search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "remove eucalyptus trees"

    • வானவில் மரம் எனப்படும் யூகலிப்டஸ் தைல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.
    • கொடைக்கானலில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு இந்த மரங்கள் அகற்றம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் நகராட்சி சார்பில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கொடைக்கானல்:

    வானவில் மரம் எனப்படும் யூகலிப்டஸ் தைல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மின்டனோ பசை அல்லது வானவில் பசை என அழைக்கப்படும் ஒரு வித பல வண்ணப்பசை போன்ற திரவம் வெளிப்படுவதால் இவை வானவில் மரங்கள் என அழைக்கப்படுகின்றன.

    இந்தோனேசியாவைத் தாயகமாகக் கொண்ட இம்மரங்கள் பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் காணப்படும் தைலமரத்தின் வகையாகும். இவை பெரும்பாலும் மழைக்காடுகளில் காணப்படும். வட அரைக்கோளங்களில் அரிதாகி வரும் 700 வகைத் தைல மரங்களில் நான்கு வகையான இனங்கள் வானவில் மர இனங்களாகும். இவை ஆஸ்திரேலியாவில் காணப்படுவதில்லை. இம்மரங்கள் நீலம், ஊதா, ஆரஞ்சு மற்றும் பழுப்பு உள்ளிட்ட பல வண்ணங்களில் காணப்படுகின்றன.

    மரத்தின் முதுமைக்கு ஏற்ப புதுப்புது வண்ணங்களில் ஜொலிக்கும் இந்த மரங்கள், பெரும்பாலும் சிவப்பு, பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் பளிச்சிடுகின்றன. வெப்ப மண்டலங்களில் பச்சை, காபி நிறத்துடன் காட்சியளிப்பவை, மழைக்காலங்களில் வர்ணஜாலம் காட்டுகின்றன.

    யூகலிப்டஸ் ஒரு பரந்த அளவிலான சுவாச நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரு அற்புதமான தீர்வை உருவாக்குகிறது. சாதாரண சளி, காய்ச்சல் அறிகுறி, ஆஸ்துமா அறிகுறி, அல்லது அபாயகரமான சுவாச கோளாறுகளான நிமோனியா, பிராங்கைடிஸ், காச நோய், சைனஸ் போன்ற நோய்களுக்கும் இது சிறந்த தீர்வைத் தருகிறது.

    ஆங்கிலேயர்களால் 1843-ல் இந்தியாவில் அதிக எரிபொருள் மரவகை சோதனைக்காக இவை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளுக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிப்பட்டது. அதன் பின்னர் இவ்வகை மரம் அதிகரிக்கும் தன்மை கொண்டதாக இருந்ததால் அதிக மழை பொழிவு பெறும் மலைப்பகுதிகளில் அதிக நீர் தேங்கி சாம்பலாக உள்ள பகுதிகளில் நடவு செய்யும் பணியில் ஆங்கிலேயர்கள் ஈடுபட்டனர்.

    அதன் ஒரு பகுதியாக கொடைக்கானலிலும் இவ்வகை மரங்கள் நடவு செய்யப்பட்டது.கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிக அளவில் இந்த வகை மரங்கள் இருப்பதால் விவசாயம் சிறிது சிறிதாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்வளம் குறைந்து பயிர் வளர்ச்சிகள் மிகவும் குறுகியுள்ளது.இவ்வகை மரங்களை அகற்றுவதால் கொடைக்கானல் மலைப்பகுதி அதிக நீர் வளம் பெருகி விளைச்சல் சீராகும். இதற்கு அரசு நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர் எஃபெக்ட் வீரா தெரிவித்துள்ளார்.

    மேலும் யூகலிப்டஸ் மரங்கள் தான் வளரும் இடத்தில் அதிகளவு நீரை உறிஞ்சி கொள்வதுடன் மண்ணை மலடாக்கி விடுகிறது. இதனால் அந்த நிலத்தில் உண்மையான மற்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதில்லை. எனவே யூகலிப்டஸ் மரங்களை முற்றிலும் அகற்றி நாட்டு மரங்கள் மற்றும் சோலை காடுகள் அமைக்க வேண்டும். இதனால் உள்ளூர் விவசாயிகளுக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    கொடைக்கானலில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு இந்த மரங்கள் அகற்றம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் நகராட்சி சார்பில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×