search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rashtrapathni issue"

    • காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • ராஷ்டிரபத்னி என்கிற வார்த்தை வாய் தவறி வந்த வார்த்ததை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

    நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவை, 'ராஷ்டிரபத்னி' என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த கருத்தை தெரிவித்தார்.

    ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்து செல்வது குறித்து பேசிய அவர், 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்தார்.

    இருப்பினும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சயை கிளப்பியது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், " ராஷ்டிரபத்னி என்கிற வார்த்தை வாய் தவறி வந்த வார்த்ததை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    ×