட்டு, வந்தவாசி, தண்டராம்பட்டு, போளூர், செய்யாறு உள்பட மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படவில்லை.
    ×